கேள்வி-பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2010
00:00

கேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன். இந்த சிஸ்டம் பூட் ஆகும்போது, பவர் பட்டனை அழுத்தியவுடன், மியூசிக் ஒலி கேட்கிறது. இதனை நிறுத்த முடியாதா?  –கா. முத்துசாமி, மதுரை
பதில்: நிறுத்திவிடலாம். அந்த அருமையான இசை ஒலி உங்களுக்குப் பிடிக்கவில்லையா? ஓகே. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றை நீங்கள் வெளியிட வேண்டாம். இதனை நிறுத்த, Start பட்டன் அழுத்தி, சர்ச் பாக்ஸில் mmsys.cpl   என டைப் செய்திடவும். இனி என்டர் தட்டவும். இப்போது சவுண்ட் டயலாக் விண்டோ கிடைக்கும். இதன் கீழாக ஒரு பாக்ஸ் Play windows Startup sound  என்ற வரியுடன் இருக்கும். இந்த பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். பின்னர் ஓகே அழுத்தி வெளியேறவும். இனி உங்கள் விண்டோஸ் திறக்கும்போது, கம்ப்யூட்டரில் சத்தம் கேட்காது. பின்னொரு நாளில் அந்த மியூசிக் வேண்டும் என நீங்களோ, உங்கள் வீட்டில் உள்ளவர்களோ கேட்டால், மீண்டும் இதே போல் சென்று, பாக்ஸில் டிக் அடையாளத்தினை அமைத்துவிடவும்.

கேள்வி: கூகுள் மெயில் அக்கவுண்ட் வைத்துள்ளேன். மெயிலில் டெக்ஸ்ட்டில் பல பார்மட்டிங் வேலைகளை (அடிக்கோடு, அழுத்த எழுத்து) செய்திட முடிகிறது. ஆனால் கூகுள் டாக்கில் இதே போல் செய்திட முடிவதில்லையே?  இதற்கு என்ன செய்திட வேண்டும்?  -சீ. நரேந்திரன், சென்னை
பதில்: உங்கள் டெக்ஸ்ட்டை போல்ட் செய்திட வேண்டுமென்றால், அந்த சொல்லுக்கு முன்னால் ஆஸ்டெரிஸ்க் என்னும் நட்சத்திரக் குறியீட்டினை அமைக்கவும். எ.கா.  *dinamalar*சாய்வெழுத்து எனில், அண்டர் ஸ்கோர் என்னும் அடிக்கோடு இட வேண்டும். எ.கா.  _dinamalar_ கூகுள் சேட் விண்டோவிலும் இதனை மேற்கொள்ளலாம்.

கேள்வி: பிளாஷ் ட்ரைவ்கள் எத்தனை நாட்களுக்கு வரும்? இதனை நம்பி, பேக் அப் ட்ரைவாகப் பயன்படுத்தலாமா?  -சி. தமிழரசி, மதுரை
பதில்: நல்ல கேள்வி. நாம் எதனை விலை கொடுத்து வாங்கினாலும், பல ஆண்டுகள் அது நன்றாக நமக்குப் பயன்படும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறோம். இந்த நம்பிக்கை பொய்த்துப் போகும்போது, வருத்தப்படுகிறோம். எந்தப் பொருளும் இயங்கா நிலையை நிச்சயம் அடையும். எனவே ஒன்றைப் பற்றி புரிந்து கொண்டு, எச்சரிக்கையுடன் பயன்படுத்துவது நல்லது.  ஒரு பிளாஷ் ட்ரைவ் அழியாத நினைவகமாகும். அதாவது மின் ஓட்டம் செலுத்தாத நிலையிலும், அதில் பதியப்பட்ட டேட்டா அப்படியே இருக்கும். இப்போதெல்லாம் 250 எம்பி என்ற அளவிலிருந்து 80 ஜிபி வரையிலான கொள்ளளவில், பிளாஷ் ட்ரைவ்கள் கிடைக்கின்றன.  பிளாஷ் ட்ரைவ்கள் இயங்காமல் போனால், அதிலுள்ள டேட்டாவினை மீண்டும் பெற முடியும் என்பது நமக்கு நம்பிக்கை தரும் செய்தியாகும். நீங்கள் உங்கள் பிளாஷ் ட்ரைவினை டேட்டாவினை பேக் அப் செய்திட மட்டும் பயன்படுத்தினால், அதனை உலர் சீதோஷ்ண நிலை உள்ள இடத்தில், அதன் மூடியைக் கொண்டு மூடி வைத்துவிடுவதே நல்லது. இந்த வகையில் மூடி உள்ள பிளாஷ் ட்ரைவ் அதிக பாதுகாப்பினைத் தரும். மூடி இல்லாமல், பிளாஷ் ட்ரைவின் தலைப் பகுதியை வெளியே தள்ளி, உள்ளே இழுத்துப் பயன்படுத்தும் பிளாஷ் ட்ரைவ்களும் உள்ளன. இவற்றில் தூசு, நீர் புகும் வாய்ப்புகள் இருப்பதால், பேக் அப் பயன்பாட்டிற்கு மூடி உள்ள பிளாஷ் ட்ரைவினையெ பயன்படுத்துவது நல்லது. குடும்ப போட்டோக்கள் போன்ற, மீண்டும் அமைக்க முடியாத டேட்டாக்களுக்கான பேக் அப் அமைப்பதாக இருந்தால், வெவ்வேறு ட்ரைவ்களில் வைத்துக் கொள்வது நல்லது.

