கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஏப்
2013
00:00

கேள்வி: பலவகையான மெமரி கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. கேமரா, எம்பி3 பிளேயர் மற்றும் மொபைல் போன்களில் இவற்றைப் பயன்படுத்தி வருகிறோம். இவற்றில் வெவ் வேறு வகைகள் உள்ளனவா? எதன் அடிப்படையில் இவற்றை வேறுபடுத்திப் பார்த்து வாங்கலாம்?
சி. மங்கள்ராஜ், மதுரை.
பதில்:
மெமரி கார்ட்கள், அவை, டேட்டாவைப் பரிமாற்றம் செய்யும் வேகத்தில் வகைப்படுத்தப்படுகின்றன. நீங்கள் குறிப் பிட்டுள்ள டிஜிட்டல் சாதனங்கள், சிலவகை கார்ட்களை மட்டுமே சப்போர்ட் செய்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். சில சாதனங்கள், கூடுதல் வேகத்தில் டேட்டா வினைப் பரிமாற்றம் செய்திடும் கார்ட்களை ஏற்றுக் கொள்ளும். மற்றவை குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் டேட்டா பரிமாறும் வேகத்தினை அனுமதிக்காது. அதிக வேகத்தில் இயங்கும் கார்ட்களை ஏற்றுக் கொண்டு இயங்கும் சாதனங்களில், குறைந்த வேகத்தில் இயங்கும் கார்ட்களை இணைத்து இயக்கி னால், அந்த குறைந்த வேகத்தில் மட்டுமே டேட்டா பரிமாற்றம் செய்யப்படும். கீழே அவற்றின் பரிமாற்ற வேகத்தின் அடிப்படையில் கார்ட் வகைகள் பிரிக்கப்பட்டு தரப்பட்டுள்ளன. பரிமாற்ற வேகம் நொடிக்கு எத்தனை மெகாபைட் என (MB/sec) அளவிடப்பட்டுள்ளன. சில கார்ட்களில் X என ஒரு வகை அளவுகோல் தரப்படும். இவை சிடி டேட்டா பரிமாற்ற அளவின் (150 KB/sec) அடிப்படையில் தரப்படுகின்றன.
வகை 2 (Class 2) : குறைந்தது 2 MB/sec அல்லது 14X+
வகை 4 (Class 4): குறைந்தது 4 MB/sec அல்லது 28X+
வகை 6 (Class 6): குறைந்தது 6 MB/sec அல்லது 40X+
வகை 10 (Class 10): குறைந்தது 10 MB/sec அல்லது 66X+
வகை 10 யு.எச்.எஸ்.1 (Class 10 UHSI) : இதன் வேகம் நொடிக்கு 30 முதல் 95 எம்பி வரை இருக்கலாம் (30 to 95 MB/sec) அல்லது 200X+
அதிக வேகம் உள்ள மெமரி கார்ட்கள், உங்கள் டிஜிட்டல் சாதனத்தின் வேகக் கட்டுப் பாட்டினால், குறைந்த வேகத்தில் இயங்கு கின்றனவே என்று கவலைப்பட வேண்டிய தில்லை. ஏனென்றால், உங்கள் கார்ட் ரீடரில் அவை கூடுதல் வேகத்தில் இயங்கலாம். யு.எஸ்.பி. 3 வகை கார்ட் ரீடர்கள், யு.எச்.எஸ்.1 வகை கார்ட்களின் முழு வேகத்தினைப் பயன்படுத்திக் கொண்டு, அதிக வேகத்தில் டேட்டாவினைப் பரிமாறிக் கொள்ளலாம்.

