இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2013
00:00

நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள்!
கடந்த வாரம் நானும், என் தோழியும் அலுவலக தோழி ஒருவரின் விசேஷத்திற்காக சென்னையிலிருந்து, மதுரைக்கு அரசு விரைவுப்பேருந்தில் பயணித்தோம். பேருந்து செங்கல்பட்டை தாண்டியதும், பஸ்சிலிருந்த விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டன.
எங்கள் முன் அமர்ந்திருந்த ஜோடி ஒன்று, பேருந்து என்றும் பாராமல் சில்மிஷங்களை அரங்கேற்றம் செய்தனர். எங்களுக்கோ, அவர்களின் செயல் அதிர்ச்சியையும், வேதனையையும் தந்தது. தோழியோ, "இவர்களின் அநாகரிக செயலை, எப்படியாவது தடுக்க வேண்டுமே...' என்றாள்.
டீ மற்றும் டிபன் சாப்பிடுவதற்காக, ஒரு ஊரில் பஸ்சை நிறுத்தினர். அவர்களும் இறங்கினர். தோழி, பேப்பர் ஒன்றை எடுத்தாள், அதில், "உங்கள் அந்தரங்க விஷயங்களை அரங்கேற்ற, இது ஒன்றும் உங்கள் வீட்டு படுக்கை அறை அல்ல... பஸ். எனவே, நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள்...' என எழுதி, அவர்கள் பார்வை பதியும் இடத்தில் பேப்பரை வைத்து விட்டாள். இருக்கைக்கு திரும்பிய அவர்கள், கடிதத்தை படித்தனர். இருவரின் முகமும் மாறியதோடு, அவமானத்தால் கூனிக் குறுகினர்.
அதன் பின், எந்த வித சில்மிஷமின்றி பயணத்தை தொடர்ந்தனர்.
தோழியின் சமயோசித ஐடியாவுக்கு சபாஷ் சொன்னேன். பொது இடங்களில், அத்து மீறி செயல்படுபவர்கள், இனியாவது திருந்துவரா!
— ஆர்.சாந்தி பகவதி, சென்னை.

மாப்பிள்ளையே பிரச்னை என்றால்...
திருமண விழா ஒன்றில், நண்பர் ஒருவரை சந்தித்தேன். தன் மூன்றாவது மகளுக்கு வரன் தேடுவதாக கூறினார். தன் குடும்பம் மிகப் பெரியது என்றும், உறவு முறை நீண்டு கொண்டே செல்கிறது. மேலும், சண்டை சச்சரவுக்கும் பஞ்சமே இல்லை. ஆதலால், மூன்றாவது மகளுக்கு சின்ன குடும்பம், ஒரே பையன் மட்டும் இருந்தால் உத்தமம் என கூற, நானும் வரன் தேடினேன். என்னுடைய தகவல் மூலம், ஒரு பையன் உள்ள வரன் அமைந்து, திருமணமும் நடந்தது.
இப்போது நண்பர் மிகவும் துயரத்தில் இருக்கிறார். காரணம், ஒரே மகன் என்பதால், அதிக பாசம் வைத்து மகனை வளர்த்துள்ளனர். பெற்றோரால் மகனையும், மகனால் பெற்றோரையும் பிரிய முடியவில்லை. இதனால், புதுமணத் தம்பதிகள் விருந்துக்கு சென்றால் கூட, பெற்றோருடன் செல்ல வேண்டிய நிலை. மகன், தன் மனைவியோடு ரொம்ப நேரம் தனிமையில் பேச வாய்ப்பு இல்லை. எப்போதும் மகனோடு, தாய், தந்தை இருப்பதால், நண்பர் மகளால், தன் கணவருடன் இன்பமாக இருக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. மாப்பிள்ளையோ, ஒரு தனிமை விரும்பி. விடுமுறை நாளில் தனி அறையில் படுத்து தூங்கி விடுகிறார். ஆதலால், நண்பரின் மகள் திருமண வாழ்க்கை, சந்தோஷமாக இல்லை என்பதை, சமீபத்தில் தெரிந்து, நானும் வருந்தினேன். திருமண வாழ்க்கையில் மாமியார், நாத்தனார் பிரச்னை என்றால், தீர்த்து வைக்கலாம். இங்கு மாப்பிள்ளையே பிரச்னை என்பதால், என்ன செய்வது, எப்படி தீர்ப்பது என்று புரியவில்லை.
சின்ன குடும்பம் தேவை, நாத்தனார் இருக்க கூடாது, மாமியார் இல்லாத வீடு போன்ற கட்டுப்பாடு போட்டு, வரன் தேடும் பெற்றோருக்கு, இந்த கடிதம், ஒரு படிப்பினையாக இருக்கட்டும். பிரச்னை இல்லாத இடம் என நம்பி, நாமே பிரச்னையில் மாட்டிக் கொள்ளக் கூடாது. பிரச்னையை தீர்க்கக் கூடிய குடும்பமாக தேர்ந்தெடுங்கள்.
— எம்.எஸ்.வி.அருண், புளியங்குடி.

நோயாளி ஆக்காதீர்!
சில தனியார் ஆரம்ப பள்ளிகளில், குழந்தைகளை பள்ளி நேரங்களில் நீர் அருந்த அனுமதிப்பதில்லை. ஏனெனில், குழந்தைகள் வகுப்பறையை அசுத்தப்படுத்தும் என்றும், நீர் அருந்தும் நேரம் வீணாகும் என்பதற்காகவும், தண்ணீர் குடிக்க அனுமதிப்பதில்லை. இது சரியா? தேவையான நீர் அருந்தாமல் இருந்தால், குழந்தைகளின் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். சிறு குழந்தையிலிருந்தே தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது அவசியம். தங்களுக்கு சவுகரியம் என்பதற்காக, குழந்தைகளின் உடல் நலனோடு விளையாடலாமா? யோசித்து செயல்படுங்கள் பள்ளி நிறுவனங்களே!
— க.புஷ்பலதா, திண்டுக்கல்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (36)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mintushri - charlotte u s a  ( Posted via: Dinamalar Android App )
08-ஜூன்-201306:56:43 IST Report Abuse
mintushri அப்பப்பா இந்த மஙகை பண்ற அலம்பல் தாங்கல டா சாமி ஒரு பொண்ணுக்கு இவ்வளொ வாய் sure she is doing all this for publicity only ma stupid girl
Rate this:
Share this comment
Cancel
tamil - Bangalore,இந்தியா
06-ஜூன்-201321:38:41 IST Report Abuse
tamil இத்தாலி கலாச்சாரம் தெரிந்த ராமன் சார் அவர்களுக்கு தமிழ் நாடு கலாச்சாரம் தெரியவில்லை போலும்
Rate this:
Share this comment
Cancel
anandhaprasadh - Bangalore,இந்தியா
04-ஜூன்-201314:39:44 IST Report Abuse
anandhaprasadh இந்த செய்திக்கு மட்டுமல்ல.. பல செய்திகளுக்கும் ராமன் & மங்கை கருத்துக்களைப் பார்த்து வருகிறேன்... சற்று மனநிலை பாதிக்கப் பட்டவர்கள் போல்தான் பேசுகிறார்கள்... எனவே இவர்களைப் பொருட்படுத்தவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்... நம்முடைய நேரமாவது மிச்சமாகும்...
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_taboola.asp, line 340