கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 மே
2013
00:00

கேள்வி: என் நண்பர் பயன்படுத்தும் ஐபேடில், கீ போர்ட் இரண்டு பிரிவாக அமைக்கப்பட்டிருப்பதனைப் பார்த்தேன். திரையில் இது காட்டப்பட்டிருந்தது. இந்த கீ போர்டிற்கான பெயர் என்ன? அதே குவெர்ட்டி கீ போர்ட் போலவே இருந்தது.
என். அகல்யா, சென்னை.
பதில்:
வழக்கமான கீ போர்ட், ஆப்பிள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இரண்டாகப் பிரித்து செயல்படும் வசதியுடன் தரப்படுகிறது. ஐ பேடில், வழக்கமான ஆன் ஸ்கிரீன் கீ போர்டில், இரு விரல்களை வைத்துப் எதிர் முனைகளில் இழுத்தால், அது இரண்டாகப் பிரிந்து காட்சி அளிக்கும். சிறைய கரங்கள் உள்ளவர்களுக்கு இது வசதியானதாகும். மேலும், இரண்டாகாப் பிரித்து வைத்து செயல்படுத்துவதால், கீகளைத் தவறாக அழுத்துவது குறையும். வேகமாகவும் டைப் செய்திடலாம். இது வேண்டாம் என எண்ணினால், மீண்டும் விரல்களை வைத்து இழுத்து இணைத்தால், கீ போர்ட் சரியாக அமைந்து வழக்கம் போலக் காட்சி தரும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் உள்ள குறிப்பிட்ட டெக்ஸ்ட் பகுதியை அப்படியே டேபிளாக மாற்றுவதற்கு வழி உண்டா? நான் ஆபீஸ் 2007 பயன்படுத்தி வருகிறேன்.
ஆர். கலைச் செல்வி, புதுச்சேரி.
பதில்:
வேர்ட் தொகுப்பில், சாதாரண முறையில் டேபிள் உருவாக்க, Insert Table டூலினைப் பயன்படுத்தலாம். ஏற்கனவே அமைக்கப்பட்ட டெக்ஸ்ட்டை டேபிளாக்கக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
1. மாற்றப்பட வேண்டிய டெக்ஸ்ட் பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட டேப் கேரக்டர் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடாது.
2. மாற்றவேண்டிய டெக்ஸ்ட்டினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. அடுத்து, ரிப்பனில் Insert டேப்பினைக் கிளிக் செய்திடவும்.
4. இங்கு டேபிள் டூலில் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ் விரி மெனுவில், Convert Text to Table என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Convert Text to Table என்ற டயலாக் பாக்ஸினைக் காட்டும். இந்த டயலாக் பாக்ஸில், அனைத்து செட்டிங்ஸ் அமைப்பும் சரியாகத் தரப்பட்டுள்ளதா என்பதனைச் சரி பார்த்துக் கொள்ளவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் உடனடியாக ஒரு டேபிளில் அமைக்கப்படுவதனைப் பார்க்கலாம். சில வேளைகளில், டேபிளில் உள்ள செல்களின் அகலத்தினை மாற்றி அமைக்க வேண்டியதிருக்கலாம்.

கேள்வி: கிரீன் டாம் (Green Dam) சாப்ட்வேர் என ஒன்று சீனாவில் மட்டும் கிடைப்பதாக ஒரு கட்டுரையில் படித்தேன். இதன் நோக்கமும் பயனும் என்ன? ஏன் இது மற்ற நாடுகளில் கிடைக்கவில்லை?
என். சேகரன், ஸ்ரீவில்லிபுத்தூர்.
பதில்:
சீனாவில், 2009 ஜூலை 1க்குப் பின்னர் விற்பனையாகும் கம்ப்யூட்டர்களில் இந்த சாப்ட்வேர் அந்நாட்டின் அரசு ஆணைப்படி கட்டாயமாகப் பதிந்து தரப்படுகிறது. பாலியல் சம்பந்தப்பட்ட தளங்கள், பதிவுகளை இந்த சாப்ட்வேர் அனுமதிக்காது. அதே போல சீன அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் தகவல்களையும் இது தடை செய்திடும்.

