கேள்வி பதில்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2013
00:00

கேள்வி: சிஸ்டம் ஆன் சிப் என்பது என்ன? விண்டோஸ் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை சிப்பில் பதிந்து எடுத்துச் சென்று பயன்படுத்தும் வழிமுறைக்கு இந்த பெயரா? விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எஸ். நிரஞ்சன் தாஸ், சென்னை.
பதில்:
மொபைல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில், மிகத் திறன் வாய்ந்த சிப் டிசைன் என இதனை அழைக்கின்றனர். வழக்கமான கம்ப்யூட்டிங் சிஸ்டத்தில், சிபியு, ஜிபியு, சவுண்ட் ப்ராசசர், கிராபிக்ஸ் கார்ட் எனப் பல தனித்தனியாக வரையறை செய்யப்பட்ட ஹார்ட்வேர் பிரிவுகள் இணைக்கப்பட்டு கிடைக்கும். இவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டம் இணைத்துச் செயல்படுத்தும். ஆனால், சிஸ்டம் ஆன் சிப்பில் (SoC) இவை அனைத்தும் ஒரு சிப்பில் பதியப்பட்டுக் கிடைக்கிறது. இப்படி பல பணிகளை மேற்கொள்ளும் தனித் தனி டிஜிட்டல் இயக்கங்கல், ஒரே சிப்பில் பதியப்பட்டு, பணிகளை மேற்கொள்ள கிடைப்பதனால் தான், ஸ்மார்ட் போன் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் நமக்கு சாத்தியமாகின்றன. அவற்றில், வீடியோ, ஆடியோ, மோஷன் சென்சார், கேமரா ஆகியவற்றின் இயக்கங்களை மேற்கொள்ள முடிகிறது.

கேள்வி: வேர்டில் தயாரிக்கப்படும் டாகுமெண்ட் ஒன்றை, வெப் தளத்திற்கான பக்கமாக சேவ் செய்திட முடியுமா? முடியும் எனில், அதற்கான வழிமுறைகளைத் தரவும்.
சா. தம்பிராஜா, தேவகோட்டை.
பதில்
: இணைய தள பக்கமாகப் பயன்படுத்த விரும்பும் டாகுமெண்ட்டினை முதலில் தயார் செய்திடவும். பின்னர், மற்ற வழிகள் அனைத்தும் எளிதுதான். டாகுமெண்ட்டைத் தயார் செய்த பின்னர், எப்12 அழுத்தவும். இனி Save As டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இங்கு கிடைக்கும் கீழ் விரி மெனுவில் HTML Document or Web Page என்பதனை உங்களுக்கான பைல் பார்மட்டாகத் தேர்ந்தெடுக்கவும். File Name கட்டத்தில், பைலுக்கு நீங்கள் கொடுக்க விரும்பும் பெயரைக் கொடுக்கவும். வேர்ட் பார்மட்டிலிருந்து, இணைய பக்க பார்மட்டுக்கு மாறுகையில், ஒன்றிரண்டு அம்சங்கள் காணாமல் போகலாம். பின்னர், Save என்பதில் கிளிக் செய்திடவும்.
இப்போது நீங்கள் விரும்பிய வகையில் டாகுமெண்ட் எச்.டி.எம்.எல். பைலாக சேவ் ஆகும். இந்த பைலை ஒரு பிரவுசரில் திறந்து பார்த்து சரியாக வந்துள்ளதா என சோதித்துக் கொள்ளவும்.

