கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2013
00:00

கேள்வி: மைக்ரோசாப்ட் சர்பேஸ் புரோ டேப்ளட் ஒன்றினை வைத்து இயக்கி வருகிறேன். இதில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி? கீ போர்ட் இணைக்க வேண்டுமா? டேப்ளட்டில் தரப்படும் விர்ச்சுவல் கீ போர்டில் பிரிண்ட் ஸ்கிரீன் கீ இருக்குமா?
என். அகிலா, சென்னை.
பதில்:
புதுமையான சாதனங்களைக் கையாள்கையில், இது போன்ற சின்னஞ்சிறு பிரச்னைகள், கேள்விகள் எழும். சர்பேஸ் ப்ரோ டேப்ளட்டில், ஸ்கிரீன் ஷாட் எடுக்க, கீ போர்ட் இணைக்கத் தேவையில்லை. சரியான முறையில் தொட வேண்டிய பட்டன்களைத் தொட்டு இயக்கினால் போதும். டேப்ளட்டின் டச் ஸ்கிரீனின் கீழாக நடுவில் உள்ள விண்டோஸ் பட்டனைத் தொடவும் அதே நேரத்தில், டேப்ளட்டின் பக்கவாட்டில் உள்ள வால்யூம் குறைப்பதற்கான பட்டனையும் சேர்த்து அழுத்தவும்.
டேப்ளட்டின் திரை அரை நொடி நேரம் மங்கிப் பின் மீண்டும் பழைய நிலைக்கு வரும். உங்களுக்கு நீங்கள் விரும்பிய ஸ்கிரீன் ஷாட் கிடைத்துவிட்டது என்பதை இது குறிக்கிறது. இதில் சற்று கவனம் தேவை. சரியான அழுத்தத்தினை இந்த பட்டன்களில் ஒருசேரத் தர வேண்டும். குறிப்பாக டெஸ்க் டாப் மோடில் நீங்கள் இயங்கினால், இது சற்றுப் பிரச்னை தரலாம். கவனமாக விண்டோஸ் பட்டனை அழுத்தவில்லை என்றால், அது மெட்ரோ/மாடர்ன் ஸ்டார்ட் ஸ்கிரீன் திரைக்கு உங்களைக் கொண்டு செல்லும். ஸ்கிரீன் ஷாட் எடுக்காது. ஓரிரு முறை தவறினாலும், விரைவில் இது உங்களுக்குப் பழகி விடும். பின்னர், ஸ்கிரீன் ஷாட் எடுப்பது, குழந்தையின் தொட்டிலை ஆட்டுவது போல எளிதாகிவிடும்.
சரி, இந்த ஸ்கிரீன் ஷாட் படங்கள், டேப்ளட் பிசியில், எங்கு பதியப்படுகின்றன? ஸ்கிரீன் ஷாட்ஸ் (Screenshots) என்ற போல்டரில் இந்த படங்களுக்கான பைல்கள் பதியப்படுகின்றன.

