தொடர்தை - கி.பி.3003 - பகுதி (4) - பூரணி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2010
00:00

இதுவரை:- அமெரிக்க விஞ்ஞானி பவிஷ்கோஷ் கடத்தப்பட்டார். இதற்கு பொறுப்பேற்க வேண்டிய இந்திய விஞ்ஞானி சிக்கலில் மாட்டினார்.   
இனி-
பசிபிக் சமுத்திரத்தின் நடுவில் அதி நவீன 500 நீர்மூழ்கிக் கப்பல்களின் மேல் அமைந்துள்ளது ஆரவாரமான செயற்கை தீவு. அதன் தலைவன் தான் மொட்டைத் தலையன் சாங்கிளிபட். அவன் பல நாடுகளில் இருக்கும் மிகவும் திறமை வாய்ந்த விஞ்ஞானிகளை, அதிக வசதிகளும் சவுகரியங்களும் செய்து கொடுத்து நாடு கடத்தி அழைத்து வந்தான். அவர்கள் மூலம் உருவானதே இந்த செயற்கை தீவு. இது கடல் வழி, வான் வழி என்று எந்த தாக்குதலுக்கும் ஈடு கொடுக்கும்படி மிகத் திறமையுடன் உருவாக்கப்பட்டிருந்தது. அந்த தீவில் உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகள் தவிர இதர பலரும் வேலை பார்த்து வந்தனர். அவர்களின் முக்கிய வேலை மக்களின் மூளையை மயக்கும் சக்தி உள்ள போதை பொடியை உற்பத்தி செய்து அதை பல நாடுகளுக்கும் விற்று பெரும் செல்வம் சம்பாதிப்பதுதான்.
அதிநவீன உத்தி கொண்டு போதை மருந்தை தயாரிக்கும் பணியில் விஞ்ஞானிகளும் ஈடுபட்டிருந்தனர். இது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால் உலகில் பாதிப்பேர் இந்த மருந்துக்கு அடிமைகளாகி இருந்தனர். அது இல்லாவிடில் உயிரே போய்விடும் என்று அஞ்சுமளவுக்கு மக்களிடம் போதை பொருளின் உபயோகம் அதிகரித்திருந்தது.
அந்த தீவின் தலைவன் சாங்கிளிபட்டுக்கு வலது கரமாக விளங்கியவன் தான் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி அம்ருடன். அவன் பிறந்த மண்ணிற்கு துரோகம் இழைத்துவிட்டு செயற்கை தீவின் தலைவனோடு கைகோர்த்து கொண்டிருந்தான். ஒரு காலத்தில் இந்தியாவின் தலைமை விஞ்ஞானியாக இருந்தவன் பின்னர் செயற்கைத்தீவின் தந்திர வலையில் சிக்கி தாய் நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டு ஓடினான். அவன் மிகச்சிறந்த விஞ்ஞானி ஆனதால் செயற்கை தீவு அமைவதற்கு அவன் பங்கு பெருமளவு இருந்தது.
பல விஞ்ஞான சிக்கல்களை எளிதில் தீர்க்கும் வல்லமை படைத்தவன். அடிக்கடி நவீன உத்திகளை கையாண்டு செயற்கை தீவின் பாதுகாப்பை பலப்படுத்தினான். அதனால் மொட்டைத் தலையன் சாங்கிளிபட் அவனை தன் வலது கரமாக நினைத்து அத்தனை அதிகாரங்களையும் மதிப்பையும் கொடுத்திருந்தான். அம்ருடனின் உளவு விஞ்ஞானி சகாணிதான் இந்தியாவின் உதவி விஞ்ஞானியாக பணியில் இருந்து விஞ்ஞானிகளின் சிற்பி பவிஷ்கோஷ் கடத்தப்பட காரணமாக இருந்தவன்.
தலைவன் சாங்கிளிபட் அன்று பெரும் உற்சாக வெள்ளத்தில் மூழ்கி இருந்தான். ""வெற்றி! வெற்றி! என்றுமே இனி இந்த செயற்கைத் தீவின் தலைவனுக்கு வெற்றிதான். அதற்கு காரணமான விஞ்ஞானி அம்ருடனுக்கு என் பாராட்டுக்கள்,'' என்று எக்காளமாக சிரித்தபடி அம்ருடன் இருந்த அறைக்குள் பிரவேசித்தான்.
""ஆம். ஆம்... முதலில் அமெரிக்காவின் வேவுகணையை தகர்த்தோம். அடுத்து உலகின் தலைசிறந்த முதிய விஞ்ஞானி பவிஷ்கோஷையும் கடத்தி சிறை பிடித்துவிட்டோம். இனி நம் தீவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது,'' என்று அம்ருடனும் பதிலுக்கு அட்டகாசமாக சிரித்த அதே வேளையில் செயற்கை தீவிற்கு அபாயம் அறிவிக்கும் எச்சரிக்கை இயந்திர மனிதன் வேகமாக எச்சரிக்கை மணியை ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தான்.
