மங்களங்கள் அருளும் மரகத லிங்கம் | குமுதம் பக்தி | Kumuthampakthi | tamil weekly supplements
மங்களங்கள் அருளும் மரகத லிங்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஏப்
2013
00:00

சப்த லிடங்கத் தலங்கள் என்று சிவ பெருமானுக்கு ஏழு தலங்கள் உண்டு. உளி படாமல் அமைந்த சிவலிங்க திருமேனிகளை லிடங்கர் என்பர். அப்படிஅமைந்த ஏழு தலங்களே சப்த லிடங்கத்தலங்கள்.
தியாக விடங்கர், அவனி விடங்கர், புவன விடங்கர் என்னும் அந்த வரிசையில் ஆதி விடங்க பெருமான் எழுந்தருளியுள்ள தலம். திருக்கார வாசல் தேவாரத்தில் இத்தலம் திருக்கார வாயில் என்று குறிப்பிடப்படுகிறது.
வெள்ளாற்றின் மேற்கரையில் அநமைசந்த ஆலயம் . இறைவன் பெரியர் கண்ணாயிர நாத கல்வெட்டுகளில் தருக்காறாயிரம் நாயனார் என்றும் இத்தலத்து இறைவன் பெயர் காணப்படுகிறது.

பிரம்மனுக்கு ஆயிரம் கண் காட்சியருளியது: ஆணவம் கொண்ட பிரம்மன் தன் பிழை பொறுக்கத் தவம் செய்தததால் அவனுக்கு ஆயிரம் கண்களுடன் இறைவன் காட்சிதந்தார். அதனால் இவ்விடத்து ஈசனுக்கு கண்ணாயிர நாதன் என்ற பெயர் ஏற்பட்டது. ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் விசுவநாதர் பரிவாரங்க் எழுந்தருளியுள்ளார். பிராகாரத்தில் விநாயகர், முருகன், நடராஜ பெருமான் சந்நதிகள் உள்ளன. தெற்க பார்த்தவாறு அம்பிகை சந்நதி அம்பிகை நின்ற திருக்கோலத்தில் மேற் நோக்கிய திருககரங்களில் அக்கமாலையும் தாமரையு ம் துலங்க காட்சி தருகிறார்.
இவ்வாலயத்தில் உள்ள மரகத லிங்கம் பிரசித்தி பெற்றது. இதற்கும் ஆதி விடங்கர் என்றே பெயர். இந்த சிவலிங்க திருமேனிக்கு தினமும் காலையில் அபிஷேகம் நடைபெறுகிறது. தல விருட்சம் பலாமரம் கோயிலுக்கு அழகிய மதில்களும், கோபுரங்களில் அழகான கதை பொம்மைகளும் உள்ளன.

கபால முனிவர் கதை: கபாலமுனிவர் அம்மையை நோக்கி தவம் இருந்தார். அவருடைய தவ நெருப்பை தாங்க முடியாத தேவர்கள் இறைவனிடம் சென்று விரைவில் காபல முனிவருக்கு அருள் வழங்க வேண்டியுள்ளனர்.
இறைவனும் அவ்வாறே அருள் வழங்கி இன்று முதல் இத்தலம் உன் பெயரால் கபாலவனம் என்றே வழங்கப்படும் எனஅருளினார். இத்தலத்தில் ஆதிவிடங்கர் எழுந்தருறளி இருப்பது வீரசிங்காசனத்தில் வீர சிங்காசனம் என்பது நான்கு பக்கங்களிலுளம் சிங்கங்ளை பதுமைகளாக கொண்டு அமைய பெற்றது. அமாவசை, சோமவாரம், சூரிய சந்திர கிரகணம் ஆகிய புண்ணிய காலங்களில் இத்தலத்தில் உளள தீர்த்தங்களில் நீராஸ்ரீடுபவர்கள் பாவங்கள் நீங்கி, சிவனருள் பெறுவர்.

கடுக்காய் பிள்ளையார்
இத்தலத்தில் கடுக்காய் பிள்ளையார் சந்நதிஎன்று இங்குள்ள திருக்குலத்தின் கரையில் உள்ளது. விநாயகரின் பெயர் தான் கடுக்காய் பிள்ளையார்.
இதற்கு ஒரு கதை உண்டு.
வணிகன் ஒருவன் சாதிக்காய் மூட்டைகளை கொண்டு வந்தான். அதற்கு வரிகட்ட வேண்டி வந்தபோது சாதிக்காய் மூட்டைகளை கடுக்காய் மூட்டை என்று பொய் கூறி குறைவான வரி கட்டினான். விநாயகபெருமானின் ஆணையின் பேரில் சாதிக்காய் மூட்டைகள் அனைத்தும் உண்டமயிலேயே கடுக்காய் மூட்டைகளாக ஆகிவிட்டன.
அதிர்ச்சியுள்ள வணிகன், தன் தவறுக்கு வருந்தி பிள்ளையாரிடம் மன்னிப்பு கோரினான். விநாயகரின் கருணையினால், கடுக்காய்கள் மீண்டும் சாதிக்காய்களாக மாறின.
இக்காரணத்தால் இந்த பிள்ளையாருக்குகடுக்காய் பிள்ளையார் என்று பெயர் ஆயிற்று
மரகத லிங்கத்தால் மகிமை பெற்றதும், சப்தவிடங்க தலங்களுள் ஒன்றாக விளங்குவதுமான திருக்காரவாசல் சென்று ஆதி விடங்கரை வணங்குவோர் வாழ்வில் குறை எல்லாம் நீங்கி நிறைவாழ்வு பெருவர்.
திருவாரூரிலிருந்து 8 கி.மீ. தொலைவு. அடிக்கடி பேருந்து உண்டு. பேருந்து செல்லும் சாலையோரமாகவே ஆலயம் அமைந்துள்ளது.

- ஆர்.சி.சம்பத்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X