விண்டோஸ்: தடைகளை தகர்க்க
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2013
00:00

சென்ற இதழில் விண்டோஸ் வேகத்தடைகள் கட்டுரையைப் படித்த பல வாசகர்கள், இந்த தடைகளை எப்படி களை யலாம் என்பது குறித்த விரிவான தீர்வுகளையும் தருமாறு கேட்டு எழுதியுள்ளனர். தொலைபேசி வழியாகவும் கேட்டனர். தீர்வாக வழிகள் கிடைத்தால், விண்டோஸ் இயக்கம் வேகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளனர்.
தீர்வுகளைக் காண்பதற்கு முன்னால், ஓர் உண்மையை இங்கு சொல்லியாக வேண்டும். விண்டோஸ் இயக்கத்தின் வேகத்திறன் குறை வதனை யாராலும் தடுக்க முடியாது. நாம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினால், பைல்களை உருவாக்குவோம்; அழிப்போம். புதியதாக எழுதுவோம். இணையம் சென்று, ட்ரைவர் புரோகிராம்களை அப்டேட் செய்வோம். சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்திடுவோம். வேண்டாத சாப்ட்வேர் தொகுப்புகளை நீக்குவோம். இதற்குத் தானே கம்ப்யூட்டர் உள்ளது என்கிறீர்களா! ஆம், ஆனால், இந்த வேலைகளே, டிஸ்க்கைச் சிதறலாக அமைத்து, குப்பை பைல்களைக் குவித்து, இன்னும் கம்ப்யூட்டர் இயங்கு திறனைக் குறைக்கும் அனைத்தையும் கொண்டுவிடும்.
இருப்பினும், கம்ப்யூட்டரை நல்லதொரு முறையில் அணுகினால், நிச்சயமாக, கம்ப்யூட்டரின் செயல் திறன் குறைவதைத் தள்ளிப்போடலாம். அதற்கான வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.

1. சிஸ்டம், டேட்டா வெவ்வேறு இடங்களில்:


கம்ப்யூட்டரில் சிஸ்டம் மற்றும் நம் பெர்சனல் டேட்டா ஆகியவைத் தனித்தனி ட்ரைவ்களில் பதியப்பட வேண்டும். வெவ்வேறு ஹார்ட் டிஸ்க்குகளில் பதிந்தால், இன்னும் நன்றாக இருக்கும். இதனால், உங்கள் சிஸ்டம் ட்ரைவ், அதிகச் சிதறல்களைச் சந்திக்காது. சிஸ்டம் கிராஷ் ஆகும் போது, உங்களின் டேட்டா பைல்கள் இன்னொரு ட்ரைவில் இருந்தால், அவற்றை இழக்கும் வாய்ப்பு நிகழாது. இவ்வாறு சிஸ்டம் பைல்களுக்கென ட்ரைவில் பிரிவினை ஏற்படுத்துகையில், சிஸ்டம் இயங்கத் தேவைப்படும் இடத்தைத் தர வேண்டும். விண்டோஸ் 7 சிஸ்டம் எனில், குறைந்த பட்சம் 20 ஜிபி அல்லது அதற்கும் மேலாக இடம் இருக்க வேண்டும். எப்போதும் அந்த ட்ரைவில் 5 ஜிபி காலி இடம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் சிஸ்டம் இயங்குவது எளிதாகவும், வேகமாகவும் நடைபெறும். இது குறையும் பட்சத்தில், ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்ட சில புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். தேவையற்ற பைல்களை இடமாற்றம் செய்திடலாம்; அல்லது நீக்கிவிடலாம்.
ஏற்கனவே அமைந்த நிலையில், நீங்கள் கூறும் அளவிற்கு இடம் இல்லையே எனக் கூறாமல், பிரிவின் இடத்தை அதிகப்படுத்த தற்போது கிடைக்கும் புரோகிராம்களைப் பயன்படுத்தி, இடத்தை அதிகப்படுத்தவும்.

2. டேட்டா பைல் தனியாக:


