எல்.ஜி. ஆப்டிமஸ் எல்5 | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
எல்.ஜி. ஆப்டிமஸ் எல்5
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 மே
2013
00:00

சென்ற மாதம், எல்.ஜி. நிறுவனம் தன் ஆப்டிமஸ் எல்3 மற்றும் ஆப்டிமஸ் எல் 7 ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப் படுத்தியது. தற்போது ஆப்டிமஸ் எல் 5 டூயல் (C 455) மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. என்னும் இணைய வர்த்தக தளத்தில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச சில்லரை விற்பனை விலை ரூ. 11,499.
இந்த போனில் 4 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், ஐ.பி.எஸ். டிஸ்பிளேயுடன் உள்ளது. இதன் ப்ராசசர் ஒரு கிகா ஹெர்ட்ஸ் திறன் கொண்டது. இதனை இயக்க ஆண்ட்ராய்ட் 4.1. ஜெல்லி பீன் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. எல்.இ.டி. பிளாஷ் இணைந்த 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா இயங்குகிறது. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். சிம்களை மாற்றுவதற்கென தனியே கீ ஒன்று தரப்பட்டுள்ளது. ராம் மெமரி 512 எம்.பி. ஆகவும், ஸ்டோரேஜ் மெமரி 4 ஜிபி ஆகவும் உள்ளது. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி வரை உயர்த்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத், ஏ-ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 1700 mAh திறன் கொண்டது.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X