கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஏப்
2013
00:00

கேள்வி: லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஹீட் ஸிங்க் முக்கிய வேலையை மேற்கொள்கிறது எனப் படித்தேன். இதன் பணி என்ன?
தா. உக்கம்சந்த், ஆரணி.
பதில்:
வெப்பத்தினைக் கடத்தும் ஒரு சாதனம் heat sink. எலக்ட்ரானிக் சாதனங்கள் இயங்குகையில் உருவாகும் வெப்பத்தினைத் தொடர்ந்து கடத்தி அனுப்பும் பணியினை இது மேற்கொள்கிறது. இதனால், தொடர்ந்து உருவாகும் வெப்பத்தினால், லேப்டாப் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் செயல் தடைபடுவது தடுக்கப்படுகிறது. காரில் உள்ள ரேடியேட்டர் போன்ற வடிவமப்புடன் இது உருவாக்கப்பட்டு, லேப்டாப் கம்ப்யூட்டரில் அமைக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் ப்ராசசர், லேசர் டயோட், எல்.இ.டி. பல்ப் போன்ற, வெப்பத்தினை அதிகமாக வெளிப்படுத்தும் சாதனங்களுடன் இணைவாகப் பொருத்தப்பட்டு இவை இயங்குகின்றன. இவை வெப்பத்தினைக் கடத்துவதால், இந்த சாதனங்கள் இயங்க நிலையான, சரியான வெப்ப சூழ்நிலை தரப்படுகிறது.

கேள்வி: ஆபீஸ் 2007 பயன்படுத்துகிறேன். வேர்ட் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட் மற்றும் ஒரு பாராவிற்கு ஷேடிங் அமைப்பது எப்படி என்று விளக்கவும். இந்த தொகுப்பில் வழிகள் தெளிவாக இல்லை.
கே. சதீஷ் குமார், கோவை.
பதில்:
ஆபீஸ் 2003 பயன்படுத்திய பின்னர், ஆபீஸ் 2007க்கு மாறியதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். தொடக்கத்தில் இது போன்ற வழிகள் உடனடியாகக் கிடைக்காமல், புதிய தொகுப்பு சரியில்லையோ என்ற எண்ணம் உருவாகும். போகப் போகச் சரியாகிவிடும். இதோ உங்களுக்கான வழிமுறையைத் தருகிறேன். நீங்கள் விரும்பும் ஷேட் அமைப்பதை, பாராவினுக்கான பார்டர் எதனுடனும் சேர்த்தே அமைக்கலாம். அது மட்டுமின்றி, ஷேட் எந்த வண்ணம், எந்த அளவில் அமைக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அந்த அளவில் அமைத்திட வேர்ட் வசதிகளைத் தருகிறது.
1. எந்த பாரா அல்லது டெக்ஸ்ட்டில் ஷேட் அமைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதில் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும்.
2. ரிப்பனில் ஹோம் டேப் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
3. இங்கு Paragraph குரூப் செல்லவும். இதில் கீழ்நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்து, ஷேடிங் டூல் (Shading tool) வலது பக்கம் செல்லவும். இந்த டூல் ஒரு பெயிண்ட் வாளி போலத் தோற்றமளிக்கும். வேர்ட் ஒரு ஷேடிங் பேலட் ஒன்றைக் காட்டும்.
4. இந்த பேலட் மூலம் ஷேட் அமைய இருக்கும் வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு பத்து வண்ணங்கள் இருக்கும். ஒவ்வொரு வண்ணத்தின் கீழாக, ஷேடிங் எந்த விகிதத்தில் அமைக்கலாம் என்பதற்கான வழியும் தரப்பட்டிருக்கும். பாரா முழுமையும் இல்லாமல், தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட் மற்றும் இந்த ஷேடிங்கை அமைக்கலாம். 1ல் கூறியபடி இதற்குச் செயல்படவும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில், எமோட்டிகான் உருவங்களை நானே அமைக்கிறேன். கோலன், அடைப்புக் குறி, இடைக்கோடு ஆகியவற்றைப் பயன்படுத்துகிறேன். ஆனால், இது சிறிய படமாகத் தானே மாறிக் கொள்கிறது. அப்படி இல்லாமல், நானே அமைத்த படி இருக்க விரும்புகிறேன். இதற்கு வேர்ட் ஏதேனும் ஒரு வழி தருகிறதா?
