அதிமேதாவி அங்குராசு !
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2010
00:00

அனைவருக்கும் எனது அன்பு.
கிட்ட வந்தா படம்  தெரியாது!
"டிவி' போட்டா குழந்தைகள் பக்கத்தில் போய் ஒட்டி கொண்டு பார்க்கும். அதற்கு "டிவி'யின் வண்ணம், உருமாறும் பொருள்கள் ஈர்ப்பு சக்தியாய் விளங்க, அங்கே போய் பார்க்கிறது. இந்த பழக்கம் பெரிதாக பெரிதாக மாறாமல், கண்ணாடி போடும் நிலைமைக்கு தள்ளிவிடும்.
"டிவி'யின் அருகில் சென்று பார்ப்பதால் உங்கள் குழந்தைக்கு கண் கெட்டுவிடுமே என்று நீங்கள் கவலைப்படுகிறீரா? இனி குறிப்பிட்ட தூரம் அருகில் வந்தால், "டிவி' தானாகவே படம் காட்டுவதை நிறுத்தி விடும். குழந்தை பின்னால் சென்றால் மட்டுமே, "டிவி' பார்க்கமுடியும்.
இப்படி ஒரு சூப்பர் ஸ்மார்ட் "டிவி'யை சோனி நிறுவனம் தயாரித்துள்ளது. அடுத்த மாதம் இங்கிலாந்தில் இது விற்பனைக்கு வருகிறது. இந்தியாவிலும் கிடைக்கும். "டிவி'யை அருகில் இருந்து குழந்தைகள் பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, புதிய தொழில்நுட்பத்தில் இந்த "டிவி' உருவாக்கப்பட்டுள்ளது,
"டிவி'யில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவி, திரையில் இருந்து குறிப்பிட்ட தூரத்துக்குள், யாராவது வந்தால் படத் தெளிவை குறைத்து புள்ளி புள்ளியாகி விடும். அதை புரிந்து கொண்டு குழந்தை தானாகவே குறிப்பிட்ட தூரத்துக்கு செல்ல நேரிடும்.
பாதுகாப்பான அந்த தூரத்தில் இருந்து, "டிவி' பார்த்தால் குழந்தையின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது. பேஸ் டெக்ஷன் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ள இந்த "டிவி'யின் சென்சாரால், குழந்தைகளையும் பெரியவர்களையும் பிரித்து அடையாளம் காண முடியும்.
திரையின் அருகே 12 வயதுக்கு குறைந்தவர்கள் வந்தால் மட்டுமே படம் காட்ட "டிவி' அடம் பிடிக்கும். பெரியவர்கள் வந்தால் திரையில் மாற்றமிருக்காது. தவிர "டிவி' பார்க்கும் முறைகள் பற்றி திரையில் டிஸ்ப்ளேயும் இடம்பெறும்.  அறையில் இருப்பவர் எழுந்து சென்று விட்டால் சில விநாடிகளில் "டிவி' தானாகவே ஆப் ஆகிவிடும் தொழில்நுட்பம் இதில் உண்டு. இதன்மூலம் மின்சிக்கனம் ஏற்படும்.
வாழ்வதற்கு   சாதகமற்ற    நாடுகள்!
சில நாடுகளில் பெரிய பிரச்னைகள் ஏதும் இருப்பதில்லை. அதனால், அங்கே மக்கள் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ்கின்றனர். பல நாடுகளில் வறுமை பிரச்னை, எல்லை பிரச்னை, உள்நாட்டு பிரச்னை, அண்டை நாடுகளுடன் பிரச்னை, தீவிரவாதம் என பற்பல பிரச்னைகள் பாடாய்படுத்துகிறது.  அங்கெல்லாம் பிறநாட்டு மக்கள் போகவே அஞ்சுவர். சில நாடுகளில் அந்நாட்டு மக்கள், அகதிகளாய் வேறு இடம் நாடி போக வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும்.  இந்தியாவுக்கு 128வது இடம் என ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவின் குளோபல் பீஸ் இன்டெக்ஸ் (ஜி.பி.ஐ.,) ஆய்வு விவரம்:
மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் வாழ்வதற்கு சாதகமற்ற சூழல் உள்ள 149 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் ஈராக், சோமாலியா, ஆப்கானிஸ்தான், சூடான் ஆகிய நாடுகள்  முதல் நான்கு இடத்தில் உள்ளது.
அழகு டிப்ஸ்!
* சிலருக்கு நெற்றியில் குங்குமம் வைத்த இடம் கறுப்பு திட்டாக மாறிவிடும். அப்படி ஆகாமல் இருக்க, தேங்காய் எண்ணெய் தடவி அதன் மேல் குங்குமம் வைத்தால், குங்குமம் வைத்த இடத்தில் கருப்பு திட்டுகள் வராது.
* எந்த க்ரீம் போட்டாலும் முகப்பரு போகவில்லையா? டோண்ட் ஒர்ரி. இரண்டு பல் பூண்டை நசுக்கி, அதன் சாற்றை பருக்களின் மீது பூசுங்கள். பருக்கள் பறந்துவிடும்.
கலாம் காலம்!
உங்களுக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை உள்ளதா?
அன்பு கலாம் அவர்களின் பதில்: விடாமுயற்சியுடனான கடின உழைப்பும், வியர்வையுமே வெற்றியை பெற்று தரும்.
எதை வெற்றிகரமான சாதனையாக கருத முடியும்?
அன்பு கலாம் அவர்களின் பதில்: இது மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. பிறரால் சாதிக்க முடியாத ஏதேனும் ஒன்றை சாதித்துக்காட்டி ஜெயித்தால், நீங்களும் சாதனையாளரே. உங்கள் சாதனையில் எவ்வளவு பேர் வாழ்வு மலருகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
அம்மா! ப்ளீஸ்  செஞ்சு தாங்கம்மா!
இது வெஜிடபிள் ரைஸ் செய்முறை நேரம்.
செய்முறை:
நெய்யை காய வைத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், முந்திரி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பிறகு காய்கறிகளை சேர்த்து வேகும் வரை வதக்கவும். தக்காளி சாறு, மிளகாய்த்தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். கரம் மசாலா, வடித்த சாதம் சேர்த்து கிளறி இறக்கவும். நபர்களுக்கு ஏற்றபடி தேவையானவைகளை கூட குறைய வைத்து செய்யவும்.
டயட்டிஷியன் கமென்ட்ஸ்:
எப்போதும் குழைந்த சாதத்தையே சாப்பிடும் குழந்தைகள், இந்த உதிர் உதிரான சாதத்தை விரும்பி சாப்பிடுவார். இதில் காய்கறிகளில் உள்ள அத்தனை சத்துக்களும் கிடைத்துவிடும்.
எண்களும் - செய்தியும்!
30,000 - ராங் கால்கள் தினமும் 108 சேவைக்கு வருகின்றன.
46.16 - லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு.
4,70,000 - ஏக்கர் கோவில் நிலங்கள் தமிழகத்தில் உள்ளன.
2 - வது இடம், இந்தியாவில் அதிக காவலர்கள் உள்ள பட்டியலில் தமிழ்நாட்டுக்கு!
7,17,957 - குற்றங்கள் கடந்த ஆண்டு தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன.
அன்புடன் அங்குராசு.
***

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X