கேள்வி: கீ போர்டைப் பயன்படுத்தி, மவுஸ் பாய்ண்ட்டரைக் கண்ட்ரோல் செய்வது எப்படி என விளக்கவும். –நா.கதிரேசன், விழுப்புரம்
பதில்:இடது புறம் உள்ள ஷிப்ட்+ஆல்ட்+நம்லாக் கீகளை முதலில் அழுத்தவும். இப்போது மவுஸ் கீஸ் என்ற விண்டோ கிடைக்கும். இதில் யெஸ் என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இதை அழுத்தியவுடன், மவுஸ் கீகள் இயங்கத் தொடங்கிவிடும்.   இப்போது  கீ8 அழுத்தினால் கர்சர் மேலே செல்லும்.  கீ2 அழுத்தினால், கீழே செல்லும். 6 அழுத்தினால் வலது புறமும், 4 அழுத்தினால் இடது புறமும் செல்லும். எதன் மீதாவது கர்சரை வைத்து கிளிக் செய்திட வேண்டும் என்றால்,  கீ 5 அழுத்தவும். டபுள் கிளிக் செய்திட + கீ அழுத்தவும். ரைட் கிளிக் செய்திட – கீ (மைனஸ்)  அழுத்தவும். எதனையாவது இழுக்க வேண்டும் என்றால், அந்த ஆப்ஜெக்ட் அல்லது ஐடெம் மீது கர்சரைக் கொண்டு சென்று என்டர் கீ அழுத்தவும். பின் அதனை விட்டுவிட டெலீட்  கீ அழுத்தவும்.   மீண்டும் மவுஸ் கீகள் இயக்கத்தினை நிறுத்த, இடது ஷிப்ட்+ஆல்ட்+நம் லாக் கீகளை அழுத்தவும்.

கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பை பிரவுசராகப் பயன்படுத்துகிறேன். இரவில் இதனை மூடிவிட்டுப் பின் பகலில் திறக்கும்போது, நான் இறுதியாகப் பார்த்த வெப்சைட்கள் அந்த அந்த டேப்களில் கிடைக்குமா? இதனை எப்படி செட் செய்திட வேண்டும்? -கா. பாக்யராஜ், கோவை
பதில்: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோவினைத் திறந்து கொள்ளவும். விண்டோவின் மேல் வலது புறத்தில் உள்ள டூல்ஸ் மீது கிளிக் செய்திடவும். அங்கு Reopen Last Browsing Session என்று இருப்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.  நீங்கள் பார்த்துக் கொண்டிருந்த டேப்களுடன், பிரவுசர் திறக்கப்படும்.

