அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2013
00:00

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

தொப்பி சாமர்த்தியம்!





குரங்குகளிடமிருந்து இழந்த தொப்பியைத் திரும்பப் பெற்றுக் கொண்ட தொப்பி வியாபாரியின் கதை உங்களுக்குத் தெரியும்தானே! அவனுக்கு வயதாகிவிட்டது. தன் மகனுக்குத் தொப்பி வியாபார ரகசியங்களைப் போதித்து அவனைத் தயார் செய்துவிட்டான்.
மகனும் தொப்பி வியாபாரத்துக்குக் காட்டு வழியாகப் புறப்பட்டான். முன்பு காட்டு வழியாகப் போகும்போது குரங்குகள் திருடிக் கொண்டு போனதையும், தொப்பிகளைத் தந்திரமாகத் தான் திரும்பி வாங்கியதையும் அவனிடம் தெரிவித்தார் அவன் தந்தை. மகனும் வியாபாரம் துவங்கினான்.
ஒருநாள் காட்டு வழியாகப் போகும்போது மரத்தடியில் தொப்பிக் கூடையை வைத்து விட்டு உறங்கினான். விழித்துப் பார்த்த போது குரங்குகள் தொப்பிகளைத் திருடித் தலையில் வைத்திருப்பதைப் பார்த்தான். அப்பா சொல்லித் தந்த தந்திரம் அவனுக்கு நினைவுக்கு வந்தது. உடனே தன் தலையில் இருந்த தொப்பியை எடுத்துக் கீழே வீசி யெறிந்தான். அதேபோல் குரங்குகளும் தங்களது தலையில் உள்ள தொப்பிகளை எடுத்துக் கீழே வீசும் என்று நினைத்தான். ஆனால், நடந்தது என்ன தெரியுமா?
மரத்திலிருந்து வேக வேகமாக இறங்கி வந்த குரங்குக் குட்டி ஒன்று தொப்பிக்காரன் வீசிய அந்தத் தொப்பியையும் பொறுக்கித் தன் தலையில் போட்டுக் கொண்டு அவனைப் பார்த்து சிரித்தபடி சொன்னது, ""எங்களுக்கும் அப்பா உண்டு. தொப்பிக் காரனிடம் ஏமாறாமல் எப்படி தொப்பியை எடுக்க வேண்டும் என்று எங்க அப்பாவும் சொல்லித் தந்திருக்கிறார்,'' என்றது.
இது போலத்தான் நாமும். "நாம் மட்டுமே புத்திசாலிகள், நாம் செல்லும் வழிதான் சரி. நாம் மட்டுமே புத்திமான்கள்... ஏனையவர்கள் எல்லாரும் முட்டாள்கள்' என நினைக்கிறோம்.

என் செல்ல பப்லுவே!





வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்கிறீர்களா? செல்ல நாய்க்குட்டிகளை பராமரிக்கும் வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்...
எங்க வீட்டில், "பப்லு'ன்னு ஒரு டாஷ்கண்ட் பாப்பா இருக்காங்க. நான் எந்த நாய் பாப்பாவையும்-பப்லுன்னுதான் கூப்பிடுவேன். எங்க பப்லுன்னு வருதோ அங்கெல்லாம் நாய் பாப்பான்னு புரிஞ்சுக்கோங்க.
பப்லுக்கள் வளர்ப்பு பிராணிகளல்ல; வளர்ப்புப் பிள்ளைகள் போலவே மாறி விட்டன. வீட்டுக் காவலுக்காக பப்லுகளை வளர்த்த காலம் போய், கவுரவத்துக்காக பப்லுக்களை வளர்ப்பவர்கள் பெருகி விட்டனர். தோற்றத்தில் அழகானது, கம்பீரமானது என்று வகைவகையாகப் பிரித்து அதிக விலை கொடுத்து பப்லுக்குட்டி வாங்கி வளர்க்கின்றனர். வீட்டு பாதுகாப்பிற்கு ஒரு பப்லு என்பதை விட அதற்கு ஜோடியாக இன்னொரு பப்லுவையும் சேர்த்து வளர்க்கத் தொடங்கி விட்டனர். பப்லுக்களுக்கு சாப்பாடு போடுவது மட்டும் போதாது, ஒரு சில பராமரிப்பு முறைகளையும் கவனித்தால் அவை நலமாக இருக்கும்.
*பப்லுக்குட்டியாக வாங்கி வளர்க்க விரும்பினால், குட்டி பிறந்தவுடன் தாயிடம் இருந்து பிரித்து விடாதீர்கள். குழந்தைகள் போலவே அவற்றுக்கும் தாய்ப்பால் அவசியம். 40 நாட்கள் வரை தாய்ப்பால் குடித்து வளர்ந்த பிறகு பப்லுக்குட்டியை வாங்கி வளர்க்கலாம்.
*ஒருவேளை பப்லுக் குட்டியை பிரித்து, வாங்கி வந்துவிட்டால், அதற்கு மாட்டுப்பால் கொடுக்கலாம். பாலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, ஆறியபிறகு கொடுக்க வேண்டும்.
*குட்டி பப்லுக்களுக்கு ஒரு நாளைக்கு 8 முறை பால் கொடுக்க வேண்டியதிருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும் ஊட்டச்சத்து பானங்களையும் கொடுக்கலாம்.
*நகரசபை, மாநகராட்சியில் அனுமதி வாங்கித் தான், பப்லுவை வளர்க்க வேண்டும். அனுமதியில்லாமல் வளர்த்தாலோ (அ) தெருவில் பப்லுக்களைத் திரியவிட்டாலோ அவற்றை அப்புறப்படுத்த அவர்களுக்கு உரிமை உண்டு. எனவே, அனுமதி பெற்று கழுத்தில் "டை' கட்டி வீட்டில் வளர்க்க வேண்டும்.
* பப்லுக்களுக்கு சத்துணவு கொடுத்து வளர்க்க வேண்டும். இறைச்சி கொடுத்தால், பப்லுக்கள் கொழுகொழுவென்று வளரும்.
*பப்லுக்கள் தரையில் படுத்துக் கிடக்கும். இதனால் கிருமிகள் தொற்ற நிறைய வாய்ப்புள்ளது. அவற்றுக்கும் சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதற்கு கால்நடை டாக்டரிடம் காண்பிக்கலாம்.
*பப்லுக்களுக்கும் முடி கொட்டும். பொமேரியன் போன்ற முடி அதிகம் உள்ள பப்லுக்களுக்கு முடி உதிர்வதை நாம் பார்க்க முடியும். இரும்புச் சத்து குறைபாடு, வயிற்றில் பூச்சி இருப்பது போன்ற காரணங்களால் முடி உதிரும். வைட்டமின், தாது உப்புக்கள் நிறைந்த உணவுகளைக் கொடுத்தால், முடி உதிர்வதை தடுக்கலாம்.
*ஏ.சி., அறைக் குள்ளும் பப்லுக்களை அனுமதிப்பதை தவிர்க்கலாம். இதனால் அவற்றுக்கு சளி பிடிக்க வாய்ப்புள்ளது அல்லது போர்வை போர்த்திடலாம்.
*பப்லு பிறந்து 4 மாதத்தில் இருந்து 8 மாதம் வரை 20 நாட்களுக்கு ஒரு முறையும் 8 மாதத்தில் இருந்து உயிரோடு இருக்கும் வரையும் பப்லுவின் எடையைப் பார்த்து அதற்கேற்ப பூச்சி மருந்து கொடுத்து வர வேண்டும்.
* ஒன்றுக்கு மேற்பட்ட பப்லுக்கள் சேர்ந்து கொண்டால் அவைகளும் விளையாடத் தொடங்கிவிடும். அப்போது ஒன்றையொன்று கடித்துக் கொள்வதும் உண்டும். இதனால் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படாது.
*பப்லுக்களால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், அதற்கு தடுப்பு ஊசி போட வேண்டும். எல்லா விதமான தடுப்பு ஊசிகளையும் போட்டு, பாதுகாப்பாக பப்லுக்களை வளருங்கள்.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!





இது, "பூண்டு வெங்காய அப்பளக் குழம்பு' செய்முறை நேரம்.
தேவையானவை: புளி-ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, சின்ன பூண்டுப்பல்- 10, சின்ன வெங்காயம்-10, உளுந்து அப்பளம்- இரண்டு, மிளகாய் வற்றல்-ஒன்று, சாம்பார் பொடி-2 ஸ்பூன், கடுகு-1/4 ஸ்பூன், கடலைப் பருப்பு - 1/4 ஸ்பூன், வெந்தயம்-1/4 ஸ்பூன், நல்லெண்ணெய்-6 ஸ்பூன், உப்பு-தேவையான அளவு.
செய்முறை: புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். பூண்டு, வெங்காயத்தை தோல் உரித்து இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு, வெந்தயம், மிளகாய் வற்றல் தாளித்து, பிறகு வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். பின்பு அப்பளத்தைப் பிய்த்து துண்டுகளாக்கிப் போடவும். இத்துடன் சாம்பார் பொடியையும் போட்டு வதக்கிக் கொள்ளவும். பின்பு புளித்தண்ணீரை விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
பருப்பே இல்லாமல் வீடே மணக்கும். இந்த பூண்டு வெங்காய அப்பளக் குழம்பு.
என்றும் அன்புடன், அங்குராசு

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X