தேடுதலில் சில கூகுள் வழிகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 மே
2013
00:00

கூகுள் தேடுதளம் தரும் நவீன வசதிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அவ்வளவாகப் பலரும் அறியாத அல்லது அடிக்கடி பயன்படுத்தாத சில தேடுதல் வழிகளும், அவற்றை எதற்காகப் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் இங்கு காணலாம்.
1.கூகுள் குரூப்ஸ் தளங்களிலிருந்து வரையறைகளுடன் தேடல்
author:குறிப்பிட்ட ஒருவரிடமிருந்து ஒரு மின் அஞ்சல் குழுவில் உள்ள தகவல்கள் அடங்கிய செய்திகளைப் பெற – fried chicken author:lakshmi author:manjula (லஷ்மி மஞ்சுளா என்பவர் எழுதிய fried chicken குறித்த கட்டுரைகள்)
group: குறிப்பிட்ட நியூஸ் குரூப்பில் இருந்து குரூப் மெசேஜ் பெற – kalki novels group:tamilnovels.books (கல்கியின் நாவல்கள் குறித்து tamilnovels.books என்ற குரூப்பில் இருந்து தகவல்கள் பெற)
insubject:சப்ஜெக்ட் லைன் கட்டத்தில் குறிப்பிட்ட பொருள் குறித்து எழுதப்பட்ட அஞ்சல் செய்திகளைப் பெற – insubject:"koodangulam" (சப்ஜெக்ட் கட்டத்தில் கூடங்குளம் என்ற சொல் கொண்ட மின் அஞ்சல்களைப் பெற)
location: குறிப்பிட்ட இடம் சார்ந்த தளங்களிலிருந்து செய்தி மற்றும் தகவல்கள் பெற – சர்ச் பாக்ஸில் Obama location: தடு (ஒபாமா குறித்த பிரிட்டிஷ் செய்தி தகவல்களைப் பெற)
source:குறிப்பிட்ட மூல தரவுகளிலிருந்து, தேடும் தகவல் குறித்த செய்திகளைப் பெற – peace source:washington_post அமைதி குறித்த கட்டுரைகளை washington_post என்ற அமெரிக்க செய்தித்தாள் தரவுக் கோப்பிலிருந்து பெற
2. இணைய தளங்களைப் பற்றிய தேடல்கள்:
cache: கூகுள் ஏற்கனவே குறிப்பிட்ட இணையதளத்திலிருந்து சேமித்து வைத்த தகவல்களைப் பெற cache: www.dinamalar.com தினமலர் தளம் சார்ந்து கூகுள் சேர்த்து வைத்த செய்திகளைப் பெற
info: குறிப்பிட்ட இணைய தளப் பக்கம் குறித்த தகவல்களைப் பெற – info:www.dinamalar.com தினமலர் இணையதளம் குறித்த தகவல்களைப் பெற.
related: குறிப்பிட்ட இணைய தளம் போன்ற அல்லது சார்புள்ள மற்ற இணையதளங்கள் குறித்த தகவல்களைப் பெற – related:www.dinamalar.com தினமலர் இணைய தளம் போன்ற அல்லது அதனுடன் தொடர்புள்ள மற்ற இணைய தளங்கள் குறித்த தகவல்களைப் பெற.
3. சில அடிப்படை தேடல்களின் எடுத்துக் காட்டுகள்:
முதலில் தேடல் சொற்களும், அடுத்து அவை எந்த பக்கங்களைக் காட்டும் எனவும் தரப்பட்டுள்ளது.
malware and taiwan malware மற்றும் taiwan ஆகிய சொற்கள் கொண்ட இணையப் பக்கங்கள்.
recycled plastic OR iron: மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் அல்லது இரும்பு குறித்த தகவல்கள்
"I have a dream" மிகச் சரியாக I have a dream என டெக்ஸ்ட் கொண்ட இணையப் பக்கங்களின் பட்டியல்.
salsa dance salsa என்ற சொல், ஆனால், அவற்றில் dance என்ற சொல் இல்லாத இணையப் பக்கங்கள்.
castle ~glossary : castle என்ற சொல் உள்ள சொல் களஞ்சியம், அகராதி, சொல் கூறு மற்றும் பிற தகவல்கள் உள்ள இணையப் பக்கம் அறிய.
define:imbroglio: இணையப் பக்கங்களிலிருந்து imbroglio என்ற சொல் குறித்த விளக்கங்கள்.
மேலே காட்டியுள்ளது போல இன்னும் சிலவகை தேடல் வகைகளும் உள்ளன. அவற்றைப் பின் வரும் வாரங்களில் பார்க்கலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X