சிறுகதை - தன்னை மறந்த கொல்லர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2010
00:00

முன்னொரு காலத்தில் சாந்தப்பன் என்ற கொல்லன் இருந்தான். ஊருக்கு வெளியே அவன் உலைக்களம் இருந்தது. பொறுப்பாகத் தொழில் செய்ததால் அரண்மனை வேலையை அவனிடம் ஒப்படைத்தனர். அவன் வீரர்களுக்கு வாள், வேல், கவசம் போன்றவற்றை செய்துக் கொண்டிருந்தான்.
அப்போது அந்நாட்டு அரசர் வீரர்கள் சூழ ஆரவாரமாக அந்த வழியாக வந்தார். வேலையிலேயே கவனமாக இருந்த அவன் அரசர் வந்ததை அறியவில்லை. அரசரின் பார்வை தற்செயலாக உலைக்களத்திற்குள் சென்றது. அங்கே ஒருவன் தனக்கு வணக்கம் செய்யாமல் அமர்ந்து இருப்பதைப் பார்த்தார்.
குதிரையில் இருந்து கோபத்துடன் இறங்கிய அவர் உலைக்களத்திற்குள் சென்றார். அப்போதும் அவன் அரசர் வந்ததைக் கவனிக்கவில்லை. வாள் முனை கூர்மையாக உள்ளதா என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். தான் வந்ததை அறிவிக்க நினைத்த அரசர் மெல்ல முனகினார்.
குரல் கேட்டுத் தலை நிமிர்ந்து பார்த்தான் அவன். அரசரும் வீரர்களும் நிற்பதைப் பார்த்துத் திடுக்கிட்டான்.
""அரசே! என்னை மன்னியுங்கள். இந்த வாளைக் கூர்மைப்படுத்துவதிலே கவனமாக இருந்தேன். தாங்கள் வந்ததை நான் கவனிக்கவில்லை!'' என்றான்.
"மரியாதை தெரியாத அவனுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ தெரியவில்லையே!' என்று மற்றவர்கள் நினைத்தனர்.
""கொல்லரே! உம் கடமை உணர்வைப் பாராட்டுகிறேன். நீர் வலிமையான படைக் கருவிகளைச் செய்து தருவதால்தான் நம் வீரர்கள் போர்களத்தில் வெற்றி பெறுகின்றனர். உம்மைப் போன்றவர்களின் கடமை உணர்வினால் நம் நாடு பாதுகாப்பாக உள்ளது!'' என்று பாராட்டிவிட்டு அங்கிருந்து சென்றார் அவர்.
குட்டீஸ்... இந்தக் கொல்லர் என்ன மாதிரி கவனமா இருந்து வேலை செய்கிறார் பார்த்தீர்களா? இதே போலவே நீங்களும் படிக்கும்போது கவன சக்தியை சிதறவிடாமல் இருந்து படிக்கணும். சரியா?
***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கார்த்திகேயன் - pudukkottai,இந்தியா
06-செப்-201017:25:56 IST Report Abuse
கார்த்திகேயன் do your duty regularly.
Rate this:
Share this comment
Cancel
ப்ரியதர்ஷன் - சென்னை,இந்தியா
04-செப்-201010:51:10 IST Report Abuse
ப்ரியதர்ஷன் நல்ல கருத்து உள்ள கதை எது எத்தனனை
Rate this:
Share this comment
Cancel
ஜெயஸ்ரீ சம்பத்குமார் - உடுமலைபேட்டை,இந்தியா
03-செப்-201013:21:26 IST Report Abuse
ஜெயஸ்ரீ சம்பத்குமார் wow இந்த மாதிரி எல்லாரும் அவங்க அவங்க வேலைய பார்த்து இருந்தா 2010 - ல கண்டிப்பா இந்தியா வல்லரசு ஆயிருக்கும். .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X