அழகிய அட்லாண்டிஸ்...!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2013
00:00

நம் புராண இதிகாசங்களில், பல நகரங்கள் கடலில் மூழ்கி மறைந்து போன தாகக் கூறப்பட்டுள்ளது. இப்போது சுனாமி என்று பரபரப்பாகப் பேசப்படுகிறதே, அது பண்டைக் காலத்திலேயே நிகழ்ந்திருக்கிறது. குமரிமுனையை அடுத்து ஒரு பெரிய ராஜ்ஜியமிருந்ததாகவும், அதைக் கடல் கொண்டதாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இவ்வாறு கடலின் கொந்தளிப்பினால், மூழ்கிய தீவுகளில் ஒன்று அட்லாண்டிஸ் என்பது.
பண்டைக்கால இலக்கிய கர்த்தாக்களும், தத்துவ ஞானிகளும்-பிளாட்டோ, பிளினி- அட்லாண்டிஸ் தீவு பற்றிய தங்கள் படைப்பு களில் குறிப்பிட்டிருக்கின்றனர். அட்லாண்டிக் மகாசமுத்திரத்தில் இந்த மகத்தான தீவு இருந்ததாக, கி.மு.600 களில், அத்தீனிய நீதிமானான சோலான் இந்த அற்புதமான தீவுபற்றி நிறையவே கூறி இருக்கிறார். எகிப்திய மதகுருமார்களினால் ஆளப்பட்டு வந்த இத்தீவு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்தது.
பிளாட்டோ தன் கதையில் அட்லாண்டிஸ் என்பது பல தீவுகளைக் கொண்டது. ஒன்றுக்குள் ஒன்றாக என்று கூறுகிறார். நடு மையத்திலுள்ள தீவைச் சுற்றி மோதிர வளையம் போன்ற நீர் வட்டம் இருந்தது. இந்த நீர் வளையத்தை அடுத்து மோதிர வட்டத்தில் நிலம், அதை அடுத்து நீர், அதை அடுத்து நிலம், இப்படியே ஒன்பது நில வட்டமும் ஒன்பது நீர் வட்டமுமாக அட்லாண்டிஸ் நகரம் அமைந்திருந்தது என்று குறிப்பிடுகிறார்.
அட்லாண்டிஸ் நகரின் மன்னர் நெப்டியூன். கிரேக்க புராணத்தில் பொஸிடியன் என்றழைக்கப்படும், கடல் அரசனே இந்த நெப்டியூன். நெப்டியூனின் மனைவி கிளைட்டோ. இவர்களின் பத்துக் குழந்தைகளில் ஒருவன் அட்லஸ். இவனே, தீவுக் கூட்டத்தின் மையத்திலுள்ள தீவின் அரசனாக ஆட்சி செய்திருக்கிறான். அடுத்துள்ள ஒன்பது தீவுகளை நிலவட்டம் அவனுடைய ஒன்பது சகோதரர்கள் ஆண்டிருக்கின்றனர். இவர்களின் வழித் தோன்றல்கள், அட்லாண்டிஸ் சாம்ராஜ்ஜியத்தை ஆண்டு வந்திருக்கின்றனர். இப்படி போகிறது பிளாட்டோவின் கதை.
வளங்கொழிக்கும் தேசமாக விளங்கியது அட்லாண்டிஸ் நகரம். சிவப்பு, கருப்புக் கற்களினால் உருவாக்கப்பட்டிருந்தது. இவ்வகைக் கற்களை அத்தீவில் தோண்டி எடுத்திருக்கின்றனர். வீடுகளின் கூரைகள் தாமிர வண்ணத்தில் சூரிய ஒளியில் தகதகத்தது. அட்லாண்டிஸ் நாட்டின் மையத் தீவில் இருபெரும் கோவில்கள் இருந்தன. ஒரு கோவில் நெப்டியூனுக்கும் அவர் மனைவி கிளைட்டோவுக்கும் அர்ப்பணிக்கப் பட்டிருந்தது. இந்த கோவிலின் சுற்றுச்சுவர் தங்கத்தினால் எழுப்பப்பட்டிருந்தது. மற்றொரு கோவில் நெப்டியூனுக்கு மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதன் சுவர்கள் வெள்ளியினாலும், கோபுரங்கள் தங்கத்தி னாலும், விதானங்கள் தந்தம், தாமிரம், தங்கம், வெள்ளி, ஆகியவற்றினாலும் உருவாக்கப்பட்டிருந்தது.
அட்லாண்டிஸ் நகரின் கீர்த்தியும், நேர்த்தியும், பெருமையும் அழிவை நோக்கிப் பயணப்படலாயிற்று. பொய், வஞ்சகம், லஞ்சம் இவற்றின் வசப்பட்ட அட்லாண்டிஸ் மக்களை, அத்தீனியர்கள் (இனம்) தாக்கி வெற்றி கொண்டனர். இந்த நிலையில் (சுனாமி) அட்லாண்டிக் கடலின் பேரலைகள் ஒரு பகல்-ஒரு இரவில் இந்த நாட்டை (தீவுகளை) தாக்கி கடலில் மூழ்கடித்தன.
அட்லாண்டிக் கடலில்-கிரீட் தீவுக்கு வடக்கே இந்தக் கற்பனை நகரம் மூழ்கிக் கிடப்பதாக நம்புகின்றனர். வேறுசிலர், அட்லாண்டிஸ் நகரம் அகியன் கடலில் இருந்ததாகக் கூறுகின்றனர். இன்றைய சாண்டோரின் தீவுக்கு அருகில், கி.மு.1500ல் எரிமலை வெடிப்பினால், இந்நகரம் (தீவுகள்) அழிந்த தாகவும் ஒரு கதை உண்டு.
எது எப்படியோ ஒரு நாட்டில் உள்ள தலைவனும், மக்களும் நல்லவர்களாக இருக்கும்போது ஒரு நாடு செழிப்பாக உள்ளது. தலைவனும், மக்களும் லஞ்சம், அக்கிரமம், கொலை, கொள்ளை என அநீதிக்கு இடம் கொடுக்கும்போது அந்த நாட்டை பல இயற்கை அழிவுகள் தாக்குகின்றன; அழிந்துப் போகிறது என்பது புரிகிறதா குட்டீஸ்... இதற்குத்தான் சொல்வது நல்லவங்களா இருங்க குட்டீஸ்...
***

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X