அதிமேதாவி அங்குராசு! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2013
00:00

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

பள்ளிக்கு போகும் பிள்ளைகள்!
ஸ்கூல் சேப்டி பத்தி உங்க குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதோடு, பயிற்சியும் கொடுங்கள். உங்களைப் பார்த்து குழந்தைங்க நிறைய கத்துப்பாங்க. அதனால், வண்டி ஓட்டும்போது ஹெல்மெட் போடுறது, மிதமான வேகத்தை கடைப்பிடிக்கறது, சிக்னல் பாலோ பண்றது, போன் பேசாம வண்டி ஓட்டறதுன்னு நீங்க முதல்ல டிராபிக் ரூல்ஸை மதிக்கணும்.
அதுக்குப் பிறகு நீங்க செய்ய வேண்டியது, உங்க குழந்தைங்க போற வேனோ, ஆட்டோவோ ஒழுங்கா இருக்கான்னு பார்க்கணும். சீப்பா இருக்குன்னு சொல்லி நிறைய குழந்தைகளை ஏத்துற ஆட்டோ, வேனை தவிர்த்துடுங்க. இந்த மாதிரி விஷயங்கள்ல சைக்கிள்ல போறவங்களா இருந்தா, நேரத்துக்கு கிளம்புறாங்களான்னு பார்க்கணும். அப்பதான் அவங்க வேகமா ஓட்ட மாட்டாங்க. அதேபோல, டிராபிக் ரூல்ஸை பாலோ பண்ண சொல்லுங்க. டிராபிக் ரூல்ஸை பாலோ பண்ணாம வேகமாக போகும்போது, அடிபடற வாய்ப்புகள் அதிகம். அப்புறம் ஸ்கூல் வகுப்பறைகள் சுத்தமாகவும், போதிய வெளிச்சம் (ம) காற்றோட்டத்துடனும் இருக்கா? படிக்கட்டுகளும், வெளியேறும் வழிகளும் அகலமா இருக்கா? மேல் கூரை ஸ்ட்ராங்கா இருக்கா? தேவையான அட்டெண்டர்ஸ் இருக்காங்களான்னு பார்க்கணும்.
மேல் வகுப்பாய் இருந்தா, லேபரட்டரியில் சரியான சூப்பர்வைசிங் இருக்கா? லேப்புக்கு என இருக்கும் ரூல்ஸை ஒழுங்கா பாலோ பண்றாங்களான்னு கண்டிப்பாக கவனிக்கணும். விளையாட்டின் போதுதான் அடிபடும் வாய்ப்புகள் அதிகம். விளையாட்டு மைதானங்கள் ஒழுங்கா பராமரிக்கப்படுதான்னு பார்க்கணும். விளையாட்டுக் கருவிகள் நல்லா இருக்கா, அவசர காலத்தில் என்ன செய்யணும்கிற பயற்சி பெற்ற தகுதியான பயிற்சியாளர்கள் இருக்காங்களான்னு பார்க்கணும்.
விளையாட்டில் ஈடுபட உங்கள் குழந்தைகள் பிஸிகலி பிட்டா இருக்காங்களான்னு பார்க்கணும். வெயில்ல அதிக நேரம் விளையாடுவதற்குத் தேவையான நீர்ச்சத்து இருக்க போதிய அளவு தண்ணீரைக் குடிக்கச் சொல்லணும். உங்க குழந்தைகளுக்கு ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் இருந்தால், பள்ளியின் பொறுப்பாளரிடம் உங்க குழந்தையின் உடல் நலம் பத்தி சொல்லி வைக்கணும். ஏதாவது அசவுகரியம் ஏற்பட்டா என்ன செய்றதுன்னு அவங்களுக்கு முன்பே சொல்லி வைக்கணும். குழந்தைகளுக்கும், அவங்களோட உடல் நிலையைப் பத்தியும், அவசர காலத்தில் என்ன என்ன செய்யணும்கிறது பத்தியும் புரியவைங்க.
குழந்தைகளுக்குள் நடக்கிற சின்னச் சின்ன சண்டைகளை பெரிசுபடுத்தாதீங்க. சூழ்நிலை கைமீறிப் போகும்போது, உங்கள் குழந்தையின் ஆசிரியர் (அ) தலைமையிடத்துக்கு செய்தியை எடுத்துச் செல்லுங்கள். வீட்டை விட்டு வெளியில் போகும் குழந்தைகள் நிறைய விஷயங்கள் கத்துக்கறதோடு, நிறைய பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். பிரச்னை வந்தால் பயந்து ஓடாமல், எதிர்கொள்ள குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்க. நம்மை விட அனுபவ அறிவு குறைவாக இருக்கும் குழந்தைகளோட சேப்டிங்கறது பெத்தவங்களோட பொறுப்புதான். அதனால குழந்தைகளிடம் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்த வேண்டியது பெத்தவங்களோட கடமை.