கேள்வி: ஆன்லைனில் ஆங்கிலம் தமிழ் அகராதி உள்ளதா? குழப்பம் இன்றி பொருள் தருமா?  –எ.மோனிகா ரமேஷ், திருமயம்
பதில்: குழப்பம் என எதனை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை தமிழ் எழுத்துவகையில் ஏற்படும் குழப்பத்தினை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று எண்ணுகிறேன். இப்போதெல்லாம், இத்தகைய நூல்கள் அனைத்தும் யூனிகோட் தமிழில் கிடைப்பதால், உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி அல்லது அதற்குப் பின் வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருந்தால், குழப்பம் எதுவும் இருக்காது. கீழே சில தள முகவரிகள் தருகிறேன். முயற்சிக்கவும்.
1.http://www.thozhiln  utpam.com/chollagaraathi .htm  
2. http://www.tamilvu.org/
   l ibrary/o33/htm l/o 3300001.htm
3. http://www.tcwords.com
4. http://www.tamildict.com/deutsch.
 php? menu=new&action=new
5. http://ta.wiktionary.org/wiki/ /

மேற்கண்டவற்றுள் எது உங்களுக்கு இலகுவாகவும் நீங்கள் விரும்பும் வகையிலும் உள்ளதோ, அதனையே பின்பற்றலாம்.
கீழ்க்காணும் தளத்தில், மொபைல் போனுக்கான ஆங்கிலம் தமிழ் அகராதி ஒன்று வெளியாக இருப்பதாக, விளம்பரம் தரப்பட்டுள்ளது.  இது வெளிவரும் பட்சத்தில், மொபைல் போனிலேயே அகராதியினை வைத்துக் கொள்ளலாம்.http://www.tamilcube. com/dictionary/mobile

கேள்வி: வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட் அமைக்கையில், பக்க இடைவெளியில் சில பாரக்கள் பிரித்துக் காட்டப்படுகின்றன. இவற்றைச் சேர்ந்தவாறே அமைக்க முடியுமா? என்ன செட் செய்திட வேண்டும்? –எஸ். பாஸ்கரன்,  காரைக்கால்
பதில்: நீங்கள் டைப் செய்து டாகுமெண்ட் அமைத்தவுடன் பக்க குறுக்குக் கோடு பாராக்களைப் பிரித்திருந்தால் அந்த பாராக்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அல்லது அனைத்து பாராக்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பின் இதில் மவுஸை வைத்து வலது பக்கம் கிளிக் செய்திடவும். விரியும் மெனுவில் “Paragraph”   என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது பல டேப்கள் அடங்கிய விண்டோ ஒன்று திறக்கப்படும். இதில் “Line and Page Breaks”என்ற டேபைக் கிளிக் செய்திட வும். கிடைக்கும் பிரிவில்“Keep lines together” என்ற இடத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து விண்டோவினை மூடவும். இனி பாராக்கள் நீங்கள் கேட்ட படி ஒரே பக்கத்தில் அமையும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜா - auh,இந்தியா
06-செப்-201002:29:21 IST Report Abuse
ராஜா சார்,கம்ப்யூட்டர் இல் டெலிட் பகுதி உண்டு. அதில் நாம் அதிகம் டெலிட் செய்வது உண்டு. அந்த குப்பைகள் எங்கு சென்று அடைகின்றன இது computerku பதிப்பு உண்டோ ?
Rate this:
Share this comment
Cancel
murugan - chennai,இந்தியா
04-செப்-201018:58:12 IST Report Abuse
murugan எனக்கு இன்டர்நெட்டில் பார்த்த பைல்களை அழிக்க உதவனும் பெர்மனென்ட் ஆக
Rate this:
Share this comment
Cancel
இ.முஹமது ஹனிபா - சவுதிஅரேபியாTamilnadu,இந்தியா
04-செப்-201018:09:29 IST Report Abuse
இ.முஹமது ஹனிபா அடோபே போடோஷப்(adobe photoshop)உபயோகிப்பது பற்றி தமிழில் வாரத்தொடர் போல் கம்பியூட்டர் மலரில் கொடுத்தால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X