அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2013
00:00

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

ஆகாசங்களை எளிமைப்படுத்தினார்!






ஆரம்பப் பள்ளிப் படிப்பை கூட முறையாக கற்றிராத ஒருவர், பின்னாளில் அரசு பாலிடெக்னிக்கில் முதல்வராக வேலை பார்த்தார் என்றால் அது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான். அவர்தான் ஜி.யு.நாயுடு. பல்துறைகளிலும் நூற்றுக்கணக்கான அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அவர், ஓர் அறிவியல் புரட்சியாளர்தான். கோயம்புத்தூருக்கு முதன் முதலில் இன்ஜினியரிங் படிப்பை அறிமுகப்படுத்திய வரும் அவரே.
அவர் உருவாக்கிய, "சர்தார் ஹோப்' பாலிடெக்னிக்கில், மாணவர்களை 6 வாரங்களில் ஆட்டோ மொபைல் இன்ஜினியராகவும் மாற்றினார். சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்களும் இதை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
ராணுவ அதிகாரிகளுக்கும், நாயுடு இந்த பயிற்சியை அளித்தார். ஒரு குறிப்பிட்ட துறை என்று இல்லாமல் சகல துறைகளிலும் தனது ஆளுமையைச் செலுத்தினார். வழக்கத்தை விட நீண்ட பருத்தி இழைகளைத் தரும் பருத்தி விதைகளை கண்டுபிடித்தார். அதன் விதைகளை 10 ரூபாய்க்கு விற்றார். ஜெர்மானியர்கள் இதை வாங்கி கலப்பிணத்தை உருவாக்கினர். அதற்கு, "நாயுடு காட்டன்' என்றே பெயர் வைத்தனர்.
நாயுடு உருவாக்கிய பப்பாளி விதைகள் உலகம் முழுவதும் அனுப்பப்பட்டன. நீரிழிவு, ஆஸ்துமா, வெள்ளைப் போக்கு போன்ற நோய்களுக்கு நாயுடு கண்டுபிடித்த மருந்துகளை அமெரிக்க மருந்து கம்பெனி, "ஸ்பைசர்' வாங்கிக் கொண்டது.
ரூபாய் 2 ஆயிரத்து 500 க்கு ஒரு சிறிய காரை தயாரிக்க முடியும் என்றார் நாயுடு. அதற்கான புளூ பிரிண்டை மத்திய அரசுக்கு அனுப்பினார். அது மட்டும் நடந்திருந்தால், நானோ காருக்கு முன்னோடியாக, நாயுடு கார் இருந்திருக்கும்.
குறைந்த செலவில், குறுகிய நேரத்தில் வீடு கட்டும் திட்டம் ஒன்றையும் நாயுடு தயாரித்தார். அதன்படி, 7.11.1967 காலை 9.30 மணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அடுத்த நாள் மாலை 3.45 மணிக்கு கிரகப்பிரவேசம் நடத்தப் பட்டது. அவ்வளவு வேகமான தொழில் நுட்பம் அவரிடமிருந்தது. மின்சாரத்தால் இயங்கும் ஷேவிங் மெஷின், மின்சார மோட்டார், சப்பாத்தி, பூந்தி தயாரிக்கும் சமையலறை சாமான்கள், 640 பூட்டுகளை ஒரே சாவியில் திறக்கும் மாஸ்டர் கீ என்று பல்துறை வித்தகராக இருந்தார். தொழில்நுட்பம் என்பதை எட்டாத உயரத்தில் இருந்து இறக்கி, எளிமைப்படுத்தியதுதான் நாயுடுவின் வாழ்நாள் சாதனை.

பாராசூட் கதை!