கேள்வி: என் எக்ஸ்பி கம்ப்யூட்டரில் ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்ட் கொடுத்து பயன்படுத்துவது சலிப்பைத் தருகிறது. இந்த முறையை மாற்ற முடியுமா? வழி காட்டவும்.
என். சம்பந்த மூர்த்தி, திண்டுக்கல்.
பதில்
: தாராளமாக, எளிதாக மாற்றலாமே. உங்கள் பாஸ்வேர்டை செயலற்றதாக மாற்றிவிடலாம். ஒரு சிறிய எச்சரிக்கை வேண்டுகோள். உங்கள் பாஸ்வேர்டினை முழுமையாக அழித்துவிடுவது நல்லதல்ல. கம்ப்யூட்டர் பயனாளர் என்ற முறையில், உங்களைச் சார்ந்த தகவல்கள் மற்றும் பைல்கள் பாஸ்வேர்ட் கொடுக்கும் பணியைக் காட்டிலும் முக்கியமானதல்லவா! எனவே, பாஸ்வேர்டினை முழுமையாக நீக்காமல், ஒவ்வொரு முறையும் அதனைத் தந்து, கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதனை மாற்றலாம். பாஸ்வேர்ட் இருப்பதனாலேயே, அதனைத் தந்து தான், உங்கள் பணியைத் தொடங்க வேண்டும் என்பதில்லை. Start அழுத்தி, பின் Run தேர்ந்தெடுங்கள். இதில் கிளிக் செய்தால், கிடைக்கும் நீள விண்டோவில் control userpasswords2 என டைப் செய்திடவும். இதில் இந்த இரண்டு சொற்களுக்கும் இடையே ஒரு ஸ்பேஸ் இருப்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள். பின் ஓகே கிளிக் செய்திடவும்.
இப்போது ஒரு பாக்ஸ் கிடைக்கும். இதில் அந்த கம்ப்யூட்டரில் உள்ள அக்கவுண்ட்ஸ் குறித்த தகவல் தரப்படும். பயனாளர் பட்டியல் இருக்கும். இதில் உங்கள் பெயரைத் தேர்ந்தெடுங்கள். இங்கு Users must enter a user name and password to use this computer என்று இருக்கும் இடத்திற்கு அருகே உள்ள பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடுங்கள். அடுத்து கிடைக்கும் பாக்ஸில் Apply என்பதில் கிளிக் செய்திடுங்கள். அடுத்து கிடைக்கும் பாக்ஸில் உங்கள் பாஸ்வேர்டை டைப் செய்து, உறுதி செய்திடுங்கள். அவ்வளவுதான். இனி, நீங்கள் ஒவ்வொரு முறையும், உங்கள் பாஸ்வேர்டை டைப் செய்து உள்ளே செல்ல வேண்டியதில்லை. இருப்பினும், உங்கள் அக்கவுண்ட்டிற்கான பாதுகாப்பு தொடரும்.

கேள்வி: புதியதாக விண்டோஸ் 8 உள்ள எச்.பி. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வாங்கிப் பயன்படுத்தி வருகிறேன். இதில் ஒரு வெப்சைட் சென்று, அதில் உள்ள remember me என்ற ஆப்ஷனில் கிளிக் செய்த பின்னரும், மீண்டும் அந்த இன்டர்நெட் தளம் செல்கையில், அது என்னை நினைவு படுத்திக் கொள்வதில்லை. அதே போல, save preferences போன்றவற்றை உறுதிப் படுத்தினாலும், அந்த தளங்களில் என் அக்கவுண்ட் விபரங்கள் பதியப்படுவதில்லை. ஒவ்வொரு முறையும் இவற்றைத் தர வேண்டியதுள்ளது. நான் எக்ஸ்பி கம்ப்யூட்டர் பயன்படுத்திய போது, இந்த சிக்கல் ஏற்பட்டதில்லை.
ஆர். பவித்ரா ஸ்ரீதர், கோவை.
பதில்:
உங்கள் பிரவுசர் பாதுகாப்பிற்கான அமைப்புகளில், பாஸ்வேர்ட்களை நினைவுபடுத்திக் கொள்ளும் செட்டிங்ஸ் அமைக்கப்படாத நிலையில் இருக்கலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், கீழ்க்கண்டவாறு செயல்பட்டு செட் செய்திடுங்கள். Start ஸ்கிரீனில் Search Bar சென்று Settings என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு Internet Options என டைப் செய்திடவும். அடுத்து உங்கள் இடது பக்கம் கிடைக்கும் Settings என்பதன் கீழ் Internet Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Internet Properties Window என்ற விண்டோ திறக்கப்படுகையில், அதன் மேலாக உள்ள Content என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இனி, இங்கு Auto Complete Settings என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்துத் திறக்கப்படும் Auto Complete Settings விண்டோவில், உங்கள் பிரவுசர், பாஸ்வேர்ட் உட்பட, எதனை எல்லாம் நினைவில் வைத்து இயங்க வேண்டும் என்பதனை செட் செய்திடவும். இதன் பின்னர், நீங்கள் குறிப்பிட்ட பிரச்னை எழாது.

