ஜிக்கீ!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2013
00:00

அவர்கள் வயதான தம்பதியர். மலை அடிவாரத்திலுள்ள தங்களின் அழகிய சிறிய வீட்டில் குடி இருந்தனர். நாள் தவறாமல் மாலை நேரத்தில் நம் குட்டிப்பயல் "ஜிக்கீ' "கிராண்ட் மா' என்று கூவிக்கொண்டே அவர்கள் வீட்டிற்குள் நுழைவான்.
குழந்தைப் பேறு இல்லாத அந்த தம்பதியும், அந்தப் பயலை மிகவும் அன்போடு வரவேற்று அவனுக்கு சாப்பாடு கொடுப்பர். அவனும் வெறும் கையோடு வரமாட்டான். அவர்களுக்கு பிடித்த பழங்கள், பிஸ்கட்கள் என்று எதையேனும் கொண்டு வருவான்.
""நீங்கள் இதையெல்லாம் தின்றால்தான் நான் இங்கு சாப்பிடுவேன்!'' என்று அடம் பிடிப்பான். அவனின் மனதைத் தொடும் அன்பில் அவர்கள் இருவரும் அப்படியே கரைந்து போவர்.
இவர்கள் வீட்டிற்கு பின்புறம் இருந்த மலையில் ஒரு போக்கிரி குரங்கு வசித்து வந்தது. இதைப் போன்ற போக்கிரியை வேறு எங்குமே காண முடியாது. மதிய நேரத்தில், அத்தம்பதி அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில், குரங்கு மிக சாமர்த்தியமாக அவர்கள் வீட்டினுள் நுழைந்து அவர்கள் தோட்டத்தில் விளைந்த புத்தம் புது காய்கறிகள், பழங்கள் இவற்றை யெல்லாம் சேகரித்து வைத்திருக்கும் அறைக்குள் நுழையும்.
எல்லாவற்றையும் வயிறு முட்டத் தின்றுவிட்டு, தோல்களையும், விதைகளையும் நாலாபுறமும் விசிறி அடித்து விட்டு ஓடி விடும்.
நாள் தவறாமல் இப்படித்தான் வீட்டினுள் நுழைந்து கொட்டமடிக்கும். பாவம் தம்பதியர் ஜிக்கீயிடம் சொல்லி கண்ணீர் விடுவர்.
""நீங்கள் கவலைப் படாதீர்கள்... அந்த போக்கிரிக்கு நான் சரியான பாடம் கற்பிக்கிறேன்...'' என்ற ஆறுதல் சொல்வான் அந்த குட்டிப்பயல்.
""நாளை காலை தோட்டத்தில் பீன்ஸ் விதைகள் போடுகிறீர்கள் அல்லவா? நானும் உங்களுடன் வந்து என்னால் முடிந்த அளவு உங்களுக்கு உதவுகிறேன்!'' என்று சொல்லி விடைபெற்று சென்றான் சின்ன சுட்டிப்பயல்.
மறுநாள் காலை மிக சீக்கிரமே வந்து விட்டான் ஜிக்கீ. இருவரும் புறப்பட்டனர்.
மதிய உணவையும் நிறையவே தயாரித்து, ""தாத்தாவும், பேரனும் வயிறார சாப்பிடுங்கள்,'' என்று சொல்லி பெரிய கூடையை ஜிக்கீயிடம் கொடுத்தாள்.
வீட்டைதாண்டி சிறிது தூரம் வந்ததும், "தாத்தா! உன் தொப்பியையும், மண்வெட்டியையும் எடுத்து வருகிறேன்!' என்று சொல்லி ஜிக்கீ வீட்டினுள் நுழைந்தான்.
""டேய்! குள்ளா! வீட்டிற்குள் போய் என்னடா பிரயோஜனம்? நான்தான் அவை இரண்டையும் எடுத்து பக்கத்து காட்டுக்குள் விசிறி எறிந்து விட்டேனே!'' என்று கைகொட்டி சிரித்தது அந்த போக்கிரிக் குரங்கு.
""மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு அவனுக்கு என்ன திமிர் தாத்தா. இவனை இப்படியே சும்மா விட்டுவிடுவதா?'' சீறினான் குட்டிப்பயல்.
""இந்த அயோக்கியனை என்னடா கண்ணு பண்ணுவது. வீ வில் ஜஸ்ட் இக்னோர் ஹிம்!'' என்று தன் பேரனை சமாதானப்படுத்தினார் தாத்தா.
கூடை வழிய வழிய நிறைய பீன்ஸ். தாத்தாவும், பேரனும் சுறுசுறுப்பாக பீன்ஸ் விதைகளை விதைத்துக் கொண்டிருந்தனர். இதை கவனித்த அந்த போக்கிரி குரங்கு, மிக மிக மெதுவாக அவர்களை அணுகி சர்ரென்று அந்த பீன்ஸ் கூடையை இழுத்து சென்று மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, பீன்ஸை மிகவும் ருசித்து சாப்பிட ஆரம்பித்தது.
""ராஜாப்பயலே! கூடையை எடுப்பா. மீதமிருக்கும் பீன்ஸ் விதையையும் விதைத்துவிட்டு சாப்பிடலாம்!'' என்று தாத்தா சொன்னதும், திரும்பிப் பார்த்த பேரனுக்கு ஒரே அதிர்ச்சி. கூடையை காணவில்லை.
""கூடையைக் காணோம் தாத்தா!'' என்று பேரன் கிரீச்சிட, அட ""சின்னப்பயலே! வாயை மூடுடா. கூடை காணாமல் எங்கே போகும். இதோ எங்கிட்டதான் இருக்கு. சும்மா சொல்லக் கூடாது. ரொம்ப ஜோரா படு ருசியாக இருக்குடா. அத்தனையும் நானே தின்று முடித்துவிட்டேன். இப்ப உன் கூடை காலி...'' என்று சிரித்துக் கொண்டே கூடையைத் தூக்கி கீழே விசிறி எறிந்தது. என்ன ஒரு திமிர். தாத்தாவிற்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை.
""இனியும் இப்படியே இவனை சும்மாவிட்டால், இவனின் இந்த திமிருக்கு ஒரு எல்லையே இருக்காது!'' என்று சொல்லிக்கொண்டே ஒரு தாவுத்தாவி மரத்தின் மேல் உட்கார்ந்து இவர்களைக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்த அதன் வாலைப்பிடித்து இழுத்து கீழே தள்ளி, தாத்தாவும் பேரனுமாக அதன் கால்களையும், கைகளையும் இறுக்க கட்டி வீட்டிற்கு இழுத்துச் சென்றனர்.
வீட்டினுள் மேலே உத்திரத்திலிருந்த ஆணியில் அதனை மாட்டி, பின் மனைவியிடம், ""நீ எக்காரணத்தைக் கொண்டும் இவனை அவிழ்த்து விடக்கூடாது. நான் போய் தோட்டத்தில் மீதமிருக்கும் வேலைகளை முடித்து விட்டு வருகிறேன்!'' என்று சொல்லி பேரனுடன் வெளி யேறினார்.
தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தவன் இனி இங்கிருந்து எப்படி தப்பிப் போவது என்பதைப் பற்றி யோசிக்கலானான். "மிக நைசாகப்பேசி இந்தக் கிழவியை கைக்குள் போட்டுக் கொண்டால் போதும், சுலபமாக இங்கிருந்து தப்பித்து விடலாம்' என்று கணக்குப் போட்டவன், வேண்டுமென்றே விம்பி விம்பி அழ ஆரம்பித்தான்.
(-1 தொடரும்)

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X