கொடுக்கல் வாங்கலில் மனசாட்சி.
ஒருவர் விமானம் ஓட்ட பயிற்சி பெற்று வந்தார். பயிற்சி முடிந்ததும், முதல் நாள் தனியாக விமானம் ஓட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டதால், பறக்கும் போது ஏதாவது விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது எனக் கருதிய அவர், அதற்கேற்ப ஒரு பாராசூட்டை வாங்கிக் கொள்ள முடிவெடுத்தார். அதன்படி, ஒரு கடைக்குச் சென்ற அவர் கடைக்காரரிடம் நல்ல பாராசூட் ஒன்று தேவையெனக் கேட்க அவரும் கொடுத்துள்ளார்.
பாரசூட்டை வாங்கி நன்றாக பார்த்த பின்னர் அந்த கடைக்காரரைப் பார்த்து, "இதை நான் வாங்கிக் கொள்கிறேன். இது நன்றாக இருக்கிறதா என்பதை மட்டும் ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும். ஒருவேளை நான் மேலிருந்து குதிக்கும்போது, அந்த பாராசூட் வேலை செய்யவில்லை என்றால் பிரச்னையாகிவிடும்' என்றார்.
அதற்கு பதிலளித்த கடைக்காரர், "அதைக் குறித்து நீங்கள் கவலைப்படாதீர்கள். குதிக்கும் போது அந்த பாராசூட் வேலை செய்யவில்லையென்றால், உடனடியாக திருப்பி எடுத்துக் கொண்டு வாருங்கள்... வேறு ஒன்றைத் தருகிறேன்' என்று கூறினார்.
பாராசூட் விரியவில்லையெனில் விமான ஓட்டியின் உயிரே போய் விடுமல்லவா? பின்னர் அவர் எப்படி கடைக்கு சென்று வேறு பாராசூட்டை வாங்க முடியும். இவ்வாறு அல்லாமல், உண்மையான மனசாட்சியுடன் ஒவ்வொருவரும் நடந்து கொள்ள வேண்டும்.

13/14 நூற்றாண்டு கோவில்!






இந்தோனேஷியா நாட்டில் பாலி தீவிலுள்ள கிழக்கு தென்பசார் என்ற இடத்தில் புதிதாக, கழிவுநீர் தொட்டி அமைக்க குழி தோண்டினர்.
அப்போது பெரிய கல்லினால் ஆன பெயர் பலகை ஒன்று சிக்கியது. அதை ஆய்வு செய்ததில் பூமிக்கு அடியில் பழமையான இந்து கோவில் ஒன்று புதைந்து கிடப்பது தெரியவந்தது. உடனே தொல்பொருள் துறையினர் விரைந்து சென்று தோண்டியபோது, அங்கு 11 மீட்டர் நீளம் கொண்ட இந்து கோவில் கட்டடம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. மற்ற இடங்களை தோண்டும் பணி தொடர்ந்து நடக்க இருக்கிறது. அது பற்றி அதிகாரிகள் கூறுகையில், மேலும், தோண்டி பரிசோதனை செய்த பிறகே முழு விவரம் தெரியவரும். இது 13வது அல்லது 14வது நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.

காணாமிருகம் ஆகக் கூடாது காண்டாமிருகம்!






உலக அளவில் காண்டாமிருகங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக வன ஆர்வலர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. அதில், ஒரு அரிய வகையான வெள்ளை நிற காண்டாமிருக ஜோடி ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள மொனார்தோ உயிரியல் பூங்காவில் இருக்கின்றன.
இந்த பெண் காண்டாமிருகம் சமீபத்தில், குட்டி ஒன்றை போட்டது. இந்த புதிய வரவு முதல்முறை என்பதால், உயிரியல் பூங்கா நிர்வாகிகள், ஊழியர்களை மகிழ்ச்சி அடையச் செய்தது. வேட்டையாடுதல் மூலம் ஆண்டு தோறும் 400 காண்டாமிருகங்கள் கொல்லப் படுவதாக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர். எனவே, இந்த உயிரினத்தை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை உலக அளவில் எழுந்துள்ளது.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுத்தாங்கம்மா!






இது, "பப்பாளி பர்பி' செய்முறை நேரம்!
தேவையானவை: பப்பாளி பழம்-2, பால்-2 டம்ளர், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு-12, ஏலக்காய்த் தூள் 1டீஸ்பூன், சர்க்கரை- 1கிலோ, நெய்-அரை கப்.
செய்முறை: பப்பாளிப் பழங்களின் தோல், விதைகளை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, பழத்துண்டுகளை வதக்கி அரைக்கவும். பாலை சுண்டக் காய்ச்சி, பால் கோவா தயார் செய்து, அரைத்த பப்பாளி விழுதுடன் கலந்து பிசையவும். கடாயில் மீதமுள்ள நெய்யை ஊற்றி, கலவையை சேர்த்துக் கிளறவும். நன்றாக வாசனை வந்ததும், வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். சர்க்கரையில் சிறிது தண்ணீர் விட்டுப் பாகு காய்ச்சி, பதமாக வந்ததும், பப்பாளி கலவையைப் போட்டு கிளறவும். பர்பி பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் போட்டுப் பரப்பி, ஆறியதும் துண்டுகள் போடவும்.
பப்பாளி பர்பி பாலைக் காய்ச்சி, கோவா தயாரிக்க நேரமில்லையென்றால், சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொண்டு, மில்க் மெய்டு சேர்த்து செய்யலாம்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு
***

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X