என். ஸ்ரீலேகா, பொள்ளாச்சி.
பதில்:
நல்ல கேள்வி. நாம் கஷ்டப்பட்டு எமோடிகானை அமைக்க, அது ஏன் தனி ஒரு படமாக (டிங்பாட்– dingbat) மாற வேண்டும்? நமக்கு இதனை அமைக்கத் தெரியும் என்பதனை எப்படிக் காட்டிக் கொள்வது? இதுதானே உங்களின் ஆதங்கம். இதோ அதற்கான வழியைத் தருகிறேன்.
1. ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து பின்னர், Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
2. இந்த டயலாக் பாக்ஸில் இடது பக்கம் உள்ள Proofing என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு Auto Correct Options என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இனி, ஆட்டோ கரக்ட் ஆப்ஷன்ஸ் என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் ஆட்டோ கரக்ட் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டுக் காட்டப்படும்.
4. இதில் replacements என்ற பட்டியல் பிரிவில், எந்த எமோட்டிகான் மாற்றப்பட வேண்டாம் என்று விரும்புகிறீர்களோ, அந்த எமோட் டிகானைத் தேர்ந்தெடுக்கவும். அனைத்து எமோட்டிகான்களும், இந்த பட்டியலின் தொடக்கத்தில் காட்டப்படும். எத்தனை எமோட்டிகான்களையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
5. தேர்ந்தெடுத்த பின்னர், Delete பட்டனை அழுத்தவும்.
6. இறுதியாக ஓகே பட்டனைத் தேர்ந்தெடுத்து மூடவும். வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸில் கேன்சல் பட்டனைக் கிளிக் செய்து வெளியே வரவும். இனி நீங்கள் விரும்பியபடி, எமோட்டிகான் நீங்கள் தயார் செய்தபடியே இருக்கும். மாற்றம் ஏற்படாது.

கேள்வி: என் விண்டோஸ் எக்ஸ்பி ஸ்டார்ட் மெனு மிக நீளமாக உள்ளது. அதற்குச் சென்றவுடன், ஒரு பெரிய நெட்டு கட்டமாகக் காட்டப்படுகிறது. இதனை மாற்ற என்ன வழி என்று தெரிவிக்கவும்.
எஸ். நிஷாந்தினி, கோவை.
பதில்:
நீங்கள் இயக்கும் புரோகிராம்களுக்கேற்றவகையில் ஸ்டார்ட் மெனு காட்டப்படும். உங்கள் விருப்பத்திற்கேற்ப இதனை எப்படி மாற்றுவது எனப் பார்க்கலாம். முதலில், உங்கள் டாஸ்க்பாரில், காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ் Properties என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது டாஸ்க் பார் மற்றும் ஸ்டார்ட் மெனு ப்ராப்பர்ட்டீஸ் கட்டங்கள் பாப் அப் ஆகும். இதில் இரண்டு டேப்கள் கிடைக்கும். இதில் Start Menu என்பதில் கிளிக் செய்திடவும். ஸ்டார்ட் மெனு என்பதற்கு இடப்புறமாக உள்ள சிறிய பட்டனில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், Customize என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து மீண்டும் இரண்டு டேப்கள் உள்ள பாக்ஸ் கிடைக்கும். இதில் Advanced என்பதில் கிளிக் செய்திடவும். இந்த கட்டத்தின் நடுவாக, ஸ்டார்ட் மெனுவில் உள்ளவை பட்டியலாகக் காட்டப்படும். இந்த பட்டியலில், கீழாகச் செல்லவும். கீழ் பகுதிக்குச் சற்று முன்னர், Scroll Programs எனக் காட்டப்படும். உங்கள் ஸ்டார்ட் மெனு ஒரு நீள் கட்டமாக இருக்க வேண்டும் என்றால், பாக்ஸில் செக் மார்க் அடையாளம் ஒன்றை இடவும். அதற்குப் பதிலாக, ஒன்றுக்கு மேற்பட்ட கட்டங்கள் தேவை என எண்ணினால், பாக்ஸில் டிக் அடையாளம் இல்லாமல் விட்டுவிடவும். அடுத்து கிடைக்கும் ஸ்டார்ட் மெனு மற்றும் டாஸ்க் பார் ப்ராப்பர்ட்டீஸ் கட்டத்தில், Apply அதன் பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது ஒரு நீ..........ளமான அல்லது உயரமான கட்டத்திற்குப் பதிலாக, மூன்று சிறிய கட்டங்களில் ஸ்டார்ட் மெனு கிடைக்கும். இதனால், நீங்கள் ஸ்டார்ட் மெனுவில் விஷயங்களைத் தேடுவதற்கான நேரம் குறையும். நல்ல கேள்வி. கேட்டதற்கு நன்றி.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி ப்ரோ மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துகிறேன். திடீரென என் விண்டோஸ் பெயிண்ட் புரோகிராம் செயல்படாமல் போய்விட்டது. புரோகிராம் பைல்கள் வழியாக அதனைச் சரி செய்திட முயற்சி செய்து முடியவில்லை. இதனை எப்படி திரும்ப சரியாக அமைப்பது?
