அந்துமணி பதில்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2013
00:00

* த.நல்லதம்பி: உத்தமபாளையம்:கன்னித்தன்மை யோடு உள்ள பெண்ணை, ஆங்கிலத்தில், "வெர்ஜின்' என்று சொல்கிறோம். அதே போலுள்ள ஆணை, எவ்விதம் அழைப்பது? கல்யாணமாகாத, ஆனால், கன்னித்தன்மை இழந்த ஆணை அழைப்பது எப்படி? (உமக்குத் தெரியவில்லை என்றால், லென்ஸ் மாமாவிடம் கேட்டுச் சொல்லும்!)
கன்னித்தன்மை உள்ள ஆளை, "பிரம்மச்சாரி' என அழைக் கலாமாம்; (ஆனால், இது வட மொழி; தமிழில் என்னவோ?) இரண்டாவது வகை ஆண்களை, "அன்மேரீட்' - கல்யாணமா காதவர் என்றும் அழைக்க வேண்டுமென்கிறார் லென்ஸ் மாமா!
***

*டி.இளமாறன், கோவை: உம்மைப் பார்த்து ஒரு பெண், அழகாக உதடுகளைக் குவித்து, "ஐ லவ் யூ' என்று கூறியபடியே, கண்ணடித்தால் என்ன செய்வீர்?
"நடைபெறாது' எனத் தீர்மானித்த விஷயங்கள் பற்றி, அதிகம் சிந்திப்பது கிடையாது!
***

**யூ.மீராஜாஸ்மின், மதுரை: மின்சாரக் கட்டணங்கள் உயர்ந்து கொண்டே போகிறதே...
இலவசங்களை, அரசு அள்ளி வீச, வீச எல்லாமே விலை உயர்ந்துதான் போகும்!
ஓட்டுகளுக்காக வழங் கப்படும் இலவசங்கள் தொடரும் வரை, விலை உயர்ந்து கொண்டேதான் இருக்கும்!
***

*எம்.சத்தியசீலன், விருதுநகர்: கணவனைப் பிரிந்து வாழும் பெண், கணவனோடு வாழும் பெண்.... என, இரு பெண்கள் என்னை விரும்பு கின்றனர். திருமணமான நான், என்ன செய்வது?
சம்சாரம் வூட்ல தானே இருக்காங்க.. அவங்க கிட்டக் கேளுங்க இந்தக் கேள்விய!
***

*எஸ்.கோப்பெருந்தேவி, திருநகர்:அங்கங்களை அம்பலப்படுத்தி நடிக்கும் சினிமா நடிகைகளால், பெண் களான எங்களுக்கு கேவலம் ஏற்படுகிறதே...
சென்னையைப் பாருங்கள்... நடிகைகளின் உடைகளைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் உடை அணிகின்றனர் சென்னைப் பெண்கள்! இதெல்லாம், "பார்ட் அண்ட் பார்சல் ஆப் லைப்' ஆகிக் கொண்டு வருகிறது... தடித்த தோலுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டியதுதான்!
***

**ஆர்.காளைராஜன், கொரட்டூர் : உண்மையே பேசி கஷ்டப்படுவதை விட, சமயத் திற்கு தகுந்தாற் போல பொய் பேசி, மிக வசதியாக வாழலாமே!
வசதியாக வேண்டுமானால் வாழலாம்; ஆனால், மன நிம்மதியோடு வாழவே முடியாதே! மன நிம்மதி இல்லாமல், பொருள் இருந்து என்ன பயன்? இரவில் உறக்கம் கூட வராதே... நிம்மதியான தூக்கம் இல்லாத வாழ்வு ஒருவனுக்கு தேவையா?
***

* ஏ.ஜார்ஜ், தேனி: "பேச்சுலர் லைப்' எனக்கு பிடித்திருக்கிறது... "பட்' திருமணம் செய்தே ஆக வேண்டுமென, வீட்டில் கூறுகின்றனர். என்ன செய்வது?
பிடித்ததை, கட்டாயக் காரணமாக விட்டுக் கொடுத்து விட்டால், வருந்த வேண்டியது வரும் தானே!
***

** ம.குணசெல்வி, வீரபாண்டி: இன்று மக்களிடையே சேமிப்பு பழக்கம் வளர்ந்துள்ளதா?
வளர்ந்திருக்கிறது. கஷ்டப்பட்டு சம்பாதித்து மிச்சம் பிடித்த பணத்தை முதலீடு செய்வது எப்படி என்ற கலைதான் வளரவில்லை. அதிக வட்டி தருகிறோம் என, விளம்பரம் செய்யும் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து, ஏமாந்து போகின்றனர்; படித்தவர்கள் கூட!
***

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan.m - hochimin ,வியட்னாம்
12-ஜூன்-201319:07:17 IST Report Abuse
kumaresan.m " ஒரு பெண் i love you என்று உங்களிடம் சொல்வதற்க்கு வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. ஏனெனில் உங்களின் பெயரிலேயே அந்து மணி ( MONEY ) உள்ளதே கவனித்தீரா ?
Rate this:
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
12-ஜூன்-201319:03:11 IST Report Abuse
kumaresan.m " இந்த உடலை காட்டுவது எல்லாம் குறிப்பிட்ட வயது வரை தான் ....இளமை நிலையானது இல்லை என்பதை பெண்கள் நம்ப மறுக்கிறார்கள் "
Rate this:
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
12-ஜூன்-201319:00:16 IST Report Abuse
kumaresan.m சேமிப்பு பழக்கம் வளர்ந்து என்ன பயன் ? பேராசை தான் இந்த துன்பத்திற்கு காரணம் ? ஒரே இரவில் பணக்காரன் ஆகிவிட வேண்டும் என்று இன்றைய மனிதன் கனவு காண்கிறான் "
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X