நாங்களும் சாகணும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2013
00:00

ஒருநாள்-
சிற்றெறும்புகள் எல்லாம் ஒன்று கூடின.
தலைவர் எறும்பு பேசியது:
""அன்பு சிற்றெறும்புகளே! ஒரு விஷயத்தைப் பற்றி விவாதிக்கத்தான் நாம் இங்கு கூடியுள்ளோம். நம்மைப் படைத் ததும் அந்தக் கடவுள் தான். கொடிய விஷப் பாம்புகளைப் படைத் ததும் அந்த கடவுள்தான். ஆனால், கடவுள் படைப்பு விஷயத்தில், ஓரவஞ்சனை செய்துவிட்டார். பாம்பு கடித்தால் மனிதர்கள் செத்து விடுகின்றர். நாம் கடித்தால் அவர்கள் சாவதில்லை!''
""ஆமாம்! தாங்கள் சொல்வது சரிதான். கடவுள் நம் விஷயத்தில் ஓரவஞ்சனைதான் செய்துவிட்டார்!'' என்றன மற்ற சிற்றெறும்புகள்.
""இந்த விஷயத்தைக் கடவுளிடமே சொல்லி முறையிடுவோம். நாம் கடித்தாலும் மனிதர்கள் சாகவேண்டும் என்ற வரத்தைக் கேட்போம். அதன் பிறகு நம்மை நசுக்கிக் கொல்ல ஒரு மனிதனும் இந்த உலகில் இருக்க மாட்டான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'' என்ற கேட்டது தலைவர் எறும்பு.
""தாங்கள் சொல்வதை அப்படியே ஆமோதிக்கிறோம்!'' என்றன மற்ற சிற்றெறும்புகள்.
உடனே, அவைகள் அனைத்தும், கடவுளை எண்ணி தவமிருக்கத் தொடங்கின.
சில நாட்களுக்குப் பின் அவைகள் முன்னே கடவுள் தோன்றினார்.
''சிற்றெறும்புகளே! உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டார் கடவுள்.
மற்ற எறும்புகளின் சார்பாக, தலைவர் சிற்றெறும்பு தங்கள் கோரிக்கையைக் கடவுளின் முன்னே வைத்தது.
""நாங்களும் கடித்தால், சாக வேண்டும் கடவுளே!''
""சரி! அப்படியே ஆகட்டும்!''
வரம் கொடுத்து விட்டுக் கடவுள் மறைந்தார்.
சிற்றெறும்புகளுக்கு ஒரே ஆனந்தம். அந்த ஆனந்தத்தில் கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கடித்தன.
கோபம் கொண்ட மனிதர்கள் அவற்றை விரல்களுக்கு இடையே வைத்து நசுக்கிக் கொன்றனர்.
தப்பிப் பிழைத்த சிற்றெறும்புகள் திகிலோடு மீண்டும் ஒன்று கூடின.
""என்ன கொடுமை? மனிதர்கள் மீண்டும் நம் இனத்தைக் கொல்கின்றனரே. கடவுள் என்ன வரம் கொடுத்தார்?'' என்று கூக்குரலிட்டன.
""தெரியவில்லை. எங்கோ தவறு நடந்திருக்கிறது. மீண்டும் தவமிருப்போம். கடவுள் வரட்டும். முறையிடு வோம்!'' என்றது தலைவர் சிற்றெறும்பு.
மீண்டும் அவை கடவுளை வேண்டி தவமிருந்தன.
சில நாட்களில் கடவுள் தோன்றினார்.
""மீண்டும் உங்களுக்கு என்ன பிரச்னை?'' என்று கேட்டார் கடவுள்.
""நாங்கள் கடித்தால் சாகவேண்டும் என்று வரம் கேட்டோம். ஆனால், நாங்கள் செத்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் வரம் எங்களுக்கு எதிராக வேலை செய்வதை எங்களால் ஜீரணித்துக் கொள்ளவே முடிய வில்லை!'' என்றது தலைவர் சிற்றெறும்பு.
""நாங்கள் சாக வேண்டும் என்று நீங்கள் தானே வரம் கேட்டீர்கள். அதைத் தானே நானும் கொடுத்தேன். இப்போது என்னையே குறை சொல்கிறீர்களே. என்ன அநியாயம் இது!'' என்று குறைபட்டுக் கொண்டார் கடவுள்.
சிற்றெறும்புகள் ஒன்றை, ஒன்று பார்த்துக் கொண்டன.
""அடக் கடவுளே! நாங்கள் கடித்தால் சாக வேண்டும் என்று குறிப்பிட்டது மனிதர்களை. விஷப் பாம்புகள் கடித்தால் மனிதர்கள் சாகிறார்களே... அதுபோன்ற மனிதர்களைக் கொல்லும் விஷத்தைத் தான் உங்களிடம் நாங்கள் கேட்டோம். எங்களை நாங்களே அழித்துக்கொள்ள வரம் கேட்போமா?'' என்று சொல்லிவிட்டு அழுதன.
கடவுள் கோபத்தோடு சிற்றெறும்புகளைப் பார்த்தார்.
""யார் சாகவேண்டும் என்று நீங்கள் தெளிவாகச் சொல்லவில்லை. தவிர உங்கள் ஆசை மிகவும் மோசமானது; கோடிக் கணக்கில் உற்பத்தியாகும் உங்களுக்குப் பாம்பின் விஷத்தைக் கொடுத்தால் மனித இனத்தையே அழித்துவிடுவீர்கள். நான் ஆக்க, நீங்கள் அழிப்பதா? அது ஒருபோதும் நடக்காது. நான் ஒருமுறை வரம் கொடுத்தது கொடுத்ததுதான். அதை மாற்ற முடியாது. கடித்தால் மனிதர்களால் நசுக்கப்பட்டு சாகவேண்டும் என்பதைத்தான் உங்கள் தலையில் எழுதியிருக்கிறேன். அதையும் என்னால் மாற்ற முடியாது. உடனடியாக இங்கே இருந்து போய்விடுங்கள்!'' என்று எச்சரித்துவிட்டு மறைந்தார் கடவுள்.
சிற்றெறும்புகள் அவமானத்தால் குறுகி, சோகத்துடன் அந்த இடத்தைவிட்டு அகன்றன.
***

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X