மாக்கு அடகு கடை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2013
00:00

மாக்கு என்றொரு நாட்டைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது, சீன எல்லையை ஒட்டி இருக்கும் சிறிய நாடு. இங்கு சீனர்களின் கலாசாரமும், மொழி பாதிப்பும், அதிகம். உண்மையில், இது மிக நீண்ட காலம் போர்த்துக்கீசிய பிடியில் இருந்த நாடு. அதன் காரணமாக, ஐரோப்பிய - சீன மக்களின் கலாசாரமும் இங்குள்ளது.
இந்த குட்டி நாட்டிற்கு, 1700 ஆண்டு கால வரலாறு உண்டு. அதில், முக்கிய இடம் பிடிப்பது அடகுகடை. இங்கு மக்கள், பெரும்பாலும் வட்டிக்கடைகள் மூலம் கொடுக்கல், வாங்குதல் பரிவர்த்தனைகளையே செய்து கொண்டிருந்தனர். 1900களில், இந்த தனியார் வட்டிக்கடைகளின், வட்டி வசூலிப்பு அதிகமானபோது, அரசே வட்டிக் கடையை துவக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை வைத்தனர்.
விளைவு, 1917ல் அன்றைய அரசு, டேக் செங் ஆன் என்ற பெயரில் வட்டிக்கடையை துவக்கியது. குறைந்த வட்டியால், மக்களின் அமோக ஆதரவையும் பெற்றது. மக்களின் பணம், நகைகள், அடகு பொருட்கள் களவு போகாமல் இருக்க, பிற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாமல் இருக்க, மிக கனமான சுவர்களால் கட்டப்பட்டது, இந்த அடகு கடை கட்டடங்கள்.
இருந்தாலும், நூற்றாண்டுகளின் இறுதி காலகட்டத்தில், இங்கு ஏராளமான சூதாட்ட கிளப்புகள் வர ஆரம்பித்தன. கூடவே, வங்கிகளும் வரத் துவங்கின. இதனால், தனியார் வட்டிக்கடைகளும், அரசு வட்டிக்கடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஒரு கட்டத்தில், தாக்கு பிடிக்க முடியாமல் அரசு வட்டிக் கடைகளும் மூடப்பட்டன.
ஆனால், 2003ல்; மாக்கு நாட்டிற்கும், அடகு கடைகளுக்கும் உள்ள பந்தத்தை வெளியுலகம் தெரிந்து கொள்ள ஏதுவாய், அரசு வட்டிக் கடை, அருங்காட்சியகமாக திறக்கப்பட்டது.
இதனுள், பத்து நிமிடம் சுற்றி வந்தால், மாக்கு அடகு கடைகளின் சரித்திரத்தையே முழுமையாக புரிந்து கொண்டு விடலாம். மேலும், மாக்கு மக்களின் கலாசாரம் மற்றும் பண்பாடுகள் பற்றி அறிந்து கொள்ளவும், இந்த கட்டடத்தின் ஒரு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜோல்னா பையன்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barotta Thalaiyan - Kingston,ஜமைக்கா
03-ஜூன்-201308:16:32 IST Report Abuse
Barotta Thalaiyan மகாவ் என்பதே சரியான உச்சரிப்பு.
Rate this:
Cancel
R SRIDHAR - Chennai,இந்தியா
03-ஜூன்-201307:40:33 IST Report Abuse
R SRIDHAR நல்ல தகவல், ஆனால் இதை மாக்கு, மக்கு என்றெல்லாம் சொல்லக்கூடாது. Macau என்பதை மக்காவ் என்று சொல்வதே சரி. ஹாங்காங்கில் இருந்து 45 முதல் 60 நிமிடங்களில் படகு மூலம் இங்கு செல்ல முடியும். ஒன்றுமே இல்லாத ஒரு சிறிய தீபகற்பம் (Peninsula ) இன்று Las Vegas of the East என்று புகழப்படும் அளவு சூதாட்ட அரங்கங்கள் இங்கு நிறைந்திருக்கின்றன. மிக அழகான, பழமை மாறாத நகரம் மக்காவ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X