கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஏப்
2013
00:00

கேள்வி: 4ஜி மொபைல் சேவை என்பதின் அளவு என்ன? இது இந்தியாவில் சாத்தியமா? தற்போது எந்த நாட்டில் இது வழங்கப்படுகிறது? எங்கு முதலில் தொடங்கப்பட்டது?
எஸ்.உஷா மாதவன், கோவை.
பதில்
: நிறைய கேள்விகளை அடுக்கி உள்ளீர்கள். மொத்தமாகப் பார்க்கலாம். 4 ஜி என்பது மொபைல் தொழில் நுட்பத்தின் நான்காம் நிலை fourth generation cellular technology என்பதின் சுருக்கம். இந்த தொழில் நுட்பமும் பயன்பாடும், கொரியாவில் 2006 ஆம் ஆண்டில் சோதனை செய்யப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தலை காட்ட ஆரம்பித்தது. 4ஜி என எதனை அழைக்கலாம் என்பதற்கான தொழில் நுட்ப வரையறைகளைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடலாம். ஒரு கார் அல்லது வேறு வாகனத்தில் செல்கையில், 4ஜி தொழில் நுட்பமானது விநாடிக்கு 100 மெகா பிட் தகவல்களைப் பரிமாற வேண்டும். இதுவே, அலுவலகம் போன்ற நிலைத்த இடங்களில், ஒரு கிகா பிட் ஆக இருக்க வேண்டும். தற்போது பல நாடுகளில், அமெரிக்கா உட்பட, இந்த தொழில் நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. அதற்கேற்ப மொபைல் ஸ்மார்ட் போன்களும், 4ஜி பயன்பாட்டில் இல்லாத நாடுகளிலும், இந்தியா உட்பட, சந்தையில் கிடைக்கின்றன. முதலில் அமைத்த வரையறைகளை இவை நிறைவேற்றுகின்றனவா என்பது கேள்விக்குரியது என்றாலும், தொடர்ந்து வேகத்தினை அதிகரிக்கும் பணியினை தொழில் நுட்ப வல்லுநர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் தற்போதைக்கு 3ஜி தொழில் நுட்ப அடிப்படையில் சேவை கிடைக்கிறது. அதுவும் நல்ல வேகத்திலேயே செயல்படுகிறது.

கேள்வி: மைக்ரோசாப்ட் ட்யூஸ்டே என தனியே சொல்லப்படுகிறது? இந்த நாளின் விசேஷம் என்ன?
சா. உமையாள், பள்ளத்தூர்.
பதில்:
ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க் கிழமையும், மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் சாப்ட்வேர் தொகுப்புகளில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்திடும் பைல் தொகுப்புகளை, தன் இணைய தளத்தில் வெளியிடுகிறது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் முதல் தன் அனைத்து தொகுப்புகளுக்கும் தேவையான பைல்கள் அன்று கிடைக்கின்றன. எடுத்துக் காட்டாக, சென்ற மார்ச் இரண்டாம் செவ்வாய்க் கிழமை வெளியான பைல் தொகுப்பில், Internet Explorer, Silverlight, SharePoint, OneNote, மற்றும் Outlook for Mac ஆகிய சாப்ட்வேர் தொகுப்புகளுக்கான பைல்கள் தரப்பட்டன. நம் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கப்பட்டுள்ள இந்த சாப்ட்வேர் தொகுப்புகள், அந்த கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் இருக்கும்போது, தானாகவே, மைக்ரோசாப்ட் இணைய தளத்தைத் தொடர்பு கொண்டு, இந்த பைல்களைத் தரவிறக்கம் செய்திடும். நாம் அமைத்த செட்டிங்ஸ் ஏற்றபடி, அவற்றைத் தானாகவோ, அல்லது நம் அனுமதியின் பேரிலோ, இன்ஸ்டால் செய்து கொள்ளும், இந்த செவ்வாய்க்கிழமையினை “Patch Tuesday” எனவும் பலர் அழைக்கின்றனர்.

