கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2013
00:00

கேள்வி: ப்ளக் இன் புரோகிராம் என்று சுட்டிக் காட்டப்படுபவை, அப்ளிகேஷன் புரோகிராம்களா, அல்லது குறிப்பிட்ட பணியை மேற்கொள்ளும் பைலா?
எஸ். புவனா, கோவை.
பதில்:
ப்ளக் இன் என்று அழைக்கப்படுவது ஒரு சிறிய புரோகிராம். இது உங்கள் பிரவுசருடன் இணைந்து செயலாற்றும் வகையில் வடிமைக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட சில வகைகளில் வடிவமைக்கப்பட்டிருக்கும் வெப் மீடியாவினை இயக்க இந்த ப்ளக் இன் புரோகிராம்கள் தேவைப்படும். எடுத்துக்காட்டாக சில வெப் தளங்கள் நீங்கள் கேம்ஸ் விளையாட ஷாக்வேவ் தரும் வசதியினைப் பயன்படுத்துகின்றன. எனவே நீங்கள் இந்த கேம்ஸ் விளையாட வேண்டும் என்றால் ஷாக் வேவ் ப்ளக் இன் கட்டாயம் தேவை. அப்படியானால் அனைத்து ப்ளக் இன் புரோகிராம்கள் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டுமா என்று எண்ண வேண்டாம். நீங்கள் குறிப்பிட்ட கேம்ஸ் அல்லது வேறு வகை வெப் மீடியாவினைத் திறக்க எண்ணுகையில் அந்த தளமே உங்கள் கம்ப்யூட்டரைத் தேடிப் பார்த்து இந்த ப்ளக் இன் இல்லை. சற்றுப் பொறுக்கவும்; நானே தேடிப் பதிந்து கொள்கிறேன் என்று அறிவித்துவிட்டு அந்த ப்ளக் இன் புரோகிராமினைப் பதிந்துவிடும்.
ஆனால் இப்போது வரும் பெரும்பாலான பிரவுசர்கள் அனைத்து ப்ளக் இன் புரோகிராம்களையும் உள்ளடக்கியே வருகின்றன. எனவே, இது குறித்து நீங்கள் கவலைப் பட வேண்டியதில்லை.

கேள்வி: சமீபத்தில், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலிருந்து, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறியுள்ளேன். இதில் யூசர் அக்கவுண்ட்டின் இடத்தில் என் போட்டோவினை அமைக்க விரும்புகிறேன். அதற்கான வழி என்ன? யூசர் அக்கவுண்டிற்கான படத்தினை எப்படி மாற்றி அமைப்பது?
என். கேசவன், உசிலம்பட்டி.
பதில்:
வழக்கம் போல இதனையும் எளிதாக மேற்கொள்ளலாம். ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் எனச் சென்று, “User Accounts and Family Safety” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு மீண்டும் “Change Your Account Picture” என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திட வேண்டும். இங்கு படங்கள் அடங்கிய தொகுப்பு ஒன்று காட்டப்படும். இதில் ஒன்று உங்களுக்குப் பிடித்திருந்தால், அதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து “Change Picture” என்பதில் கிளிக் செய்திடலாம். பெரும்பாலானவர்கள், இதில் காட்டப்படும் படங்களைத் தவிர்த்து, தங்களுக்குப் பிடித்த நடிகர்கள் அல்லது தங்கள் படத்தை அமைக்க விரும்புவார்கள். அவர்கள் “Browse for more pictures…” என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்து, பின்னர் ஹார்ட் ட்ரைவில் பிரவுஸ் செய்து, தாங்கள் விரும்பும் பட பைலில் டபுள் கிளிக் செய்து ஓகே செய்திடலாம்.

