அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2013
00:00

வாசகி ஒருவரின் மனம் நொந்த கடிதம் இதோ: அழகை மட்டுமே ஆராதிக்கும், இன்றைய ஆண்களின் மனநிலையை, என்னுடைய கசப்பான அனுபவத்தின் மூலம் தங்களுக்கு எழுதுகிறேன்.
அரசுப் பள்ளியில், ஆசிரியையாகப் பணியாற்றும், 29 வயது மணமாகாத பெண். அன்பான, அடக்கமான, பெண் என்றும், கறுப்பு நிறத்திலும், களையாக இருப்பதாகவும் மற்றவர்கள் என்னை கூறுவதுண்டு.
கடந்த சில வருடங்களுக்கு முன், ஒரு விபத்தில் என் கையில் ஒரு தையல் தழும்பு ஏற்பட்டு விட்டது. இதுதான் என்னுடைய மைனஸ் பாயின்ட். நான் இதை ஒரு பொருட்டாகவே இதுவரை நினைத்ததில்லை.
தந்தையில்லாத காரணத்தால், எனக்கு நானே, வரன் தேட வேண்டிய துர்பாக்கிய நிலை. வந்த ஒன்றிரண்டு வரன்களும், என்னுடைய பணத்தையே குறியாக வைத்து பேசியதால், எனக்கு அவர்களைப் பிடிக்கவில்லை. என் பணத்தைவிட என்னை உண்மையாய் நேசிக்கக் கூடியவரை மனம் தேடியது.
டிப்ளமோ முடித்த, தாரமிழந்த, இன்ஜினியர் ஒருவரின் ஜாதகம் வந்தது. 32 வயது. பெண் பார்க்க வரச் சொன்னேன். பெண் பார்க்க வந்த அன்று தான், அவனுக்கு மூன்று குழந்தைகள் என்ற விவரம் தெரிந்தது.
"எனக்கு வேலைக்கு போகும் பெண் கூட தேவையில்லை. பெண் விருப்பப்பட்டால் வேலைக்கு போகட்டும். திருமணத்திற்கு பிறகு இவ்வாறு நேர்ந்தால் (தழும்பினை) என்ன செய்யப் போகிறோம்...' என்றான்.
அவன் சொன்ன வார்த்தைகள் எனக்குப் பிடித்திருந்தது. அவன் ஒரு அன்பான மனிதனாக இருப்பான் என்று நான் முடிவு செய்தேன். இருவரிடமும் பொருளாதார நிறை இருக்கும்போது மூன்று குழந்தைகள், எனக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை.
ஆனால், என் குடும்பத்தினர், யாருக்குமே இந்த இடம் பிடிக்கவில்லை. "ஏன் சுமையை உன் தலையில் நீயே போட்டுக் கொள்கிறாய்?' என்றனர். "அன்பான மனிதன் இந்த உலகத்தில் கிடைப்பது அரிது. ஆகவே, இவரையே எனக்கு திருமணம் செய்யுங்கள்...' என்று, என் குடும்பத்தினரை வற்புறுத்தி, சம்மதம் பெற்றேன்.
அதன் பிறகு நாங்கள் இருவரும் தொலைபேசி மூலம் அன்பை வளர்த்துக் கொண்டோம். திருமண நாளை நிச்சயம் செய்யக் கூடிய நிலை. என்னை தனியே சந்தித்து, "நிறைய பேச வேண்டும்!' என்றான்.
எங்கள் ஊரின் பிரசித்தி பெற்ற கோவிலை, நாங்கள் சந்திக்கும் இடமாக தேர்ந்தெடுத்தேன். நேரில் சந்தித்த அவன், அதன் பிறகு அடித்த டயலாக் தான் இந்த கடிதத்தின், "ஹைலைட்' விஷயம்.