""என்ன, நமக்கே எச்சரிக்கையா? அப்படி என்றால் அது எங்கிருந்து வருகிறது?'' என்று தலைவன் பதறினான். அம்ருடன் ரகசிய அறைக்குச் சென்று பெரும் மின் திரையை நோக்கினான். அது இந்திய தலைநகர் டில்லி என்பதை குறிக்கும் வகையில் ஆசியாவின் உளவு நட்சத்திரம் மகாபலி உளவுக் கூடத்தில் இருந்து செய்தியை அனுப்பிக் கொண்டிருந்தது.
""என்ன... ஆபத்து டில்லியில் இருந்தா? உடனே அந்த வான் ஒற்றன் மகாபலியை அழைத்து உண்மையை கண்டறியுங்கள்,'' என்று தலைவன் கட்டளை கொடுக்கவும் அம்ருடன் சற்றும் தாமதியாது மின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த இயந்திர மனிதனுக்கு கட்டளை கொடுத்து இயக்க,
""தலைவா வந்து விட்டேன். உத்தரவுக்கு காத்திருக்கிறேன்,'' என்று கூறியபடி பச்சை வண்ண நட்சத்திர ஒற்றன் மகாபலி, பெரும் மின்திரையில் தோன்றினான்.
""மகாபலி, டில்லியில் இருந்து ஆபத்து என்பதாக சமிஞ்சை கொடுத்தாயே... அதை என்னவென்று சொல்ல முடியுமா?''
""உத்தரவுக்கு அடிமை இந்த மகாபலி. இதோ அந்த ஆபத்தை மின் திரையில் நீங்களே பாருங்கள்.''
விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடத்தின் முதலுதவி கட்டடத்தில் சிகிச்சை பெற்றிருந்த சிறுவன் கைலாஷ் நல்ல நிலையில் உடல் தேறியிருந்தான். தலைமை மருத்துவரிடம், ""என் மாமா எங்கே? இங்கேதானே இருந்தார்,'' என்று கேட்டான்.
""உன் மாமா சற்று முன்தான் போனார். உன் உடல் நலம் தேறியதும் உடனே உன்னை டிஸ்சார்ஜ் செய்யச் சொல்லிவிட்டார்,'' என்று புன்னகை ததும்ப கூறினார் தலைமை மருத்துவர்.
அதைக்கேட்டு தலையசைத்த ரோபோ, ""ஏண்டா கைலாஷ், உன் காலில் பட்ட அடிக்கு மூளையா பாதிச்சிடுத்து. நீதானே ஒரு உண்மையை உன் மாமா கிட்டே கூறினே. ஞாபகம் இருக்கா இல்லியா? நீ கூட அடிக்கடி வாசல்ல போயி வானை பார்ப்பியே. அப்பதானே நமக்கு ஒரு உண்மை விளங்கிச்சு.
""அதாவது அமெரிக்க வேவுகணை வெடித்து சிதறிய போதும், பெரிய விஞ்ஞானி பவிஷ்கோஷ் கடத்தப்பட்ட போதும் நீ வானில் பார்த்த அந்த விந்தை நட்சத்திரத்தை பற்றி உன் மாமாவிடம் கூறினாயே. மறந்து விட்டதா?'' என்று ரோபோ அவன் தலையை தடவியபடி செல்லமாக கேட்டது.
""ஓ... ஞாபகம் வந்துவிட்டது. ஆம். நான் கூறவும், உடனே அதை அழிக்க வேண்டும். அது சாதாரண நட்சத்திரம் அல்ல. போதை தீவினரின் உளவு நட்சத்திரம்,'' என்று மாமா அதிர்ச்சி அடைந்து ஒடினார். ஞாபகம் வந்துவிட்டது என்று கைலாஷ் கூறவும் தலைமை மருத்துவர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
இதை எல்லாம் திரையில் பார்த்துக் கொண்டிருந்த தலைவன் பெரும் கூச்சலிட்டான். ""விஞ்ஞானி அம்ருடன் அவர்களே... உடனே அந்த மகாபலியை அழைத்து தக்க கட்டளை கொடுங்கள். இல்லையேல் நமக்கு ஆபத்தாகிவிடும்,'' என்று எச்சரித்தான்.
""தலைவா! இப்போது நாம் தலைமை விஞ்ஞானி பிரகடீஸ்வரின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு மொத்தமாக கட்டளை கொடுக்கிறேன்,'' என்ற அம்ருடன் மின் திரையில் மகாபலி தோன்ற கட்டளை கொடுத்தான். அதுவும் தலைவணங்கியபடி தோன்றியது.
ஒற்றன் மகாபலிக்கு உத்தரவு. ""தலைமை விஞ்ஞானி பிரகடீஸ்வரின் செயல்பாடுகளை திரையிடவும்!''