கேள்வி: ஆபீஸ் 2007 பயன்படுத்தி வருகிறேன். இதில் கிடைக்கும் டூல் / ஸ்கிரீன் டிப்ஸ்களை வேண்டாம் என அமைக்கும் வழி என்ன? தேவைப்படும் போது மட்டும் பார்த்துக் கொள்ள விரும்புகிறேன். இதற்கான செட்டிங்ஸ் அமைப்பது எப்படி?
-தி. உலகநாதன், புதுச்சேரி.
பதில்:
நல்ல விருப்பம். நமக்குத் தேவைப்படாத டூல் டிப்ஸ் ஏன் திரையில் தானாக எழ வேண்டும்? என்ற விருப்பத்தினை நிறைவேற்றும் வழியினைப் பார்க்கலாம். வேர்ட் புரோகிராம் விண்டோவில், டூல் பார் பட்டன் மட்டுமின்றி, வேறு இடங்களிலும் இந்த மஞ்சள் நிறக் கட்ட ஸ்கிரீன் டிப்ஸ் காட்டப்படும். வேர்ட் 97 தொடங்கி, இன்றைய வேர்ட் தொகுப்பு வரை இந்த வசதி(?) கிடைக்கிறது. உங்களைப் போல அனுபவசாலிகளுக்கு இது தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால் பல நேரங்களில், இது உதவியாகவே உள்ளது. இதனை நிறுத்த வேண்டும் என்றால், கீழே தரப்பட்டுள்ளபடி (2007க்கு முந்தைய புரோகிராம்களில்) செயல்படவும். Tools மெனுவில் Customize ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், Options டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு Show ScreenTips on Toolbars என்ற ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப்படாமல் உள்ளதா எனப் பார்த்து, தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அதனை மாற்றவும். அடுத்து Close என்பதில் கிளிக் செய்து மூடவும்.
வேர்ட் 2007ல் கீழே கொடுக்கப்பட்டிருப்பது போல மாற்றங்களை அமைக்கவும்.
1. Office பட்டனில் கிளிக் செய்து, பின்னர் Word Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Word Options என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. அடுத்து, டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Popular என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. பின்னர், ScreenTip Style என்ற கீழ் விரி பட்டியலை விரிக்கவும். இதில் Don’t Show ScreenTips என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்து மூடவும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்குகிறது. இதில் கம்ப்யூட்டரை பூட் செய்து எவ்வளவு நேரம் இயங்கிக் கொண்டிருந்தது என்று எப்படி தெரிந்து கொள்ளலாம்?
அ. மணவாளன், காரைக்குடி.
பதில்:
டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Task Manager என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது (Ctrl+Shift+Esc) என்ற கீகளை அழுத்தவும். இப்போது டாஸ்க் மானேஜர் விண்டோ கிடைக்கும். இதில் தரப்பட்டுள்ள டேப்களில் Performance என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Up Time பிரிவில், உங்கள் கம்ப்யூட்டர் பூட் செய்த பின்னர் எவ்வளவு நேரம் இயங்கியுள்ளது என்று காட்டப்படும். இந்த வழிகளை விண்டோஸ் விஸ்டாவிலும் பின்பற்றலாம்.
விண்டோஸ் எக்ஸ்பியில் (புரபஷனல் எடிஷனில் மட்டும்) ஸ்டார்ட், ரன் விண்டோ (Start>Run)செல்லவும். அதில் cmd என டைப் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இப்போது டாஸ் இயக்கக் கட்டளைப் புள்ளி (Command Prompt) கிடைக்கும். இங்கு systeminfo என டைப் செய்து என்டர் தட்டவும். கம்ப்யூட்டர் சில நிமிடங்கள் அல்லது விநாடிகள் எடுத்துக் கொண்டு, நேரத்தைக் கணித்துச் சொல்லும். இது நாள், மணி, நிமிடம் மற்றும் விநாடி என்ற அளவுகளில் காட்டப்படும்.

கேள்வி: புதியதாக நான் பயன்படுத்தத் தொடங்கியுள்ள விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ரெஸ்டோர் பாய்ண்ட் வசதி தரப்பட்டுள்ளதா? இருப்பின் அதனை எப்படி உருவாக்குவது?
என். லட்சுமி நாராயணன், கோவை.
பதில்:
விண்டோஸ் சிஸ்டத்தின் முக்கிய செயல்பாடு இது. சிஸ்டம் கிராஷ் ஆன பின்னர், மீண்டும் அதனை இயக்கத்திற்குக் கொண்டு வர, இந்த செயல்பாடு மிக முக்கியமானதாகும். எக்ஸ்பியில் நீங்கள் கையாண்ட வழி இல்லாமல், இதில் வேறு வழியைக் கையாள வேண்டும். விஸ்டாவிற்கும் இதே வழி தான். டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில் New என்பதையும் அடுத்து Shortcut என்பதையும் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Browser என்பதில் கிளிக் செய்து Browse for Files or Folders என்ற டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன், C:\Windows\System32 என்ற போல்டருக்குச் செல்லவும். இங்கு System Properties Protection.exe என்ற பைலைத் தேடி அறியவும். இதன் மீது ஒருமுறைகிளிக் செய்து, பைலைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். அடுத்து Next என்பதில் கிளிக் செய்து, அமையவிருக்கும் ஷார்ட் கட் ஐகானுக்கு ஒரு பெயர் (Create a Restore Point என்று கூடத் தரலாம்) தரவும். பின்னர் Finish என்பதில் கிளிக் செய்து முடிக்கவும். அடுத்து, எந்நிலையில் எல்லாம், சிஸ்டம் ரெஸ்டோர் பாய்ண்ட் தேவையோ, அப்போது இந்த ஐகானில் கிளிக் செய்து அதனை உருவாக்கலாம். சிஸ்டம் சிக்கல் தருகையில், உருவாக்கி வைத்த ரெஸ்டோர் பாய்ண்ட்டில் கிளிக் செய்து, சிஸ்டத்தினை மீட்கலாம்.

