அந்துமணி பதில்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2013
00:00

*என்.பார்த்திபன், மதுரை: நீங்க, "சைட்' அடித்த பெண் யார்?
அந்தக் கலை தான், கைவர மாட்டேங்கிறது அண்ணே! (கத்துக் கொடுக்குறீங்களா?)
***

* எஸ்.சுபத்திரா, கொடைக்கானல்: "இதை' புரிந்துகொள்ள, உனக்கு வயசு பத்தாது...' என்று, என் தோழிகள் கூறுகின்றனரே... எத்தனை வயதாக வேண்டும்?
நீங்கள் பலே கில்லாடிதான்; புரிந்து கொண்டே, புரியாதது போல நீங்கள் பாவனை செய்வதால்தான், உங்கள் தோழிகள் இப்படி கூறுகின்றனர் என்பது, இன்னுமா புரியவில்லை!
***

** எஸ்.கே.குப்புசாமி, வீரபாண்டி: யார், யார் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்?
அடுத்தவர் செலவில் காலம் தள்ளுபவர்! மந்திரிக்கு மருமகனாய், உறவினராய் ஆனவர்!
***

*வெ.கண்ணன், திண்டுக்கல்: காதல் செய்ய எந்தக் காலம் உகந்தது?
மார்கழி எனச் சொல்வேன் என்றா எதிர்பார்த்தீர்கள்? இல்லை.. "லைப்பி'ல் செட்டில் ஆன பின், கால் ஊன்றிய பிறகு! இது ஆணுக்கும் - பெண்ணுக்கும் பொருந்தும்!
***

* மு.ஜாபர் அலி, பரமக்குடி: தேசியத் தலைவர்கள் இறந்தால், ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிப்பது தேவைதானா?
தேவை இல்லை; பொது மக்களின் அன்றாட வாழ்வுக்கு, இடைஞ்சல் ஏற்படுத்தும் எந்த விஷயத்திலும், உடன்பாடில்லை எனக்கு! பொது மக்களுக்கு இடைஞ்சல் இல்லாத, விஷயங்களின் மூலம், ஒரு வாரம் என்ன...பத்து நாள் கூட துக்கம் அனுஷ்டிக்கலாமே!
***

** மு.பத்மநாபன், சிவகங்கை: வேலை வாய்ப்பு அலுவலகத்தால், இனி இளைஞர்களுக்கு ஏதாவது பயன் கிடைக்குமா?
கிடைக்கும்... அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு!
***

*டி.மல்லிகா, அனுப்பானடி: ஒரு பெண்ணுக்கு ஒரு பையன் மீது காதல் ஏற்பட்டால், அதை எப்படித் தெரிவிப்பது?
பொண்ணு - பையன், என்றால் காதலே வரக்கூடாது; வந்தாலும் தெரிவிக்கக் கூடாது!
பொண்ணு - ஆளு என்ற நிலை வந்த பின், காதல் வரலாம்; அதைத் தெரிவிக்க ஆயிரம் வழிகள் உள்ளன!
***

*எஸ்.மரியஜோசப், விழுப்புரம்: நான் சினிமா படம் எடுக்க விரும்புகிறேன். என்ன வேண்டும் என்னிடம்?
வாயில் பொய்; கையில் புகையும் சிகரெட்! இவை இரண்டும் இருந்தால், பையில் பணம் இல்லாமலே, படம் எடுக்கலாம்!
***

*எஸ்.சிவப்ரியா, சேலம் : லட்சியமுள்ள புத்திசாலி மனைவியை, ஆண்கள் வெறுப்பது ஏன்? அதையும் பொறுத்துக் கொண்டு வாழும் மனைவி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எப்போதும் தமக்கு ஒருபடி கீழே பெண்கள் இருப்பதையே விரும்புகின்றனர் ஆண்கள். உடன் வேலை செய்யும் பெண், புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளும் போது, அவளையே மட்டம் தட்டத் துடிக்கும் ஆண்கள் இருக்கும் சமுதாயத்தில், புத்திசாலியாக பெண்டாட்டி இருந்தால் சகிப்பரா?
அமெரிக்கா போன்ற, "ஓபன் சொசைட்டி'யாக இருந்தால், "போய்யா போ!' என, உதறி தள்ளிவிட்டு, பெண்கள் தம் வழியே போய் விடலாம்; இங்கு பொறுத்துக் கொண்டு தான் போக வேண்டும்!
***

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathees Kumar - Madurai,இந்தியா
07-ஜூன்-201313:04:44 IST Report Abuse
Sathees Kumar அந்து மணி பதில்கள் அனைத்தும் பலே
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
04-ஜூன்-201319:33:22 IST Report Abuse
kumaresan.m "ஆளுக்கும் பெண்ணுக்கும் காதல் வருவது இயற்கையே. ஆனால் ஒரு வயதை கடக்கும் பொழுது அடங்கிவிடும் "
Rate this:
Share this comment
Cancel
anandhaprasadh - Bangalore,இந்தியா
04-ஜூன்-201313:06:22 IST Report Abuse
anandhaprasadh லட்சியம், புத்திசாலித்தனம் உள்ள ஒரு மனைவியை எந்த ஒரு கணவனும் வெறுப்பதில்லை... ஆனால் அதுவே தலைக்கனமாக மாறி, கணவனையும் கணவரை பெற்றவர்களையும் மதிக்காதபோதுதான் பிரச்னை ஆரம்பிக்கிறது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X