கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 மார்
2013
00:00

கேள்வி: ஸீரோ டே எக்ஸ்ப்ளாய்ட் என வைரஸ் தாக்குதல் குறித்து கட்டுரைகளில் வருகிறது. இது எதனைக் குறிக்கிறது? வைரஸ்கள் தாக்குவதற்கான நாட்கள் என ஏதேனும் உள்ளதா?
டி. சேவியர், புதுச்சேரி.
பதில்:
நல்ல வேளை சந்தேகத்தினைக் கேள்வியாக அனுப்பி உள்ளீர்கள். குறிப்பிட்ட நாளில் தான் வைரஸ் வந்து தாக்கும் என்றால், நாம் அதற்கேற்ப அதனை முறியடிக்கும் முயற்சிகளை எடுக்கலாமே. இது அது இல்லை. இன்னும் சொல்லப் போனால், மிக மோசமான ஒன்றாகும். வைரஸ் ஒன்று பரவத் தொடங்கினால், உடனே அது, ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்களின் பார்வைக்குச் சென்று, அதற்கான எதிர்ப்பு புரோகிராமினை அவர்கள் உருவாக்கி வழங்குவார்கள். இதனைத்தான் வைரஸ் டெபனிஷன் என்று கூறுவார்கள். எதிர்ப்பு புரோகிராம் உருவாகி, நாம் அதனை அப்டேட் செய்துவிட்டால், அந்த வைரஸால் பிரச்னை எதுவும் இருக்காது. ஆனால், வைரஸ் தாக்கத் தொடங்கிய நாளிலிருந்து, அதற்கான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் உருவாக்கப் பட்டு கிடைக்கும் காலம் வரையிலான இடைவெளிக் காலம் உள்ளதல்லவா? அது தான், ஸீரோ டே எக்ஸ்ப்ளாய்ட் என்பது. அந்த நாளில் நாம் குறிப்பிட்ட வைரஸ் முன்னால், பாதுகாப்பு எதுவும் இல்லாமல், வெறும் ஸீரோவாக உள்ளோம் என்று கூட இதற்குப் பொருள் கொள்ளலாம்.
சரியான பொருள் என்னவெனில், ஆண்ட்டி வைரஸ் தயாரிக்கும் பணியில் உள்ளவர்கள், குறிப்பிட்ட புதிய வைரஸை எதிர்த்து புரோகிராமினைத் தயார்ப்படுத்த நாள் இல்லை. அதற்குள் அந்த வைரஸ் வேகமாகப் பெருகும் இல்லையா? இதைத் தான் ஸீரோ டே எனக் குறிப்பிடுவார்கள்.

கேள்வி: மெமரி லீக் என்பது ராம் மெமரியை நாம் பயன்படுத்தாத இடம் என்று கொள்ளலாமா?
ஆ. ஸ்டீபன் ராஜ், மதுரை.
பதில்:
கிட்டத்தட்ட கொள்ளலாம். சற்று விரிவாக உங்கள் கேள்வியைப் பார்ப்போம். கம்ப்யூட்டர் சாப்ட்வேர் அப்ளிகேஷன், தான் இயங்கத் தயாராகும் போது, ராம் மெமரியில் தனக்கான இடத்தை எடுத்துக் கொள்ளும். இது போல பல புரோகிராம்கள் ராம் மெமரியில் இடம் கொள்ளும். அப்படியானால், அடுத் தடுத்து புரோகிராம்களை ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் இயக்கினால் என்னவாகும்? என்ற கேள்வி எழுகிறதா? என்னவாகும்? ராம் மெமரியில் இடம் இல்லை என்று பிழைச் செய்தி வரும்.
சரி, ஒரு புரோகிராமினை இயக்கி முடித்த பின்னர், அந்த புரோகிராம், தான் ராம் மெமரியில் கொண்டிருந்த இடத்தை விட்டு நகன்று, அந்த இடத்தினை ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குக் கொடுக்க வேண்டும். அதுதான் முறை. ஆனால், அது இயங்கா நிலையிலும், ராம் மெமரி இடத்தினை விட்டுக் கொடுக்க வில்லை என்றால், அந்த நிலையினைத் தான் மெமரி லீக் எனக் கூறுகின்றனர். இதனால், சிஸ்டத்தின் செயல் திறன் மந்தமாகிறது. இது போன்ற நேரங்களில், சிஸ்டம் செயல்படுவது சற்று மந்தமாகுமே தவிர, சிஸ்டம் கிராஷ் ஆக வாய்ப்பில்லை.

