பாதுகாப்பு!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2013
00:00

ஒருசமயம் பல்லவ நாட்டு அரசன் வீரர்களுடன் படகில் சென்று கொண்டிருந்தான். வேலையாள் ஒருவனும் அந்தப் படகில் இருந்தான். இதற்கு முன் அவன் படகில் பயணம் செய்ததும் இல்லை; கடலைப் பார்த்ததும் இல்லை. இதனால், கடலையும், படகையும் பார்த்து நடுங்கினான்.
அலைகளில் படகு மேலே ஏறி இறங்குவது, அவன் நடுக்கத்தை அதிகப்படுத்தியது.
""அரசே! என்னை விட்டு விடுங்கள். எங்காவது சென்று விடுகிறேன்,'' என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தான்.
படகைவிட்டு வெளியே குதிக்க முயற்சி செய்தான். அவனை வீரர்கள் பிடித்துக் கொண்டனர். அவனோ திமிறிக் கொண்டிருந்தான்.
இதைப் பார்த்த அரசன், ""வீரர்களே! அவனைத் தூக்கிக் கடலில் போடுங்கள்,'' என்று கட்டளை இட்டான்.
வீரர்களும் அவனைத் தூக்கிக் கடலில் போட்டனர்.
தண்ணீரில் தத்தளித்த அவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான்.
வீரர்களைப் பார்த்து அரசன், ""அவனைத் தூக்கி வந்து படகில் போடுங்கள்,'' என்றான்.
கடலில் குதித்த வீரர்கள் அவனைக் காப்பாற்றிப் படகுக்குக் கொண்டு வந்தனர்.
படகுக்குள் வந்த அவன் இப்போது அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. அமைதியாக இருந்தான்.
இதைப் பார்த்து வியப்பு அடைந்த வீரன் ஒருவன், ""அரசே! கடலுக்குள் தூக்கிப் போட்டதும், இவன் அமைதியாகி விட்டானே... என்ன காரணம்?'' என்று கேட்டான்.
அதற்கு அரசன், ""இவன் இதற்கு முன் கடலையோ, படகையோ பார்த்தது இல்லை. முதன் முதலில் அவற்றைப் பார்த்ததும் அஞ்சி நடுங்கினான். அவனைக் கடலில் தூக்கிக் போட்டதும் படகுதான் பாதுகாப்பு என்ற உண்மை அவனுக்குப் புரிந்து விட்டது. அதனால்தான் இப்போது அமைதியாக இருக்கிறான்,'' என்று விளக்கம் தந்தான்.
***

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X