அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2013
00:00

தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, மறைந்த முன்னாள் தலைவர்கள், சரித்திரம் படைத்த அரசர்கள், காவிய நாயகர் - நாயகிகளுக்கு சிலை வடிப்பதில் ஆர்வம் அதிகம். '70களில் அவர் முதல்வர் பதவி வகித்த போது, சென்னை மெரினாவில் பலருக்கும் சிலை எடுத்தார்!
சோழ மன்னன் ராஜராஜனுக்கு, தஞ்சை பெரிய கோவிலினுள் சிலை அமைக்க, 71ம் ஆண்டு முயன்றாராம் கருணாநிதி. ஆனால், அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, கோவிலுக்குள் சிலையை வைக்க அனுமதிக்கவில்லையாம். அதனால், கோவிலுக்கு வெளியே சாலை ஓரத்தில் சிலையை வைத்தார் கருணாநிதி என்று, முன்பு எப்போதோ நடுத்தெரு நாராயணன் சார் கூறி இருந்தார் என்னிடம்!
"திண்ணை' பகுதியின், நடுத்தெரு நாரயணன் சாரை சமீபத்தில் சந்தித்தபோது, "ராஜராஜன் சிலை திறப்பு விழாவின் போது, கருணாநிதி ஆற்றிய உரை உங்களிடம் இருந்தால் கொடுங்களேன்...' எனக் கேட்டிருந்தேன். தேடித் தருவதாகச் சொல்லி இருந்தார்.
சமீபத்தில், வேறு எதையோ தேடும்போது, 71ம் ஆண்டு நாளிதழ் பிரதிகளை பார்க்க நேர்ந்தது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேச்சு கிடைத்தது. அது:
தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம், கங்கை கொண்ட சோழபுரம் போன்ற கோவில்களை நம்மிடம் ஒப்படைத்தால், இன்னும் சிறப்பாக நம்மால் வைத்திருக்க முடியும். அவைகளை மாநில அரசிடம் ஒப்படைத்தால், இந்திய ஒருமைப்பாடு ஒன்றும் கெட்டு விடாது!
மதுரையில் திருமலை நாயக்கரின் சிலை நிறுவப்பட்டு இருக்கிறது. அதுவும் அம்பிகை இருக்கிற கர்ப்பகிரகத்துக்கு அருகிலேயே இருக்கிறது. மதுரை கோவிலை முழுவதும் அவர் கட்டியதற்கான சரித்திரபூர்வ ஆதாரம் இல்லை.
திருப்பணி செய்தவருக்கே சிலை வைக்கப்பட்டு இருக்கும் போது, பெரிய கோவில் முழுவதையும் கட்டிய ராஜராஜசோழனுக்கு ஏன் உள்ளே சிலை வைக்கக் கூடாது?
சேதுபதிக்கு ராமேஸ்வரத்தில் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், ராஜராஜ சோழனுக்குத் தடை! ராஜராஜ சோழனுக்கு சிலை வைக்கப் போவது உறுதி; அதுவும், நாம் நினைக்கிற இடத்தில் வைப்போம்!
— இப்படிப் பேசி இருக்கிறார்; அதை ஒரு படி எடுத்துக் கொண்டேன்.
அடுத்த முறை நாராயணன் சார் ஆபிஸ் வந்த போது, இந்த காப்பியைக் கொடுத்து படிக்கச் சொன்னேன். அவர் படித்து முடித்ததும், "இந்திரா காந்தி தான் மறுத்து விட்டார். அதன் பின், வி.பி.சிங், தேவகவுடா, வாஜ்பாய் அரசுகளில், தி.மு.க., அங்கம் வகித்தது. ஆனால், ராஜராஜன் இன்னும் முச்சந்தியில் தானே நிற்கிறான்... ஏன் சார்...' என அப்பாவியாகக் கேட்டேன்.
"போய் கேட்க வேண்டிய இடத்தில் கேளு... என்னை வம்பில் மாட்டி விடாதே!' என்றபடியே நான் கொடுத்த டீயை குடித்துவிட்டு, நடையைக் கட்டினார்!
***

உங்கள் கைகளைப் பற்றிய சில விவரங்கள்.
* பெண்களைக் காட்டிலும், ஆண்கள் தான் அதிகப்படியான இடது கைக்காரர்களாக இருக்கின்றனர்.
* தாயின் வயிற்றில் நான்காவது மாதத்திலேயே குழந்தையின் விரல் நுனி முழு வளர்ச்சி பெற்று விடுகிறது.
* வலது கை நடுவிரலில் தான், நகம் வேகமாக வளர்கிறது.
* வலது கைக்காரர்களுக்கு இடது பக்க மூளை அதிகமாக வேலை செய்யும்.
* கை ரேகைகள் எந்தக் காலத்திலும் எதனாலும் மாறாது.
