கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2013
00:00

கேள்வி: ஸ்பேம் மெயில் பில்டர் பயன்படுத்தப்படுகையில், ஆச்ஞிண என்று ஒரு ஆப்ஷன் தரப்படுகிறது. இந்த சொல் எதனைக் குறிக்கிறது? இதில் எழுத்துப் பிழை உள்ளதா?
கே.எம். லஷ்மி ராம், கோவை.
பதில்:
நல்ல கேள்வி. நீங்கள் குறிப்பிட்டி ருப்பது போல, இதில் எழுத்துப் பிழை எதுவும் இல்லை. இந்த சொல் இப்படித்தான் எழுதப்படுகிறது. இதனை பேகன் என உச்சரிக்க வேண்டும். இது ஸ்பேம் வகையின் ஒரு கிளை என்று சொல்லலாம். ஆனால் ஸ்பேம் அல்ல. ஸ்பேம் என்பது நமக்குத் தேவைப்படாத, நாம் விரும்பாத தகவல்கள், இணையத்தில் நம் மீது திணிக்கப்படுபவை ஆகும். ஆனால், பேகன் என்பது நாமே விரும்பிக் கேட்கும் தகவல்களாகும். எடுத்துக்காட்டாக, நாம் பெற விரும்பும் சில தகவல் அறிக்கைகள், சில இணைய தளங்களிலிருந்து நாம் பெற விரும்பும் செய்தி சுருக்கங்கள், விலை நிலவரம் குறித்த அஞ்சல் செய்திகள் போன்றவற்றைக் கூறலாம். இவற்றை எல்லாம் நாம் விரும்பி, இணையதளங்களில் நம் மின் அஞ்சல் முகவரிகளைத் தந்து ஒப்புதல் அளிக்கிறோம். எனவே, இவை நாம் விரும்பாமல், நம் மீது திணிக்கப்படும், நம் மின் அஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்படும் ஸ்பேம் மெயில்களுக்கு மாறானவை ஆகும். இவற்றை நாம் விரும்பாத நிலையில், unsubscribe செய்து நிறுத்திவிடலாம். அதற்கான ஆப்ஷன் அந்த மின் அஞ்சலிலேயே தரப்படும். நம் மின்னஞ்சல் செட் செய்திடுகையில் Bacn என்பதை நாம் தேர்ந்தெடுத்தால், நாம் ஒப்புக் கொண்ட இத்தகைய தகவல்கள் நம் மெயில் இன்பாக்ஸுக்கு வரும். இல்லையேல், நம் மின்னஞ்சல் கிளையண்ட், இவற்றை ஸ்பேம் எனக் கருதி ஸ்பேம் பெட்டிக்கு அனுப்பி விடும்.

கேள்வி: ஒர்க் குரூப் என நாம் எதனைக் குறிப்பிடுகிறோம். புரோகிராமர்கள் இணைந்து செயல்படுவதையா? அல்லது நெட்வொர்க்கில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் பணியாற்று வதையா?
எஸ். ஸ்ரீனிவாசன், சென்னை.
பதில்:
இரண்டும் இல்லை. கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் அமைப்பில், லோக்கல் ஏரியா நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு, போல்டர், பிரிண்டர், டிவிடி ரைட்டர் போன்றவற்றைப் பங்கிட்டுக் கொண்டு பயன்படுத்தும், கம்ப்யூட்டர்களையே ஒர்க்குரூப் எனக் குறிப்பிடுகிறோம். பொதுவாக, 50 அல்லது அதற்கும் குறைவான கம்ப்யூட்டர்கள் இணைந்த நெட்வொர்க்கினையே, ஒர்க் குரூப் என அழைக்கலாம். 50க்கும் மேலாக இருந்தால், அந்த அமைப்பை நிர்வகிப்பது கடினம். அந்நிலையில், டொமைன் சிஸ்டம் அமைப்பதே நல்லது.
ஒர்க் குரூப் சிஸ்டம் என்பது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வந்த பின்னரே பயன்பாட்டிற்கு வந்தது. Samba sharing என்ற அமைப்பில், நெட்வொர்க்கில் கம்ப்யூட்டர்கள் பகிர்வு முறையில் இயங்குவது இதன் தொடக்கமாயிற்று. ஆப்பிள் கம்ப்யூட்டர்கள், ஆப்பிள் டாக் ஸோன் என்ற அமைப்பில் இவ்வாறு இயங்குகின்றன.

