ஒரு பிரளயத்திற்கான பொறி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2013
00:00

""எப்போதும் அணுக முடியாத இடத்தில் இருக்கறத, ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உதாரணமாக சொல்ல முடியாது செல்வி,'' கதிரேசன் கொஞ்சம் கோபமாகவே சொன்னார். வீட்டில் நடக்கும் நிகழ்வுகளுக்கு, அவர் காட்டுகின்ற கோபம் குறைவானதாக தோன்றியது.
சமையல் அறைக்குள் அதிர வைக்கும் பாத்திரங்களின் மூலம், பத்மினி இந்த நிகழ்வுகளால், தான் எத்தனை பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
எத்தனை படித்திருந்தாலும், கோபம் வரும்போது மனம், அறியாமை என்ற பள்ளிக்கூடத்திற்கு, தலைமையாசிரியர் ஆகிறது.
""என்ன செய்வது... எல்லா நாட்களும் ஒரே நாட்களாய் விடிந்தால், திருநாட்களுக்கு தேவையற்று போய்விடுமே...''
ஒரு கையில் கன்னம் தாங்கி, சோபாவில் மடிந்து அமர்ந்து எங்கேயோ பார்த்து கொண்டு சொன்னாள் செல்வி.
செல்விக்கு, இயல்பிலேயே கொஞ்சம் பிடிவாதம் அதிகம். பிடிவாதம், இளமைக்கு அழகான அணிகலனாய் அமைகிறது. வயது முதிர முதிர பிடிவாதம் கழன்று பெரும் அமைதி படர்கின்றது. அகிம்சையின் பிடிவாதம் தான், அற்புதமான சுதந்திரத்தை தந்தது என்பதை மறுக்க முடியுமா என்ன?
கதிரேசனுக்கு, செல்வி ஒரே பெண் என்பதால், கொஞ்சம் செல்லம் அதிகம். கதிரேசனும், பத்மினியும் தங்களுடைய வீட்டிற்கு ஒரே பிள்ளைகள் என்பதால், அத்தை, மாமா, அண்ணன், தம்பி, சித்தி, சித்தப்பா என்ற எந்த உறவு முறைகளின் கோணல், மாணல்களும் அவளுக்கு புரிபடாமல் போனது.
அதனால் தான், கதிரேசன் உறவுச் சனம் நிறைந்த இடத்தில் செல்வியை திருமணம் முடித்துக் கொடுத்தார். அங்குதான் பிரச்னை ஆரம்பமானது. மனிதர்களுடன் கலந்து வாழ செல்விக்கு தெரியவில்லை.
நித்தமும் பிரச்னை என்ற பெட்டியை தூக்கிக் கொண்டு, வீட்டிற்கு வந்து நின்றாள்.
பெண்ணை உள்ளூரில் கல்யாணம் செய்து கொடுத்தால், அடிக்கொருமுறை பார்க்கலாம் என்ற ஆசை, இப்போது அவஸ்தையாய் தெரிந்தது.
"இந்த முறை நிச்சயமா நான் திரும்பி போக மாட்டேன்... நாத்தனார் சனியனை வீட்டை விட்டு ஒழிக்க சொல்லுங்க இல்லே, எனக்கு விவாகரத்து குடுக்க சொல்லுங்க..' ஒரே போடாய் போட்டு விட்டாள்.
அதிர்ந்து, நிலை குலைந்து போனார் கதிரேசன்.
இரண்டு நாட்களாய் கதிரேசன் வீட்டிற்கு வரவேயில்லை. அறிந்த இடம், தெரிந்த இடமென்று, அத்தனையும் அலசியாகி விட்டது.
செல்வியும், பத்மினியும் அரண்டு போய் விட்டனர்.
இரண்டு நாட்கள் கழித்து, செங்கல்பட்டில் இருந்த கதிரேசனின் தமிழாசிரியர் அன்புமணியிடமிருந்து போன் வந்தது... கதிரேசன், தன் வீட்டில் இருப்பதாய் கூறி!
பதறி அடித்துக் கொண்டு செல்வியும், பத்மினியும் அங்கு சென்றால், கதிரேசன், துளி கூட பதட்டம் இல்லாமல் வரவேற்றார்.
