பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2013
00:00

பார்வை இழந்த ஒருவர், "ரீ ரிக்கார்டிங்' என்ற உலகச் சாதனையை செய்து விட்டு, அந்த சாதனையைக் கூட வெளியே சொல்லாமல் இருக்கிறார். அவர் தான் கிரியோன் கார்த்திக்.
"கருட பார்வை' என்ற தமிழ் திகில் படத்தின் இசை அமைப்பாளர் தான், இந்த கிரியோன் கார்த்திக்.
ஒரு பாட்டை, "கம்போஸ்' செய்யும் பார்வையற்ற கலைஞர்கள் உண்டு. ஆனால், மவுனமாக திரையில் ஓடும் திரைப்படத்திற்கு, "ரீ - ரிக்கார்டிங்' எனும் உயிர் கொடுக்கும் வேலையை செய்ய, அவர்களில் யாரும் இல்லை. காரணம், நிமிடத்திற்கு நிமிடம் காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கும். மழை பெய்யும், கார் ஓடும், கதாநாயகன் வில்லனை புரட்டி எடுப்பார். பறவைகள் சத்தமிடும், வாகனங்கள் அலறும், இவை அனைத்தையும் கண்கொண்டு பார்த்து, பிறகே, ரீ-ரிக்கார்டிங் செய்ய முடியும்.
அதிலும், திகில் படம் என்றால், இசைதான் பிரதானம். ரசிகர்களை நாற்காலியின் நுனியில் உட்கார வைப்பதும், பிடரியில் வியர்வையை சுரக்க வைப்பதும், மயிர்கால்களை நிற்கச் செய்வதும், சிலீர் என, உடலுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்துவதும், மனதிற்குள் அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற பட்டாம்பூச்சியை பறக்க வைப்பதும், படபடவென, கண் இமைகளை துடிக்க வைப்பதும், திகில் பட இசையின் இலக்கணம்.
இந்த இலக்கணத்தை, வெகு கச்சிதமாக செய்திருக்கிறார் கார்த்திக்.
கார்த்திக்கின் தந்தை பொன் ராம் ஒரு ராணுவ வீரர்.
இந்தியா-பாகிஸ்தான் யுத்தத்தின் போது, குண்டு பாய்ந்து கால் பாதிக்கப்பட்டவர். அதன் பின், கஸ்டம்ஸ் பிரிவில் சேர்ந்தார். நேர்மை மிகுந்த கஸ்டம்ஸ் அதிகாரியாக பணியாற்றிய இவரை, எதிரிகள் நடுக்கடலில் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தால், நிலை குலைந்து போனவர் கார்த்திக்கின் தாய் சாவித்திரி தான்.
வெளி உலகம் தெரியாமல் இருந்தவர், கணவரின் இழப்பீட்டு தொகையை வைத்து, தன் கண்ணான மகன் கார்த்திக்கை படிக்க வைத்தார்.
இவர், தன் கண்ணாக கருதிய மகன் கார்த்திக்கிற்கு, சிறு வயதில், இடது கண்ணில் ஏற்பட்ட ஒரு சின்ன பிரச்னைக்காக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பயிற்சி டாக்டர்கள் செய்த தவறான ஆபரேஷனால், இடது கண் பார்வையை இழந்தார். பிறகு, மூத்த டாக்டர்கள் பார்த்து, வருத்தம் தெரிவித்தவர்கள், கூடுதலாக ஒரு அதிர்ச்சி தகவலையும் தந்தனர்.
யாராவது கன்னத்திலோ, தலையிலோ அடித்தால், வலது கண்ணும் பாதிக்கப்படலாம் என்பதுதான் அந்த தகவல்.
இது நடந்துவிடக் கூடாது என்பதில், மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தபோதும், விதி வலியது என்பது போல, அந்த கொடுமையும் ஆசிரியை ஒருவர் கோபங்கொண்டு தலையில் அடித்ததன் மூலம் நடந்து விட்டது.
