கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 மே
2013
00:00

கேள்வி: என் கம்ப்யூட்டரில் பேக் அப் எடுக்க ப்ளாஷ் ட்ரைவினையே பயன்படுத்துகிறேன். இதனால், அதனை எப்போதும் கம்ப்யூட்டரில் இணைத்தே வைத்திருக்கிறேன். இது கம்ப்யூட்டருக்கு நல்லதா? இதனால் கெடுதல் வருமா?
எஸ். சிக்கந்தர், உத்தமபாளையம்.
பதில்:
மிக அருமையான கேள்வி, சிக்கந்தர். நம் ஹார்ட் ட்ரைவ் பயன்பாடு குறித்து கொண்டிருக்கும் சில தகவல்களின் அடிப் படையில் உங்களுக்கு இந்த பயம் ஏற்பட்டுள்ளது. எவ்வளவு அதிகம் ஒரு ஹார்ட் ட்ரைவினைப் பயன்படுத்துகிறோமோ, அந்த வேகத்தில் ஹார்ட் ட்ரைவ் கெட்டுப் போய்விடும் என்று நாம் நம்புகிறோம். இது உண்மையே. அதிகம் பயன்படுத்துவதால் ஹார்ட் ட்ரைவின் ஹெட் மற்றும் எழுதப்படும் ப்ளாட்டர்கள் பரப்பு பழுதாகும் வாய்ப்புகள் ஏற்படும். அதனாலேயே, ப்ளாஷ் ட்ரைவும் அதே போல அதிகம் பயன்படுத்தினால், பழுதடைந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். ப்ளாஷ் ட்ரைவினப் பொறுத்த வரை, இது உண்மை அல்ல. ஏனென்றால், அது ஹார்ட் ட்ரைவினைப் போல வடிவமைக்கப்பட்டு செயல்படவில்லை. ஆனாலும், தேவைப் படாத நேரத்தில், ப்ளாஷ் ட்ரைவ்களைக் கம்ப்யூட்டரிலிருந்து நீக்கிவிடுதல் நல்லதுதான். கம்ப்யூட்டருக்குச் செலுத்தப்படும் மின் சக்தியில் அதிக ஏற்றம் இறக்கம் ஏற்பட்டால், கம்ப்யூட்டரின் பாகங்களை மட்டுமின்றி, ப்ளாஷ் ட்ரைவினையும் அது பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். இத்தகைய சூழ்நிலைகளில், ஹார்ட் ட்ரைவும் கெட்டுப் போய், பேக் அப் எடுக்கப்படும் ப்ளாஷ் ட்ரைவும் பழுதாகிப் போனால், நம் விலை மதிப்பற்ற டேட்டாவினை எங்கிருந்து பெறுவீர்கள்? ஹார்ட் ட்ரைவினயும், ப்ளாஷ் ட்ரைவினையும் வேறு புதியதாக வாங்கிக் கொள்ளலாம். நம் டேட்டாவினை எங்கிருந்து பெறுவது? எனவே, அவ்வப்போது கம்ப்யூட்ட ருடன் இணைக்கப்படும் ப்ளாஷ் ட்ரைவ்களை நீக்கிப் பயன்படுத்துவதே நல்லது.

கேள்வி: வேர்ட் 2000 பயன்படுத்தத் தொடங்கினேன். இதில் கான்டெக்ஸ்ட் மெனுவினைப் பெற வழக்கம் போல ரைட் கிளிக் செய்கிறோம். ஆனால், அடுத்த கிடைக்கும் மெனுவில் வேண்டியதைத் தேர்ந்தெடுக்க லெப்ட் கிளிக் இல்லாமல், ரைட் கிளிக் செய்தே தேர்ந்தெடுக்க முடிகிறது. இது வசதியாக உள்ளது. இதே போல மற்ற ஆபீஸ் புரோகிராம்களிலும் (வேர்ட் 2007) மாற்ற முடியுமா?
என். ஆர். பியூலா சாமுவேல், கோவை.
பதில்:
சரியான தொழில் நுட்ப சந்தேகம் மற்றும் கேள்வி. இதனை ஆய்வு செய்து கேட்டதற்கு உங்களுக்குப் பாராட்டுக்கள். காண்டெக்ஸ்ட் மெனு என்பது, புரோகிராம் ஒன்றின் இணைந்த குறியீடு. எனவே, எந்த நிலையிலும் நம்மால் அதனை மாற்ற முடியாது. இதனை உருவாக்கிய மைக் ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பு பொறியாளர்கள் தான் மாற்ற முடியும்.
அடுத்ததாக, வேர்ட் 2000 ல் ரைட் கிளிக் செய்தே இரண்டு செயல்களையும் மேற்கொள்ள முடிகிறது என்பது, அநேகமாக மைக்ரோசாப்ட் நிறுவன பொறியாளர்களுக்கே தெரியாமல், ஒரு பிழையாக (“glitch”) ஏற்பட்டி ருக்கலாம் என்றே கருதுகிறேன். பின்னர் வந்த ஆபீஸ் புரோகிராம்களில் அவர்கள் அதனைத் திருத்தி இருக்கலாம். அல்லது இப்படியும் ஒரு புரோகிராமில் கொடுத்துப் பார்ப்போமே என்று அவர்கள் எண்ணி இருக்கலாம்.