கேள்வி: ஒவ்வொரு முறை ரீபூட் செய்திட வேண்டிய அவசியம் ஏற்படுகையில், எஸ்கேப் பட்டனை தட்டி பூட் மெனுவைப் பெற வேண்டியுள்ளது. பின்னர், மாறா நிலையில் உள்ள லொகேஷன் சென்று அதன் பின், ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெற வேண்டியுள்ளது. இதைச் செய்திடவில்லை என்றால், மேல் இடது மூலையில், ஒரு கர்சர் ப்ளாஷ் ஆனபடி கிடைக்கிறது. என் சிஸ்டத்தில் விண்டோஸ் 7 புரபஷனல் சிஸ்டம் உள்ளது. சில தினங்களுக்கு முன்னர், ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவினை என் கம்ப்யூட்டரில் நிறுவினேன். பூட் லொகேஷன், விர்ச்சுவல் ட்ரைவிற்கு மாறியது. பின்னர், அதனை மீண்டும் என் ஹார்ட் ட்ரைவிற்கே மாற்றினேன். ஆனால், மேலே சொன்னபடி செய்தால் தான், ஆப்பரேட்டிங் சிஸ்டம் கிடைக்கிறது. பிரச்னைக்குத் தீர்வு என்ன?
ஆர்.கே. தரணி குமார், சென்னை.
பதில்:
பொதுவாக, வாசகர்களின் கேள்வியைச் சுருக்கித்தான் பிரசுரிப்போம். உங்கள் கேள்வியைச் சுருக்க முடியவில்லை. ஒரு நல்ல சிக்கலைக் கேள்வியாக அனுப்பி இருக்கிறீர்கள். நன்றி.
நான், இதே போல, முன்பு ஒரு ப்ளாஷ் ட்ரைவினை, கம்ப்யூட்டரில் இணைத்தவாறே வைத்து, சில பயாஸ் செட் அப் மாற்றங்களை செய்து, உங்களைப் போலவே சிக்கிக் கொண்டேன். இணைத்து வைக்கப்பட்டிருந்த யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ், குழப்பத்திற்கான காரணமாக இருந்தது.
தற்போது வரும் பயாஸ் சாப்ட்வேர் புரோகிராமில், யு.எஸ்.பி. ட்ரைவில் இருந்து, சிஸ்டத்தினை பூட் செய்திடும் ஆப்ஷன் தரப் பட்டுள்ளது. (முன்பு சிடியிலிருந்து பூட் செய்திடும் ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டது போல) இதன் மூலம், கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில் உள்ள சிஸ்டம் கிராஷ் ஆனால், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் அல்லது இன்ஸ்டால் செய்யப்பட்ட எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவிலிருந்து, கம்ப்யூட்டரை பூட் செய்திடலாம். எனவே, கம்ப்யூட்டர் பூட் ஆகும்போது, ப்ளாஷ் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவினைத் தேடும். அது இல்லை என்றால், நீங்கள் கூறியது போல, ஒரு கர்சர் சிமிட்டிக் கொண்டு இருக்கும்.
இதனை எப்படி சரி செய்திடலாம்? எளிதான வழி எதுவென்றால், யு.எஸ்.பி. சாதனத்திலிருந்து பூட் செய்திடும் ஆப்ஷனை, நீக்கிவிடுவதுதான். கம்ப்யூட்டரை ஸ்டார்ட் செய்திடு கையில், திரையில் F2, F10, Del என ஏதேனும் ஒரு கீயினை அழுத்தி, செட் அப் திரைக்குச் செல்க என்று ஒரு வரி தரப்படும். இந்த கீகளில் ஒன்றை சில நொடிகள் அழுத்தி, பயாஸ் (BIOS) செட் அப்பக்கத்தில் நுழையலாம். பயாஸ் கட்டத்தில் நுழைந்தவுடன், Enable USB booting என்று உள்ள இடத்தைத் தேடிப் பெறவும். இதனை disabled என்பதனைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், செயலிழக்கச் செய்திடவும். அடுத்து Exit and save settings என்பதனைத் தேர்ந்தெடுத்து, கிளிக் செய்து வெளியேறினால், உங்களின் பிரச்னை தீர்க்கப்பட்டுவிடும். உங்களுடைய பயாஸ் செட் அப்பில், disable USB booting என்பது இல்லை என்றால், boot order பட்டியலில் USB devices என்பதனை நீக்கிவிடவும். இதே போல USB HDD என இருந்தாலும், அதனையும் நீக்கிவிடவும். இதனை மேற்கொண்ட பின்னர், உங்கள் கம்ப்யூட்டர் பூட்டிங் சிஸ்டம், யு.எஸ்.பி. போர்ட்களைத் தேடாது. மீண்டும் Exit and save settings என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: நான் பார்த்த வேர்ட் டாகுமெண்ட் பைலில், பக்க எண் வழக்கம் போல் இல்லாமல், நினைத்த இடங்களில், சில பக்கங்களில் மட்டும் இருந்தது. ஆனால் நான் அதே போல முயற்சிக்கையில், வேர்ட் மூன்று சாய்ஸ் மட்டுமே தருகிறது. இது எப்படி இன்னொரு டாகுமெண்ட்டில் சாத்தியமாகிறது?
கா. ஓவியா, சிதம்பரம்.
பதில்:
பக்க எண்ணை, வேர்ட் டாகுமெண்ட்டில், நீங்கள் விரும்பும் எந்த இடத்திலும் அமைக்கலாம். நீங்கள் எங்கு அமைக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு செல்லவும். பின் ஆல்ட்+ஷிப்ட் + ப்பி (Alt + Shift + P) அழுத்தவும். அந்த பக்கத்தின் எண் அந்த இடத்தில் அமைக்கப்படும்.