""என்னப்பா இது... என்னுடைய பிரச்னைக்கே என்னால பதில் தேட முடியாம குழம்பி நிற்கும்போது, நீங்க வேற புதுசா பிரச்னையை உண்டாக்குறீங்கப்பா,'' கலங்கித் தான் போனாள் செல்வி .
""செல்விமா, இந்த உலகம் ரொம்பவும் சுருங்கிப் போச்சுமா... அவங்களுக்கு, அவங்க அவங்க பிரச்னை பெருசு, உனக்கு உன்னது... எனக்கு என்னது,'' என்றார் புன்முறுவலோடு.
""இது பொறுப்பான பேச்சா?''
""என்னுடைய பொறுப்பை நீ சரியா புரிஞ்சுக்காதப்ப, என் பேச்சில் எப்படி பொறுப்பை நீ உணர முடியும்.''
எந்த பிரச்னைக்கும், பேச்சின் மூலமாய் தீர்வு காண முற்பட்ட நிலை மாறி, இப்போதெல்லாம் எந்தப் பேச்சும் பிரச்னையில் போய் முடிவது தான் குடும்ப வாழ்க்கையாக போய் விட்டது.
""என்னதான் முடிவு செய்திருக்க கதிரேசா... நீ சொன்னாத்தானே அவங்களுக்கு புரியும்.'' கனிவாய் சொன்னார் அன்புமணி ஐயா.
""அதுவும் சரிதான் ஐயா ...நான் இனி அங்கவர்றதா இல்லே பத்மினி. செல்வி அங்கே இருக்கும் வரைக்கும்.''
"அப்பா...' அதிர்ந்து போனாள் செல்வி .
""என்னங்க இது... அவளுடைய குறைகளை சுட்டிக்காட்டி, சரி செய்ய வேண்டிய நாமளே, அதே தப்பை செஞ்சுட்டு நிற்கலாமா?'' பத்மினி கூட பதறித்தான் போனாள்.
எல்லார்க்கும் உப்புமாவும், காப்பியும் தயார் செய்து கொண்டு வந்து தந்தார், அன்புமணி ஐயாவின் மனைவி. சாப்பிடும் மனநிலையில் இல்லை செல்வி.
""கொழந்தே... சாப்பிடு தாயி. மனசுக்குத்தான் பிரச்னை, வயத்துக்கு இல்லயே,'' ஆதரவாய் தலை தடவினாள்.
""பாட்டி...வீட்டுக்கு வரமாட்டேன்னு சொல்லி, எங்கப்பா என்னை தண்டிக்கிறாரு... அவர் என்னை புரிஞ்சுக்கல, இத்தனை நாள் என்னை பார்த்து பார்த்து வளர்த்துட்டு, இப்போ பாரமா நினைக்கிறாரு.''
""அம்மாடி, கதிரேசன் மாதிரி ஒரு பக்குவப்பட்ட மனிதன், தன்னுடைய வீடு, வாசல், தொழில்ன்னு எல்லாத்தையும் கடந்து வந்து, இப்படி உட்கார்ந்திருக்கார்னா அது சாதாரண விஷயமில்லை. சரி... நீயே சொல்லு உனக்கு என்ன தான் பிரச்னை,'' அன்பாய் விசாரித்தார் அன்புமணி ஐயா.
""என்னுடைய புகுந்த வீடு, அங்குள்ள மனிதர்கள்... அவர்களுடைய குணங்கள்...''
வாய் விட்டுச் சிரித்தார் அன்புமணி ஐயா.
""இந்த உலகத்துல நம்மால, கொஞ்சம் கஷ்டபட்டாவது மாத்தக்கூடிய விஷயம் ஏதாவது இருக்குன்னா, அது நம்முடைய குணம் மட்டுந்தான்மா... அடுத்தவங்க குணத்தை நம்மால எப்படி மாத்த முடியும்? நம்மால மாத்த முடியாதபோது, நாமதான் மாறிக்கணும் அது தானே புத்திசாலித்தனம்.''
பட்டென்று கேட்டு விட்டார். பதில் தெரியவில்லை செல்விக்கு.
""சரி சொல்லு, உன் நாத்தனார் கிட்ட என்ன தான் பிரச்னை?'' என்றார் விடையறியும் ஆவலோடு.
""மதிக்கறதில்ல... நான் எது செஞ்சாலும், குறை கண்டு பிடிச்சு, அதை பெரிசாக்குறாங்க... மொத்தத்துல, அந்த வீட்ல எல்லாரும் என்னை பிடுங்கி எடுக்கறாங்க.''
