இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2013
00:00

உறவினர் வீட்டிற்கு போகிறீர்களா?
நம் உறவினர், நண்பர்கள் வீட்டிற்கு செல்லும் போது இனிப்புகள், பழங்கள், நொறுக்குத்தீனிகள் வாங்கி செல்லும் பழக்கத்தை கொண்டுள்ளோம். ஒரு புறம் இனிப்புகளும், மிட்டாய் வகைகளும், உடல் நலத்திற்கு சிறிதும் நன்மை தருவன இல்லை என்பது மட்டுமில்லாமல், குழந்தைகளையும், நீரிழிவு நோயினால் உணவு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிற்கும் வீட்டின் பெரியோர்களையும்,
இவற்றை உட்கொள்ள தூண்டும். கார வகைகளும் ஒன்றும் ஆரோக்கிய மானவை அல்ல.
தொழில் துறையின் வளர்ச்சியாலும், நகர மயமாக்குதலாலும், சுற்றுப்புற சூழலின் தட்ப வெட்ப நிலை பெரிதும் மாறி வருகிறது. நாம், நம் லாபத்திற்காக மரங்களை பெரிதும் அழித்து விட்டதே இவற்றிற்கு காரணம் என்று, ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நம் உறவினர் வீடுகளுக்கு போகும்போது, சின்னஞ்சிறு பூச்செடிகளைப் பரிசாகத் தருவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். வீட்டின் ஜன்னல்கள், பால்கனி, மாடிகளிலேயே வளர்க்கக்கூடிய வகை செடிகள் இப்போது கிடைக்கின்றன. மண் தொட்டிகள் என்று இல்லை, பிளாஸ்டிக் தொட்டிகளும், தூக்குவதற்கு எளிமையாக இருக்கும். தொட்டிகளுடன் கூடிய பயன்தரும் செடிகளும் கிடைக்கின்றன.
வீட்டில் செடிகள் வளர்ப்பது, வீடுகளில் சுத்தமான புத்துணர்ச்சியூட்டும் காற்று சூழ ஏதுவாகிறது. நம் குழந்தைகளும் நம்மிடமிருந்து, ஒரு நல்ல பழக்க வழக்கத்தைக் கற்றுக் கொள்வர். நம் அரசுடன், நாமும்... நம் நகரத்தை பசுமையாக்கும் முயற்சியில் கை கொடுக்கலாமே!
ஜெயந்தி சதீஷ், சென்னை.

ஆண்களே...சற்று நிதானியுங்கள்!
நானும், என் கணவரும் வேலைக்கு செல்வதால், வீட்டு வேலைகளை கவனிக்க ஒரு பணிப்பெண்ணை அமர்த்தியுள்ளோம்.
என் கணவர், எடுத்ததற்கெல்லாம் கத்தி களேபரம் செய்து, என்னோடு சண்டை பிடிப்பார்; சில சமயம், அடி, உதையும் உண்டு.
அதிலும், பணிப்பெண் முன் இப்படிப்பட்ட சச்சரவுகள் நிகழும் போது எனக்கு மிக அவமானமாக இருக்கும். எனவே, என், "ஈகோ பஞ்சர்' ஆகும் அளவுக்கு அவர் பேசினால் கூட, பணிப்பெண் இருப்பதைக் கருதி, பதில் பேசாமல் அமைதியாக இருப்பேன்.
"என்ன திமிர் இருந்தால், நான் இவ்வளவு சொல்லியும், கல்லுளிமங்கி மாதிரி இருப்பாய்?' என அதற்கும், "டோஸ்' விழும்.
அய்யா கணவன்மார்களே... மனைவிக்கு எதிரான உங்கள் வாய்சொல் வீர தீரங்களை, கை நீட்டல்களை தனியாக நான்கு சுவருக்குள் வைத்துக் கொள்ளுங்கள்; வேலைக்காரி முன் உங்கள் சாகசங்களை காட்டாதீர்கள்.
சாது மிரண்டால்... பாணியில் நாங்களும், "நறுக்'கென்று எதிர்த்து கேட்டால், உங்கள் நிலைமை என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள்.
சுபாஷினி செல்வக்குமார், விருதுநகர்.