கேள்வி: தற்போது விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன். விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாற இருக்கிறேன். டச் ஸ்கிரீன் இயக்கம் பெற, தனியே வேறு மானிட்டர் வாங்க வேண்டுமா? அல்லது, தற்போதுள்ள மானிட்டரையே டச் ஸ்கிரீனாக, விண்டோஸ் 8 மாற்றிவிடுமா?
கா. சிந்தாமணி, கோ.புதூர்.
பதில்:
டச் ஸ்கிரீன் வசதிகளுடன் கூடிய இன்டர்பேஸ் கொண்டு இயங்கும் விண்டோஸ் 8 சிஸ்டம் தான், விண்டோஸ் இயக்கத்தில் இத்தகைய முதல் சிஸ்டமாகும். இதனால், கம்ப்யூட்டருடன் நாம் தகவல் பரிமாறிக் கொள்வது மிக மிக எளிதாகிறது. ஆனால், விண்டோஸ் 8, டச் வசதி இல்லாத மானிட்டரை, டச் வசதி கொண்ட மானிட்டராக மாற்றாது. டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்தினை முழுமையாகப் பயன்படுத்த, இந்த வசதி கொண்ட மானிட்டர்கள் கட்டாயம் வேண்டும். விண்டோஸ் 8 சிஸ்டம் இந்த வசதி கொண்ட மானிட்டர்களை முழுமையாகப் பயன்படுத்த வழி தரும் இயக்கத்தைக் கொண்டுள்ளது. எனவே தற்போதுள்ள கம்ப்யூட்டரில் நீங்கள் விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்துவதாக இருந்தால், அதற்கேற்ற மானிட்டர் ஒன்றை சந்தையில் வாங்கி இணைக்கவும். இப்போது இருக்கும் மானிட்டரை, வழக்கம் போல் மவுஸ் கொண்டும், கீ போர்டு கொண்டும், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் பயன்படுத்தலாம். டச் ஸ்கிரீன் வசதி இல்லாத மானிட்டரை, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இரண்டாவது மானிட்டராகப் பயன்படுத்தலாம். ஆனால், உங்கள் கம்ப்யூட்டரில் இரு மானிட்டர்களை இணைக்கத் தேவையான போர்ட்கள் இருக்க வேண்டும்.

கேள்வி: அவுட்லுக் அல்லது யாஹூ போன்ற இமெயில் வசதி தரும் புரோகிராம்களில், ஒரு மெயிலை அழித்த பின்னர், எவ்வளவு நாட்களுக்கு அது, அந்த சர்வரிலேயே தங்கும் என எப்படி அறிந்து கொள்வது?
என். ஜெயபிரகாஷ், புதுச்சேரி.

பதில்: மின்னஞ்சல் செய்திகளை அழித்த பின்னர், அவை ட்ரேஷ் அல்லது டெலிட்டட் போல்டர்களில் தங்கும். அவற்றில் எத்தனை நாட்கள் தங்கும் என்பது, இந்த வசதியை வழங்கும் சர்வர்களில் இருந்துதான் அறிந்து கொள்ள முடியும். சில உங்களுக்குக் கொடுக்கப்பட்ட தேங்கும் அளவு உள்ளவரை வைத்திருக்கின்றன. சில ஒரு மாதம், அல்லது 100 நாட்கள் என வரையறை கொண்டுள்ளன. சில, இந்த நீக்கப்பட்ட அஞ்சல்களுக்கான பெட்டி அல்லது போல்டர் நிறையும் வரை வைத்திருந்து, பின்னர், அடுத்த அஞ்சல்கள் அழிக்கப்படுகையில், முதலில் நீக்கப்பட்ட அஞ்சல்களை நீக்குகின்றன. எவை என்ன செய்கின்றன என்பதனை, அந்த சர்வர்களில் சென்று பார்க்கவும்.
கீழே நாம் அதிகம் பயன்படுத்தும் சில மின்னஞ்சல் தளங்களில் இந்த தகவலைப் பெறச் செல்ல வேண்டிய இணைய தள முகவரிகள் தரப்பட்டுள்ளன.
http://support.google.com/mail/answer/7401?hl=en
http://help.yahoo.com/
http://windows.microsoft.com/enus/windows/outlook/recoverdeletedmessages
http://support.apple.com/kb/PH2651
http://office.microsoft.com/enus/outlookhelp/emptythedeleteditemsfolderHP010354945.aspx

