பழிவாங்கிய ஆவி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2013
00:00

இத்தனை புதையல் பொக்கிஷங்களைக் காட்டிலும் கார்ட்டரின் கவனத்தைக் கவர்ந்தது ஒரு சாதாரணப் பொருள். பைசாக் கூடப் பெறாத ஒன்று. 3,000 ஆண்டுகளுக்கு முன்னால் மலர்ந்த பூக்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஒரு மாலை. காய்ந்து கருகிய நிலையில் உருக்குலையாமல் காணப்பட்டது. விசுவாசமுள்ள ஒரு ஏழை, தன் வேதனையைத் தெரிவிக்க மன்னரின் கல்லறையில் மலர்மாலையை வைத்துப் போயிருக்கிறான்.
அது சரி, புராதன எகிப்தியக் கல்லறைக் கதை விளக்கம் ரசமாகத் தானிருக்கிறது. பழிவாங்கியது என்று தலைப்பிட்டிருக்கிறீர்களே... அதற்கும் இதற்கும்...?
தொடர்பு இருக்கிறது. பயப்படாமல் மேலே படியுங்கள். ஆரம்பத்தில் கூறியது நினைவிருக்கிறதா? புராதன எகிப்தியர்கள் தங்கள் மன்னர்கள் இறந்தாலும், அவர்களது ஆவி கல்லறையிலுள்ள உடலுக்குள் திரும்பி வந்து புகுந்து கொள்ளும் என்று இல்லையா? இப்படி ஆவிகளைத் தொந்தரவு செய்தால், அவற்றின் அமைதிக்குப் பங்கம் விளைவித்தால், அவை அதற்குரியவர்களைப் பழி தீர்த்துக் கொள்ளும். இதுவும் எகிப்தியர்களின் நம்பிக்கை.
தன் கல்லறையைத் திறந்ததற்காக தூதகமன் பழி தீர்த்துக் கொண்டான். எத்தனை சாவுகள், பாரோ மன்னனின் சாபம் மர்மமான முறையில் நிறைவேற்றப்பட்டது.
1922ம் ஆண்டு நவம்பர் மாதம் கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட அன்று, கல்லறையிலிருந்து வெளியேறிய கடைசி மனிதன் சூரிய ஒளிக்கு வந்ததும் திடீரென்று புழுதிப் புயல் உருவாகியது. ஹோ என்ற பேரிரைச்சலுடன் குகை வாயிலின் மீது சுழன்று வீசியது. அந்தச் சுழல் காற்று அடங்கியதும், புராதன எகிப்திய அரசின் சின்னமான கழுகு, கல்லறையின் மீதாக வட்டமிட்டுப் பறந்து மேற்குத்திசை நோக்கிப் போயிற்று. மர்மங்கள் நிறைந்த மறு உலகம் மேற்குத் திசையிலிருப்பதாக புராதன எகிப்தியர் நம்பினர்.
இறந்த பாரோமன்னரின் ஆவி, தன் கல்லறையை மாசுபடுத்தியவர்களை பழி வாங்கும் என்ற நம்பிக்கையுடையவர்கள். ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஆராய்ச்சிக் குழுவில் ஒருவரான லார்டு கார்னர்வான் என்பவரின் இடது கன்னத்தில் ஒரு கொசு கடித்தது. அது புண்ணாகி ரத்தத்தில் விஷம் பரவி, உடல் பலவீனப்பட்டு, கப வாதத்தினால் கெய்ரோ மருத்துவமனையில் நள்ளிரவு 1.55க்கு அவர் இறக்கும் போது நகரத்து விளக்குகளெல்லாம் அணைந்து இருள் மூடியது. அதே சமயத்தில், இங்கிலாந்திலுள்ள அவர் வீட்டில் ஹாம்ப்ஷயரில் அவரது நாய் ஊளையிட்டபடி உயிர் விட்டது.
அதிசயத்திலும் அதிசயம், பிறகு தூதகமனின் மம்மியைப் பார்வையிட்ட டாக்டர்கள் அந்தப் பிணத்தின் இடது கன்னத்தில் காயத்தின் பொறுக்குப் பெயர்ந்தது போல ஒரு வடு இருப்பதைக் கண்டனர். கார்னர்வானின் கன்னத்தில் எங்கு கொசு கடித்ததோ, அதே இடத்தில்.