கேள்வி: வேர்ட் புரோகிராமில் நார்மல் டெம்ப்ளேட் என்பது என்ன? அப்படியானால் வேறு வகையான டெம்ப்ளேட்கள் உள்ளனவா? அவை யாவை?
ஜெயஸ்ரீ நந்தகுமார், மௌலிவாக்கம்.
பதில்:
நார்மல் டெம்ப்ளேட் என்பது வேர்ட் புரோகிராம் தொகுப்பிலேயே வடிவமைக்கப்பட்ட டாகுமெண்ட் ஒன்றின் கட்டமைப்பாகும். ஒரு புதிய டாகுமெண்ட்டைத் தொடங்கு கையில் இதுவே உங்களுக்கு டெக்ஸ்ட் டைப் செய்திடக் கிடைக்கும். மார்ஜின்,எழுத்து வகை, ஸ்டைல் போன்றவை இதில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதனை மாற்றுவதற்கும் இதிலேயே வசதிகள் தரப்பட்டிருக்கும். நீங்கள் இந்த நார்மல் டெம்ப்ளேட்டினை மாற்றினால் அதன் பின் அமைக்கப்படும் அனைத்து டாகுமெண்ட்களும் அதே வடிவமைப்பில் உருவாக்கப்படும். Normal.dot என்பது இந்த டெம்ப்ளேட் பைலின் பெயர். எந்த டைரக்டரியில் எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பினை இன்ஸ்டால் செய்தீர்களோ அந்த டைரக்டரியில் இதனைக் காணலாம். இந்த பைலை நீங்கள் அழித்துவிட்டால் அடுத்த முறை வேர்ட் தொடங்கும்போது ஏற்கனவே இருந்த செட்டிங்ஸ் அடிப்படையில் புதிய நார்மல் டெம்ப்ளேட் ஒன்றை அது தானாக உருவாக்கிக் கொள்ளும்.

கேள்வி: ஆபீஸ் 2003 பயன்படுத்துகிறேன். இதில் உள்ள வேர்ட் தொகுப்பில், ரூலர் தேவைப்பட்டதால் View மெனுவில் Ruler என்பதில் கிளிக் செய்தேன். ஆனால் மேல் புறம் மட்டுமே ரூலர் கிடைத்தது. இடது பக்கம் டாகுமெண்ட்டில் ரூலர் காட்டப்படவில்லை. இதற்கென தனி கட்டளை அல்லது செட்டிங்ஸ் அமைக்க வேண்டுமா?
லஷ்மி கனகஸ்ரீ , தேவாரம்.
பதில்:
இன்னொரு கட்டளை அல்லது செட்டிங்ஸ் எல்லாம் தேவை இல்லை. View மெனுவில் நீங்கள் என்ன தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதைப் பார்க்கவும். Normal வியூவினை நீங்கள் தேர்ந்தெடுத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்த வகை வியூவில் பக்கத்தின் மேலாக படுக்கை வசத்தில் மட்டுமே ரூலர் கிடைக்கும். இதே மெனுவில் ரூலர் என்பதில் கிளிக் செய்திருந்தாலும் மேலே மட்டுமே காட்டப்படும். இதே போல ஹெடர் மற்றும் புட்டர் பிரிவுகளையும் பார்க்க முடியாது. அதற்குப் பதிலாக வியூ மெனுவில் Print Layout என்ற பிரிவில் கிளிக் செய்தால் மேலே சொன்ன அனைத்தும் காட்டப்படும். இடது பக்கமும் ரூலர் தெரியும். லெட்டர் ஹெட் மட்டும் அல்ல, பலவகைகளில் நம் டெக்ஸ்ட்டை வடிவமைக்க இந்த இடது பக்க ரூலர் உங்களுக்கு உதவும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் ஹைபன் பயன்படுத்துகையில், ஹாட் ஸோன் உருவாக்கிப் பயன்படுத்தப்படுகிறது என்று படித்தேன். இந்த ஹாட் ஸோன் என்பது என்ன? இதற்கும் ஹைபன் பயன்படுத்துவதற்கும் என்ன தொடர்பு?
சி. ராம்நாத் கண்ணன், சென்னை.
பதில்:
வேர்ட் உங்கள் டாகுமெண்ட்டில் ஹைபன் இடுகையில், பிரிக்கும் சொல்லில் எவ்வளவு பகுதியை முந்தைய வரியில் அமைக்க முடியும் என்று கணக்கிடுகிறது. இதற்காகத்தான் ஹாட் ஸோன் அல்லது ஹைபனேஷன் ஸோன் என்பதைக் கணக்கிடுகிறது. ஒவ்வொரு வரியிலும் தேவைப்படும்போது இந்த ஹாட் ஸோன் வலது முனையில் கிடைக்கிறது. இந்த ஹாட் ஸோன் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். அதாவது 0.25 அங்குலம் என வைத்துக் கொண்டால் அந்த அளவிற்குள் ஒரு சொல்லை ஹைபனேட் செய்திடமுடிந்தால் மட்டுமே, வேர்ட் ஒரு சொல்லை ஹைபனேட் செய்திடும். இல்லை என்றால் அடுத்த வரிக்குக் கொண்டு வந்திடும். இதனை செட் செய்வதற்குக் கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றவும்.
மெனு பாரில் Tools அழுத்திப் பின் Language என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இந்த சப் மெனுவில் Hyphenation என்ற பிரிவு இருக்கும் இதனைக் கிளிக் செய்தால் Hyphernate என்ற சிறிய விண்டோ கிடைக்கும். இதில் ஒரு டாகுமெண்ட் தானாக ஹைபனேட் செய்திடட்டுமா? பெரிய எழுத்துக்களில் உள்ள சொற்களை மட்டும் ஹைபனேட் செய்திடவா? என்ற ஆப்ஷன்களோடு Hot Zone எந்த அளவில் இருக்க வேண்டும் என்ற ஆப்ஷனும் தரப்படும். இதனை நாமே செட் செய்து கொள்ளலாம். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறி, ஏதேனும் ஒரு டாகுமெண்ட்டில் இதனைச் சோதனை செய்து கொள்ளலாம்.

