கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 ஏப்
2013
00:00

கேள்வி: இமெயில் குறித்து பேசுகையில் மைம் (MIME) என்று ஒரு சொல் பயன்படுத்தப்படுகிறது. இதன் பயன்பாடு என்ன? காப்பி நகல் அனுப்புவதனைக் குறிக்கிறதா?
எஸ். மணிமாலா, திருப்பூர்.
பதில்:
Multipurpose Internet Mail Extensions என்பதன் சுருக்கமே இது. நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, இமெயில் சம்பந்தப்பட்டதுதான்; ஆனால், நகல் அனுப்புவது பற்றியது இல்லை. இன்னும் சற்று விரிவாகச் சொல்கிறேன். இது இன்டர்நெட் பிரிவிலான ஒரு ஸ்டாண்டர்ட். இமெயிலுடன், டெக்ஸ்ட் அல்லாத, ஆஸ்க்கி குறியீட்டில் அல்லாத கேரக்டர் செட்களை இணைக்க வழி செய்திடும் வழிமுறை மைம். மைம் பழக்கத்திற்கு வரும் முன்னர், இமெயிலுடன் டெக்ஸ்ட் அல்லாத ஒன்றை இணைக்க, அதனை பைனரியிலிருந்து மாற்றி, மாற்றியதை இமெயில் டெக்ஸ்ட்டுடன் இணைத்து அனுப்ப வேண்டும். பின்னர், அதனைப் பெறுபவரும் அதே முறையில் பைனரிக்கு மாற்றி அறிந்து கொள்ள வேண்டும். மைம் முறை வந்த பின்னர், இமெயில் டெக்ஸ்ட்டுடன், படங்கள், வீடியோ போன்றவற்றை இணைத்து அனுப்புவது எளிதானது.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன். இதில் மை ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் பகுதி எனக்குத் தேவை இல்லாததாக உள்ளது. நான் பார்த்த பைல்கள் மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்க விரும்புகிறேன். இதனைக் காலி செய்திட அல்லது காட்டப்படும் பைல் களின் பெயர்களை நீக்குவதற்கு வழிகள் உள்ளனவா?
சா. சுந்தர் ராவ், மதுரை.
பதில்:
நீங்கள் இறுதியாகத் திறந்து பார்த்த 15 பைல்களை மை ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் பகுதி வைத்துக் காட்டுகிறது. இவற்றில் தனித் தனி பைல்களின் பெயர்களை, வழக்கம் போல நீக்கும் வகையில் நீக்கலாம். அதன் பெயரில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் டெலீட் பகுதியினைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனாலும், காட்டப்படும் பைல்களின் எண்ணிக்கை 15 ஆகவே இருக்கும். ஏனென்றால், இதில் உள்ள பைல்கள் அனைத்தும் “Recent” என்ற பைலில் எழுதி வைக்கப்பட்டிருக்கும். இந்த பைல் உங்கள் யூசர் ப்ரபைலில் சேவ் செய்து வைக்கப்பட்டிருக்கும். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினைப் பொறுத்தவரை உங்களுக்கு சில வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த லிஸ்ட்டைக் காலி செய்திட வேண்டுமென்றால், ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் “Properties”, தேர்ந்தெடுக்கவும். அதன் பின்னர், “Customize” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இனி கிடைக்கும் விண்டோவில், “Advanced” என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, “Clear List” என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். அவ்வளவுதான்! அனைத்து பைல்களும் நீக்கப்பட்டுவிடும். அடுத்து ஸ்டார்ட் மெனுவிலிருந்து, இந்த பிரிவினையே நீக்க வேண்டும் எனில், “List My Most Recently Opened Documents” என்பதில் உள்ள டிக் அடையாளத்தினை நீக்கவும்.