கேள்வி: வெப்சைட் ஒன்றில் முக்கிய தகவல்கள் இருக்கையில், டெக்ஸ்ட்டை மட்டும், அதன் இமேஜஸ் மற்றும் பேக் கிரவுன்ட் கலர் நீக்கி எப்படி பிரிண்ட் எடுக்கலாம்?
கே. ஸ்ரீமதி, திருப்பூர்.
பதில்:
ஓர் இணைய தளத்தில் உள்ள டெக்ஸ்ட்டை மட்டும் எப்படி பிரிண்ட் எடுப்பது என்று பார்ப்போம். பொதுவாக சில வெப்சைட்டுகளிலேயே இந்த முறையில் பிரிண்ட் எடுக்க ஆப்ஷன் தரப்பட்டிருக்கும். டெக்ஸ்ட் மட்டும் பிரிண்ட் செய்திட வழி இருக்கும். அவ்வாறு இல்லையேல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் இதனை மேற்கொள்ளலாம். டூல்ஸ் அழுத்தி பின் இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் செல்லவும். இங்கு அட்வான்ஸ்டு டேப் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதன் கீழாக பிரிண்டிங் என்ற பிரிவு இருக்கும். இங்கு “Print background colors and images” என இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்காமல் (டிக் அடையாளம் எடுத்துவிட்டால்) விட்டுவிட்டால் நீங்கள் கேட்டபடி பிரிண்ட் செய்திடலாம்.

கேள்வி: எக்ஸெல் 2007 தொகுப்பினைப் பயன்படுத்தி வருகிறேன். இதில் ஒர்க்புக்கில் உள்ள செல்களில், பார்டர் கோடுகளை அழகான வண்ணத்தில் ஏற்படுத்துவது எப்படி? எக்ஸெல் 2003 தொகுப்பிலும் இதற்கு வழி காட்டவும்.
கா. சுரேந்திரன், மதுரை.
பதில்
: நீங்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். Office பட்டனில் கிளிக் செய்திடவும். அதன்பின் Excel Option என்பதில் கிளிக் செய்யவும். எக்ஸெல் உடனே எக்ஸெல் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறந்து காட்டும். இந்த பாக்ஸின் இடது பக்கம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும். Show Gridlines என்ற செக் பாக்ஸ் கிடைக்கும் வரை இதில் ஸ்குரோல் செய்து செல்லவும். இதனை உடனே தேர்ந்தெடுக்கவும். இதில் Gridline Color என்பதைத் தேர்ந்தெடுத்துப் பின் உங்களுக்குப் பிரியமான வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும். இவ்வேளயில் Show Gridlines என்பது தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். பின் ஓகே கிளிக் செய்திடவும்.
ஆபீஸ் 2007க்கு முந்தைய தொகுப்பினைப் பயன்படுத்துவதாக இருந்தால், கீழ்க்காணும் செயல்முறைகளைப் பின்பற்றவும். Tools மெனுவிலிருந்து Options பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். Options dialog பாக்ஸ் கிடைக்கும். இங்குள்ள View டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து அதே கட்டத்தில் Color ட்ராப் டவுண் பேலட்டைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.இங்கு உங்களுக்குப் பிடித்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். Gridlines என்னும் செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X