கேள்வி: டாகிள் கீ என என் ஆசிரியர் கூறுகிறார். இது என்ன கீ என்பது விளங்கவில்லை. ஸ்குரோல் லாக் கீ என்றெல்லாம் சொல்கிறார். கீ போர்டில் இது எங்குள்ளது? முதலில் இதனை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது?
எஸ். சத்யா, மேலூர்.
பதில்:
டாகிள் கீ என்று தனியாக ஒரு கீ இல்லை. கீ போர்டில் சில தனிப்பட்ட இயக்கங்களுக்கு என்று பல கீகள் தரப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக பெரிய எழுத்தில் அடிக்க கேப்ஸ் லாக், டெக்ஸ்ட் செருக இன்ஸெர்ட், ஸ்குரோல் லாக், நம்லாக் (Caps Lock, Insert, Scorll Lock, Num Lock) போன்றவற்றைச் சொல்லலாம். இவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் அந்த பயன்பாட்டை நிறுத்தவும் அந்த அந்த ஒரே கீ தான் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக் காட்டாக பெரிய எழுத்து வேண்டும் என்றால் Caps Lock கீயை அழுத்துகிறோம். பின்னர் வேண்டாம் என்றால் அதனையே மீண்டும் அழுத்துகிறோம். மேலே சொன்ன அனைத்து கீகளையும் இவ்வாறே செயல்படுத்துகிறோம். இவ்வாறு செயல்படுத்தப்படும் கீகளையே டாகிள் கீ (Toggle Key) என அழைக்கிறோம்.

கேள்வி: என் அலுவலகத்தில் நான் பயன்படுத்தும் கம்ப்யூட்டரை வேறு சிலரும் பயன்படுத்துகிறார்கள். எனவே நான் தயாரிக்கும் எக்ஸெல் ஒர்க்புக்கில், வேறு யாரும் மாற்றங்கள் செய்யாமல் இருக்க, அதே சமயத்தில் அதனைப் பயன்படுத்த எந்த மாதிரியான செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்?
ஆ. கணேஷ் பாண்டியன், தென்காசி.
பதில்:
நல்ல கேள்வி கணேஷ். கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்ற யூசர்கள் உங்கள் ஒர்க்புக்கில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது என்று எண்ணினால், கீழே குறிப்பிட்டவாறு செட் செய்திடவும்.
Tools மெனுவில் Share Workbook என்பதனைத் தேர்ந்தெடுத்தால் எக்ஸெல், ஷேர் ஒர்க்புக் டயலாக் பாக்ஸைக் காட்டும். அதில் Allow Changes என்ற வரிக்கு முன் உள்ள பாக்ஸில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
நீங்கல் எக்ஸெல் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், ரிவியூ (Review) என்ற டேப்பினை அழுத்தவும். இங்கு Share Workbook என்ற ஐகானில் அழுத்தினால், கிடைக்கும் விண்டோவில் Editing என்ற டேப் அழுத்தவும். இதில் Allow changes by more than one user என்று இருப்பதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X