இளைஞர்கள் புரிந்து கொள்வரா?
பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அதிக கூட்டமுள்ள பஸ்சில், ஐந்து இளைஞர்கள் ஏறினர். அதில், இருவர் மட்டும் உள்ளே சென்று, அடுத்தடுத்தாற்போல உட்கார்ந்திருந்த இரண்டு கல்லூரி மாணவிகளிடம், தங்கள் சில்மிஷத்தை காட்ட துவங்கினர்.
அதில் ஒருவன், மாணவியின் மேல் சாய்வது போல், ஜன்னல் வெளியே கையசைத்து, எல்லாருக்கும், "ஹாய்' சொல்லிக் கொண்டிருந்தான். அந்த பெண்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. வாசல்படியில் நின்றவன், அவனிடம், "டேய் மச்சான், உன் முதல் பொண்டாட்டி சூப்பர்...'ன்னு சொல்ல, எல்லாரும், "வாடி, வாடி நாட்டுக்கட்டை, வசமா வந்து மாட்டிக்கிட்ட...' என பாடி, தாளம் போட்டனர்.
உடனே இன்னொருவன், "டேய் மச்சான், உன் இரண்டாவது பொண்டாட்டியை மட்டும் காம்ப்ளான் கொடுத்து தேத்தணும்...' என கமென்ட் அடிக்க, பஸ்சில் இருந்த பலர் இதை கேட்டு, ஆத்திரமடைந்தாலும், வெளியே எதுவும் சொல்ல முடியாமல் நின்றனர். இளைஞர்களே... பிறருடைய உணர்வுகளை மதியுங்கள். பெண்ணினத்தை அவமதிக்காதீர்கள். அவர்கள் இல்லையேல் நாம் இல்லை.
நமக்கு தெரிந்த பெரியவர்கள், உறவினர்கள் அந்த பஸ்சிலே பயணிக்க நேரிட்டால், உங்கள் மேல் தரக்குறைவான அபிப்ராயம் தோன்றலாம். சிந்திப்பீர்களா?
என்.கருணாகரன், கோவை.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan.m - hochimin ,வியட்னாம்
12-ஜூன்-201319:36:40 IST Report Abuse
kumaresan.m சுபாசினி செல்வகுமார் விருதுநகர் - சகோதரி அ‌னைத்து ஆண்களும் உங்களின் கணவர் போன்று சுபாவம் கொண்டவர்கள் அல்ல ...நீங்கள் இதனை உங்கள் கணவருக்கு அன்பு கலந்த வார்த்தைகளுடன் புரிய வைக்கலாமே ...உங்களால் முடியவில்லை என்றால் பிள்ளைகளின் வாயிலாக உங்களின் கணவருக்கு புரிய வைக்கலாமே " உங்களுக்கும் கோபம் மற்றும் உணர்ச்சிகள் உண்டு என்பதை ஒரு நாள் புரியவையுங்கள் ....பயம் வேண்டாம் துணிந்து இறங்குங்கள் வெற்றி கிட்டும் "
Rate this:
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
12-ஜூன்-201319:29:58 IST Report Abuse
kumaresan.m " அனைத்தும் வயது கோளாறுதான் காரணம் ...இது போன்ற பேச்சை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்தினால் தேர்ச்சி பெறலாம். இல்லையெனில் போட்டி நிறைந்த இன்றைய காலகட்டத்தில் ஆபீஸ் பாய் வேலை கிடைப்பது கூட குதிரை கொம்பு என்று இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்...இவர்களின் பெற்றோர்கள் அம்பானி, டாடா, பிர்லா வம்சத்தை சேர்ந்தவர்கள் அல்ல "
Rate this:
Cancel
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
11-ஜூன்-201307:44:24 IST Report Abuse
Uma பொண்ணுங்க எதிர்க்கிறதை விட சுத்தி இருக்கிற பெரியவர்கள், நடத்துனர் மிரட்டணும்............. பொண்ணுங்க பசங்கள எதிர்க்கிறச்சே வஞ்சம் வச்சு....... அவங்க தனிமையில போகும் போது ரெளடித்தனம் செய்யற வாய்ப்பும் உண்டு.......... ஒவ்வொரு இடத்துலேயும் அடுத்தவங்களுக்கு தானே நடக்குதுனு துஷ்டனை கண்டால் தூர விலகறதால துளிர் விட்டு போகுது.........அதே இடத்துலே தன் அக்கா, தங்கையை வச்சு பார்த்தால் இப்படி அசிங்கமா பேச மனசு வராது............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X