காரிகிராண்ட் என்பவர் ஒரு கழைக்கூத்தாடி. இவர் பிழைப்பைத் தேடி அமெரிக்கா சென்ற போது அங்கே பல கழைக் கூத்தாடிகள் ஏற்கனவே இருப்பதைப் பார்த்தார். எனவே, நடனம் ஆடக் கற்றார். நடனம் ஆடுகிறவர் களும் ஏராளம். ஆகையால் பாட்டுக் கற்றுக் கொண்டார்.
பின்னர் நாடகங்களில் சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு மாலை நேரம். நாடகம் துவங்க இருக்கும் போது முக்கிய நடிகர் ஒருவர் குடிபோதை காரணமாக மேடையில் தோன்ற முடியவில்லை. அப்போது கார் கிராண்டுக்கு யோகம் அடித்தது. ஆனால், அவருக்கே நம்பிக்கை இல்லை. ரசிகர்கள் கல் எறியப் போவது நிச்சயம் என்ற பயத்துடன் அவர் மேடையேறி கழைச் கூத்தாடி நடனம் ஆடி, தான் கற்ற பாடல்களைப்பாடி ஏதோ ஒருவிதமாக ஒப்பேற்றினார்.
கரவொலியினால் தியேட்டரே அதிர்ந்தது. ரசிகர்கள் திரும்பத்திரும்ப ஒன்ஸ்மோர் கேட்டனர்.
ஒரு பிரபல இசையமைப் பாளர், அன்றைய நாடகத்தில் முன் வரிசை நாற்காலியில் அமர்ந் திருந்தார். அவரை காரியின் இசை பெரிதும் கவர்ந்தது.
மறுநாள் காலை அந்த பிரபல இசையமைப்பாளர் காரி கிராண்டைத்தேடி வந்தார். நியூயார்க்கில் தான் நடத்த இருக்கும் ஒரு மாபெரும் இசைக் கச்சேரி யில் நீங்கள் பாடத் தயாரா? ஆயிரக்கணக்கில் சன்மானம் தருகிறேன் என்றபோது காரிக்கு மயக்கமே வந்து விட்டது.
அதிலிருந்து அவர் சினிமா நடிகரானார். புகழும், கோடிக்கணக்கில் பணமும் அவரைத் தேடி வந்து குவிந்தன.
இதுதான் அதிஷ்டம் என்பது!