"உன்னை என் குடும்பத்தினர் யாருக்கும் பிடிக்கவில்லை. மேலும், உன் கையில் உள்ள இந்த தழும்பால் உன்னை, நான் என்னோடு வெளியில் எங்கும் அழைத்துச் செல்லக்கூட முடியாது. வண்டியில் உட்கார வைத்து அழைத்துச் செல்லவும் முடியாது. உன்னை நான் திருமணம் செய்து கொண்டால் என்னை எல்லாரும் மட்டமாக நினைத்து விடுவர். உன்னோட நிறைய பழகிவிட்டு, உன் மனதிலும் ஆசைகளை வளர்த்து விட்டேன்.
"தற்போது எனக்கு வேறொரு பெண்ணை நிச்சயம் செய்து விட்டனர். ஆகவே, ஒரு கோவிலில் ரகசியமாக தாலி கட்டி, 15 கிலோ மீட்டருக்கு அப்பால், உன்னை வைத்துக் கொள்கிறேன். ஈவ்னிங் டைம்மில் (ரகசியமாக) உன்னை வந்து பார்த்து செல்கிறேன் அல்லது உன் ஊரிலேயே இரு... அவ்வப்போது வந்து பார்த்து செல்கிறேன்...' என்றானே பார்க்கலாம்.
என் இதயத்தில் ஈட்டி செருகிய உணர்வு. இத்தனைக்கும், அவன் ஒன்றும் ஷாருக்கானோ, கமலோ அல்ல. வடிவேலு ரேஞ்சுக்கு கூட, தேற மாட்டான். 35-40 கிலோவுக்குள், ஐந்தடியில் ஒரு நோஞ்சான் உடம்பு. வெயிலில் நின்று, நின்று கறுத்துப் போனகளை இழந்த முகம், தண்ணி அடித்து... அடித்து... சிவந்து போன விழிகள்.
செயின் ஸ்மோக்கிங்கால்... இந்த வயதிலேயே நிக்கோடின் கறை பிடித்த உதடுகள், காவி நிற பற்கள். தலையில் ஆங்காங்கே வெள்ளை முடிகள். பென்சிலால் கோடு வரைந்தது போன்ற மெல்லிய மீசை.
இப்பேர்பட்ட அழகனை திருமணம் செய்து கொள்ள நான்தான் நிறைய யோசனை செய்திருக்க வேண்டும். நான், அவன் சொன்ன வார்த்தைகளை நம்பி, அவன் மனதை மட்டுமே நேசித்தேன். உண்மை அன்பை மட்டுமே தேடினேன். "அன்பை, அன்பை' மட்டுமே யாசித்தேன்.
அவனுக்கு மூன்று குழந்தைகள் இருந்ததால், "நான் குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன்...' என்றுகூட அவனிடம் கூறியிருந்தேன். (எல்லாம் அவனுடைய அன்பிற்காகத்தான்.)
ஒரு பெண்ணுக்கு, சமூகத்தில் கிடைக்கக்கூடிய விலை மதிப்பற்ற பதவி, மனைவி என்ற உயர்ந்த அந்தஸ்துதான். அதையே அவன் (மூன்று இஞ்ச் நீளத் தழும்பிற்காக) எனக்கு தர முன் வராதபோது, எனக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது.
நாக்கை பிடுங்கிக் கொள்ளக் கூடிய இரண்டு கேள்விகளை, எனக்கு தகுதியில்லாத அவனிடம் கேட்டு, விலகி விட்டேன். அவனைவிட அழகு, படிப்பு, செல்வம் அனைத்திலும் 50 சதவீதம் உயர்வான எனக்கே இந்த அவமானம் என்றால்... மற்ற பெண்களின் நிலை?
பாருங்கள், அண்ணா... அழகை மட்டுமே ஆராதிக்கும் இன்றைய ஆண்களின் மனநிலையை. சனியன் என்னை விட்டு ஒழிந்ததே என்றெண்ணி, கடந்த ஒரு மாத காலமாக மனதை ஒருவாறு தேற்றிக் கொண்டு, தற்போது சிறிது, சிறிதாக நிம்மதியை பெற முயன்று வருகிறேன்.
இப்படி முடித்துள்ளார் கடிதத்தை...
அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் பெண்களுக்கு, ஆண்கள் எவ்வளவு சோதனை கொடுக்கின்றனர் பாருங்களேன்!