அனைத்து டேட்டா மற்றும் பெர்சனல் பைல்களையும், சிஸ்டம் அல்லாத ட்ரைவிற்கு மாற்றவும். குறிப்பாக, சிஸ்டம் ட்ரைவான, சி ட்ரைவில் உள்ள மை டாகுமெண்ட்ஸ் போல்டரை, டேட்டா ட்ரைவிற்கு மாற்றவும். விண்டோஸ் 7 சிஸ்டம் எனில், ஸ்டார்ட் சென்று ரைட் கிளிக் செய்திடவும். உங்கள் யூசர் நேம் தேர்ந்தெடுத்து திறக்கவும். பின்னர், அனைத்து போல்டர்களுக்கும் சென்று, கீழே தந்துள்ளபடி செயல்படவும். போல்டர் ஒன்றில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பட்டியலில் Properties தேர்ந்தெடுக்கவும். பின்னர் Location டேப் அழுத்தி, தொடர்ந்து Move அழுத்தவும். இனி, நீங்கள் இவற்றை எங்கு அமைக்க விரும்புகிறீர்களோ, அதனை பிரவுஸ் செய்து தேர்ந்தெடுக்கவும். அங்கு, எந்த போல்டரைக் கொண்டு செல்கிறீர்களோ, போல்டரின் அதே பெயர் தரப்பட வேண்டும். பின்னர், சேவ் செய்து ஓகே அழுத்தி வெளியேறவும். இதன் மூலம், உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திடம், இனி உங்கள் பைல்கள் எங்கு, எந்த போல்டரில் சேமிக்கப்பட வேண்டும் என்பதனைத் தெரிவிக்கிறீர்கள். இனி உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும், புதிய இடத்தில் உள்ள போல்டரிலேயே சேவ் செய்யப்படும். பழைய போல்டரில் டேட்டா பைல் இருந்தால், அவற்றை நீங்களாக கட் செய்து, புதிய போல்டரில் பேஸ்ட் செய்திட வேண்டும்.

3. டிஸ்க் கிளீன் அப் (Disk Cleanup):


இந்த பயன்பாடு, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள தற்காலிக பைல்கள், ரீசைக்கிள் பின் பகுதியில் உள்ள அழிக்கப்பட்ட பைல்கள், சிஸ்டம் இயங்குகையில் ஏற்படும் எர்ரர் பைல்கள் ஆகியவற்றைத் தேடி நீக்கும். இதனை இயக்க, Start > All Programs > Accessories > System Tools > Disk Cleanupஎனச் செல்ல வேண்டும். விண்டோஸ் 7 எனில், ஸ்டார்ட் சென்று அங்கு உள்ள கட்டத்தில், Disk Cleanup என டைப் செய்து என்டர் தட்ட, இந்த பயன்பாடு கிடைக்கும். பின் எந்த ட்ரைவினைக் கிளீன் செய்திட வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்து, இதனை இயக்கவும்.

4. ஹார்ட் டிரைவ் டிபிராக்:


கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவினை குறிப்பிட்ட கால இடைவெளியில் டிபிராக் செய்திட வேண்டும். இந்தக் கால இடைவெளி, உங்கள் வேலையின் தன்மையைப் பொறுத்தது. அடிக்கடி, புரோகிராம்களை இன்ஸ்டால் மற்றும் அன் இன்ஸ்டால் செய்பவரகவும், பைல்களை நீக்கு பவராகவும் இருந்தால், ட்ரைவினை அடிக்கடி டிபிராக் செய்வதும் மேற்கொள்ளப்பட வேண்டும். விண்டோஸ் சிஸ்டம் அனைத்திலும் இந்த டிபிராக் செய்திடும் பணி எளிதாகவே நிறைவேறும் வகையில் வசதிகள் தரப்பட்டுள்ளன.

5. ராம் மெமரி கிளீன்:


விண்டோஸ் இயக்கத்தில் பூட் மெனு என ஒன்று உள்ளது. சிஸ்டம் தொடங்குகையில், இதில் உள்ள புரோகிராம்கள் இயக்கப்படும். பல புரோகிராம்கள், இந்த பூட் மெனுவில் சென்று தங்களை ஒட்டிக் கொள்ளும். இதனால், ராம் நினைவகத்தின் இடம் எந்தவிதப் பயனுமின்றி வீணாகும். விண்டோஸ் இயக்க வேகம் மட்டுப்படுத்தப்படும். இதற்கு, ஸ்டார்ட் மெனு சென்று, ரன் கட்டத்தில் msconfig என டைப் செய்திடவும். Startup போல்டர் திறக்கப்படும். அதில், உங்களுக்குத் தேவைப்படாத புரோகிராம் இருப்பின், அதனை நீக்கவும்.

6. கூடுதல் விர்ச்சுவல் மெமரி:


ராம் மெமரியில் கொள்ளும் அளவிற்கு புரோகிராம்களும் பைல்களும் ஏற்றப்படுகையில், அடுத்து நாம் பயன்படுத்தும் பைல்கள் இயங்க, ஹார்ட் ட்ரைவில் இருந்து இடம் எடுக்கப்படுகிறது. இந்த இடத்தினையே விர்ச்சுவல் மெமரி என அழைக்கிறோம். ராம் மெமரியை விரிவு படுத்த இயலாத நிலையில், இந்த இடத்தைச் சற்று விரிவு படுத்தலாம். ஹார்ட் ட்ரைவ் மட்டுமின்றி, ப்ளாஷ் ட்ரைவ்களிலும் இந்த இடத்தை எடுத்துக் கொள்ளுமாறு அமைக்கலாம். ஆனால், இது தற்காலிக தீர்வு தான். ராம் மெமரியை அதிகப்படுத்துவதுதான் சிறந்த வழி.
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இந்த முறை ReadyBoost என அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட ட்ரைவின் மெனு மூலம் இதனை ஏற்படுத்தலாம். Start > Computer எனச் சென்று, Devices with Removable Storage என்று இருக்கும் இடத்திற்குச் சென்று Ready Boost டேப் தேர்ந்தெடுக்கவும். இங்கு தேவைப்படும் இடத்தினை உருவாக்கலாம். இறுதியில் Apply என்பதில் அழுத்தி மாற்றங்களை சேவ் செய்திடவும். மீண்டும் Computer என்பதில் அழுத்தி, ஏற்படுத்திய மாற்றங்களைக் காணலாம். விண்டோஸ் 7 சிஸ்டம் இவ்வகையில், ஏழு பிளாஷ் ட்ரைவ்களைக் கையாளும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கணக்கிடுகையில், நமக்கு 256 ஜிபி விர்ச்சுவல் மெமரி கிடைக்கும்.
கூடுதல் ராம் மெமரியினை அமைக்க முயற்சிக்கையில், உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த வகை ராம் மெமரி சிப் சரியாக இருக்கும் என்பதனை முன்பே அறிந்து, அதனை வாங்கி இணைக்கவும்.

7. மால்வேர் பாதுகாப்பு:


மால்வேர் மற்றும் வைரஸ் புரோகிராம்களிலிருந்து, கம்ப்யூட்டரைப் பாதுகாக்க விண்டோஸ் சிஸ்டம் சில தடுப்பு முறைகளைக் கொண்டிருந்தாலும், தர்ட் பார்ட்டி ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். இவற்றை அவ்வப்போது மேம்படுத்திக் கொள்வது கட்டாயமாகும்.

8. முறையான அன் இன்ஸ்டால்:


புரோகிராம்களை கம்ப்யூட்டரிலிருந்து நீக்குகையில், முதல் படியாக, அந்த புரோகிராம்களுடன் இணைத்துத் தரப்பட்டிருக்கும் அன் இன்ஸ்டால் வழிகளைப் பயன்படுத்தவும். தரப்படவில்லை எனில், கண்ட்ரோல் பேனல் சென்று, Add or Remove programs மெனு திறந்து நீக்கவும். அல்லது, சிகிளீனர் போன்ற தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் மூலம் நீக்கலாம். சம்பந்தப்பட்ட புரோகிராம் உள்ள ட்ரைவ் சென்று, அதன் பைல்களை அழிப்பது சரியான வழி அல்ல. இதன் மூலம் பல பைல்கள், தேவையின்றி குப்பையாக ட்ரைவில் தங்கி, விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும்.

9. நாமாக மேற்கொள்ளவேண்டிய வேலைகள்:


மேலே குறிப்பிட்ட சாப்ட்வேர் பராமரிப்புடன், நாமாக சில வேலைகளைக் கம்ப்யூட்டரில் மேற்கொள்ள வேண்டும். சி.பி.யு. உள்ள டவர் கேபினைத் திறந்து, சிறிய மின்விசிறி மற்றும் ஹீட் சிங்க் மீது உள்ள தூசியை நீக்க வேண்டும். கம்ப்யூட்டருக்கு வரும் பவர் சப்ளை, முறையான வழியில் சரியான எர்த் கனக்ஷன் கொடுத்து ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஒட்டுப் போட்ட வயர்கள், நேரடியாக ப்ளக் துளையுள் செருகப்பட்ட வயர்கள் ஆகியவை ஹார்ட் டிஸ்க்கில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும். மின்சாரம் கட் ஆகும்போது, கம்ப்யூட்டர் இயக்கம் பாதிக்கப்படாத வகையில், யு.பி.எஸ். அல்லது இன்வர்டர் மூலம் மின்சக்தி தொடர்ந்து கிடைக்க வேண்டும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sing venky - Stanford University, Melnopark,யூ.எஸ்.ஏ
15-மே-201301:32:41 IST Report Abuse
sing venky விண்டோவ்சில் உள்ள இத்தகைய தலைவலி தரும் பிரச்சனைகள் 'ஆப்பில்' மாக் அல்லது மச்பூக் ப்ரோ வில் இல்லை. மேலும் மாக் சாப்ட்வேருக்கான வைரஸ் இல்லை. ஆனால் அது மிகவும் காஸ்ட்லி. நான் ஆப்பிள் மற்றும் விண்டோஸ் இரண்டும் பயன்படுத்துகிறேன்.
Rate this:
Share this comment
Ranjith Kumar - Tirunelveli,இந்தியா
16-மே-201310:19:28 IST Report Abuse
Ranjith KumarMac பதிலாக Ubuntu அல்லது Zorin பயன்படுத்தலாம். அதிலும் வைரஸ் தொந்தரவு இல்லை, மேலும் அவை இலவசமாகும்.( source ) ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X