கேள்வி: ஹைபர்னேஷன் நிலையில் கம்ப்யூட்டர் இருக்கும் போது, கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட துணை சாதனங்களின் நிலை என்ன? ஸ்லீப் மோட் இதனைக் காட்டிலும் நல்லதா?
எஸ். மாலதி பிரகாஷ், தென்காசி.
பதில்:
ஹைபர்னேஷன் நிலை என்பது, கிட்டத்தட்ட கம்ப்யூட்டரை உயிரற்ற நிலையில் வைப்பதற்குச் சமம் ஆகும். ஸ்லீப் மோடில் கம்ப்யூட்டரை அமைக்கும் போது, பிரதான சிஸ்டம் பவர் இயக்க நிலையில் இருக்கும். துணை சாதனங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க் பவர் அற்ற நிலையில் இருக்கும். ஆனால், ஹைபர்னேஷன் நிலையில், சிஸ்டம் பவர் இன்றி இருக்கும். ஆனால், மேற்கொள்ளப்பட்ட வேலை தயார் நிலையில் கிடைக்கும்.
ஹைபர்னேஷன் நிலையில், ராம் நினைவகத்தில் தங்கும் நாம் மேற்கொண்ட வேலை, ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கப் படுகிறது. டிஸ்க்கில் ராம் நினைவகத்தில் இருந்த வேலை பதியப்பட்ட பின்னர், சிஸ்டமானது தன் சக்தியை விட்டுவிடுகிறது. ஏறத்தாழ, கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், அதற்கு வரும் மின்சக்தியை நிறுத்திவிட்டால், என்ன நிலைக்குச் செல்லுமோ, அந்த நிலைக்குச் சென்றுவிடுகிறது. மீண்டும் பவர் செலுத்தப்படுகையில், உடனே ராம் டிஸ்க்கிலிருந்து சேவ் செய்த அனைத்து தகவல்களும், ஹார்ட் டிஸ்க்கிலிருந்து மாற்றப்பட்டு, பயனாளர் எந்த நிலையில் கம்ப்யூட்டரில் செயல்பட்டுக் கொண்டிருந்தாரோ, அந்த நிலைக்கு மீண்டும் வந்துவிடும்.
அதிக நேரம் கம்ப்யூட்டரை இயக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தால், ஹைபர்னேஷன் நிலையே சரியானது. எடுத்துக் காட்டாக, வேலை பார்த்துக் கொண்டிருக்கையில், வெளியே சென்று, உணவு சாப்பிட்டுப் பிறகு வந்து, பணியைத் தொடர்வதாக இருந்தால், ஹைபர்னேஷன் நிலைக்குக் கம்ப்யூட்டரை அமைத்துச் செல்லலாம். மிகக் குறுகிய காலத்திற்கு, கம்ப்யூட்டரிலிருந்து விடுதலை பெறுவதாக இருந்தால், ஸ்லீப் மோட் சரியான ஒன்றாக இருக்கும்.

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்து கிறேன். இதனை இயக்கிய பின்னர், டூல்ஸ் சென்று பிரைவேட் பிரவுசிங் தேர்ந்தெடுத்து பின்னர், இணையம் பக்கம் செல்கிறேன். நாம் தேர்ந்தெடுக்காமலேயே, பிரவுசர், பிரைவேட் பிரவுசிங் நிலையிலேயே தொடங்குமாறு செய்திடலாமா?
ச. செல்வராஜ், திருவேடகம்.
பதில்:
பயர்பாக்ஸ் பிரவுசரின் ஆப்ஷன்ஸ் விண்டோவில் இதற்கான வழி உள்ளது. பயர்பாக்ஸ் பிரவுசரை இயக்கி, டூல்ஸ் பிரிவில், ஆப்ஷன்ஸ் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் எட்டு டேப்கள் அடங்கிய விண்டோவில், பிரைவசி என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோவில், Always use private browsing mode என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தி வெளியேறவும். இனி, பயர்பாக்ஸ் பிரவுசர், நீங்கள் விரும்பிய படியே, பிரைவேட் பிரவுசிங் முறையிலேயே தொடங்கும்.