கேள்வி: குரோம் பிரவுசர் 23 பதிப்பைப் பயன்படுத்த இன்ஸ்டால் செய்தேன். இதில் DNT எனப்படும் Do Not Track வசதியை எப்படி இயக்கிப் பயன்படுத்துவது?
செ. மங்கள்ராஜ், தென்காசி.
பதில்:
நம் இணையத் தேடலை, பிரவுசர்கள் பதிந்து கொள்ளக் கூடாது என்ற வசதியை இப்போது அனைத்து பிரவுசர்களுமே வழங்கி வருகின்றன. இதனை நீங்கள் குறிப்பிடும் குரோம் பிரவுசரில் இயக்க, Alt+E அல்லது Alt+F அழுத்தவும். பின்னர் Settings தேர்ந்தெடுக்கவும். இதில் கீழாகச் சென்று, Show Advanced Settings என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர்
இன்னும் கீழாகச் சென்று, Privacy section என்னும் பிரிவைக் கவனிக்கவும். இதில் Send A Do Not Track Request With Your Browsing Traffic என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் இன்னொரு அம்சமும் உள்ளது. இந்த விருப்பத்தினை குரோம் பிரவுசர் நிறைவேற்றினாலும், சில இணைய தளங்கள் இதற்கு ஒத்துழைக்காமல் இருக்கலாம். நமக்குத் தெரியாமல், அந்த இணைய தளங்கள், நம் இணைய தள நடவடிக்கைகளைக் கவனிக்கலாம். இதற்கு பிரவுசர் பொறுப்பேற்காது. இந்த தளங்கள் நம்மைப் பற்றிய தகவல்களை, நமக்குத் தெரியாமலேயே எடுத்துக் கொண்டு, தொடர்ந்து தங்களைப் பற்றிய தகவல்களை அனுப்பலாம்.

கேள்வி: என் இணையத் தேடலைத் தொடங்குகையில், நான் கட்டாயம் பார்த்தே ஆக வேண்டிய சில தளங்கள் திறக்கப்பட்டுத் தயாராகக் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். இதற்கு எப்படி செட் செய்திட வேண்டும். கூகுள் குரோம் பிரவுசரை விண்டோஸ் 7 சிஸ்டத்தில் பயன்படுத்துகிறேன்.
பேரா. டி. சிவராம கிருஷ்ணன், கோவை.
பதில்:
முதலில் பிரவுசரைத் திறந்து கொண்டு, Alt+E அல்லது Alt+F அழுத்தவும். பின்னர் Settings தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் On Startup என்ற பிரிவில், Open A Specific Page Or Set Of Pages என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து Set Pages link என்பதில் கிளிக் செய்திடவும். இதில் இணைய தள முகவரிகளைக் கொடுக்கலாம். இந்தத் தளத்தில், நீங்கள் பாஸ்வேர்ட், யூசர் நேம் கொடுத்துத்தான் பயன்படுத்த முடியும் எனில், அவற்றையும் குரோம் பிரவுசரிலேயே பதிந்து சேவ் செய்திடலாம். ஒவ்வொரு முறை, இணைய இணைப்புடன், குரோம் பிரவுசரை இயக்குகையில், இந்த தளங்கள், தாமாகத் திறக்கப்பட்டு, உங்களின் பயன்பாட்டிற்குக் காத்திருக்கும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ARUN PREM - batlagundu,இந்தியா
23-ஜூன்-201319:20:13 IST Report Abuse
ARUN PREM என்னுடைய ip address eppadi therinthu கொள்வது
Rate this:
Share this comment
Cancel
ARUN PREM - batlagundu,இந்தியா
23-ஜூன்-201319:17:00 IST Report Abuse
ARUN PREM மின்கலன் உபயோகம் தெரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X