""இது வழக்கமான பிரச்னைக தானே... சமையல்கட்டுல நாலு பாத்திரம் இருக்கும்போது, ஒன்றோடொன்று மோதி சத்தம் வர்றது சகஜம் தான். அதுக்காக விவாகரத்து வரை போகணுமா,'' என்றார் அன்புமணி ஐயா.
""இதுவேணா வழக்கமான பிரச்னையா இருக்கலாம், இதுபோன்ற பிரச்னைகள் என்னுடைய வாழ்க்கையில் வழக்கமில்லை, அவங்களை எல்லாம் நினைச்சாலே எனக்கு கோபமா வருது, '' என்றாள் செல்வி.
""பாத்தீங்களா ஐயா... இவ செய்யுறது தவறு இல்லை திருத்தறதுக்கு; தப்பு! தெரிந்தே செய்யுறா,'' கோபப்பட்டாள் பத்மினி .
""அம்மா, கொஞ்சம் பொறுமையா இரும்மா... தவறை திருத்தறதும், தப்பை தடுக்குறதும் நம்முடைய கடமைமா... செல்வி, நான் வயசுல ரொம்ப பெரியவன், உன் தகப்பனுக்கு ஆசிரியரா இருந்தவன்... ஆனாலும், எனக்கு அறிவுரை சொல்லுறதுல எப்பவும் இஷ்டமில்லை, எனக்குத் தெரிந்தவரை சொல்றேன், உனக்கு பிடிச்சா எடுத்துக்க.
""சின்னச் சின்ன பிரச்னைக கூட இல்லாட்டி, வாழ்க்கை அதோட சுவாரஸ்யங்களை இழந்துடும்மா... அந்த அழகான சுவாரஸ்யங்களை ரசிச்சபடி வாழ்க்கையை நகர்த்தணும். அத விட்டுட்டு, அந்த சின்னச் சின்ன பிரச்னைகளுக்கு பயந்து, பெரிய பிரச்னைகளில் மாட்டிக் கொள்ளக் கூடாதில்லயா.''
மவுனமாய் இருந்தாள் செல்வி.
""உனக்கு அர்த்தம் தெரியுமோ தெரியாதோ... நாத்தனார்னா என்ன அர்த்தம் தெரியுமா? "நாத்து' "ஆனார்'னு அர்த்தம். அவ என்றைக்கு இருந்தாலும் பிடுங்கி, இன்னொரு இடத்துல நடப்பட வேண்டிய, "நாத்து'மா... இன்னும் சொல்லப் போனா, அவ எப்போதும் பிறந்த வீட்ல வளர்ற விருந்தாளி... ஒரு தவிர்க்க முடியாத சினேகிதி.
""அதுபோல தான் கொழுந்தனார், குடும்பங்கற மரத்தின் கொழுந்து... உன் கணவனுக்கு இளையவன்னு அர்த்தம். நமக்கு பெரியவங்க சொல்லிவச்ச விளக்கங்கள்ல அர்த்தம் இல்லாம இருக்காது. உன்னால, அவங்களோடு உறவு பாராட்ட முடியாட்டா, பாதகமில்லை, அவங்களோடு நட்பு பாராட்டு... உறவுல தான் எதிர்பார்ப்பு இருக்கும், நட்புல இருக்காது... முதலில், அவர்களை நட்பா ஏத்துக்க முடிஞ்சா, உறவாகவும் ஏத்துக்க முடியும் இல்லயா.''
செல்வி ஏதோ சொல்ல வாய் திறந்தாள். கை உயர்த்தி தடுத்தார்.
""அம்மாடி, எல்லாக் கேள்விக்கும் பதில் இருக்கு... ஆனால், அந்த பதில்கள் உன்னுடைய வாழ்க்கையில், சந்தோஷத்தைக் கொண்டு வரும்ன்னு உன்னால உறுதியா சொல்ல முடியுமா? அது உன்னுடைய வீடு, அவங்க உன்னுடைய மனிதர்கள்... வாய்ப்பு இருக்கறதாலேயே விலகிவர முயற்சி செய்யறது தப்புமா, பொறுமையா இரு... எல்லாம் சீக்கிரம் இயல்பாகிடும்.''
