குழந்தையும் தெய்வமும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2013
00:00

ஜூன் 3 தத்தாத்ரேய ஜெயந்தி

குழந்தைகளை தெய்வத்துக்கு நிகராக ஒப்பிடுவர். ஏன் தெரியுமா? குழந்தையின் மனதில் எதுவும் நிற்பதில்லை. ஒருநேரம் நினைப்பதை அடுத்த நேரம் மறந்து விடும். தாய் அடித்தாலும், அந்த நேரத்துக்கு அழுதுவிட்டு, மீண்டும் தாயிடமே ஒட்டிக் கொள்ளும். இப்படிப்பட்ட இனிய குணம் கொண்டவர்கள் குழந்தைகள். இத்தகைய குணம் வளர்ந்த மனிதர்களிடமும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, கடவுளே ஒருமுறை பூமிக்கு குழந்தையாக வந்தார்.
அத்திரி மகரிஷி- அனுசூயா தம்பதிகள் காட்டில் குடில் அமைத்து வசித்தனர். அவர்களுக்கு மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் குழந்தைகளாகப் பிறக்க வேண்டும் என்பது ஆசை. இதற்காக கடுமையாகப் பிரார்த்தித்து வந்தனர்.
கடவுளே குழந்தையாகப் பிறப்பதென்றால் சாமான்யமா? அதிலும் மும்மூர்த்திகளும் ஒன்றுசேர்ந்து வந்தாக வேண்டுமே! மூவரும், அவர்களது பக்தியைச் சோதிக்க முடிவெடுத்தனர். துறவிகள் போல் வடிவெடுத்து, அத்திரியின் குடில் முன் வந்தனர். அத்திரி அப்போது வீட்டில் இல்லை. அவர் மனைவி அனுசூயா தர்மபத்தினி. கணவருக்கு தினமும் பாதபூஜை செய்து, அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்த பின்பே பணிகளைத் துவங்குவாள். அந்த தீர்த்தம் எப்போதும் வீட்டில் இருக்கும்.
அனுசூயா வந்தவர்களை வரவேற்றாள்.
துறவிகள் தங்களுக்கு பசிப்பதாகக் கூறினர். உள்ளே உணவெடுக்கச் சென்ற அனுசூயாவிடம், "தாயே... எங்களிடம் ஒரு பழக்கம் உள்ளது. எங்களுக்கு யார் உணவிட்டாலும், திகம்பர (நிர்வாணம்) நிலையிலேயே வாங்குவது வழக்கம். அப்படி செய்தால் மட்டுமே உணவு பெறுவோம்...' என்றனர்.
அனுசூயா நல்லறிவு மிக்கவள். சாதாரண மனிதர்கள் இப்படி கேட்க மாட்டார்கள். இது ஏதோ தெய்வ சங்கல்பம் என நினைத்தவள், சற்றும் பதட்டமின்றி, "அதற்கென்ன... அவ்வாறே உங்கள் பசியை தீர்த்து விடுகிறேன்...' என்றவள் வீட்டுக்குள் சென்றாள். கணவரின் பாத தீர்த்தத்தை எடுத்து வந்து,"இறைவா... நான் என் கணவர் மீதும், உன் மீதும் கொண்ட பக்தி <<உண்மையென்றால், இந்த துறவிகளை குழந்தைகளாக மாற்று...' என்று கூறி அவர்கள் மேல் தெளித்தாள்.
அந்த பத்தினி தெய்வத்தின் பக்தியால், மூவரும் குழந்தைகளாகி விட்டனர். அவர்கள் விரும்பியபடியே அவர்களுக்கு பாலூட்டி, பசி தீர்த்தாள். அத்திரி முனிவரும் வந்தார். நடந்ததைக் கேட்டார். தன் ஞான திருஷ்டியால், வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகள் என்பதைப் புரிந்து கொண்டார். அவர்களை அன்புடன் அணைத்தார். அந்த குழந்தைகள் மூன்று தலையும், ஓருடலும் கொண்டதாக மாறின.
இந்த தகவல் நாரதர் மூலம், மூன்று தேவியருக்கும் தெரிய வரவே, அவர்கள் அனுசூயையிடம் வந்து, தங்கள் கணவன்மாரை திருப்பித்தர வேண்டினர்.
"தேவியரே... இந்தக் குழந்தை எங்களிடமே வளர வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அதை நிறைவேற்றி வைத்தால் உங்கள் கணவன்மாரைத் திருப்பித் தருவேன்...' என்றாள். மூன்று தேவியரும் அதற்கு ஒத்துக் கொள்ளவே, அனுசூயை மும்மூர்த்திகளை மானசீகமாக வேண்டினாள். அப்போது மூன்று தெய்வங்களும் காட்சியளித்து, "தங்கள் சக்தியாகிய அக்குழந்தை ஒரு முனிவராக விளங்குவான்...' என்று கூறி ஆசியளித்து, குழந்தைக்கு, "தத்தாத்ரேயன்' என்று பெயர் சூட்டினர். "தத்தாத்ரேயன்' என்றால், மும்மூர்த்திகளுக்கு சமமானவர் என்று பொருள்.
ரிஷிகேஷில் உள்ள சிவானந்த ஆஸ்ரமத்தில், தத்தாத்ரேயருக்கு கோவில் உள்ளது. அவரது ஜெயந்தியன்று தியானம் செய்து, அவர் எழுதிய அவதூத கீதையைப் படிக்க வேண்டும். இந்நாள் முதல், தினமும் குழந்தைகளுக்கு பக்திக்கதைகளைச் சொல்லி அவர்களை நல்வழியில் திருப்ப வேண்டும்.
***

தி. செல்லப்பா

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ksv - chennai,இந்தியா
05-ஜூன்-201317:13:22 IST Report Abuse
ksv நல்லதொரு தெய்வீக விசயம் நன்றி
Rate this:
Share this comment
Cancel
AbdulRazeedSamanthar - coimbatore,இந்தியா
04-ஜூன்-201321:02:52 IST Report Abuse
AbdulRazeedSamanthar நன்று
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
03-ஜூன்-201303:04:46 IST Report Abuse
GOWSALYA மிக்க நன்றி சகோதரரே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X