* கால்சியம் குறைவாக உள்ளவர்களுக்கு நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் தோன்றும்; கவலையில் எப்போதும் ஆழ்ந்துள்ளவர்களின் நகங்களிலும் வெள்ளைப் புள்ளிகள் விழும்.
மருத்துவ இதழ் ஒன்றில் படித்தது!
***

அன்று நண்பர் ஒருவர் வந்திருந்தார். நிறைய படிப்பவர்; படித்ததை எல்லாரிடமும் கொட்டித் தீர்ப்பார். வந்து அமர்ந்ததும், "ஒரு டீ சொல்லுப்பா...' என உரிமையாக ஆர்டர் செய்து விட்டு, "டூ பிளாண்ட்ஸ் ஹேவ் பீலிங்க்?' - தாவரங்களுக்கு உணர்ச்சி உண்டான்னு ஒரு கட்டுரை படிச்சேன்பா. அதுல என்ன சொல்லி இருக்கு தெரியுமா?
"மனிதன் பொய் சொன்னாலும் கூட, மரம், செடிகள் கண்டுபிடித்து விடுமாம், தாவரங்களுக்கு அவ்வளவு நுண்ணறிவு உண்டு என்று நிரூபித்திருக்கிறார் பாக்ஸ்டர் என்பவர்.
"தன் மீது பிரியமுள்ளவர்களிடம் செடிகளும், மரங்களும் அளவுக்கு மீறிய பாசத்துடன் இருக்கின்றன. தன்னை வளர்க்கும் எஜமானருக்கு ஏதேனும் ஆபத்து வரும் போலிருந்தால் அவை படபடக்கின்றனவாம்.
"பாக்ஸ்டர் செய்த இன்னொரு சோதனை, சிந்தனையைத் தூண்டக் கூடியது. ஒரு அறையில் இரண்டு செடிகளை வைத்தார். பிறகு அறைக்குள் ஒருவரை அனுப்பி, ஒரு செடியை வேரோடு கிள்ளி எறிந்து, பிய்த்துப் போடும்படியாக சொன்னார். அந்த நபர் அவ்வாறே செடியை பிய்த்துப் போட்டு விட்டு வெளியே வந்து விட்டார்.
"யார் செடியைக் கொலை செய்தது என்பது, அறையிலிருந்த இன்னொரு செடியைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
"பாக்ஸ்டர் மிஞ்சியிருந்த செடியுடன், "போலிகிராப்' என்ற கருவியை இணைத்தார். பிறகு, ஐந்து பேரை ஒவ்வொருத்தராக அந்த அறைக்குள் வரச் செய்தார். கிள்ளி எறிந்த ஆள் வந்த சமயம், செடியின் உணர்வுகள் துடிதுடிப்பதை, "போலிகிராப்' பதிவு செய்தது. கொலைகாரனை செடி அடையாளம் கண்டுகொண்டு விட்டது...' என்றார்!
மனிதனிடம் அகன்று வரும் நேயம், மரங்களிடமாவது எஞ்சி உள்ளதே என நினைத்துக் கொண்டேன்.
***

அரசியல்வாதிகளிடம், "நேர்மை அன்றும் - இன்றும்' என்ற ரீதியில் அன்றைய விவாதத்தை நடத்திக் கொண்டிருந்தார் சுப்பண்ணா.
அவர் கூறிய அந்தக் கால சம்பவம் ஒன்று நெஞ்சைத் தொட்டது. இதோ அது:
அந்தக் காலத்தில் பொதுக் கூட்டம் ஒன்றுக்கு ராஜாஜியுடன் காங்கிரஸ் பிரமுகர், காலஞ்சென்ற செங்கல்வராயனும் காரில் சென்றார். போகிற வழியில் ஒரு ஓட்டல் வாசலில் காரை நிறுத்தச் சொல்லி, சூடான காபி கேட்டிருக்கிறார் ராஜாஜி.
செங்கல்வராயன் உள்ளே சென்று, ஒன்றரை அணா கொடுத்து, ஒரு கப் காபி வாங்கி வந்து ராஜாஜிக்குக் கொடுத்திருக்கிறார்.
கூட்டம் முடிந்து ராஜாஜியோடு வீடு திரும்பிய தும், சட்டைக்குள்ளிருந்து பர்ஸை எடுத்து செங்கல்வராயனிடம் ஒன்றரை அணாவைக் கொடுத்தார் ராஜாஜி.
மறுத்த செங்கல்வராயனின் கையில் காசை திணித்துவிட்டு, ராஜாஜி சொன்னார்: பொது வாழ்வில் இருப்பவர்கள் ஒரு பைசா கூட அனாவசியமாக செலவழிக்கவும் கூடாது; ஒரு காசு அடுத்தவர்கள் கணக்கில் அனுபவிக்கவும் கூடாது!
