இது தான் விஷயமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2013
00:00

மிருதுவான மணல் நிறைந்த பாலைவனங்களில் பயணம் செய்ய விசேஷமான சாதனங்கள் தேவை. போர்க்காலங்களில் பாலைவனக் காவல் படையின் வாகனங்களுக்குப் பெரிய குறைந்த காற்றழுத்தமுள்ள டயர்களைப் பயன்படுத்துவர். கனம் தாங்காமல் மணலில் புதைந்து போகாதிருக்க இப்படியொரு ஏற்பாட்டை மனிதன் எப்படித் தெரிந்து கொண்டான்?
அராபியர்கள் பாலைவனங்களில் ஒட்டகத்தின் மீது இலகுவாகப் பயணிப் பதைக் கண்டனர். ஒட்டகங்களின் பாதங்கள், அகலமாக, மெத்தென்ற விசேஷ அமைப்பில் இருப்பதை கண்டான். பாலைவனத்தில் ஜெர்போ என்னும் ஒரு வகை எலிகள் உள்ளன. அதன் பாதங்கள் பெரிதாக, அகலமாக ரோமம் நிறைந்திருக்கும். ஆகவே, அவை மணலில் புதையாது. அக்கால்களை அழுத்தித்தாவிக் குதித்துச் செல்லும். அதற்கு "பாலன் ஸாக' அதன் நீண்ட வாலும் உதவும்.
இதே போல, மிருதுவான பனித்துகள் மூடிய பிரதேசங் களும் பாலை வனத்து மணல் போலவே அபாய மானவை. பயணிப்பவர் கனம் தாங்காமல் பனியில் புதை யுண்டு விடுவர். இத்தகைய பனிப் பிரதேசத்தில் ஒருவகை முயல்கள் ஆபத்தின்றி வாழ்கின்றன. ஸ்நோஷû ராபிட் என்று அதற்குப் பெயர். அதன் பின்னங்கால்கள் அகலமானவை. தரையில் அழுத்தும் போது, விரிந்து உடல் பளு பரவலாகப் பதியும். இதன் பாதங்களும் ரோமம் அடர்ந்த தோலினால் மூடப்பட்டிருக்கும்.
இயற்கை உருவாக்கித் தந்த இந்த வசதிகளை, ரகசியங்களை மனிதன் பார்த்தான். அதன் அடிப் படையில் பாலைவனத்திலும், பனிப் பிரதேசத் திலும் பயணம் செய்யப் பல சாதனங்களை உருவாக்கினான்.
அமெரிக்கச் செவ்விந்தியரிடையே பல வகை பனிப்பாதுகைகள் புழக்கத்திலுள்ளன. மரத்தா லான இவற்றில் தோல் பட்டைகள் பொருத்தப் பட்டிருக்கும். இதை அணிந்து பயணிப்பதால், புதையாமல் போக முடியும். ஐரோப்பாவில் காணும் அகலமான மரத்தாலான பனிப் பாதுகை கள் வசதியானவை. இதிலிருந்து நவீன, "ஸ்கீ' எனப்படும் பனிச்சறுக்குச் சாதனம் உருவாக்கப் பட்டது. எத்தனையோ நவீன சாதனங்களுக்கு இயற்கை முன்னோடியாக விளங்கி வருகிறது.
சதுப்பு நிலங்களை கனமற்ற சேறு மண்டிய தரைகளை மனிதன் கடக்க வேண்டி இருக்கு மானால்... பறவை வேட்டையாடுவோர் தாங்கள் சுட்டு வீழ்த்திய காடை, கவுதாரி, வாத்து போன்றவற்றைச் சதுப்பு நிலப் பகுதியில் நடந்து சென்று எடுத்து வர வேண்டுமானால்... தங்கள் காலணிகளில் அகலமானதோர் மரச்சாதனமான சேற்றுக் காப்புப் புதையடிகளைப் பொருத்திக் கொண்டிருப்பர். கேட்டர் பில்லர் டிராக்டர் எனப்படும் நிலத்தை சமப்படுத்தும் யந்திரத்தில், அகலமான பாதை அமைக்க, அதன் முன் சக்கரங்களில் ஒருவகை அமைப்பு இருக்கும். இது, பின்னால் வரும் வாகனங்கள் வசதியாக வர, உறுதியான பாட்டை அமைக்கும். இதை எல்லாம் மனிதன் எப்படிக் கற்றுக் கொண்டான். பிராணிகளுக்கும், பறவைகளுக்கும் இயற்கை அளித்திருக்கும் உறுப்புகளின் அமைப்பை பார்த்துத்தான், இவற்றை தானும் கற்றுக் கொண்டான்.