கேள்வி: என் அலுவலகத்தில் மூன்று கம்ப்யூட்டர்களை வைத்து இயக்குகிறோம். அதில் ஒன்றில், திடீரென ஐகான்கள் அனைத்தும் மறைந்துவிட்டன. இது எந்த பிரச்னையால் ஏற்பட்டது என கண்டறிய முடியவில்லை. எப்படி, இயக்கத் தொடங்கினாலும், அவற்றைக் காண இயலவில்லை. இதனை எப்படி சரி செய்வது?
எஸ். கந்தசாமி, விழுப்புரம்.
பதில்:
மூன்று கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டில் உள்ளன என்று கூறிய நீங்கள், பிரச்னைக்குரிய கம்ப்யூட்டரில் என்ன விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது என்று கூறவில்லையே. சரி, இந்த சின்ன செட்டிங்ஸ் மேற்கொள்ளவும். ஸ்கிரீனில் காலியாக உள்ள இடத்தில், மவுஸ் கொண்டு ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனு பாக்ஸில், வியூ (View) என்பதனைத் தேர்ந்தெடுத்து, Show Icons என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு நீங்கள், காட்டப்படும் ஐகான்கள் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனையும் செட் செய்திடலாம். செட் செய்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடுமாறு, அடிக்கடி படிக்கிறேன். இதில் ரேடியோ பட்டனின் செயல்பாடு என்ன? ஏன் ரேடியோ பட்டன் என்று பெயர் வந்தது. ரேடியோவிற்கும் இதற்கும் என்ன தொடர்பு?
கா. ஜாகிர் உசேன், திருப்பூர்.
பதில்:
நல்ல, அருமையான கேள்வி. இப்படி பல தொழில் நுட்ப சொற்களை, நாம் அவை ஏன், எப்படி அமைந்தன என்று அறியாமலேயே, பயன்படுத்தி வருகிறோம். இவற்றைத் தெரிந்து கொள்வது நல்லதும் கூட. கம்ப்யூட்டரைப் பொறுத்த வரையில், ரேடியோ பட்டன் என்பது, ஒரு அப்ளிகேஷன் புரோகிராம் தரும் இன்டர்பேஸ் கட்டத்தில், சிறப்பான செயல்பாட்டினைத் தேர்ந்தெடுக்க நமக்குக் காட்டப்படும், ஆன் ஸ்கீரின் பட்டனாகும். தேர்வு என்பதால், இவை எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலேயே காட்டப்படும். ஒன்றினைத் தேர்ந்தெடுக்கையில், அது மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும். அதற்கு முன், அந்த தொகுதியில் வேறு ஒரு பட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அந்த தேர்வு நீக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட ரேடியோ பட்டனுக்கு எதிராக என்ன செயல்பாடு தரப்பட்டுள்ளதோ, அதுவே செயல்படுத்தப்படும். சரி, இந்த பட்டனை ஏன் ரேடியோ பட்டன் என்று அழைக்கிறோம். ரேடியோக்களில், ஒலி பரப்பு நிலையங்களைத் தேர்வு செய்திட, அலைவரிசையினைத் தேர்வு செய்திட, இது போன்ற பட்டன்கள் தரப்பட்டன. ஒரு பட்டனைத் தேர்வு செய்து, அதற்கான நிலையத்தின் ஒலி பரப்பினைக் கேட்டுக் கொண்டிருக்கையில், இன்னொரு பட்டனைத் தேர்வு செய்தால், அந்த நிலையத்தில் ஒலி பரப்பு கிடைக்கும். முதலில் அழுத்தப்பட்ட நிலையில் இருக்கும் பட்டன் எழுந்து கொள்ளும். இங்கு கம்ப்யூட்டர் திரையில், பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டனின் நிறம் மாறும்.

கேள்வி: நமக்குக் கிடைக்கும் ஐகான்களின் அளவினை மாற்றி அமைக்க முடியுமா? பொதுவாகக் கிடைக்கும் ஐகானின் அளவு என்ன?
என். சாருலதா, கோவை.
பதில்:
நாம் விரும்பும் வகையில் ஐகான்களின் அளவை மாற்றி அமைக்கலாம். பொதுவாக நாம் பார்க்கும் ஐகான்கள் 32x32 என்ற அளவிலான பிக்ஸெல்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவை 43x43 என்ற பிக்ஸெல் அளவில் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. இந்த அளவுகளை அட்ஜஸ்ட் செய்து அமைக்க வேண்டும் என்றால், விண்டோஸ் டெஸ்க்டாப் சென்று, “Properties | Appearance” டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் “Item” கீழ்விரி மெனுவில், “Icon” என்பதைத் தேர்ந்தெடுத்து ஐகான் அளவை மாற்றலாம். “Icon spacing (horizontal)” / “Icon spacing (vertical)” என்பதைத் தேர்ந்தெடுத்து ஐகான் எடுத்துக் கொள்ளும் இட அளவினை மாற்றலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X