கேள்வி: விமானத்தில் ஒருவர் பயணம் செய்திடுகையில், இன்டர்நெட் மூலம் தரை நகரங்களில் உள்ளவர்களுடன் பேச முடியுமா? என் நண்பர் தான் பேசியதாகக் கூறியதை என்னால், நம்ப முடியவில்லை. விளக்கவும்.
ஆர். ஸ்டீபன்ராஜ், புதுச்சேரி.
பதில்:
பேசமுடியும். சென்ற ஆண்டு தொடக்கம் வரை, தங்கள் பயணிகளுக்கு இன்டர்நெட் வசதியினைத் தர சோதனை முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகச் சில பயண விமான நிறுவனங்கள் அறிவித் திருந்தன. தற்போது இந்த இணைப்பினைச் சில நிறுவனங்கள் தருவதாகத் தகவல்கள் கிடைத் துள்ளன. சென்ற பிப்ரவரியில், அமெரிக்கா விலிருந்து, என் நண்பர் மகள், சென்னை நோக்கி லுப்தான்சா விமானத்தில் பயணம் செய்தார். இன்டர்நெட் வழி தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு எனக்கு ஜிசேட் மூலம் தகவல் தந்தார். ஐபேடில், பேஸ் டைம் மூலம் தொடர்பு கொண்டபோது, தான் பணம் செலுத்தி இன்டர்நெட் இணைப்பு பெற்றுள்ள தாகவும், மெசேஜ் மட்டுமே பரிமாற முடியும் என்றாலும், வி.ஓ.ஐ.பி. மூலம் வீடியோ சேட் செய்திடலாம் என்று கூறி, தொடர்ந்து பயணம் முழுவதும் என்னுடன் தொடர்பில் இருந்தார். விமானத்தில் அவர் அமர்ந்திருப்பது, உணவு உண்பது, ஏன், தூங்கி எழுவதைக் கூட பார்த்துக் கொண்டு, அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். லுப்தான்சா விமான நிறுவனம் போல, மற்ற நிறுவனங்களும் தர முடியும் என்றே நினைக்கிறேன்.

கேள்வி: இன்பாக்ஸ் ஸீரோ என மெயில் இன்பாக்ஸ் உள்ளதா? ஒரு கட்டுரையில் இது பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள். ஜிமெயிலில் இது உண்டா?
சி. ஆனந்த கணேஷ், புதுச்சேரி.
பதில்:
கட்டுரையை முழுமையாகப் படிக்கவில்லையா, கணேஷ்? இன்பாக்ஸ் ஸீரோ (Inbox Zero) என்பது ஒரு தொழில் நுட்ப சொல். 2006 ஆம் ஆண்டில், மெர்லின் மான் என்பவர், இந்த சொல் தொடரைப் பயன்படுத்தத் தொடங்கினார். இமெயில் நிர்வாகப் பிரிவில் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. கூடுமானவரை மெயில் இன்பாக்ஸினை, காலியாக வைத்துக் கொள்வதற்கு இந்த தொழில் நுட்ப பெயர் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு காலியாக வைத்துக் கொள்ளப் பயன்படும் உத்திகளை, இன்பாக்ஸ் ஸீரோ வழிமுறை என அழைப்பார்கள். தேவையற்ற மெயிலிங் லிஸ்ட்டிலிருந்து நம் மின் அஞ்சல் முகவரிகளை நீக்குவது, மிகச் சீரிய முறையில், இன்பாக்ஸ் பில்டர்களை அமைப்பது, நிறைய மெயில்களை மொத்தமாக அனுப்புவோருக்கு நேரடியாகக் கடிதம் எழுதி, நம் மின் அஞ்சல் முகவரிக்கு அவை அனுப்பப் படக் கூடாது எனக் கூறுவது போன்ற நடவடிக்கைகள், இந்த சொல் கொண்டு குறிக்கப்படும். மெயில்களை அவ்வப்போது நீக்குவது, அழிப்பது போன்றவையும் இதில் அடங்கும்.