வெப்ப மண்டலச் சதுப்பு நிலங்களில் வாழும் பல காட்டு விலங்குகளும், பறவைகளும் சதுப்பு நிலச் சேற்றில் முழுகாமலிருக்க, தங்கள் உடல் கனம் பரவலாக அழுந்தும்படி செய்ய, அவற்றின் உடல் அமைப்பு இருக்கும். அல்லிக் குளப் பறவை லில்லி டிராட்டர் என்று ஒருவகை. நீர் நிலைகளிலோ, மிருதுவான சேற்று நிலத்திலோ வளரும் தாவரங்களின் மீதாக நடந்து போய்த் தன் இரையைத் தேடிக் கொள்ளும். ஆனால், அது சேற்றிலோ, நீரிலோ முழுகாது. அதற்குத் தோதாக இப்பறவையின் கால் விரல்கள் நீளமாக, அது காலைப்பதிக்கும் போது விரல் கள் விரிந்து பரந்து, அதன் உடல் கனம் பரவலாக அழுந்தும்படி செய்கிறது.
ஆப்பிரிக்காவில் வாழும் ஒருவகை மான் இனம். சித்து துங்கா என்று பெயர் சதுப்பு நில மான் என்றும் கூறுவர். இதன் முக்கிய உணவு சதுப்பு நிலத்தில் வளரும் தாவரங்கள் தான். இதன் குளம்பின் அமைப்பு விந்தையானது. எப்படி? நீளமாகவும், அகலமாகவும் இருக்கும். கால்களைப் பதிக்கும் போது குளம்புகள் விரிந்து கொடுத்துப் பதியும். ஆகவே, இந்த மான் சேற்றில் அழுந்தி அவதிப்படுவதில்லை. வேறு எந்தப் பிராணியும், சதுப்பு நிலத்தில் இந்த மானைப் போல இவ்வளவு இலகுவாக வாழ முடியாது. இயற்கை அளித்துள்ள இத்தகைய அமைப்புகளைக் கண்டே மனிதன், அதே போன்ற உபகரணங்களை உருவாக்கக் கற்றுக் கொண்டான்.
குகைகளில் வாழ்ந்த மனிதன், தனக்கென வீடு கட்டிக் கொண்டு வாழத் தொடங்கிய போதிலிருந்து கட்டுமானப் பொருள்களே அவன் கவலையாக இருந்திருக்கிறது. பைபிளின் பழைய ஏற்பாட்டுக் கதைகளில், இஸ்ரேலியர்கள் செங்கற்களை உருவாக்க எப்படிக் கட்டாயப்படுத்தப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது. சேற்றைக் குழைத்து உருவாக்கிய இக்கற்கள், சூரிய வெப்பத்தினால் சுடப்பட்டவை. வறண்ட வெப்பமான பருவ நிலையில் உறுதியோடிருக்கும்.
இன்று நாம் சூளைகளில் சுடப்பட்ட உறுதி யான செங்கற்களை ஏராளமாகப் பெறுகிறோம். அதைக் கொண்டு பிரமாண்டமான கட்டடங் களை எழுப்புகிறோம். கான்கிரீட்டினாலான கட்டைகளும், செங்கற்களைப் போலப் பயன் படுத்தி வீடுகள் கட்டப்படுகின்றன. இந்த முறையை மனிதன் எப்படி எதனிடமிருந்து கற்றுக் கொண்டான்? இயற்கை, பறவை களுக்குக் கற்பித்த கலையிலிருந்தே மனிதன் இதைக் தெரிந்து கொண்டான்.
உலகின் பல பகுதிகளில் "ஸ்வாலோ' எனப்படும் ஒருவகைப் பறவை (தூக்கணாங் குருவி வகை) வாழுகின்றன. மனிதன் வீடு கட்டத் தெரிந்து கொள்ளுவதற்கு முன்பே, இப்பறவைகள் சிறுசிறு மண் உருண்டைகளைக் கொண்டு வீடு கட்டின.
குளம், குட்டை களின் கரையில், சேற்றுப் பகுதிகளில் இந்த "ஸ்வாலோ' பறவைகள் சிறு சிறு மண் உருண்டைகளை ஒன்றோடு ஒன்று இணைவதற்கு ஏற்ற அளவிலும், விரைவில் காயும் வகையிலும் உருவாக்குகின்றன.
திறந்த வெளியில் இவை கூடு கட்டு வதில்லை. கட்டடங் களின் உட்பகுதி களிலேயே உத்திரத்தில் கோப்பை வடிவில் மண் உருண்டைகளை இணைத்துக் கூடு கட்டுகின்றன. ஹவுஸ் மார்டின் என்றொரு பறவை, இதுவும் இதே முறையில் தன் கூட்டை கட்டுகிறது. கட்டடங்களில் முன் கூரை முகடுகளில் உருவாக்கும் இதன் கூடு பெரிதாக இருக்கும். உள்ளே நுழைய சிறிய துளை(வாசல்)யுடன். பறவைகள் மண் உருண்டைகளைக் கொண்டு கூடு கட்டுவதைப் பார்த்தே மனிதன் செங்கற்களை உருவாக்கி வீடு கட்ட கற்றுக் கொண்டான்.
***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X