""உத்தரவு!'' என்று கூறிவிட்டு அந்த நட்சத்திரம் செல்ல இப்போது பிரகடீஸ்வரின் செயல்பாடுகள் திரையில் தோன்ற ஆரம்பித்தன. அதே சமயத்தில் கைலாஷ் சரியாகி விட்டதால் அவனை பத்திரமாக அவன் இல்லம் அனுப்பி வைத்தார் தலைமை மருத்துவர். ரோபோ அவனை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றது.
"ஓ... எல்லா நாச வேலைக்கும் இந்த உளவு நட்சத்திரம் தான் காரணமா? அமெரிக்க வேவுகணை வெடித்து சிதறவும், நம் விஞ்ஞானி பவிஷ்கோஷ் கடத்தவும் இதுதான் முக்கிய உளவாளியாக அந்த போதைத் தீவிற்கு செயல்பட்டிருக்கிறது. நல்ல வேளையாக கைலாஷ் இதை கவனித்து கூறிவிட்டான்.
 "நம் முதல் வேலை அந்த நட்சத்திரம் இருக்கும் இடத்தை கண்டு அறிய வேண்டும். பின் அதன் சக்தியை முடக்கி அதை தரையில் இறக்க வேண்டும்' என்று தனக்கு தானே வேகமாக உணர்ச்சி ததும்ப பேசிக் கொண்டு தலைமை விஞ்ஞானி பிரகடீஸ்வர் தலைமையகத்துக்கு வந்தார்.
வான் நோக்கி அமைக்கப்பட்டிருந்த டெலஸ்கோப் இருக்கும் விஞ்ஞான கூடத்தின் மேல்தளத்துக்கு விரைந்தார். அந்த பெரும் தொலைநோக்கி வானில் சஞ்சரிக்கும் மேகக் கூட்டங்களை நோக்கினார். அதில் அடர்த்தியாக இருள் சூழ்ந்திருக்கும் மேகங்களை நோக்கினார். உன்னிப்பாக கவனிக்கலானார்.
""ஆம்... ஆம்... நம் கைலாஷ் சொன்னது சரியே. அதே மின் மினுக்கும் பச்சை நட்சத்திரம். நம் விண் ரேடாருக்கே இது டிமிக்கி கொடுத்து செயல்பட்டிருப்பதால் மிகத் திறமையுடன் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் துரோகி அம்ருடன் தலைசிறந்த விஞ்ஞானிதான். சந்தேகமில்லை. ஆனால், அவனையும் மிஞ்சுவான் இந்த பிரகடீஸ்வர். இதோ இந்த உளவு நட்சத்திரத்தை ஒரு நொடியில் செயலிழக்கச் செய்கிறேன்,'' என்று கூறி அவசரம் அவசரமாக கீழ்தளம் இறங்கி அதற்கான வேலையில் ஈடபடவும் தலைவன் சாங்கிளிபட் கொதிப்புடன் எழுந்தான்.
""அய்யோ... நம் செயல்பாடுகள் இப்போது தெரிய ஆரம்பித்து விட்டது. பெரும் அபாயத்தில் சிக்கி உள்ளோம். அதற்கு காரணம் அந்த பொடியன் கைலாஷ்.  நம் உளவாளி மகாபலியை அழிக்கவே அந்த பிகரடீஸ்வர் செயலிறங்கி விட்டான். உடனே இருவரையும் அழித்து நம் ஒற்றனை காப்பாற்றுங்கள். இல்லையேல், இனி நம்மால் எங்கும் செயல்பட முடியாது,'' என்றான் தலைவன். அவன் கட்டளைக்கேற்ப உளவாளி நட்சத்திரம் மின் திரையில் தோன்றியது.
""உடனடியாக பிரகடீஸ்வர் இருக்கும் விஞ்ஞான தலைமைக் கூடத்தையும், கைலாஷ் இருக்கும் ஆராய்ச்சிக் கூடத்தின் முதலுதவி சிகிச்சை கட்டடத்தையும் தரைமட்டமாக்கு!'' என்று கூறவும் உடனே இயந்திர எச்சரிக்கை மனிதன் கட்டளை பட்டன்களை இரு முறை அழுத்தினான். "உத்தரவு' என்று கூறி வேகமாக மறைந்தது.
அனைவரும் மின் திரையை நோக்கிக் கொண்டிருக்கையில், மகாபலி விரைவாக செயல்பட்டு வானின் கருமேகங்களிடையே புகுந்து அதன் மின்னல் சக்தியை பெரும் இடியாக்கி தன் லேசர் ஒளிக்கற்றை வாயிலாக இந்திய அறிவியல் தலைமைக் கூடத்தையும் முதலுதவி சிகிச்சை கட்டடத்தையும் தரை மட்டமாக்க அந்த பெரும் சப்தத்தில் தலைநகர் டில்லி குலுங்கியது.
( — 4 தொடரும்)

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ranjani - salem,இந்தியா
06-செப்-201012:19:11 IST Report Abuse
ranjani I லைக் திஸ் ஸ்டோரி.. இட்'ச வெரி இண்டேறேச்டிங்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X