14 ஆண்டுகளாக சத்தமின்றி மருத்துவ சேவை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2013
00:00

மதுரையில் 14 ஆண்டு கள்... 40 ஆயிரம் பயனாளி கள்... என சத்தமில்லாமல், சாதனை படைத்து வருகிறது அகில இந்திய வித்தியார்த்தி பரிஷத் மற்றும் இளைய பாரதம் சேவா டிரஸ்ட். வெயில் சுட்டெரித்தாலும், மழை மிரட்டினாலும், இவர்கள் சேவை மட்டும் ஞாயிற்றுக்கிழமை ஆனாலும் தவறுவதே இல்லை.
மதுரை முனிச்சாலை, சீனிவாச பெருமாள் கோவில் சந்தில், உள்ள இவர்களது அலுவலகத் தில், ஞாயிற்றுக்கிழமை தோறும் இலவச மருத்துவ முகாமை நடத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் கண், காது, மூக்கு, தொண்டை, இதயம், சிறுநீரகம் என, மதுரையின் பிரபல மருத்துவர்களை கொண்டு சிறப்பு முகாம்களையும் நடத்த தவறுவதில்லை.
இதற்கெல்லாம் விதையாக வித்திட்டவர், மதுரைக் கல்லூரி பேராசிரியர் கே.ஆர். பரமசிவம். ஏ.பி.வி.பி., மாநில தலைவராக இருந்த இவர், 1998ல் படுகொலை செய்யப்பட்டார். பிரம்மசாரியான இவர், ஏழைகளுக்கு சேவை செய்வதை உயிர்மூச்சாக கொண்டிருந்தவர். அதனால்தான், அவர்களது மனதில் வாழ்கிறார். சின்ன சேவை செய்தால்கூட, விளம்பரம் தேடும் இக்காலத்தில், எப்படி சத்த மில்லாமல் 14 ஆண்டு களாக இந்த சாதனையை செய்து, 15வது ஆண்டில் அடி எடுத்து வைக்க முடிந்தது?
ஏ.பி.வி.பி., ஒருங்கிணைப் பாளர் நரசிங்கபெருமாள், இளைய பாரதம் ஒருங்கிணைப் பாளர் குமரேஷ், இது பற்றி கூறுகின்றனர்:
இதுவரை குழந்தைகளில் இருந்து முதியோர் வரை, உச்சி முதல் பாதம் வரை என, 607 முகாம்களை நடத்தியுள்ளோம். சர்க்கரை, இ.சி.ஜி., ரத்த அழுத்தம் என, மருத்துவ பரிசோதனை செய்துவிட்டு, மருந்து கொடுப் பதுடன் எங்கள் பணி முடிவதில்லை. வாரந்தோறும் சம்பந்தப் பட்டோரை வரவழைத்து, ஏற்கனவே அவர்களுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள், பரிசோதனை களை ஆய்வு செய்து, தொடர்ந்து மருந்து, மாத்திரை வழங்கி வருகிறோம்.
இதன்மூலம் நோயாளியை எங்கள் கவனிப்பிலேயே வைத்திருக்கிறோம். மருந்து, மாத்திரை வழங்க ஒரு ரூபாய்கூட வாங்குவதில்லை. எல்லாமே நல்ல உள்ளங்கள் வழங்கும் நிதியுதவியால் சாத்தியமாகிறது. இச்சேவைக்கு உதவினால், வருமான வரி விலக்கும் உண்டு.
எங்களது இந்த சேவை தொடருவதற்கு தொண்டர்கள், தன்னார்வ இளைஞர்களின் தன்னலமற்ற உள்ளமே காரணம். அடுத்து எங்கள் சேவையை, மற்ற பகுதிகளிலும் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.''
இவர்களை 98421 89404ல் வாழ்த்துவோம்.
***

கே. ராம்குமார்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hariaharan Adhiseshan - Madurai,இந்தியா
10-ஜூன்-201309:59:47 IST Report Abuse
Hariaharan Adhiseshan நல்ல பணி தொடர வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
காயத்ரி - Chennai,இந்தியா
10-ஜூன்-201308:09:56 IST Report Abuse
காயத்ரி மிகவும் சிறந்த சேவை. உள்ளமார்ந்த பாராட்டுகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X