எஸ்.கே. ராம்குமார், சென்னை.
பதில்:
விண்டோஸ் பெயிண்ட் மற்றும் விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைந்து தரப்படும் எந்த புரோகிராமினையும், மீண்டும் இன்ஸ்டால் செய்திடலாம். ஸ்டார்ட் பட்டன் அழுத்தி கண்ட்ரோல் பேனல் பெறவும். இதில் Add or Remove Programs என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், Add/Remove Windows Components என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு Accessories and Utilities என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து details என்பதில் கிளிக் செய்து, அதன் பின்னர் Paint என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். பெயிண்ட் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டு, எர்ரர் மெசேஜ் கிடைப்பதால், அதனை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கி, மேலே தரப்பட்டுள்ள வழிகள் வழியாக பெயிண்ட் புரோகிராமினைப் பெறலாம்.
உங்களுக்கு ஒரு நல்ல டிப்ஸ் தரட்டுமா! விண்டோஸ் தரும் பெயிண்ட் புரோகிராமினை விட்டுவிடுங்கள். Paint.net இணைய தளம் சென்று, அங்கு கிடைக்கும் பெயிண்ட் புரோகிராமினை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்கள். விண்டோஸ் தரும் பெயிண்ட் புரோகிராமினைக் காட்டிலும் கூடுதல் வசதிகள் கொண்ட அருமையான புரோகிராம் இது. இதனைப் பெற http://www.getpaint.net/download.html என்ற முகவரியில் உள்ள இணையதளப் பக்கத்திற்குச் செல்லவும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஒரு முறை பயிற்சி பெறும் பொறியாளர்களால் இந்த பெயிண்ட் புரோகிராம் வடிவமைக்கப்பட்டு, தற்போது இலவசமாக இது வழங்கப்படுகிறது.

கேள்வி: இதுநாள் வரை விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்தி வருகிறேன். உங்களுடைய கட்டுரை மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சப்போர்ட் முடிவு அறிவிப்பினைப் பார்த்தபின்னர், விண்டோஸ் 7 நிறுவ முடிவெடுத்துள்ளேன். என் கம்ப்யூட்டரில் இதனை நிறுவ முடியுமா எனத் தெரிவிக்கவும். இணைப்பில் விபரம் தந்துள்ளேன்.
கா. சீனிவாசன், திருநகர்.
பதில்:
இணைப்பில் தந்துள்ள விபரங்கள் போதுமானதாக இல்லை. உங்களைப் போல மாறும் நிலையில் உள்ள வாடிக்கையாளர்களுக்காகவே, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இணைய தளத்தில் இதற்கான தீர்வினைத் தந்துள்ளது. இதற்கு Windows 7 Upgrade Advisor என்று பெயர். இதனை http://www.microsoft.com/enus/download/details.aspx?id=20 என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் இயக்கினால், அதில் விண்டோஸ் 7 சிஸ்டம் பதிந்து இயக்க முடியுமா என்ற தகவலும், என்ன மாற்றம் தேவை என்ற விபரமும் தரப்படும். அதன்படி செயல்படவும். விண்டோஸ் 7 சிஸ்டம் பதிவது மிக எளிது. தரப்படும் சிடியில் அறிவிக்கப்படும் வழிமுறைப்படி செயல்பட்டு பதிந்து கொள்ளலாம். இருப்பினும், உங்கள் ஹார்ட் ட்ரைவில் உள்ளவற்றிற்கு ஒரு பேக் அப் காப்பி எடுத்துக் கொண்டு மாற்றவும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X