செல்வி சிந்திக்கத் தொடங்கினாள். நிச்சயம், சினிமாத்தனமாய் ஒரு இரவிற்குள் அவளுக்குள் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது. ஆனாலும், அவளுள் விழுந்த பொறி, பிரளயமாய் விரைவில் மாறும் என்ற நம்பிக்கை தோன்றி இருந்தது அவர்களுள்.
தன்னுடைய மாணவனின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னையை தீர்த்து, செல்வியுடைய மனதில் பதியும் வாழ்க்கைப் பாடம் நடத்தி, தன்னை ஒரு நல்லாசிரியர் என்று மீண்டும் நிரூபித்த பெருமிதத்தில் அமர்ந்து இருந்தார் அன்புமணி ஐயா.
***

எஸ். பர்வின் பானு

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan - tirupur,இந்தியா
11-ஜூன்-201314:21:39 IST Report Abuse
kumaresan ""என்னுடைய பொறுப்பை நீ சரியா புரிஞ்சுக்காதப்ப, என் பேச்சில் எப்படி பொறுப்பை நீ உணர முடியும்.'' எந்த பிரச்னைக்கும், பேச்சின் மூலமாய் தீர்வு காண முற்பட்ட நிலை மாறி, இப்போதெல்லாம் எந்தப் பேச்சும் பிரச்னையில் போய் முடிவது தான் குடும்ப வாழ்க்கையாக போய் விட்டது". சிறப்பான வசன நடை. கதையும் அருமையா இருக்கு
Rate this:
Cancel
gvvrajan - mumbai,இந்தியா
09-ஜூன்-201320:20:56 IST Report Abuse
gvvrajan வாழ்க்கை தீர்வு அவ்வளவு எளிதா? எல்லா பெற்றோரும் ஒருகாலத்தில் பெண்ணை ஒரு பாரமாக கருதினார்கள் . வேறு வழியில்லாமல் நாத்தானார் கொடுமையை , மைத்துனனின் வக்கிரப்பார்வையை சகித்துக்கொண்டிருந்தார்கள். காலம் மாறுகிறது. பெற்றோர்கள் தன் பெண்ணின் ஆசைகளையும் புரிந்துகொள்கிறார்கள். எனவேதான் தைரியமாக பெண்களும் தாய் வீடு திரும்புகிறார்கள். தாய் வீடு திரும்பும் எல்லா பெண்களும் முட்டாள்களில்லை . வீம்பு பிடித்தவர்களும் இல்லை. பிற்ப்போக்கான கதை.
Rate this:
anandhaprasadh - Bangalore,இந்தியா
11-ஜூன்-201314:35:53 IST Report Abuse
anandhaprasadhராஜன், நாத்தனாரும் ஒரு பெண்தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்... கோபித்துக்கொண்டு தாய்வீடு திரும்பும் பெண் கூட தன் சகோதரனின் மனைவிக்கு நாத்தனார்தான்... திரும்பி வந்தவள் ஒரு கொடுமைக்கார நாத்தனாராக இருந்து விட்டால் என்ன சொல்வீர்கள்? பொதுவாகவே பெண்களின், பெண்ணைப் பெற்றவர்களின் கண்ணோட்டம் இப்போது மாறிவிட்டது... தாய், தந்தை, சகோதர சகோதரிகள் செய்யும் தவறை ஏற்றுக்கொள்ளும் மனம் கணவன் அல்லது மாமனார் மாமியாரின் சிறிய தவறுகளைக் கூட ஏற்றுக் கொள்ள மறுக்கிறது... அதற்காகப் புகுந்தவீட்டில் என்னசெய்தாலும் சரி என்று சொல்லவரவில்லை... பெண்களிடம் பொதுவாகவே சகிப்புத்தன்மை குறைந்து விட்டது... சிறிய மணல்துகளைக் கூட பூதக் கண்ணாடி மூலம் பார்த்தால் பாறாங்கல் போன்றுதான் தெரியும்.. அந்த மனப்பாங்கு இப்போது பெரும்பாலான பெண்களிடமும் அவர்களைப் பெற்றவர்களிடமும் உள்ளது... திருமண வாழ்க்கை முறிந்து போவதற்கு இது முக்கியக் காரணம்......
Rate this:
Cancel
Karthick - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஜூன்-201318:50:29 IST Report Abuse
Karthick அருமையான கதை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X