கேள்வி: இன்டர்நெட்டில், உணவு மற்றும் தின் பண்டங்கள் தயாரிப்பது குறித்த இணைய தளங்கள் இருப்பதாகக் கேள்விப் பட்டேன். இவற்றில் மிக விளக்கமாகக் காட்டும் இணைய தளங்கள் சிலவற்றைக் கூறவும்.
சா. கயல்விழி சுந்தரம், தென்காசி.
பதில்:
என்ன திருமணம் செய்து அனுப்பப் போகும் மகளுக்கு சீதனமாக இந்த டிப்ஸைத் தரப் போகிறீர்களா! இதோ எனக்குத் தெரிந்த தகவல்கள்.
1.http://www.indobase.com/recipes: ஏறத்தாழ நாம் எதிர்பார்க்கும் அனைத்து உணவு வகைகளுக்கான குறிப்புகளும் இதில் விளக்கமாகக் கிடைக்கின்றன. அத்துடன், எந்த பண்டிகைக்கு என்ன செய்திட வேண்டும் எனவும் எக்ஸ்ட்ரா டிப்ஸ் தரப்பட்டுள்ளது. எந்த மாநிலத்தில் என்ன தின்பண்டம் விசேஷம் என்றும் கூறப்படுகிறது.
2. http://www.manjulaskitchen.com/ என்னிடம் இந்த பொருட்கள் உள்ளன. என்ன உணவுப் பதார்த்தம் தயாரிக்கலாம்? என்ற நோக்கில் இந்த தளத்தில் குறிப்புகள் கிடைக்கின்றன. இதில் தரப்பட்டுள்ள வீடியோ படங்களை தரவிறக்கம் செய்து, பின் நாளில் கூடப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
3. http://www.ifood.tv/ பலவகை, கலாச்சார அடிப்படையில் உணவு தயாரிக்கும் முறை வழங்கப்படுகிறது. இந்தியர்களின் உணவுப் பழக்க முறை, தயாரிக்கும் முறை குறித்து பல குறிப்புகள் உள்ளன. வீடியோவாகக் காட்டப் படுவது மிகவும் சிறப்பு. தரவிறக்கம் செய்து, பின்னர் பயன்படுத்திக் கொள்ளலாம். தயிர் சாதம் எப்படியெல்லாம் தயாரிக்கலாம் என்ற குறிப்பு என்னை மிகவும் கவர்ந்தது.
இவை தவிர, இணையத்தில் எத்தனையோ தளங்கள் உள்ளன. சில சைவ, அசைவ தளங்கள் எனப் பிரித்தும் பார்க்கலாம்.
உங்களுக்குக் கூடுதலாக ஒரு தகவல் தருகிறேன். நீங்கள் இந்த தளங்களைப் பார்த்து உணவு தயாரிக்கும்போது, சில மாற்றங்களை மேற்கொண்டால், உணவின் ருசி மாறும் என அனுபவத்தில் உணர்கிறீர்களா! அதனை குறிப்பாக்கி தந்தால், ஓர் தளம் ஏற்றுக் கொள்கிறது.
இந்த தளத்தின் பெயர் புட்டிஸ்ட்டா (Foodista). இதன் முகவரி http://www.foodista.com/. “The Cooking Encyclopedia Everyone Can Edit” என்றே இதன் முகப்பில் இந்த தளத்திற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. எனவே நம் உணவு முறைகளைப் பற்றிய குறிப்புகள், இதில் தரப்பட்டுள்ள உணவு முறைகளுக்கான குறிப்புகளில் மாற்றங்கள் ஆகியவற்றை நீங்கள் தாராளமாக இந்த தளத்திற்கு அனுப்பலாம். மேலும் நீங்கள் தயார் செய்திடும் உணவு இப்படித்தான் இருக்கும் என்று காட்ட அதனைப் போட்டோ எடுத்தும் அனுப்பலாம்.

கேள்வி: நாமே ஹாட் கீக்களை நம் சவுகரியப்படி அமைக்க முடியுமா? ஏன் விண்டோஸ் சிஸ்டம் தரும் கீகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்? அதற்கான வழி உள்ளதா?
என். பன்னீர் செல்வம், காரைக்கால்.
பதில்:
சரியான கேள்வி. உங்களுக்கு உதவிட, இணையத்தில் ஒரு புரோகிராம் கிடைக்கிறது. அதனைத் தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தவும். இதன் பெயர் ஹாட் கீஸ் (Hotkeyz). அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க, கண்ட்ரோல் பேனல் என்ட்ரிகளைக் கொண்டு வர, கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திட போன்ற வேலைகளுக்கான ஷார்ட் கட் கீகளை நாமே செட் செய்திட வழி தருகிறது. ஸ்கைனெர்ஜி (Skynergy) என்ற நிறுவனம் இந்த இலவச புரோகிராமினைத் தருகிறது. http://www.skynergy.com/hotkeyz.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இதனைப் பெறலாம். இதன் மூலம் திறந்து இயங்கிக் கொண்டிருக்கின்ற விண்டோக்களை மினிமைஸ் செய்திட, ரீபூட் அல்லது ஷட் டவுண் செய்திட, ஒலியை முடக்க, மீண்டும் பெற, வெப் பிரவுசர்களை ஒரு குறிப்பிட்ட இணைய தளத்துடன் திறக்க என இது போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஷார்ட் கட் கீகளை, இந்த புரோகிராம் மூலம் அமைக்கலாம்.
ஒரு ஹாட் கீ அமைத்து அதன் மூலம் மீடியா புரோகிராம்களை இயக்கலாம், ரீசைக்கிள் பின்னிலுள்ள நீக்கப்பட்ட புரோகிராம்களை அழித்துவிடலாம். கம்ப்யூட்டரை ஹைபர்னேஷன் மூடுக்குக் கொண்டுவரலாம். இது போல பல சிஸ்டம் வேலைகளை ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கீகளில் செட் செய்துவிடலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X