கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2013
00:00

கேள்வி: நான் பயன்படுத்தும் பிரவுசரில், இணைய தள முகவரியினை டைப் செய்திடுகையில், நான் அமைக்கும் எழுத்துக்களுக்குப் பதிலாக வேறு சில எழுத்துகளும், சில வேளைகளில், என்னவென்று அறிய இயலாத எழுத்துக்களும் தோன்றுகின்றன. தமிழ் மொழிக்கான புரோகிராம்கள் குறுக்கீடாக இருக்கும் என்று எண்ணி, அவற்றை நிறுத்திய பின்னரும், இது போல ஏற்படுகிறது. தயவு செய்து காரணமும் தீர்வும் தரவும்.
கே. ஸ்ரீபாலன், தேனி.
பதில்:
எந்த பிரவுசர் என்று குறிப்பிடவில்லையே? பொதுவாக நாம் டைப் செய்திடும் எழுத்துக்கள் தான், பிரவுசர் முகவரிக்கான கட்டத்தில் தோன்ற வேண்டும். இல்லை எனில், எங்கோ பிரச்னை உள்ளது. தமிழ் எழுத்துக்களை தரும் ட்ரைவர் புரோகிராமாக இருக்குமோ என்ற உங்கள் சந்தேகமும், அதனை நிறுத்தி வைத்ததும் சரியே. ஆனால், அதுவும் இல்லாத பட்சத்தில், இது, உங்கள் பிரவுசரின் ஆட் ஆன் புரோகிராமினால் தான் இருக்க வேண்டும். எனவே அனைத்து ஆட் ஆன் புரோகிராம்களையும் இயக்காமல், பிரவுசரை இயக்க வேண்டும். இதற்கான செட்டிங்ஸ் அமைப்பு வழிகளைத் தருகிறேன். நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பயன்படுத்துவதாக இருந்தால், ஸ்டார்ட் மெனு திறந்து “Accessories” என்ற பிரிவிற்குச் செல்லவும். இங்கு “System Tools” என்ற துணை போல்டரைத் திறக்கவும். இதில் “Internet Explorer (No Add Ons)” என்பதற்கான ஐகானில் கிளிக் செய்திடவும். இனி, எந்தவிதமான தர்ட் பார்ட்டி புரோகிராம்களும் திறக்கப்படாமல், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் திறக்கப்படும்.
பயர்பாக்ஸ் பிரவுசரில் இந்த செயல்முறை சற்று வேறுபடும். ஸ்டார்ட் மெனு திறந்து, சர்ச் பாக்ஸில் “Run” என டைப் செய்திடவும். இதற்கான தேடல் முடிவுகளில், முதலாவதாக இருக்கும் நீல வண்ணத்திலான ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் டெக்ஸ்ட் பாக்ஸில் “Firefox safemode” என டைப் செய்து ஓகே கிளிக் செய்திடவும். அடுத்து, “Start in Safe Mode” என இருக்கும் பட்டனில் கிளிக் செய்தால், பயர்பாக்ஸ் பிரவுசர் எந்தவித ஆட் ஆன் புரோகிராம் இன்றித் திறக்கும்.
ஆட் ஆன் புரோகிராம் இன்றி பிரவுசரைத் திறந்த பின்னர், ஆட் ஆன் தொகுப்புகள் ஒவ்வொன்றாக இயக்க வேண்டும். எந்த தொகுப்பினை இயக்கிய பின்னர், யு.ஆர்.எல். கட்டத்தில் எழுத்துக்கள் சரியாக வரவில்லையோ, அதனை நீக்கிவிட வேண்டும். இனி எழுத்துக்கள் சரியாக வரலாம்.
இதன் பின்னரும், எழுத்துக்கள் சரியாக அமையவில்லை என்றால், தற்போதைய பிரவுசரின் புக்மார்க்குகள் அல்லது பேவரிட் தளப் பட்டியலைத் தயார் செய்து விட்டு, கம்ப்யூட்டரிலிருந்து அந்த பிரவுசரை நீக்கி, பின் புதியதாக, அல்லது மேம்படுத்தப்பட்டதாக, பிரவுசரை இன்ஸ்டால் செய்திடவும். அநேகமாக, இனி பிரச்னை வராது.