பாத்திரம் தேய்க்க டிப்ஸ்...
*பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ஸ்கரப்பரில் தாம்பூல சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு கறுத்துப் போன வெள்ளிப் பாத்திரம், பூஜை சாமான்களையெல்லாம் அழுத்தித் தேய்த்தால் பளிச்சென்று ஆகிவிடும்.
* உப்புத்தன்மை கொண்ட தண்ணீர் காரணமாக துலக்கி வைக்கும் பாத்திரங்கள் வெள்ளைப் பூத்துப் போகிறதா? பாத்திரங்களை உப்புத் தண்ணீரில் கழுவிய பிறகு ஒரு சிறிய வாளியில் நல்ல தண்ணீரை வைத்து அதில் முக்கி எடுத்து விடுங்கள்.
* பித்தளைப் பாத்திரங்களை கழுவிய பிறகு, தோல் சீவிய உருளைக்கிழங்கை பாத்திரத்தின் மீது தேய்த்துப் பாருங்கள். புதுசு போல மின்னும்.
* தண்ணீரில் ஒரு சிட்டிகை சோடா, கொஞ்சம் அலுமினியம் பாயில் ஆகியவற்றோடு வெள்ளிப் பொருள்களைப் போட்டு கொதிக்கவிடுங்கள். ஆறியதும் துடைத்தால் வெள்ளிப்பொருள்கள் பளிச்சென்று இருக்கும்.
* பால் பாத்திரம் தீய்ந்துவிட்டதா? பாத்திரம் வீண் என்று நினைக்க வேண்டாம். சிறிதளவு வெங்காயத்தை அந்தப் பாத்திரத்தில் போட்டு, நீர்விட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டால், தீய்ந்த கறை போய்விடும்.
* பாத்திரங்களைக் கழுவும் நீரில் அவ்வப் போது கொஞ்சம் வினிகரைக் கலந்து கழுவினால் பாத்திரங்கள் மின்னும்.

இம்சை அரசி கொசு!
1. கொசுக்களுக்கு வெள்ளை, மஞ்சள் நிறங்களைக் கண்டால் பிடிக்காது.
2. கொசுக்களில் பெண் கொசுக்கள் மட்டுமே நம்மைக் கடிக்கும்.
3. ஆண் கொசுக்களுக்கு செடி, இலை, தழைகளே உணவாகின்றன.
4. கொசு நம்மைத் தேடி வரும்போது விநாடிக்கு 250 முதல் 600 தடவைகள் வரை அதன் சிறகுகளை அடித்துக் கொள்ளும்.
5. உலகில் 2700 வகை கொசு இனங்கள் உள்ளன.
6. கொசு இனங்களில் சில பகல் நேரங்களிலும், சில அந்தி நேரத்திலும், மற்றவை இரவு நேரத்திலும் கடிக்கக் கூடியவை.
7. ஒரு சொட்டு ரத்தம் 20 கொசுக்களுக்கு உணவாகிறது.

கலாம் காலம்!
கேள்வி: நல்ல நாள், கெட்ட நாள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனைச் சுற்றி வருகிறது. அப்படிச் சுற்றி வருகிற போது பூமியின் மீது சூரிய வெளிச்சம் படுகிற பகுதி பகலாகவும், படாத பகுதி இரவாகவும் ஆகிறது. இரவும், பகலும் சேர்ந்ததுதான் நாள். இதில் நல்லது எங்கே? கெட்டது எங்கே? எல்லா இரவுகளும் நல்ல இரவுகளே, எல்லா பகல்களும் நல்ல பகல்களே என்றார் அன்பு கலாம்.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
தேவையானவை: கத்திரிக்காய்-100 கிராம், உருளை-2, வெங்காயம்-2, தக்காளி-3, உப்பு- சுவைக்கு, சிவப்பு மிளகாய்- 10, தனியா-1 மேசைக்கரண்டி, சீரகம்-1/2 டீஸ்பூன், சோம்பு-1/2 டீஸ்பூன், பூண்டு-5 பல், பட்டை-1, எண்ணெய்-3 மேசைக்கரண்டி, முந்திரி-5, தேங்காய் துருவல்-1/2 கப்.
செய்முறை: கத்திரிக்காய், வெங்காயம், உருளை, தக்காளி ஆகிய காய்கறிகளை பொடியாக நறுக்கவும். முந்திரி, தேங்காய் துருவல் இரண்டையும் அரைத்துக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், தனியா, சீரகம், சோம்பு, பூண்டு ஆகியவற்றை அரைத்து தனியாக வைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து பட்டை, வெங்காயத்தை நன்கு வதக்கவும். அதனுடன் கத்திரிக்காயையும், உருளையையும் சேர்த்து வதக்கவும். தக்காளி அரைத்து வைத்துள்ள மிளகாய் மசாலாவை இதனுடன் சேர்த்து மிளகாய் வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தேங்காய், முந்திரி, மசாலா சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியானதும் கருவேப்பிலை சேர்த்து இறக்கவும். சாப்பிட்டு பாருங்க!

என்றும் உங்கள் அன்பு,
அங்குராசு

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X