குடும்ப பாரம் தலையை அழுத்துகிறதா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2013
00:00

ஞானம், அஞ்ஞானம் என்று இரண்டு வகைகள் உள்ளன. ஞானம் முதிர்ந்த நிலையில் உள்ளவர் ஞானி; அது இல்லாதவர் அஞ்ஞானி. சரி, ஞானி எப்படிப்பட்ட குணமுள்ளவர்? எதிலும் பற்றுதலின்றி சுக, துக்கங்களை சமமாக பாவித்து, தியானம் ஒன்றையே நினைத்து கொண்டிருப்பவரை ஞானி என்பர்.
எப்போதும் மாறுபாடற்ற நிலையிலுள்ள ஞானிக்கு இருளுமில்லை; ஒளியுமில்லை. லாப, நஷ்டமும் இல்லை. பிரம்மானந்த நிலையிலேயே மூழ்கி இருப்பர். இவர்களுக்கு பயம் என்பது எந்த நேரத்திலும் இல்லை. சொர்க்கம், நரகம் என்பதும் இவர்கள் எண்ணத்தில் வருவதில்லை.
மனம் போன போக்கில் போய் கொண்டே இருப்பர். அஸ்தமனம் ஆனதும் எந்த இடத்தில் இருக்கின்றனரோ, அங்கேயே கிடைத்ததை புசித்துவிட்டு, படுத்து விடுவர். எது எப்படியிருந்தாலும் அவர்களுக்கு ஆனந்தம் தான்! சந்தேகம், மன உளைச்சல், மன மாற்றம் எதுவுமின்றி நிம்மதியாக இருப்பர்.
உலகிலுள்ள பொருட்களை மதிக்க மாட்டார்கள். விருப்பு, வெறுப்பற்ற ஞானிக்கு எல்லாமே இன்பமயம்தான். நேர்மை, சத்தியம், அன்பு உள்ள ஞானிக்கு வேண்டுவது, வேண்டாதது என்று எதுவும் இல்லை; எல்லாம் ஒன்றுதான். இப்படிப்பட்ட ஞானிக்கு உதாரணமாக ஜடபரதரைச் சொல்வர். மெய்ஞானம் அடைந்த யோகியிடம், அஞ்ஞானம் வராது. திருப்தி நிறைந்தவனாக, ஆத்மாவிலேயே இளைப்பாறிக் கொண்டிருப்பான் ஞானி. தூங்கியும் தூங்காதவன். விழித்திருந்தாலும் விழித்திராதவன், கனவிலும் படுக்காதவன், எல்லா நிலைகளிலும் திருப்தியுள்ளவன் ஞானி. எல்லா விதத்திலும் விடுபட்டு ஆத்ம சுகத்திலேயே ஆனந்தப் பட்டுக் கொண்டிருப்பான்.
சரீர சுகம் என்பதை பற்றி சிந்திக்க மாட்டான். தன்னைப் புகழ்ந்து பேசுபவர்களை பாராட்ட மாட்டான். நிந்திப்பவர்களிடம் கோபப்பட மாட்டான். கடமைகளும், இரட்டை எண்ணங்களும், கற்பனைகளும் ஒழிந்து போன நிலையே, ஜீவன் முக்தியடைந்த நிலை.
உலக சுகங்களுக்காக அலைபவன் ஆத்ம சுகம் பெற முடியாது. ஞானி எங்கே இருந்தாலும் எப்படி இருந்தாலும், ஆத்ம சொரூபத்திலேயே ஆழ்ந்து, அமைதியும், ஆனந்தமும் பெறுகிறான். அது சரி... எத்தனை பேர் இப்படி ஞானியாக இருக்க முடியும்? குடும்ப பாரம் தலையை அழுத்துகிறதே என்கிறீர்களா? விடுபடத்தான் வேண்டும்!
***

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!
"மந்திரமாவது நீறு...' என்று ஞானசம்பந்தர் பாடியுள்ளாரே... அதற்குத் தாங்கள் தரும் விளக்கம்...
திருநீற்றின் பெருமையை அப்படி அவர் அடுக்குகிறார். அது பக்குவமற்றவர்களுக்கு மட்டுமே எழுதப்பட்ட பாட்டு. "ஆண்டவனுடைய மூல மந்திரமே அதுதான்' என்பது கருத்து.
***

வைரம் ராஜகோபால்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalakkal Mano - Chennai,இந்தியா
03-ஜூன்-201316:50:45 IST Report Abuse
Kalakkal Mano குடும்ப பாரத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் என்னென்ன?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X