கேள்வி: நான் ஐபேட் 2 பயன்படுத்தி வருகிறேன். திரைப்படங்கள் மற்றும் பாடல் களை சேவ் செய்து பயன்படுத்த எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறதா?
தி. சர்வேஷ் குமார், திருப்பூர்.
பதில்:
இல்லை என்றுதான் உங்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் பதில் சொல்ல வேண்டும். ஐபேட் அல்லது ஐபோன் சாதனத் துடன் இணைத்துப் பயன்படுத்தும் வகையில் எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் அல்லது ட்ரைவ் இல்லை. எனவே, அந்த சாதனங்களின் ஸ்டோரேஜ் அளவை மீறுகையில், திரைப் படங்கள் அல்லது பாடல்களைப் புதியதாகப் பதிந்து பயன்படுத்த இயலாது. ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் சாதனங்களில் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் தரப்படுகிறது. சிலவற்றில் யு.எஸ்.பி. போர்ட் வழங்கப் படுகிறது. ஆனால், ஆப்பிள் நிறுவனம் பிடிவாதமாக இவற்றைத் தர மறுக்கிறது.
இருப்பினும் ஆப்பிள் சாதனங்களில் இடப் பற்றாக்குறை ஏற்படுகையில், பிரச்னைக்குத் தீர்வாக சில வழிகள் உள்ளன. க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில் ஸ்டோரேஜ் வசதி தரும் ட்ராப் பாக்ஸ் (Dropbox) போன்றவை ஐபாட் மற்றும் ஐபோன் சாதனங்களுக்கான ட்ராப் பாக்ஸ் புரோகிராம்களைத் தருகின்றன. இவற்றில் உங்களுக்குப் பிடித்த திரைப் படங்கள் மற்றும் பாடல்களை ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். ஆப்பிள் சாதனங்களில் இடப் பற்றாக்குறை ஏற்படுகையில், அவற்றில் உள்ள தேவைப்படாதவற்றை நீக்கிவிட்டு, ட்ராப் பாக்ஸிலிருந்து நீங்கள் ரசிக்க விரும்பும் திரைப்படங்களையும் பாடல்களையும் இறக்கிப் பதிந்து பயன்படுத்தலாம்.
மேலதிகத் தகவல்களுக்குக் கீழ்க்காணும் தளங்களைக் காணவும்.
https://www.dropbox.com/iphoneapp
https://www.dropbox.com/ipad
https://www.apple.com/itunes/itunesmatch/

கேள்வி: ஆடியோ, வீடியோ பைல்களைப் பற்றிப் பேசுகையில், ரிப்பிங் (Ripping) என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. கம்ப்யூட்டர் செயல்பாட்டில் இது எதனைக் குறிக்கிறது? இந்த சொல்லுக்கு என்ன தொடர்பு இந்த தொழில் நுட்பத்தில் உள்ளது?
ஆர். முகேஷ், ஸ்ரீரங்கம்.
பதில்:
ரிப்பிங் என்பது ஆடியோ அல்லது வீடியோ பைல் ஒன்றினை, அதன் ஒரிஜினல் பார்மட்டிலிருந்து இன்னொரு பார்மட்டிற்கு மாற்றும் செயல்பாட்டில் பயன்படுத்தப் படுகிறது. பைலின் அளவைக் குறைக்க அல்லது பல சாதனங்களில் பயன்படுத்தும் வகையில், ஆடியோ அல்லது வீடியோ பைல்களின் பார்மட்டை மாற்றுகிறோம். நாம் பலரும் அறிந்தது, ஒரு சிடியில் பதியப்பட்டு கிடைக்கும் ஆடியோ பைலை, எம்பி3 அல்லது AAC போன்ற எளிதில் எடுத்துச் செல்லும் பார்மட்டிற்கு மாற்றுவது. சிடி ஒன்றை உங்கள் கம்ப்யூட்டரில் இயக்கி, அதில் உள்ள பாடலை, இசையை உங்கள் கம்ப்யூட்டருக்கு மாற்றும் போது நீங்கள் அந்த சிடியை ரிப்பிங் செய்கிறீர்கள். “rip” என்ற ஆங்கிலச் சொல் லுக்குக் "கிழித்தெடுத்தல்' என்று பொருள். இங்கே தொழில் நுட்ப செயல்பாட்டில் ஏன் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டது எனத் தெரியவில்லை. ஒருவேளை, இசை சுழற்சிப் பாதையிலிருந்து தரவுகளைக் கிழித்தெடுத்து, இன்னொரு வடிவில் அமைப்பதால், இந்த பெயரினைப் பயன்படுத்தி இருக்கலாம். மரங்களை அறுக்கும் ரம்பங்களுக்கும் ரிப் சா (rip saws) என்று பெயர். மரக்கட்டைகளிலிருந்து புதிய வடிவம் அமைக்க இந்த ரம்பங்கள் பயன்பட்டதால், இந்த சொல் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.