கேள்வி: கார்டுகள் மற்றும் போஸ்டர்கள் அச்சடிக்கத் தயார் செய்திடும் சிடி ஒன்றை, அழகான பாக்ஸ் ஒன்றில் பேக் செய்தபடி எனக்கு என் நண்பர் கொடுத்தார். அதனை இயக்கிய போது ப்ராடக்ட் கீ டைப் செய்திடக் கேட்கிறது. இதற்கு எங்கே சென்று தேடுவது? இணையத்தில் கிடைக்குமா? எதற்காக இந்த கீ? நண்பர் பணம் செலுத்தித்தான் எனக்காக வாங்கி வந்தார்.
எஸ். விஷ்வம், சென்னை.
பதில்:
உங்கள் கைகளிலேயே அது உள்ளது, விஷ்வம். ப்ராடக்ட் கீ என்பது, ஒரு சாப்ட்வேர் புரோகிராமின் ஒவ்வொரு காப்பியும் இயங்குவதற்கான உரிம எண். ஒவ்வொரு வாகனத்திற்கும் பதிவு எண் வழங்குவது போல. இந்த ப்ராடக்ட் கீ, அந்த சிடி தரப்பட்ட பாக்ஸில் உள்புறமாகவோ, வெளிப்புறமாகவோ தரப்பட்டிருக்கும். எனவே, பாக்ஸை தூக்கி வெளியே போடாமல் தேடிப் பார்க்கவும். அந்த எண்ணைக் கம்ப்யூட்டரில், பைல் ஒன்றில் குறித்து வைக்கவும். ஹார்ட் டிஸ்க் பார்மட் செய்கையில், இந்த சிடியை மீண்டும் இன்ஸ்டால் செய்கையில் ப்ராடக்ட் கீ மீண்டும் தேவைப்படும். பாக்ஸ் தவறவிடப்பட்ட நிலையில், இது கை கொடுக்கும்.

கேள்வி: எக்ஸெல் தொகுப்பில் வேலை செய்கையில், அதில் திறக்கப்படும் ஒவ்வொரு ஒர்க்புக்கிற்கும், டாஸ்க் பாரில் ஒரு பட்டன் திறக்கப்படுகிறது. இவ்வாறில்லாமல், ஒரே பட்டனாக அமையும்படி செட் செய்திட முடியுமா?
கா.சத்தியமூர்த்தி, திண்டுக்கல்.
பதில்:
பல ஒர்க்புக்குகளைத் திறந்து பணியாற்றுகையில், எக்ஸெல், அதன் மாறா நிலையில், ஒவ்வொன்றுக்கும் ஒரு டாஸ்க்பார் பட்டனை ஏற்படுத்தும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், டாஸ்க் பாரில் உள்ள எக்ஸெல் ஐகானின் பின்புறமாக பல “sheets” காட்டப்படும். இதற்குப் பதிலாக, ஒரே ஒரு பட்டன் மட்டுமே காட்டப்பட, கீழ்க்காணும் செயல்முறைகளை செட் செய்திடவும். ஆனால், அப்படி அமைக்கும் பட்சத்தில், ஒர்க்புக்குகளுக்கு இடையே செல்ல, ரிப்பனில் வியூ டேப் தேர்ந்தெடுத்து, விண்டோஸ் டூல் பயன்படுத்தி செல்ல வேண்டியதிருக்கும்.
1. எக்ஸெல் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் திறக்கவும். (எக்ஸெல் 2007ல், ஆபீஸ் பட்டன் அழுத்தி, Excel Options மீது கிளிக் செய்திடவும். Excel 2010ல் பைல் டேப் அழுத்தி அதன் பின்னர் Options கிளிக் செய்திடவும்.)
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு கிடைக்கும் ஆப்ஷன்ஸ் வழியாகச் சென்று, Display என்ற பிரிவிற்கு வரவும்.
4. இங்கு Show All Windows In the Taskbar என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
5. இங்கு ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: சில நூலகங்களில், அதன் அலுவலக நேரம் முடியும்போது, உள்ளிருப்பவர்கள் வெளியே செல்ல மணி அடிப்பார்கள். அதே போல, என் குழந்தைகள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தத் தொடங்கி, குறிப்பிட்ட நிமிடங்கள் கழித்து, தானாக ஷட் டவுண் செய்திடும் வகையிலும், குறிப்பிட்ட இணைய தளங்களைப் பார்க்க இயலாத வகையிலும் அமைக்க முடியுமா? நான் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துகிறேன்.
எஸ்.சிவராஜ், சென்னை.