***

மாலை 7: 00 மணி இருக்கும்!
ஆபரேட்டர் லைனில் வந்தார். "ஏம்ப்பா... உன்னை விசாரிச்சு ஒரு பொண்ணு போன் பண்ணுது; லைனை துரூ பண்ணவா?' எனக் கேட்டார்!
டீ வாங்க பிளாஸ்கை எடுத்து கிளம்பிய நேரம். பேச ஆரம்பித்தால் எப்படியும் 10 நிமிடம் போய் விடும்; பாட்டு வாங்க வேண்டியது இருக்கும். பரவாயில்லை... வாசகர்கள் தானே முக்கியம்! "லைன் குடுங்க...' என்றேன்.
"சார்... நீங்க அந்துமணி தானே... உங்களை பஸ்சுல பார்த்தேன்...' எனக்கூறி, எந்த தேதியில் பார்த்தார் என்று சொல்லி, "ஒரு நிமிஷம் இருங்க... என் டைரியப் பாத்து தேதி கரெக்ட்டான்னு பார்க்கறேன்!' என்றார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, "கரெக்ட் சார்... அதே தேதிதான்! நீங்க டிரைவரோட பேசிக்கிட்டே வந்தீங்க... புக்கில வரும் அதே மூக்கு, அதே காது, அதே சுருள் முடி... கொஞ்ச நேரத்தில் இறங்கிட்டீங்க! வீட்டுக்குப் போனதும், என் தங்கச்சிக்கிட்ட, "அந்துமணியை பாத்தேன்...'ன்னு சொல்லி துள்ளிக் குதிச்சேன்... அது நீங்கதானே சார்?' எனக் கேட்டார்.
"இல்லை...' என்பதை காரண, காரியங்களுடன் விவரித்தேன். பின்னர், என் எழுத்தில் மெச்சூரிட்டி இல்லை, லென்ஸ் மாமாவை எப்போதும் தாக்கி எழுதுகிறேன். தற்பெருமை ஜாஸ்தி என்றெல்லாம் குற்றப்பத்திரிகை வாசித்துக் கொண்டே இருந்தார்.
நேரம் ஓடிக் கொண்டே இருந்ததால், சக ஆபிஸ் பையனை டீ வாங்க அனுப்பிவிட்டு, பேசி முடித்து வெளியே வந்தபோது, ஆபிஸ் கேட் ஓரமாக நின்று, வெற்றிலை புகையிலை குதப்பலைத் துப்பிக் கொண்டிருந்த குப்பண்ணா கண்ணில் பட்டார்.
ரொம்ப, "ரிலாக்ஸ்டு' மூடில் இருந்தவரை அழைத்து, அமர வைத்தேன்.
அவரிடம் சந்தேகம் கேட்டு ரொம்ப நாளாகி விட்டதே என்று, "செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்று வள்ளுவன் சொன்னானே... என்ன அர்த்தத்தில்...' என்று கேட்டேன்.
"எண்ணிக் கொள்...' என்று ஆரம்பித்து விட்டார் குப்பண்ணா:
* ஐம்பொறிகளிலும் காதைத் தவிர மற்ற நான்கும், அதனதன் வேலைகளை அதிகமாகச் செய்தால் சோர்வடைந்து விடுகிறது. காதுக்கு மட்டும் அந்த சோர்வே கிடையாது.
* ஒன்பது வகை பக்திகளில் முதலில் நிற்பது சிரவணம். இறைவன் புகழைச் செவியால் பருகுவதே பக்தியின் முதல் நிலை.
* செவியால் அழகுபெறும் சில விலங்குகள் முயல், கங்காரு, "நெடுஞ் செவிக் குறுமுயல்' என்று பெரும் பாணாற்றுப் படையில் வருகிறது.
* காது ஓங்கார வடிவமுள்ளது என்றும், அதன் நிறத்தைக் கொண்டு பிற்காலத்தில் குழந்தையின் நிறத்தை உறுதி செய்யலாம் என்றும் என் பாட்டி சொல்லியிருக்கிறாள்.
