அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2013
00:00

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

நீ எப்போ வருவாய்!

செல்போன் இல்லாவிட்டால் உலக தொடர்பே இல்லை என்ற நிலை வந்தாகி விட்டது. செல்போன் பேட்டரிகளுக்கு தினமும் சார்ஜ் போடுவது பெரிய பிரச்னையாக உள்ளது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் மணி பர்சில் மற்றும் பாக்கெட்டில் போட்டாலே தானாகவே சார்ஜ் ஆகும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி கண்டுபிடித்து உள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பெண் தொழில் அதிபரும், சமூக சேவகியுமான சால்சிடோ, அவரது கணவர் டான் ஆகியோர் செல்போன் களை மணிபர்ஸ் மற்றும் பாக்கெட்டில் வைத்தாலே சார்ஜ் ஆகும் "கட்டிங் எட்ஜ்' என்ற நவீன தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உள்ளனர். அந்த நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மணிபர்ஸ் மற்றும் பாக்கெட்டில் செல்போனை வைத்தாலே போதும். அவை தானாகவே பேட்டரி சார்ஜ் ஆகிவிடும். இதனால் நாம் தனியாக செல்போன் பேட்டரிகளுக்கு சார்ஜ் செய்ய வேண்டியது இல்லை. இது நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கும், அதிகமாக செல்போன் பயன்படுத்துபவர்களுக்கும் பெரும் வரப் பிரசாதமாக உள்ளது. நம்ம ஊருக்கு எந்த தொழில்நுட்பம் எப்போது வரும் என எதிர்பார்ப்பது இயல்பே.

கற்பதற்கு வயசு கணக்கு இல்லை!

அமெரிக்க துணை ராணுவ அமைச்சர் டொனால்டு குவாகல்ஸ் என்பவரின் மனைவி ஏழு பேரன், பேத்திகளை உடையவர். அவர் விமானம் ஓட்ட கற்று, "பைலட்' லைசென்ஸ் வாங்கி கொண்டார். அப்போது ஒருவர் அவரிடம், "ஏன் இந்த வயதில் ஏரோப்பிளேன் ஓட்ட கற்று கொண்டீர்கள்' என்று கேட்டார்.
"இளமையில் கற்பது இனி எனக்கு சாத்தியம் இல்லை என்பதால்தான்' என்றார் அந்த மூதாட்டி.

எதற்கு தெரியுமா சைரன்!


ரோட்டில் போனால் சிவப்பு விளக்கு சைரன் கார்களின் தொல்லை தாங்க முடியவில்லை. வேகாத வெயிலில் நாம் டிராபிக்கில் காத்துக்கிடக்க... சைரனை ஒலிக்க விட்டு, "ஓய்ங்... ஓய்ங்' என்று போகின்றனர். உண்மையில் யார், யாரெல்லாம் சைரன் வைத்த கார்களில் போகலாம்? அரசு அறிவிப்பின்படி சில பதவிகளில் உள்ளவர்கள் தான் சிவப்பு விளக்கைப் பயன்படுத்தலாம்.
கவர்னர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற நீதிபதிகள், சபாநாயகர், கேபினட் அமைச்சர்கள், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர், மாநில அமைச்சர்கள், அட்வகேட் ஜெனரல், தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., சட்டமன்ற மேல்சபைத் தலைவர், மாநிலத் தேர்தல் ஆணையர், நீதித் துறையின் லோக் ஆயுக்தா, தேசிய பாது காப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்ட ஆலோசனைக் குழு தலைவர், ஆற்காடு நவாப் முகம்மது அப்துல் அலி, வி.ஐ.பி.,களின் பாதுகாப்பு மற்றும் பைலட் ஆகியோர் சிவப்பு விளக்கையும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட போலீஸ் எஸ்.பி.,கள், மாவட்ட நீதிபதிகள், பெருநகர மாஜிஸ்திரேட், உயர்நீதி மன்றப் பதிவாளர், டி.ஐ.ஜி.,கள், தென் மண்டலச் சட்டம் - ஒழுங்கு ஐ.ஜி., தலைமைச் செயலக அனைத்து அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் ஆணையர்கள், தணிக்கைத் துறை அக்கவுன்டென்ட் ஜெனரல், போக்குவரத்து ஆணையர், துறை தலைவர்கள், கருவூல அதிகாரிகள் ஆகியோர் மஞ்சள் விளக்கையும் பயன்படுத்த முடியும். மக்கள் பணிகளுடன் நேரடித் தொடர்பு உள்ளவர்களின் பணி, போக்குவரத்து நெரிசலால் தாமதமாகக் கூடாது என்பதுதான் சைரன் கார்களின் அடிப்படை.