கேள்வி: இசை உலகில் மிக எளிதாகப் பயன்படுத்தப்படும் எம்பி3 ஆடியோ வடிவத்தினைக் கண்டுபிடித்தவர் யார்? எந்த ஆண்டில் இது புழக்கத்தில் வந்தது?
கா. ஸ்ரீதர் ராஜூ, மதுரை.
பதில்:
ஆடியோ பைல்களைச் சுருக்கிப் பயன்படுத்தும் இந்த அரிய கண்டுபிடிப்பிற்குச் சொந்தக்காரர் Karlheinz Brandenburg என்பவராவார். அவரிடம் கேட்டால், தான் மட்டுமல்ல, ஒரு குழுவே இணைந்து இதனைக் கண்டுபிடித்ததாகக் கூறுவார். எம்பி3 (MPEG1 Audio Layer III. MPEG – for Motion Picture Experts Group) என்ற இந்த பெயர் 1995ல் கொடுக்கப்பட்டாலும், இதற்கான ஆய்வு அதற்கும் முன்னால், சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது. இதன் எளிய, வேகத்தன்மையைக் கண்டறிந்த அனைத்து ஆடியோ சாதனங்களின் தயாரிப்பாளர்களும் இதனை அப்படியே ஏற்றுக் கொண்டனர். 1997ல், இதனை இயக்க விண் ஆம்ப் வெளியானது. அதன் பின்னரே, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் மீடியா பிளேயரை, எம்பி3 இயக்கும் வகையில் வெளியிட்டது. உலகளாவிய அளவில், மக்களின் இசைத் தாகத்தை எம்பி3 தீர்த்து வைத்தது. உங்கள் கேள்விக்கு நன்றி.

கேள்வி: என் டாஸ்க் பார் வலது மூலையில், இன்டர்நெட் தொடர்பினைக் காட்டும் இரு கம்ப்யூட்டர் ஐகான்கள் இருந்து வந்தன. இப்போது அவற்றைக் காணவில்லை. இவை, என் கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பில் உள்ளதா எனக் காட்டுவதால், அவற்றை மீண்டும் பெற விரும்புகிறேன். வழி காட்டவும்.
சி.ஸ்நேகா லஷ்மி, சென்னை.
பதில்
: உங்கள் கம்ப்யூட்டரில் நெட்வொர்க் இணைப்பினைக் காட்டும் ஐகான்கள் மறைக்கப்பட்டிருக்கலாம். இதனை எளிதாகத் திரும்பக் கொண்டு வரலாம். நோட்டிபிகேஷன் ஐகான் என அழைக்கப்படும், டாஸ்க்பாரின் வலது மூலையில் உள்ள அம்புக் குறியினை அழுத்தி, கிடைக்கும் மெனுவில் customize என்பதில் கிளிக் செய்திடவும். இந்த பட்டியலில், நெட்வொர்க் ஐகானைக் கண்டறிந்து, கீழ்விரி மெனுவில் கிளிக் செய்திடவும். இங்கு “Show icons and notifications” என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், ஓகே கிளிக் செய்திடவும். இப்போது உங்களின் நெட்வொர்க் ஐகான் காட்டப்படும்.
இப்போதும் அவை காணப்படவில்லை என்றால், கண்ட்ரோல் பேனல் சென்று Network Connections என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கம்ப்யூட்டரில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து நெட்வொர்க் இணைப்புகளும் காட்டப்படும். அதில் ஒன்றில் ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் திரையில் Show icon in notification area when connected என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தி வெளியேறவும். இனி, இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில், இந்த ஐகான் காட்டப்படும்.

