இரும்புச் சங்கிலி என்ன செய்யும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2013
00:00

ஜாக் ஷெப்பர்டு என்பவன் ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரன்; 1774ம் ஆண்டு பிடிபட்டான். விசாரணைக்குப் பிறகு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான். இதற்கு முன்பு இரு தடவை பிடிக்கப்பட்டு சிறைத் தண்டனை பெற்றவன் ஷெப்பர்டு. இரு முறையும் சிறையிலிருந்து தப்பியோடி விட்டான். ஆகவே, இம்முறை, நியூ கேட் சிறைச்சாலை அதிகாரிகள், மரண தண்டனை நிறைவேற்றப்படும்முன் தப்பி விடாதிருக்க விசேஷ கவனம் செலுத்தினர்.
கை,கால்களில் இரும்புப் பட்டை போட்டு, அவற்றை இரும்புச் சங்கிலியால் பிணைத்தனர். கால் விலங்குச் சங்கிலியை உறுதியான கருங்கல் சிறைத் தளத்தோடு இரும்புக் கொக்கியோடு இணைத்த சங்கிலியோடு பிணைத்தனர். இவ்வளவு பாதுகாப்புகளையும் தகர்த்துக் கொண்டு ஜாக் ஷெப்பர்டு கல்கோப்பை (ஸ்டோன் ஜக்) என்று வர்ணிக்கப்படும் நியூகேட் சிறைச் சாலையிலிருந்து தப்பி விட்டான். எப்படித் தப்பினான்?
சிறைக் காவலர்களுக்கு ஷெப்பர்டு நிறையப் பணம் கொடுத்தான். லஞ்சத்துக்கு மயங்காதவர் எந்தக் காலத்திலும் கிடையாதே! அளவுக்கு மீறிக் குடித்துவிட்டு, மயங்கிக் கிடந்தனர் காவலர்கள். போதை ஏறி அவர்கள் நினைவிழந்து கிடக்கும் இந்த சந்தர்ப்பத்தில், தன் விடுதலை முயற்சியை ஆரம்பித்தான். கைகளில் நிறைய சோப்பைப் பூசிக்கொண்டு, பூட்டியுள்ள இரும்புபட்டையிலிருந்து கைகளை மிக்க சிரமத்துடன் விடுவித்துக் கொண்டான்.
கால் விலங்குச் சங்கிலிகளோடு இணைத்துத் தரையில் பதித்துள்ள கொக்கிச் சங்கிலி, அதன் தளவரிசைப் பிணைப்பில் உறுதியாக இல்லாமல் ஆடுவதை முன்பே கவனித்து வைத்திருந்தான். இப்போது கைகளை விடுவித்துக் கொண்டதும், கால்பூட்டுச் சங்கிலியை பலமாக இழுத்து ஆட்டி, ஆட்டி அதைத் தரையிலிருந்து விடுவித்து விட்டான். இரு கால்களையும் இணைத்துள்ள சங்கிலி இருந்தாலும் இப்போது அவன் விடுதலை பெற்று விட்டான். கைகளை இயக்க முடிந்தது. கால் சங்கிலி தாராளமாக இருந்ததினால், ஓரளவு நடக்கவும் முடிந்தது.
சங்கிலியை தரையோடு பதிக்கப் பயன்பட்ட இரும்பு வளைய ஆணியை உளியாகப் பயன்படுத்தி, அறையின் கணப்புக்கு மேலே, ஒரு ஓட்டையை உண்டாக்கினான். அதில், கால் ஊன்றி புகைப் போக்கி வழியே மேலே போவதுதான் அவன் திட்டம். ஆனால், புகைப்போக்கிக் கூண்டின் குறுக்கே உறுதியாக இரும்புக் கம்பி பொருத்தப்பட்டிருந்தது தடையாக இருந்தாலும், ஷெப்பர்டுக்கு அது ஒரு பொருட்டாக இல்லை. தன்னிடமிருந்த கொக்கி வளையக் கம்பி உளியினால் சுவரை பெயர்த்து அந்தத் தடைக் கம்பியை நெம்பிப் பெயர்த்து ஏறி மேலே போனான். சிறைக் கட்டடத்தின் ஒரு பகுதியின் உச்சிக்கு திறந்த வெளிக்கு அந்தப் புகைக் கூண்டு அவனைக் கொண்டு சேர்த்தது. அந்த மொட்டைமாடியின் கைப்பிடிச் சுவர் மூலம் கீழே குதித்தான். சிறைச்சாலையின் முற்றம் இருபதடிக்குக் கீழே இருந்தது. குதிக்க முடியாது. கீழே இறங்கக் கயிறு வேண்டும் என்ன செய்வது, கயிறுக்கு எங்கேப் போவது?
மறுபடியும் வந்த வழியே தன் சிறை அறைக்குத் திரும்பினான். கட்டிலில் அவனது போர்வைகள் இருந்தன. காவலர்களின் மயக்கம் தெளியவில்லை. தூங்கிக் கொண்டிருந்தனர். போர்வை, படுக்கை விரிப்புகளோடு மீண்டும் புகைப்போக்கி வழியே உச்சிக்கு வந்தான். போர்வையை பட்டை பட்டையாகத் துண்டுகளாகக் கிழித்தான். ஒன்றோடொன்று முடி போட்டுக் கயிறு போலாக்கினான். கைப்பிடிச் சுவரிலுள்ள ஒரு குத்துக் கல்லில் அதைக் கட்டிக் கீழே வீசி, அதைப் பிடித்துக் கொண்டு முற்றத்தில் இறங்கி விட்டான். கால்களைப் பிணைத்துள்ள சங்கிலிகளோடுதான்.
இனி முற்றத்தைக் கடந்து, சுற்றுச் சுவரைத் தாண்டி வெளியே போக வேண்டும். சுவரின் உயரம் பன்னிரெண்டு அடி. அதன் மீது முள் கம்பிகள் வேறு பொருத்தி இருந்தது. கலங்க வில்லை ஷெப்பர்டு! கீழே இறங்கப் பயன் பட்ட துணிக் கயிறு அதிகமாகவே இருந்தது. கைக்கெட்டிய உயரம் வரையில் அதன் இணைப்பு முடிச்சை அவிழ்த்தான். தனக்கு உதவிய இரும்பு வளைய ஆணியில் அதை முடிபோட்டு மதில் சுவர் மீதுள்ள முள்கம்பியில் வீசினான். வளையம் அதில் போய் மாட்டிக் கொண்டது. துணிக் கயிற்றின் மூலம் மேலே ஏறி கயிற்றை இழுத்து மறுபுறம் வீசிக் கீழே இறங்கி ஓட்டமெடுத்தான். இல்லை ஓட முடியாதபடி கால்கள் சங்கிலியால் பிணைக்கப் பட்டுள்ளதே. நடந்தான்! ஆனால், அவனுக்கு விடுதலை வழங்கியதா விதி? அதுதான் இல்லை.
சில நாளில் மீண்டும் சட்டத்தின் பிடியில் சிக்கினான். இம்முறை மரண தண்டனையை உடனே, நிறைவேற்றி விட்டனர்.
***

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X