1923ல் தொடர்ந்து வந்த மாதங்களில் தூதகமனின் கல்லறையைப் பார்க்க வந்த பலர் இறந்தனர். இது ஆவியின் பழி தீர்ப்பு என்று நம்பப்பட்டது.
கார்னர்வானின் உறவுக்காரர் ஹாப்ரே ஹெர்பர்ட் என்பவர் திடீரென்று பெரிடோனிடிஸ் என்னும் நோய் தாக்கி மாண்டார். பாரோவின் காலத்தில் வாழ்ந்த "அலி பார்மே பே' என்ற எகிப்திய இளவரசர், லண்டன் ஓட்டலில் கொலை செய்யப்பட்டார். அவருடைய சகோதரர் தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்க ரயில்வேயின் பெரும் புள்ளியான ஜார்ஜ் ஜே.கோல்ட் என்பவர் இந்தக் கல்லறையைப் பார்வையிட வந்தபோது ஜலதோஷம் ஏற்பட்டு,அது கப வாதமாக முற்றி இறந்தார்.
உல்ப் ஜாயல் என்னும் தென்ஆப்பிரிக்க கோடீஸ்வரருக்கும் இதே நிலைதான். மலை மீதிருந்து உருண்டு விழுந்து உயிர் இழந்தார்.
ஹோவார்டு கார்ட்டருக்கு, இப்பொக்கிஷங்களைப் பட்டியல் போட உதவியாக இருந்த ரிச்சர்டு பெதல் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
சில மாதங்களுக்கு பிறகு 1930ல் இவருடைய தகப்பனார் லார்டு வெஸ்ட்பரி தன்னுடைய லண்டன் குடியிருப்பிலிருந்து கீழே குதித்து இறந்து போனார். பாரோவின் கல்லறைப் பொக்கிஷத்திலிருந்த ஒரு அலபாஸ்டர் கூஜா இவர் படுக்கை அறையில் இருந்தது.
1922ல் இக்கல்லறை கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, அது தொடர்புடைய ஒரு டஜனுக்கும் அதிகமானவர்கள் இயற்கைக்கு மாறான முறையில் மரணமடைந்திருக்கின்றனர்.
ஆனால், தூதகமனின் கல்லறையை திறந்து ஆராய்ந்த முக்கிய நபரான, ஹோவார்டு கார்ட்டரை பாரோ பழி வாங்க வில்லையா...? சாபம் பலிக்கவில்லையா...? இல்லை. கல்லறையை உடைத்துத் திறந்த கார்டர் 1939ல் இயற்கையான மரணமெய்தினார்.
அப்படியானால் கல்லறை ஆவியின் பழிவாங்கும் விஷயம் வெறும் கட்டுக்கதை தானா என்று சிரிக்கிறீர்களா? அவசரப்படாதீர்கள்... இதையும் கேட்டுவிட்டுச் சிரிக்க முடியுமானால் சிரியுங்கள்.
1966ம் ஆண்டு பாரிசில் ஒரு அரும்பொருள் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் தூதகமனின் கல்லறைப் பொக்கிஷங்களைப் பொது மக்களின் பார்வைக்கு அனுப்ப வேண்டுமென்று பிரெஞ்சு அரசாங்கம் கேட்டுக் கொண்டது. எகிப்திய அரசும் இணங்கியது. புராதன எகிப்தியப் பொருட்களின் காப்பாளரான முகமது இப்ராஹிம் ஒரு கனவு கண்டார்.
"தூதகமனின் பொக்கிஷங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுபோனால், விபரீத விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். அப்படி செய்யாதே' என்று எச்சரித்தது ஓர் உருவம். ஆனால், இப்ராஹிம் தம் முடிவில் உறுதியாக இருந்தார். கெய்ரோவில் ஒரு விஷயமாக அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி விட்டுத் திரும்பும்போது, ஒரு கார் மோதிப் படுகாயமடைந்தார். இரண்டு நாளைக்குப் பிறகு இறந்தும் போனார்.
ஓ... பொல்லாத ஆவிகளே!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X