கேள்வி: கம்ப்யூட்டரில் பெப்காட் (PEBCAK) என்பது எந்த வகை பிரச்னையைக் குறிக்கிறது? இதனைத் தீர்க்கும் வழி என்ன?
சி. பியூலா மேரி, சிவகாசி.
பதில்:
உங்களைத் தான் குறிக்கிறது. ஆம், கம்ப்யூட்டரில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு, அது ஹார்ட் வேர் அல்லது சாப்ட்வேர் பிரச்னை இல்லாமல், இயக்குபவரால் ஏற்படுத்தப்படும் பிரச்னையாக இருப்பின், அதனை PEBCAK எனக் கூறுவார்கள். இந்த சுருக்குச் சொல்லை விரித்தால், Problem Exists Between Chair And Keyboard எனக் கிடைக்கும். கம்ப்யூட்டர் இயக்குபவர், அதனைத் தவறாக இயக்கலாம். எதிர்பார்த்த உள்ளீட்டினைத் தராமல் இருக்கலாம். இது போன்ற இயக்குபவர் ஏற்படுத்தும் சிக்கல்களே இந்த சொல் கொண்டு குறிக்கப்படுகின்றன. இதே பிரச்னையை வேறு இரண்டு சொற்களாலும் குறிக்கின்றனர். அவை: PICNIC (Problem In Chair, Not In Computer) மற்றும் EBCAK (Error Between Chair And Keyboard)

கேள்வி: முன்பு 3.5 அங்குல பிளாப்பி டிஸ்க் என ஒன்று பயன்படுத்தப்பட்டு வந்தது. சி.டி. மற்றும் பிளாஷ் ட்ரைவ்கள் வந்த பின்னர், அந்த ட்ரைவ் இல்லாமலேயே கம்ப்யூட்டர்கள் வடிவமைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. ஒரு கிகா பைட் அளவு கொள்ள, எத்தனை 3.5 அங்குல பிளாப்பி டிஸ்க் தேவைப்படும்?
எஸ். நீரஜா, கோவை.
பதில்:
என்ன விசித்திரமான வேண்டுகோள் அல்லது கேள்வி. அந்த பிளாப்பி டிஸ்க் தான் இப்போது பயன்பாட்டில் இல்லையே. பிற கென்ன, ஒரு கிகா பைட் அளவினைக் கொள்ள எத்தனை பிளாப்பி டிஸ்க் தேவைப்படும் என்ற வினா? ஓ.கே. இதோ பதில். 100 பிளாப்பி டிஸ்க் தேவைப்படும். இவற்றை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்தால், 13 அங்குல உயரம் இருக்கும் - அதாவது ஓர் அடி, ஒரு அங்குலம். இதன் அருகில், ஒரு ஜிபி ப்ளாஷ் ட்ரைவை வைத்து போட்டோ ஒன்று எடுத்துப் பார்த்தால், எப்படி இருக்கும்! இதோ அது.

கேள்வி: ஜிமெயிலில், ஒரு பொருள் குறித்து தொடர்ச்சியாக மெயில் அனுப்புகையில், அவை அனைத்தும் ஒரு பெரிய மூட்டையாகத் தரப்படுகிறது. அதில் பேசப்படும் தகவலின் தன்மை மாறினாலும், அதே போல அடுத்தடுத்து கிடைக்கிறது. இதனை மாற்ற முடியாதா?
என்.கே. மாயவன், திருப்பூர்.
பதில்:
உங்கள் ஆதங்கம் சரிதான். இன்பாக்ஸில், இது போல அடுத்தடுத்து மெயில்கள் அடுக்கித் தரப்படுவது சில நேரங் களில் எரிச்சலையே தருகிறது. ஒரே பொருள் குறித்த, கடிதங்கள் ஒன்றாகத் தரப்படுவதால், நம்மால், முன்பு என்ன நடந்தது என அறிய முடிகிறது. இருப்பினும், இவை வேண்டாம் என சிலர் விரும்பினாலும், அப்படி அமைத்துக் கொள்ள இயலவில்லை. இருந்தாலும், அதற்கு ஒரு வழியினை ஜிமெயில் தந்துள்ளது. இன்பாக்ஸ் பக்கத்தின் மேலாக வலது பக்கம் கியர் ஐகான் ஒன்றைக் காணலாம். இதில் கிளிக் செய்து, செட்டிங்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும். செட்டிங்ஸ் என்பதன் கீழ் ஜெனரல் என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக் கவும். இதில் பாதி தூரம் கீழாகச் செல்லவும். அங்கு “Conversation View” என்று ஒரு இடம் இருப்பதனைக் காணலாம். இதில் “Conversation View Off” என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், அந்தப் பக்கத்தின் கீழாகச் சென்று, சேவ் என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் மெயில்கள் அடுக்கிக் காட்டப்படாமல், தனித்தனியே இருக்கும்.

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X