டியாங்காங்!


விண்வெளியில் ஆய்வு நிலையத்தை 2020-ம் ஆண்டுக்குள் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. அப்படி அமைப்பதற்கு ஏற்கனவே நிலை நிறுத்தப்பட்ட கோளுடன் புதிதாக ஏவப்படும் விண்கலம் சுமூகமாக இணைய வேண்டும். எந்த சேதமும் இல்லாமல் இணைந்தால்தான் மனிதர்களை அனுப்ப முடியும். அதற்காக 10 மீட்டர் நீளமுள்ள ஆளில்லாத "டியாங்காங்' (சொர்க்க அரண்மனை) என்ற கோளை பூமிக்கு மேல் 340 கி.மீட்டர் உயரத்தில் கடந்த 29ம் தேதி சீனா நிறுத்தியது. இதை தொடர்ந்து சென்ஜீவ் 8 என்ற விண்கலத்தை சீனா ஏவியது. அந்த விண்கலம், "டியாங்காங்' செயற்கை கோளுடன் சுமூகமான முறையில் இணைந்தது. இதைத் தொடர்ந்து 2012ம் ஆண்டில் இதே போன்ற அடுத்த சோதனையை சீனா நடத்தியது.
அப்போது ஒரு விண்வெளி வீரரையும் அனுப்பி வைக்க முடிவு செய்தது. சீன விஞ்ஞானிகளின் இந்த சாதனைக்கு பிரான்சில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபர் ஹீ ஜிந்தாவோ பாராட்டு தெரிவித்தார். இந்த சோதனையில் சீனா வெற்றி பெற்றதால், விண்ணில் ஆய்வு நிலையம் அமைக்கும் தொழில் நுட்பம் பெற்ற மூன்றாவது நாடு என்ற பெருமையை அடைகிறது. ஏற்கனவே, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளன. ரஷ்யா, அமெரிக்கா இணைந்து 400 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தை வானில் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!


இது "கோவை ஸ்பெஷல் புளிக்குழம்பு' செய்முறை நேரம்!
தேவையானவை: கத்தரிக்காய்-3 (அ) முருங்கைக்காய்-2, சின்ன வெங்காயம்- ஒரு கப், தக்காளி-2, புளி-எலுமிச்சம்பழ அளவு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு.
தாளிக்க: கடுகு-அரை டீஸ்பூன், வெந்தயம்- அரை டீஸ்பூன், எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்.
அரைக்க: சின்ன வெங்காயம்-6, தேங்காய் துருவல்- ஒரு டேபிள் ஸ்பூன், பூண்டு-4 பல், காய்ந்த மிளகாய்-8, தனியா-ஒரு டேபிள் ஸ்பூன், சீரகம்-அரை டீஸ்பூன், பொட்டுக் கடலை-2 டீஸ்பூன், மல்லித்தழை சிறிதளவு, எண்ணெய்-2 டீஸ்பூன்.
செய்முறை: வெங்காயத்தை தோல் நீக்கி இரண்டாக நறுக்குங்கள். கத்தரிக்காய் (அ) முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில், மிளகாய், தனியா, சீரகம் மூன்றையும் முதலில் சிறிது எண்ணெய் விட்டு தனியாக வறுத்தெடுங்கள். மீதமுள்ள எண்ணெயில் மற்ற பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
வறுத்த மிளகாய், தனியா, சீரகம் ஆகியவற்றை முதலில் நன்கு அரைத்துக் கொண்டு, பிறகு அத்துடன் மற்ற பொருட் களையும் சேர்த்து அரைக்க வேண்டும். (கொங்கு நாட்டுப் பகுதியில் இந்தக் கலவையை ஆட்டுக் கல்லில் போட்டு அரைத்தெடுப்பர். குழம்பின் ருசியே அதில் தான்) புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். அரைத்து வைத்திருக்கும் விழுதை இந்தப் புளிக் கரைசலில் போட்டு கரைத்துக் கொள்ளுங்கள். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, வெந்தயம் தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். பிறகு காயைப் போட்டு வதக்கி, அத்துடன் தக்காளி சேர்த்து, தேவையான உப்புப் போட்டு வதக்கி, புளிக்கரைசலை சேருங்கள். பச்சை வாசனை போகக் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.
***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X