இதப்படிங்க முதல்ல!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2013
00:00

எட்டுக் கோடி வாங்கிய ஷாருக்கான்!
பாலிவுட்டின் பெரும்பாலான நடிகர், நடிகையர் சினிமாவில் சம்பாதிப்பதை விட, விளம்பர படங்கள், விருது வழங்கும் விழா, கடை திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் நடனமாடி, கோடி கோடியாய் சம்பாதித்து வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது ஷாரூக்கானும் சேர்ந்துள்ளார். துபாயில் நடந்த ஒரு திருமண விழாவில், அரை மணி நேரம் நடனமாட எட்டுக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.
சினிமா பொன்னையா

புதுமுகங்களை ஆதரிக்கும் விஜயசேதுபதி!
பீட்சா மற்றும் நடுவுலக் கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் படங்களின் வெற்றியால், விஜயசேதுபதியின் மார்க்கெட் எகிறி நிற்கிறது. ஆனால், இந்த சூழலை பயன்படுத்தி, முன்னணி இயக்குனர்கள் பக்கம் சாயாத அவர், இப்போதும், தரமான கதையுடன் வரும் புதுமுக இயக்குனர்களையே, ஆதரித்து வருகிறார். இதனால், ஏராளமான புதுமுக டைரக்டர்கள், விஜய சேதுபதியை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
சி.பொ.,

அமலா பால் தன்னிலை விளக்கம்!
எந்த ஹீரோக்களை சந்தித்தாலும், அவர்களின் நடிப்பை மானாவாரியாக புகழ்ந்து தள்ளுவதை, ஒரு கொள்கையாகவே கடைபிடித்து வருகிறார் அமலாபால். அப்படி பேசும் சாக்கில், உங்களுடன் ஒரு படத்திலாவது டூயட் பாட வேண்டும் என்பது தான் என் கனவு என்று சொல்லி, நேரடியாகவே சான்ஸ் கேட்கும் அமலா பால், "தெலுங்குக்கு போன பின், ரொம்ப மாறிட்டேன், எவ்ளோ கிளாமர் வேண்டுமானாலும், வாரி வழங்க தயாரா இருக்கேன்...' என்றும், தன்னிலை விளக்கம் அளிக்கிறார். திக்குத் கெட்டுத் திசை மாறிப் போகிறது!
எலீசா

சீரியசான கதை தேடும் ஆர்யா!
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்கு பின், தான் நடித்த எந்த படமும் ஓடாததால் அதிர்ச்சியில் உள்ளார் ஆர்யா. அதனால், இது வரை காமெடி மற்றும் சந்தானம் போன்ற நடிகர்களையே நம்பிக் கொண்டிருந்த அவர், இனி, சீரியசான கதைகளிலும் நடிக்கப் போவதாக கூறுகிறார். கூடவே, விளையாட்டான நடிகர் என்று தன் மீது விழுந்துள்ள இமேஜை மாற்றி, பொறுப்பான நடிகர் என்ற பெயரை உருவாக்க, தன் நடவடிக்கைகளையும் மாற்றி வருகிறார் ஆர்யா.
சி.பொ.,

ஹன்சிகாவுக்கு மரியாதை!
ஏற்கனவே பள்ளி குழந்தைகளை தத்தெடுத்துள்ள ஹன்சிகா, தற்போது மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட, 30 பெண்களுக்கான மருத்துவ செலவையும் ஏற்றுள்ளதால், அவர் மீதான மரியாதை உயர்ந்துள்ளது. இதுவரை, அவரை தங்கள் படத்தில் வேலை பார்க்கும் ஒரு நடிகை என்று மட்டுமே கருதிய இயக்குனர்கள், இப்போது ஹன்சிகாவை ஒரு சமூக சேவகியாக மதித்து வருகின்றனர்.
எலீசா

ஹீரோக்களின் உதவியை நாடிய பூனம் பாஜ்வா!
தெனாவட்டு மற்றும் சேவல், துரோகி ஆகிய படங்களில் நடித்த பூனம் பாஜ்வா, மீண்டும் கோலிவுட் கோதாவில் குதித்துள்ளார். ஆனால், சில புதிய வரவு நடிகைகள், மொத்த ஹீரோக்களையும் வளைத்து வைத்திருப்பதால், அவரால், புதிய வாய்ப்புகளை எளிதில் கைப்பற்ற முடியவில்லை. அதனால், தன் முந்தைய ஹீரோக்களான ஜீவா, பரத் உள்ளிட்ட நடிகர்களின் அரவணைப்பை நாடியுள்ளார் பூனம் பாஜ்வா. இதற்காக, புனேயில் இருந்து அடிக்கடி சென்னைக்கு விசிட் அடித்து வருகிறார். போதாக் குறைக்கு பொன்னியும் வந்தாள்!
எலீசா

அதர்வாவுக்கு அதிர்ச்சி!
பரதேசி படத்திற்கு பின், ஏராளமான கதைகள் கேட்டு, அதில் ஓரிரு கதைகளை மட்டுமே ஓ.கே., சொல்லியிருக்கிறார் அதர்வா. அதில், நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கர் தான் முதலில் அதர்வாவை இயக்குவதாக இருந்தார். ஆனால், பரதேசி படம் ஓடாத நிலையிலும், ஒண்ணேகால் கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார். அவர்கள் ஒரு கோடிக்கு பேரம் பேசினாலும் சம்மதம் சொல்லி விடலாம் என்று நினைத்திருந்தார். ஆனால், "இதோ வருகிறேன்...' என்று சென்றவர்கள், வேறொரு புதுமுகத்தை வைத்து அப்படத்தை தொடங்கி விட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்துள்ளார் அதர்வா.
சினிமா பொன்னையா

அவ்ளோதான்!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X