கேள்வி: நீங்கள் கொடுத்த, ஜிமெயில் தளத்தில் குரூப்பாக மின்னஞ்சல்கள் அமைவதைத் தடுக்கும் டிப்ஸை பின்பற்றி, அமைத்தேன். ஆனால் ஹாட்மெயில் மற்றும் அவுட்லுக் அஞ்சல்களில் இதனை மேற்கொள்ள முடியவில்லையே. ஏன்? தயவு செய்து குரூப் ஆவதைத் தவிர்க்கும் வழியைக் கூறவும். எனக்கு இது அறவே பிடிக்கவில்லை.
கா.ஸ்ரீதரன், கடலூர்.
பதில்:
உங்களின் ஆதங்கம் புரிகிறது. கீழே கொடுத்துள்ளபடி செட் செய்திடவும். முதலில், உங்கள் மானிட்டர் திரையில் மேலாக, வலது பக்கத்தில் உள்ள கியர் அடையாளத்துடன் உள்ளதில் கிளிக் செய்திடவும்.
இதில் கிடைக்கும் கீழ்விரி மெனுவில், More Mail Settings. என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ஒரு பக்கத்திற்கு மேலாக ஆப்ஷன்ஸ் கிடைக்கும். கீழாக Reading email என்று இருக்கும் இடம் வரை செல்லவும். இதில் Group by conversation and preload messages என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Conversation Settings என்பதன் கீழ், Conversation Settings என்பதனைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடவும். இனி உங்களுக்கு எந்தவிதமான பிரச்னையும் இருக்காது.

கேள்வி: என் பேரன் போட்டோவினை அமெரிக்காவிலிருந்து என் மகள் மின் அஞ்சலில் அனுப்பியுள்ளார். இதனை எப்படி என் கம்ப்யூட்டர் திரையில் பின்புலக் காட்சியாக அமைப்பது?
சி. கருப்பையா, அருப்புக் கோட்டை.
பதில்:
போட்டோ ஒன்றை, கம்ப்யூட்டர் திரையின் பின்புலக் காட்சியாக அமைக்க, முதலில் அதனை கம்ப்யூட்டரில் சேவ் செய்திட வேண்டும். மின் அஞ்சலில் இணைக்கப்பட்ட போட்டோ பைல் மீது Download என்று இருக்கும் இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். இப்போது save as/save image as என்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் விரும்பும் போல்டரில் சேவ் செய்திடவும். இனி டெஸ்க் டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Personalize என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். கீழாக உள்ள Desktop Background என்பதில் அடுத்து கிளிக் செய்திடவும். இங்கு Browse என்பதில் கிளிக் செய்து, எந்த போல்டரில் போட்டோவினை சேவ் செய்துள்ளீர்களோ, அந்த போல்டர் திறந்து, போட்டோவினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். தொடர்ந்து Save Changes என்பதனையும் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் செல்லப் பேரனின் போட்டோ, திரையில் காட்டப்படும். ஆனால், "உங்கா' என்ற பேச்சு சத்தம் எல்லாம் கேட்காது.

கேள்வி: உங்களுடைய அறிவுரைக் கிணங்க, விண்டோஸ் எக்ஸ்பிக்குப் பதிலாக, விண்டோஸ் 8 பயன்படுத்த முடிவு செய்துள்ளேன். அதிர்ஷ்டவசமாக, என்னிடம் உள்ள கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் அதனை ஏற்றுக் கொள்ளும் என்று அதனைச் சோதனை செய்திட்ட போது தெரியவந்தது. டச் ஸ்கிரீன் கொண்ட மானிட்டர் வாங்க வேண்டுமா? மவுஸ் மற்றும் கீ போர்டு கொண்டு இயக்கலாமா?
கா. பங்கஜம், தேவாரம்.
பதில்
: தாராளமாக கீ போர்டு மற்றும் மவுஸ் கொண்டு இயக்கலாம். விண்டோஸ் 8 சிஸ்டம், தொடு திரை இயக்கத்தைக் கொண்டுள்ளது. அத்தகைய மானிட்டர் உங்களிடம் இல்லாத பட்சத்தில், நீங்கள் கூறியபடியும் இயக்கலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sureshbabu - Vellore,இந்தியா
14-ஜூன்-201316:22:49 IST Report Abuse
sureshbabu நான் எப்படி ஈமெயில் ல் softwere ஐ அனுப்புவது?
Rate this:
Share this comment
Cancel
vinoth kumar - tiruvannamalai,இந்தியா
03-மே-201312:56:13 IST Report Abuse
vinoth kumar என் பெயர் வினோத் குமார். நான் திருவண்ணாமலை. நான் ஒரு மாணவன் மத்திய அரசு கொடுக்கும் ஆகாஷ் டேபிளைத் கம்ப்யூட்டர் எங்க கிடய்கும் என்ற தகவல் பற்றி பதில் அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன் pls pls
Rate this:
Share this comment
Cancel
n.saravanakumar - aundipatty,இந்தியா
01-மே-201312:18:17 IST Report Abuse
n.saravanakumar நான் 7.2எம்பிபிச் வேகம் உள்ள மொபைல் ப்ரொஅபண்ட் 3ஜி மோடம் பயன்படுத்துகிறேன். என்னுடைய மோடம் வேகம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும். நான் விண்டோஸ் 7 ல் இதனை உபயோகிக்கிறேன். டவுன்லோட் ஸ்பீட் ம் மிகவும் குறைவாக உள்ளது. இதனையும் அதிகரிப்பது எப்படி?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X