அடித்த ஒரு மணி நேரத்தில், வலது கண் பார்வையும், போய்விட, எதிரே இருந்தவை மட்டுமல்ல, எதிர்காலமே இருண்டதைப் போலானது.
இழந்த பார்வையை பெறுவதற்காக போராடியதில், இருந்த பணத்தையும் இழந்தது தான் கண்ட பலனாக இருந்தது.
வறுமையும், வாழ்க்கையும் துரத்த, சென்னை பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்தார் கார்த்திக்.
இவர் தன் வேதனைக்கான வடிகாலாக இசையை தேர்ந்தெடுத்தார். எதிலும் வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படும் இவர், தன் திறமையால், சிறந்த பியானோ கலைஞரானார். 1,800 பேர் கலந்து கொண்ட இசைப்போட்டியில் முதலாவதாக வந்தார்.
மதுரையில் ஒரு மியூசிக் ஸ்டுடியோவை அமைத்து, நிறைய இசை ஆல்பங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளார். "உன் திறமைக்கு, நீ சென்னை வந்தால், இன்னும் பிரகாசிக்கலாம்' என அழைத்து வந்து அடைக்கலம் தந்தார் தில்லைநாதன்.
சினிமாவில் ரீ-ரிக்கார்டிங் செய்வது என்பது, நம்மால் முடியாது என்று பார்வையற்ற நண்பர் ஒருவர் கூற, "ஏன் முடியாது... நம்மால் முடியும். அதுவும் நானே இதை நிகழ்த்திக் காட்டுவேன்...' என்று, சபதமும் செய்தார். சபதத்தின்படி, முழுக்க மாற்றுத் திறனாளிகளால், மாற்றுத்திறனாளிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, "மா' படத்திற்கு இசை அமைத்தார். அப்படம் பலராலும் பாராட்டப் பெற்றது.
இதை கேள்விப்பட்ட, "கருட பார்வை' இயக்குனர் விவேகானந்தன், "நான் ஒரு திகில் படம் எடுக்கிறேன். இதற்கு இசை அமைக்க முடியுமா?' என்று கேட்டவருக்கு சில, "நோட்ஸ்' போட்டுக் காண்பித்தார். நம்பிக்கையுடன் இவரை இசை அமைப்பாளராக்கினார்.
கிட்டத்தட்ட, 48 நாட்கள், இரவு பகலாக உட்கார்ந்து, படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்தார். பார்வையுள்ள உதவியாளர் ஒருவரை மட்டும் வைத்துக் கொண்டேன். நிறைய சங்கேத வார்த்தைகள் வைத்து, படத்தோடு ரீ-ரிக்கார்டிங் இசையை கலவை செய்தார். இயக்குனர் பார்த்துவிட்டு பாராட்டினார். இப்போது, மக்கள் திரையில் பார்த்துவிட்டு பாராட்டுகின்றனர். "சினிமா மூலம் என்னுடைய இசை இன்னும் நிறைய பேரை சென்றடைய வேண்டும், வாழ்த்துங்கள், வளர்கிறேன்' எனக் கூறும் கார்த்திக்கின் தொடர்பு எண்:9976916847.
***

எல். பத்மராஜன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasubramamanian - coimbatore  ( Posted via: Dinamalar Blackberry App )
14-ஜூன்-201315:14:20 IST Report Abuse
Rajasubramamanian வாழ்த்துக்கள். இறைவன் அருளால் மேன்மேலும் உயர்வீர்கள்
Rate this:
Cancel
Abdul Kareem - Doha Qatar,கத்தார்
13-ஜூன்-201310:36:16 IST Report Abuse
Abdul Kareem ஒளி இழந்த கண்கள் மீண்டும் ஒளிர இறைவனை வேண்டும் அன்பன்..
Rate this:
Cancel
Poornima - Singapore,சிங்கப்பூர்
13-ஜூன்-201304:50:47 IST Report Abuse
Poornima வாழ்த்துக்கள் மேலும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X