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசரில் கேம்ஸ் விளையாடுகையில், சில வேளைகளில், ஜாவா டவுண்லோட் செய்து இயக்குமாறு செய்தி கிடைக்கிறது. இதற்கு என்ன காரணம்? ஜாவா பிரவுசருடன் இருக்காதா? குரோம் பிரவுசரில் இந்த மாதிரி கேள்வி வருவதில்லை என்று என் நண்பர் கூறுகிறார். நான் அதனைப் பயன்படுத்துவதில்லை.
சி. இந்திரா உதயகுமார், சென்னை.
பதில்:
ஜாவாவினால் ஏற்படும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்காக, ஜாவா இயக்கம் தரும் ப்ளக் இன் புரோகிராமினை, பயர்பாக்ஸ் ஒதுக்கி வைத்துள்ளது. இருப் பினும், நீங்கள் ஜாவாவினை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுக்களை, பயர்பாக்ஸ் பிரவுசரில் விளையாட வேண்டும் என விரும் பினால், ஜாவாவினை இயக்க வழி உள்ளது.
உங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரின் வலது மூலை யில் உள்ள ஹோம் என்னும் அடையாளத்தில் கிளிக் செய்திடவும். இங்கு அதிகமான எண்ணிக்கையில், ப்ளக் இன் மற்றும் ஆட் ஆன் புரோகிராமினைக் காணலாம். இதில் ஜாவாவும் காட்டப்படும். ஆனால், இதன் அருகே பாதுகாப்பு குறித்த எச்சரிக்கையினையும் காணலாம். ஜாவா முடக்கப்பட்டதற்கான அடையாளத்தினையும் அங்கு பார்க்கலாம். இங்கு enable என்பதில் கிளிக் செய்து ஜாவாவினை இயக்கவும். இனி, பயர்பாக்ஸ் பிரவுசரில் ஜாவா இயங்கும். ஆனால், உங்கள் கம்ப்யூட்டருக்கு சிக்கல் ஏற்பட்டால், மொஸில்லா பயர்பாக்ஸ் பொறுப்பேற்காது. இந்த பாதுகாப்பு குறித்த தகவல்களுக்கு http://www.java.com/en/download/ help/java_update.xml#manual என்ற முகவரியில் உள்ள தகவல்களை ஒருமுறை படித்துப் பார்த்துவிடுங்கள்.

கேள்வி: ராம் மெமரியை முழுமையாகப் பயன்படுத்துவது தவறா? தவறு என நான் சந்தேகம் கேட்ட பலரும் கூறுகின்றனர். விளக்கமாகப் பதில் தரவும்.
கா.அன்பரசி, தாம்பரம்.
பதில்:
இதனை மனதில் தேங்கிய பயம் என்றே கூறுவேன். உங்களுடைய பயம் சரியானதுதான். ஆனால், இதனை அபாயம் தரும் அளவிற்குக் கொண்டு செல்லத் தேவை இல்லை. விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பிரவுசர் மூலம் இணையத்தை உலா வரும் ஒருவர், டாஸ்க் மேனேஜர் விண்டோவினைப் பார்த்தால், அந்த புரோகிராம் மட்டும் 6 ஜிபி மெமரியைப் பயன்படுத்துவதாகக் கிடைக்கும் தகவலைப் பார்த்துப் பயப்படுத்தான் செய்வார். உடனே, கம்ப்யூட்டர் மெதுவாகச் செயல்பட இதுவே காரணம் என்றும் எண்ணி முடிவு செய்வார். இது தவறு.
ராம் நினைவகம் மிக வேகமானது. ஹார்ட் டிஸ்க் மற்றும் ப்ளாஷ் ட்ரைவ்களைக் காட்டிலும் வேகமானது. நாம் அடிக்கடி பயன்படுத்தும் டேட்டா, ராம் மெமரியில் வைத்து இயக்கப்படுவதால், கம்ப்யூட்டரின் செயல் திறன் வேகமாக இருக்கும். ராம் மெமரியில் டேட்டா ஏற்றப்படாவிட்டால், அது காலியாக இருக்கும். ஏன் அப்படி இருக்க வேண்டும்? ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்து வோரும் இதே போல பயத்தினை மனதில் கொண்டிருக்கத் தேவையில்லை.