கேள்வி: வேர்ட் 2007 பயன்படுத்துகிறேன். இதில் டெம்ப்ளேட் ஒன்று தயார் செய்து சேவ் செய்தேன். ஆனால், டாகுமெண்ட் டெம்ப்ளேட் போல்டரில் அது சேவ் ஆகவில்லை. எங்கு சேவ் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரியவில்லை. இதனை எப்படி அறிவது? நாம் விரும்பிய போல்டரில் இதனை சேவ் செய்திட முடியுமா?
சி.என். சிதம்பரம், திருப்பூர்.
பதில்:
வேர்ட் எப்படி சில பைல்களுக்கு, டெம்ப்ளேட் உட்பட, அவற்றிற்கான இடத்தைத் தேர்வு செய்து சேவ் செய்கிறது என்பதனை அறிய, கீழே தந்துள்ளபடி செயல் படவும்.
1. ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட், வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
2. இதன் இடது பக்கத்தில் உள்ள Advanced என்பதில் அடுத்து கிளிக் செய்திடவும்.
3. இங்கு காட்டப்பட்டுள்ள ஆப்ஷன்ஸ் பட்டியலில் General என்ற பிரிவைக் காணவும்.
4. இங்கு File Locations என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். இப்போது பைல் லொகேஷன்ஸ் என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
5. இந்த டயலாக் பாக்ஸில், யூசர் டெம்ப்ளேட் மற்றும் ஒர்க் குரூப் டெம்ப்ளேட் (user templates and workgroup templates) சேவ் செய்யப்படும் இடம் காட்டப்படும்.
இதில் இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். வேர்ட் யூசர் டெம்ப்ளேட் போல்டரில்தான், உங்களுடைய டெம்ப்ளேட் பைலை ஸ்டோர் செய்திடும் என எண்ண வேண்டாம். இதற்குக் காரணம் டெம்ப்ளேட் பாதுகாப்பு தான். இதில் உள்ள மேக்ரோ அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது என்பதில் சந்தேகம் எழலாமே! எனவே தான், எனவே தான், மாறா நிலையில், வேர்ட் அனைத்து டெம்ப்ளேட் பைல்களையும் டெம்ப்ளேட் போல்டரில் ஸ்டோர் செய்திடாமல், தனித்தனியே போட்டு வைக்கிறது.
நீங்கள் தயாரித்த டெம்ப்ளேட் பயன்படுத்தி, டாகுமெண்ட் ஒன்றைத் தயாரிக்க விரும்பினால், நியூ டாகுமெண்ட் டயலாக் பாக்ஸ் பெற்று, அதன் இடது புறத்தில் உள்ள My Templates என்ற பிரிவில், நீங்கள் அமைத்த டெம்ப்ளேட்களில் இருந்து தேவையானதைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

கேள்வி: விண்டோஸ் சிஸ்டத்தில் அலர்ட் பாக்ஸ் என்பது எதனைக் குறிக்கிறது? டயலாக் பாக்ஸையே இது சுட்டிக் காட்டுகிறதா?
சி. கார்த்திகேயன், சிவகாசி.
பதில்:
இல்லை. இது வேறு. அலர்ட் பாக்ஸை கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் பலமுறை பெறுகிறோம். கம்ப்யூட்டரில் ஒரு பணியை மேற்கொள்ளும் முன், அது குறித்தும், அதனால் ஏற்படப் போகும் விளைவுகள் குறித்தும் நாம் அறிந்து கொண்டிருக்கிறோமா என்பதனை நமக்கு எச்சரிக்கும் செய்தி கொடுக்கும் பாக்ஸ் இது. எடுத்துக்காட்டாக, ஒரு பைலை அழிக்க முயற்சிக்கையில், இது நீக்கப்பட்டு ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லும். அந்த வேலையைத்தான் மேற்கொள்கிறீர்களா? என்று கேட்டு உங்களை விடை கேட்டு ஒரு பெட்டி கிடைக்கும். அதுதான் அலர்ட் பாக்ஸ். அதே போல ரீசைக்கிள் பின்னிலிருந்து பைலை நீக்குகையில் நிரந்தரமாக பைல் நீக்கப்படவுள்ளது. செய்திடவா? என்ற செய்தியுடன் ஒரு பாக்ஸ் கிடைக்கிறதே, அதுதான் அலர்ட் பாக்ஸ்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X