பதில்:
விண்டோஸ் சிஸ்டத்தில், குழந்தைகள் செயல்பாட்டினைக் கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளன. விண்டோஸ் 7ல் ஸ்டார்ட் மெனு, விண்டோஸ் 8ல் சார்ம்ஸ் பார் சென்று “Parental” என டைப் செய்திடவும். விண்டோஸ் 7 Parental Controls என்றும், விண்டோஸ் 8 Family Safety என்றும் காட்டும். இங்கு Windows Live Family Safety Account என்ற சேவையை மேற்கொள்ள ஆப்ஷன் காட்டப்படும். இது ஓர் இலவச சேவை. இதனைப் பெற விண்டோஸ் லைவ் ஐ.டி. அல்லது விண்டோஸ் லைவ் அக்கவுண்ட் யூசர் நேம், பாஸ்வேர்டுடன் இணைய வேண்டும். இங்கு சென்று, அது காட்டும் வழியில், பேமிலி அக்கவுண்ட் செட் செய்திடலாம். இதனை செட் செய்த பின்னர், உங்கள் parental controls செட் செய்திட இடம் தரப்படும். இங்கு, உங்களின் ஒவ்வொரு குழந்தைக்கும், தனித்தனியே நேரம் செட் செய்திடலாம். வார நாட்கள், வார இறுதி நாட்கள் எனப் பிரித்தும் செட் செய்திடலாம். இவை தவிர கீழ்க்காணும் கட்டுப்பாடுகளும் உண்டு.
1. Web Filtering: இதன் மூலம் எந்த இணைய தளங்களை மட்டும் பார்க்கலாம் என செட் செய்திடலாம்.
2. Time Limits: இங்கு நேரக் கட்டுப்பாட்டினை அமைக்கலாம்.
3. Windows Store and Game Restrictions: குழந்தைகள் எந்த ரேட்டிங் பெற்றுள்ள விளையாட்டுக்களை விளையாடலாம் என அமைக்கும் வசதியினை இது தருகிறது.
4. App Restrictions: எந்த அப்ளிகேஷன் புரோகிராம்களை குழந்தைகள் இயக்கலாம் என்பதனை இங்கு வரையறை செய்திடலாம்.
இவற்றை செட் அப் செய்வதில் எந்த பிரச்னையும் தராத இடைமுகம் தரப்படுகிறது. எனவே, சரியாக நீங்கள் விரும்பும் வகையில் குழந்தைகளுக்கு நீங்கள் அனுமதிப்பதை மட்டும் செட் செய்திடலாம்.
குழந்தைகளே! என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் பெற்றோர்களே, உங்களுக்கு நல்ல வழிகாட்டிகள்.

கேள்வி: என் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் டாஸ்க் பாரில், திடீரென மேலாக டபுள் லைன் காட்டப்படுகிறது. இது எதனால் ஏற்பட்டது எனத் தெரியவில்லை. நான் சமீபத்தில் எந்த சாப்ட்வேரையும் இன்ஸ்டால் செய்யவில்லை. இதனை எப்படி நீக்குவது?
எஸ். மோனிகா ராணி, புதுச்சேரி.
பதில்:
இது ஒன்றும் பிரச்னைக்குரியதல்ல, ராணி. இதனை எளிதில் சரி செய்துவிடலாம். டாஸ்க் பார் லாக் செய்யப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. இதனை சரி செய்திட, டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Lock the Taskbar என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். அவ்வளவு தான், பிரச்னை தீர்ந்திருக்கும். இரட்டைக் கோடு இனி இருக்காது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sureshbabu - vellore,இந்தியா
07-ஜூன்-201320:02:23 IST Report Abuse
sureshbabu Adobe Photoshop பதிவிறக்க எவ்வாறு ...? எந்த வலைத்தளங்களில் நான் Adobe Photoshop பதிவிறக்க முடியும்
Rate this:
Share this comment
Cancel
n.saravanakumar - theni,இந்தியா
14-மே-201322:12:09 IST Report Abuse
n.saravanakumar நான் யூடூபில் இருந்து வீடியோ யூடூப் டவுன்லோடர் மூலமாக டவுன்லோட் செய்யும் பொழுது வேகம் மிகவும் குறைவாக உள்ளது. வேகம் அதிகரிக்க நான் என்ன செய்தால் அதிகமாகும்? என்.சரவணக்குமார் ஜக்கம்பட்டி, தேனி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X