இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2013
00:00

கிரிக்கெட் சூதாட்டம் சினிமாவாகிறது!
ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில், போலீசாரால் கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்துக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். இந்நிலையில், இந்தப் பிரச்னையை மையப்படுத்தி, மலையாளத்தில், "கிரிக்கெட்' என்றொரு படம் தயாராக உள்ளது. ஷாஜி கைலாஷ் தயாரிக்கும் இப்படத்தில், ஸ்ரீசாந்த் வேடத்தில் நடிக்க, நடிகர் தேர்வு நடந்து வருகிறது.
சினிமா பொன்னையா

தமிழில் பாட்டுப் பாட ஆசைப்படும் நித்யா!
வெப்பம் மற்றும் 180 படங்களில், நித்யா மேனன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சமீப காலமாக கதாநாயகி யாகவும் பரவலாக நடித்து வருகிறார். அதோடு, பின்னணி பாடுவதிலும் அவருக்கு ஆர்வம் மிகுதி. தெலுங்கு, கன்னடம், மலையாளம் என, மூன்று மொழிகளிலும் இதுவரை, 10க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள நித்யா மேனன், தமிழில் பாட சான்ஸ் தருமாறு, சில பிரபல இசை அமைப்பாளர்களை கேட்டுக் கொண்டு வருகிறார். முயன்றால் முடியாதது என்றும் இல்லை!
எலீசா

லட்சுமி மேனன் புதிய முடிவு!
"எனக்கு நடிப்பை விட, படிப்பு தான் முக்கியம்...' என்று சொல்லி வந்த, லட்சுமி மேனன் தற்போது, மஞ்சப்பை மற்றும் வசந்த குமரன் படங்களில், "புக்' ஆகியுள்ளார். அதனால், சென்னைக்கு முகாமை மாற்றி விட்ட அவர், இனி நடிப்புக்கு போக மீதமிருக்கும் நேரத்தை தான், படிப்புக்கு செலவிடப் போவதாக கூறுகிறார். அதுவும், சென்னையில் இருந்தபடியே, அஞ்சல் வழி கல்வியை தொடர இருக்கிறார். சொல்கிறது ஒன்று; செய்கிறது ஒன்று!
எலீசா

மதுரையை முற்றுகையிட்ட மூன்று பாண்டியர்கள்!
கிராமத்து படம் என்றாலே மதுரை தான் என்றாகி விட்டது. அந்த வகையில் தற்போது, பாண்டிய நாடு படத்துக்காக மதுரை செல்ல தயாராகி கொண்டிருக்கிறார் விஷால். அவரைத் தொடர்ந்து, அமீர் நடிக்கும், புலி பாண்டியன், விதார்த் நடிக்கும், பட்டைய கிளப்புடா பாண்டியா ஆகிய படங்களின் படப்பிடிப்புகளும், அதே மதுரையில் நடைபெற உள்ளன. ஏற்கனவே, மதுரை லொகேஷனில் ஏராளமான படப்பிடிப்புகள் நடந்து விட்டதால், இவர்கள் புதிய லொகேஷன்களாக தேடிப்பிடித்து, படமாக்க இருக்கின்றனர்.
சி.பொ.,

ரகளையில் ஈடுபட்ட த்ரிஷா!
த்ரிஷாவின் மார்க்கெட் சரிந்து விட்ட போதும், அவரது பந்தா பேச்சு இன்னமும் குறையவில்லை. புன்னகை படப்பிடிப்புக் காக சுவிட்சர்லாந்து சென்ற போது, தனக்கும், தன்னுடன் வந்த அம்மாவுக்கும் தங்குவதற்கு தனித்தனி அறை வேண்டும் என்று, பெரும் ரகளையில் ஈடுபட்டார். "அம்மாவும் - மகளும் ஒரே அறையில் தங்கினால் தப்பில்லையே...' என்று சிலர், "அட்வைஸ்' செய்ய, படப் பிடிப்பு தளத்துக்கு வர மறுத்து விட்டார். அதையடுத்து, அவரது அம்மாவுக்கு அதே ஓட்டலில் தனி அறைக்கு ஏற்பாடு செய்த பிறகே, ஸ்பாட்டுக்கு சென்றுள்ளார் த்ரிஷா. மலை விழுங்கி அம்மையாருக்கு கதவு சுண்டாங்கியா?
எலீசா

ஷாக் கொடுக்கும் அஞ்சலி!
மொத்தமாக ஆந்திராவில் செட்டிலாகி விட்டார் அஞ்சலி. இதற்கிடையில், சிங்கம் - 2 படத்தில் மட்டும் ஒரு பாடலுக்கு ஆடியவர், கோடம்பாக்கவாசிகளுக்கு தெரியாமலேயே, ஐதராபாத் பறந்து விட்டார். இருப்பினும், தங்கள் படத்துக்கு அஞ்சலி நாயகியாக நடித்தால் தான், பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கும் டைரக்டர்கள், அவரை தமிழுக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம், "நான் வருவதில் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால், இப்போது என் படக் கூலி, கோடியை எட்டி விட்டது. உங்களால் தர முடியுமா?' என்று கேட்டு, "ஷாக்' கொடுக்கிறார் அஞ்சலி. விடா கண்டனும், கொடா கண்டனும்!
எலீசா

மீண்டும் வடிவேலு!
இரண்டு ஆண்டு வனவாசத்துக்கு பிறகு, வடிவேலு நடித்து வரும் படம், கஜபுஜ புஜபல தெனாலிராமன். வடிவேலு இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க பார்வதி ஓமனக்குட்டன், சினேகா உல்லால் என, பல நடிகைகளை அணுகினர். ஆனால், யாரும் உடன்படவில்லை. இதையடுத்து, மீனாட்சி தீட்ஷித் என்ற நடிகையிடம் பேசிய போது, உடனே, ஓ.கே., சொல்லிவிட்டார். இந்த மீனாட்சி, விஜயகாந்த் நடித்த, விருதகிரி படத்தில் மூன்று ஹீரோயினிகளில் ஒருவராக நடித்தவர்.
சினிமா பொன்னையா

அவ்ளோதான்!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X