கேள்வி: என் பெர்சனல் கம்ப்யூட்டரில் பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறேன். வைரஸ் காரணமாக சி ட்ரைவினைப் பார்மட் செய்த தனால், அதில் இருந்த புக்மார்க் குறிப்புகளை, நீங்கள் முன்பு ஒருமுறை குறிப்பிட்ட முறையில் பைலாக சேவ் செய்தேன். அது ஜே.எஸ்.ஓ.என் என்ற எக்ஸ்டன்ஷனுடன் சேவ் செய்யப்பட்டது. ஆனால், மீண்டும் அதனை எப்படி புதிய பயர்பாக்ஸ் பிரவுசரில் இணைப்பது எனத் தெரியவில்லை. வழி காட்டவும்.
கா. சுந்தரேசன், கோவை.
பதில்:
மிகச் சரியாக முதல் படியை முடித்துவிட்டு, அடுத்த நிலை தெரியாமல், அல்லது நினைவில் இல்லாமல் தடுமாறு கிறீர்கள். சரி, பரவாயில்லை. நீங்கள் குறிப்பிட்ட அந்த bookmarks 2.json பைலை, எளிதில் எடுக்கும் வகையில் டெஸ்க்டாப்பில் அல்லது ட்ரைவில் உள்ள போல்டரில் வைக்கவும். இப்போது பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறக்கவும். அதில் bookmarks கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், show all bookmarks தேர்ந்தெடுக்கவும். இங்கு லைப்ரரி என்ற விண்டோ கிடைக்கும். இதில் Import and Backup என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் மெனுவில் Restore என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், Choose File என்பதனைத் தேர்ந்தெடுத்து, பின்னர் நீங்கள் எடுத்துள்ள பேக் அப் பைல் bookmarks 2.json பிரவுஸ் செய்து கிளிக் செய்திடவும். இனி நீங்கள் பேக் அப் செய்த அனைத்து புக்மார்க்குகளும் கிடைக்கும்.

கேள்வி: தனிநபர் சுற்றுக்கு என நான் நடத்தும் பத்திரிக்கைக்கு, நண்பர் ஒருவர் மிக நல்ல துணுக்குகள், தகவல்கள், கட்டுரைகள் அனுப்புகிறார். ஆனால், அவர் பயன்படுத்தும் எழுத்து வகை எனக்கு நிறைவைத் தரவில்லை. தலைப்பினை மட்டும் தக்க வைக்க விரும்புவதால், ஒவ்வொரு பத்தியாக தேர்வு செய்து அவர் செய்த பாண்ட், எபெக்ட் போன்றவற்றை மாற்றி வருகிறேன். இவற்றை ஒரே முயற்சியில் மாற்றி அமைக்க முடியுமா?
சி. கார்த்திக் செல்வன், திருப்பூர்.
பதில்:
தாராளமாக எளிதாக இவற்றை மாற்ற முடியும். Ctrl+H கீகளை அழுத்தி Find and Replace டயலாக் பாக்ஸை வரவழையுங்கள். More பட்டனை அழுத்துங்கள். Find What என்பதில் கர்சரைக் கொண்டு வாருங்கள். Format பட்டனை அழுத்தி Style என்பதைத் தேர்வு செய்யுங்கள். Style பட்டியலில் Normal என்பதைத் தேர்வு செய்து Ok செய்யுங்கள்.
Find and Repalce டயலாக் பாக்ஸில் உள்ள Replace என்பதில் கர்சரைக் கொண்டு வாருங்கள். Special பட்டனை அழுத்துங்கள். Find WhatText என்பதை கிளிக் செய்து Normal ஸ்டைலைத் தேர்வு செய்யுங்கள். Ok செய்யுங்கள். Format பட்டனை மிண்டும் அழுத்தி பின்பு Font பட்டனை அழுத்துங்கள். வேண்டிய பாண்டைத் தேர்வு செய்யுங்கள். அதன் அளவை மாற்றுங்கள். Bold, Italics போன்ற எபெக்டுகளை விருப்பப்படி மாற்றுங்கள். Ok செய்யுங்கள். Replace All பட்டனை அழுத்துங்கள். நீங்கள் கேட்டவை கிடைக்கும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X