கவிதைச்சோலை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2013
00:00

காத்திருக்கிறேன் தோழி!
* ஒரு தாயின் வயிற்றில்
பிறக்கவில்லை!
* உறவென்ற பந்தமும்
நமக்குள் இல்லை!
* எங்கிருந்தோ வந்தாய்
என் அருகில் அமர்ந்தாய்!
* இதழ் விரிந்த சிரிப்பில்
இதயத்தை...
இடமாற்றிக் கொண்டாய்!
* அழுக்கு பாவாடை
அடியில்...
கடவாய் பல் உடைய
"கமர் கட்'டை
நான் கடிக்க
நீ ரசித்து புசித்தாய்!
* வீட்டுப் பாடம்
எழுதவில்லை என
ஆசிரியர் என்னை அடிக்க
அழுது துடித்தாய் நீ!
* எனக்காக உன்
உதடுகள் சிரித்தன...
உனக்காக என்
கண்கள் அழுதன!
* பால்யம் முதல்...
பாவாடை தாவணி
பருவம் வரை
பக்கத்தில் இருந்தவளே...
* உதயணன் - யூகி
கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தை
அதியமான் - அவ்வை
யார் யார் பெயரையோ
கூறுகின்றனர்
உன்னையும் என்னையும்
விட்டு விட்டு
என்றாயே...
எங்கே நீ தொலைந்தாய்!
* உன் சாயலில் தெரியும்
ஒவ்வொரு பெண்ணையும்
ஓடிச் சென்று
உற்று நோக்குகிறேன்
நீயாக இருப்பாயோ என்று!
* கல்யாணம் முடிந்து
கனவுகளுடன்
போனவளே...
கடுதாசி எழுதுகிறேன்
என்ற உன் கரத்தை
யார் தடுத்தார்!
* நாட்கள் மாதங்களாகி
மாதங்கள் வருடங்களாகி
வருடங்கள் உருண்டோடி
வயோதிகமும் வந்துவிட்டது...
உன் கடிதம் மட்டும்
வரவேயில்லை!
* காத்திருக்கிறேன் தோழி...
காலன் என்னை
அழைப்பதற்குள்
காண்பதற்கு
ஒரு முறை வந்துவிடு!

ப.திலகவதி முருகதாஸ், தேனி.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
04-ஜூன்-201307:22:23 IST Report Abuse
Uma கவிதை நல்லாருக்குது.
Rate this:

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_taboola.asp, line 341