ஊரை அடித்து உலையில் போட்டு, ஏப்பம் விடும் பலர் என் கண் முன் வந்து மறைந்தனர்.
***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siva - Chennai,இந்தியா
10-ஜூன்-201316:09:52 IST Report Abuse
siva ராஜாஜியைவிட மேன்மையானவர் காமராஜர்தான், தனிப்பட்ட வாழ்வில் நல்லவராய் இருந்தாலும் அரசியலில் பெரிய தவறுகளை செய்ய முனைந்தவர் ராஜாஜி, ஆனால் காமராஜர் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, அரசியல் வாழ்க்கையிலும் சரி இரண்டிலும் சறுக்காமல் மேன்மையாக வாழ்ந்தவர்
Rate this:
vanaraja - Cumbum,இந்தியா
11-ஜூன்-201314:50:26 IST Report Abuse
vanarajaஅப்புறம் ஏன் காமராஜர் டெபொசிட் இழந்தார்? இடுக்கி மாவட்டத்தை கேரளாவுடன் இணைத்து இன்றைய பெரியார் அணை பிரச்சினைக்கு வழி வகுத்தவர். நாகர்கோயில் கேரளாவுடன் இருந்தது அப்போது. தன்னுடைய ஜாதி பற்றின் காரணமாக நல்லதோர் பொக்கிசத்தை நாம் இழக்க நேரிட்டது....
Rate this:
siva - Chennai,இந்தியா
20-ஜூன்-201314:38:57 IST Report Abuse
sivaஅவர் டெபாசிட் இழந்தது நல்ல அரசியல் தலைவர் இல்லை என்பதால் இல்லை, மக்களின் இலவச மோகத்தால், திராவிட கட்சிகளின் தந்திரத்தால். முல்லை பெரியாறு மட்டுமல்ல அவர் இருந்தபோது நினைத்திருந்தால் கபினியை கூட தமிழகத்தோடு இணைத்திருக்கலாம். ஆனால் அவர் முதல்வர் தானே பிரதமர் அல்லவே, இந்தியன் இந்தியனுக்கு தண்ணீர் தராமல இருந்துவிடப்போகிறான் என்ற இந்திய உணர்வில் இழைத்த தவறுகள் அவை. அப்படிப்பட்ட ஒரு மாபெரும் தலைவரை சாதியின் பெயரால் சாக்கடையில் தள்ளிவிட வேண்டாம். குலக்கல்வி திட்டம், சாதிய அடிப்படையில் மரியாதை என்ற இரண்டையும் எதிர்த்தவர். நான் நாடார் என்று தவறாக நினைத்துவிட வேண்டாம், நான் தேவர் இனத்தை சேர்ந்தவன், இதில் கொடுமை என்னவென்றால் தேவர் இனத்தில் உள்ளவர்கள் பெரும்பன்மையோர்க்கு இவரை பிடிக்காது காரணம் முத்துராமலிங்கதேவரை சிறையில் அடைத்து பார்வர்ட் பிளாக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்ததால்...
Rate this:
Cancel
Partha - Bangalore,இந்தியா
10-ஜூன்-201307:28:53 IST Report Abuse
Partha அப்போ சைவ உணவு உண்பவர்களும் உணர்ச்சி உள்ள ஒரு உயிரைத்தான் உண்கின்றனர். என்னிடம் கேட்டால் முட்டையை அவித்து உண்பதும் அரிசியை அவித்து உண்பதும் ஒன்று தான். இருந்துமே ஒரு உயிர் இனத்தின் முட்டை தான்.
Rate this:
Prasanna - Chennai,இந்தியா
10-ஜூன்-201317:12:53 IST Report Abuse
Prasanna100% ரைட் இறைவனுக்கு படைத்தது சாப்பிட்டால் உயிர் கொலை ஆகாது...
Rate this:
kalaivendhen - hyderabad,இந்தியா
11-ஜூன்-201315:06:58 IST Report Abuse
kalaivendhenஇந்தமாதிரி அதிபுத்திசாலிதனமான வசனத்த பேசிக்கிட்டுத் தான் முழு ஆட்ட அடிச்சு ஏப்பம் விட்ரீங்களாக்கும்? ரொம்ப நல்ல மனசுப்பா, நல்லா வருவீங்க.....
Rate this:
Cancel
tulasidas - Tirupur,இந்தியா
10-ஜூன்-201305:49:13 IST Report Abuse
tulasidas இராஜராஜ சோழனின் சிலையை கோவிலுக்குள் வைக்க தொல்பொருள் துறை அனுமதி மறுத்தது. மிகப்பழமை வாய்ந்த கோவிலுக்குள் புதிய சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டதிலும் அதை மதித்த வரைப்பற்றி நையாண்டி செய்வதிலும் அப்படி என்ன சுகம் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X