கேள்வி: நான் என் ஐபேட் மினி சாதனத்தை விற்பனை செய்திடப் போகிறேன். அதிலுள்ள டேட்டாவினை அழிக்காமல், பேக் அப் செய்வது எப்படி? புதிய ஐ பேடில் இவற்றை எப்படி பதியலாம்?
சி. தர்ம ராஜன், கோவை.
பதில்:
உங்கள் ஐ பேடில் உள்ள தகவல்கள் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவை. எனவே, அடுத்தவர்களுக்கு அவை போய்ச் சேர்வது நல்லதல்ல. இந்த தகவல்களை எப்படி பேக் அப் செய்வது எனப் பார்ப்போம்.
உங்களிடம் தற்போதைய ஐ ட்யூன்ஸ் பதிப்பு பதியப்பட்டு இருக்க வேண்டும். அடுத்து கம்ப்யூட்டரில் ஐபேடினை இணைக் கவும். கிடைக்கும் ஐபேட் திரையில் “back up now” என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்திடவும். உங்கள் ஐபேடில் உள்ள டேட்டாவினைப் பொறுத்து இதற்கு நேரம் எடுக்கலாம். ஐபேட் பேக் அப் செய்த பின்னர், அதனை கம்ப்யூட்டரிலிருந்து விடுவித்து, செட்டிங்ஸ் மெனு (கியர் ஐகான்) செல்லவும். இதில் “general” என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் “reset” என்பது வரை செல்லவும். இதில் கிளிக் செய்து, அடுத்து “erase all content and settings.” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் ஐபேட் இருமுறை நீங்கள் தொடர்ந்து செயல்பட விரும்புகிறீர்களா என்று கேட்டு நினைவுபடுத்தும். அதில் உள்ள அனைத்து டேட்டாவினையும் பேக் அப் செய்து விட்டீர்கள் என்பது உங்களுக்கு உறுதியானால், ஐ பேடில் உள்ள டேட்டாவினை அழிப்பதற்கு கட்டளை கொடுக்கவும். இதற்கும் சில நிமிடங்கள் எடுக்கலாம். ஐபேட் முற்றிலுமாக அழிக்கப்பட்ட பின்னர், சில அடிப்படை தகவல்கள் உங்களிடம் கேட்கப்படும். விற்பனை செய்வதாக இருந்தால் அப்படியே விட்டு விடவும்.
இல்லை எனில், இந்த கேள்விகளுக்கான பதில்களை நிறைவு செய்தவுடன், உங்கள் ஐபேட் சாதனத்தை பழைய நிலைக்கு மீட்டுக் கொடுக்கவா அல்லது புதியதாக அமைக்கவா என்று கேட்கப்படும். இப்போது, நீங்கள் அந்த ஐபேடினை வைத்துக் கொள்வதாக இருந்தால், “restore from iTunes back up.” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். ஐபேடை மீண்டும் கம்ப்யூட்டரில் இணைக்கவும். ஐட்யூன்ஸ் பக்கத்தில், “Welcome to your new iPad” என்று ஒரு திரை காட்டப்படும். இங்கு “restore from this back up” என்பதில் கிளிக் செய்தால், பேக் அப் செய்து வைத்த அனைத்தும் மீண்டும் ஐபேடில் பதியப்படும்.

கேள்வி: வேர்ட் டேபிள்களில் பார்டர்லைன், கிரிட்லைன் - என இரண்டு சொல்லப் படுகின்றன. இவற்றில் வித்தியாசம் உண்டா? சில கோடுகள் அச்சாகவில்லை. அச்சாக என்ன செய்திட வேண்டும்?
கே. மார்கரட் பொன்னு, நாகர்கோவில் .
பதில்:
வேர்ட் டேபிளில் மாறா நிலையில் இருப்பவை பார்டர் லைன்களாகும். கிரிட் லைன் என்பவை கற்பனைக் கோடுகள். இவற்றைத் திரையில் பார்க்கலாம் . ஆனால் பிரிண்ட் ஆகாது. உங்கள் டேபிளில் உள்ள கோடுகள் பிரிண்ட் ஆகவில்லை என்றால், டேபிள் பார்டர்களை யாராவது ‘off’ என செட் செய்திருப்பார்கள். இதனைப் பயன்படுத்துபவர்கள் பார்ப்பது கிரிட்லைன்களைத்தான், பார்டர் லைன்களை அல்ல.
இதற்கான தீர்வு எளிது. டேபிளைத் தேர்வு செய்து, அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Table Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், டேபிள் என்ற டேப் தேர்ந்தெடுத்து அதில் Borders and Shading என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து, Grid என்பதில் கிளிக் செய்து பின்னர், ஓகே பட்டனில் கிளிக் செய்து வெளியேறவும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X