* "காதளவோடிய கண்கள்' என்று பெண்களின் கண் அழகை காதோடு சம்பந்தப்படுத்தி பாடுகிறான் கவிஞன்.
* வேதத்திற்கு, "சுருதி' என்று பெயர். பரம்பரையாகக் காதால் கேட்கப்பட்டு வந்ததால் இப்பெயர் ஏற்பட்டது.
*காதுகளில் அணிந்த குண்டலங்களை தானமாக வழங்கிய புகழ் கர்ணனுக்கே உரியது. கர்ணத் தால் புகழ் பெற்றதால்தான் அவனுக்கு கர்ணன் என்று பெயர் வந்ததோ, என்னவோ!
* காதில்லாப் பை, காதறுந்த ஊசி, காதில்லா ஜாடி, செவிவழிச் செய்தி, கர்ண பரம்பரை கதை, இந்த சொல்வழக்கு எல்லாம் காதின் பெருமையை உரைப்பதாகும்.
* "தோடுடைய செவியன்' இப்பாட்டு செவிக்குப் பெருமை தரும் திருஞான சம்பந்தரின் முதல் பாட்டு. "காதைகள் சொரிவன செவி நுகர்கனிகள்' என்கிறார் கம்பர். "செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழி யனும் என்' என்று திருவள்ளுவர் கடிந்துரைக்கிறார்.
* நீலக் குதம்பை, தானுருவி, வடுகவாளி, திருக்களாவம், குழை முதலியன பழங்கால காதணிகள். "காதிலே அணி பூணுதல் கண்ணுக்கு ஒளி நல்கும்' - இது தற்கால உடல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து!
என்று குப்பண்ணா தன், "விரிவுரை'யை முடிக்கவும், நான் பெஞ்சில் இருந்து குதித்து, குறுக்குப் பாதையில் வேகமாக வீட்டுக்கு ஓடினேன்.
***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (21)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chidambaram ct - kabul,ஆப்கானிஸ்தான்
08-ஜூன்-201322:47:20 IST Report Abuse
chidambaram ct அன்பு சகோதரிக்கு நல்ல வாழ்வு கிடைக்க என் நல்வாழ்த்துக்கள். கருப்பு என்பது மற்ற நிறங்களை போல ஒரு நிறமே. நான் கருப்புதான். எல்லோரும் சொல்வார்கள். மனம் சில சமயங்களில் வேதனை படும். சில வருடங்களுக்கு முன் சீனா போய் வேலை பார்த்தேன். அங்கே எல்லோரும் சிவப்பு நிறம். ஆனால் அந்த நாட்டு கல்லூரி பெண்களுக்கு என்னை பார்த்தால் அதிசயம் ஆச்சர்யம். வந்து தொட்டு தொட்டு பார்ப்பார்கள். கூட நின்று தோளில் கை போட்டு புகை படம் எடுப்பார்கள். நான் அந்த நாட்டு பெண்களின் கனவு நாயகன் ஆனேன். நல்ல மனம் படைத்த ஆண்கள் இன்னும் பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள். பொறுமையாக காத்திரு
Rate this:
Cancel
Skv - Bangalore,இந்தியா
07-ஜூன்-201307:56:43 IST Report Abuse
Skv திருமணமே வேண்டாம் பெண்ணே உன் மந்தி எவனும் நேசிக்கபோவதே இல்லே 1. போர் யுவர் மணி 2பெரிய தியாகி போல ஷோ காட்டுவான் 3 எப்போதும் உன்னை வார்த்தையால் பிடுங்குவான் 4 பிறர் முன்பும் மட்டம் தட்டுவான் சோ தேவையா திருமணம் .
Rate this:
Cancel
Ponnu Vel - namakkal,இந்தியா
06-ஜூன்-201319:28:06 IST Report Abuse
Ponnu Vel குறுக்கிய மனபன்மையில் வரன் தேடியது இந்த தோல்விக்கு காரணம். பொறுமை உடன் துணை தேட வேண்டும்... allathu நன்றாக பழக்கப்பட்ட நபரை திருமணம் செய்ய வேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X