கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2013
00:00

கேள்வி: என் விண்டோஸ் 7 சிஸ்டத்தின் பேக் கிரவுண்ட் கலரை, நான் அமைத்த வால் பேப்பருக்கு இணைவாக இருக்கும்படி எப்படி மாற்றுவது? தற்போது பார்ப்பதற்கு சரியாக இல்லை.
சி. ராஜ சேகர், திண்டிவனம்.
பதில்:
உங்கள் நீண்ட கடிதம், கலையழகை ரசிக்கும் மனோபாவத்தினை வெளிப்படுத்துகிறது. பாராட்டுக்கள். இனி பிரச்னை தீரும் வழிகளைப் பார்ப்போம். முதலில் டெஸ்க்டாப்பில், ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Personalize என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, கீழாக உள்ள Desktop Background என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்த விண்டோவில், Desktop Background என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து கிடைக்கும் விண்டோவில், Change background color என்பதில் கிளிக் செய்திடவும். இது Picture position heading என்பதில் இடம் பெற்றிருக்கும். இப்போது, நீங்கள் விரும்பும் வண்ணத்தில் அமைத்திட, வண்ணத் தேர்வு கட்டம் கிடைக்கும். இதிலிருந்து மனதிற்குப் பிடித்த வண்ணத்தினத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.

கேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்தத் தொடங்கியுள்ளேன். வீட்டில் உள்ள மற்றவர்களுக்கெனத் தனியே யூசர் அக்கவுண்ட் தொடங்குவது எப்படி என்று விவரிக்கவும். நான் பல முறை முயன்றும் அதனை அறிய இயலவில்லை.
ஆர். ரத்ன சிங்கம், சென்னை.
பதில்:
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், யூசர் அக்கவுண்ட்களை உருவாக்க எளிதான வழிகளைத் தருகிறது. இதன் மூலம், ஒரு பயனாளர், எந்த பைல்கள் மற்றும் போல்டர்களைப் பயன்படுத்தலாம் என்று வரையறை செய்து விண்டோஸ் சிஸ்டத்திற்குச் சொல்கிறது. ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரில், ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்களை உருவாக்கலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், எப்படி இவற்றை உருவாக்கலாம் என்பதனை இங்கு பார்க்கலாம்.
1. ஸ்டார்ட் மெனுவிலிருந்து Control Panel ஐத் திறக்கவும்.
2. இதில் User Accounts என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உங்கள் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருந்தால், Give other users access to this computer என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இல்லை எனில், Manage another account என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருந்தால், ஏற்கனவே அந்த நெட்வொர்க்கில், அல்லது பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள அக்கவுண்ட்கள் காட்டப்படும். இங்கு Add என்பதில் கிளிக் செய்திடவும். உடன் யூசர் நேம் (User Name) ஒன்று தரும்படி நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். அத்துடன் டொமைன் பெயரும் தர வேண்டியதிருக்கும். அத்துடன், புதிய யூசருக்கு Standard account அல்லது Administrator account ஆகியவற்றில் எந்த அக்கவுண்ட் உரிமை தர இருக்கிறீர்கள் என்பதனைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அடுத்து Finish என்பதனை அழுத்தவும்.
4. உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் தனியாக வைத்துப் பயன்படுத்தக் கூடியதான இயக்கத்தில் இருந்தால், யூசர் நேம் மட்டும் தர வேண்டியதிருக்கும். உடன் எத்தகைய தன்மை உடைய அக்கவுண்ட் என்பதனையும் குறிப்பிட வேண்டும். அதன் பின்னர், Create Account என்பதில் அழுத்தவும்.
5. யூசர் அக்கவுண்ட்டுக்கு பாஸ்வேர்ட் தேவை இல்லை எனில், மைக்ரோசாப்ட், நீங்கள் அதனை உருவாக்கி வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறது. குறிப்பிட்ட கம்ப்யூட்டரில் லாக் இன் செய்து, கண்ட்ரோல் பேனலைத் திறந்து, User Accounts தேர்ந்தெடுத்து, அடுத்து Create a password என்பதில் கிளிக் செய்து, உங்கள் அக்கவுண்ட்டிற்கான பாஸ்வேர்டை அமைக்கலாம். பாஸ்வேர்டை இரண்டாவது முறையும் டைப் செய்து உறுதி செய்திட வேண்டும். தேவைப்பட்டால், பாஸ்வேர்டினை நினைவு படுத்திப் (password hint) பார்க்க ஏதேனும் தகவல்களையும் அமைக்கலாம். நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டிருந்தால், அட்மினிஸ்ட்ரேட்டர் மட்டுமே பாஸ்வேர்டை அமைக்க முடியும்.
6. இதற்கு, Control Panel திறந்து, User Accounts தேர்ந்தெடுத்து, Manage another account தேர்ந்தெடுக்க வேண்டும். இங்கு, நீங்கள் எந்த அக்கவுண்ட்டிற்கு பாஸ்வேர்ட் அமைக்க வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Create a password என்பதில் அழுத்தவும். பின்னர், பாஸ்வேர்டினை டைப் செய்திடவும். பின்னர் மீண்டும் அதனை உறுதிப் படுத்தும் வகையில், டைப் செய்திடவும். பின்னர் Create password என்பதில் அழுத்தி வெளியேறவும்.

கேள்வி: நான் கடந்த நான்கு ஆண்டுகளாக, எச்.பி. பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றினை, விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்துடன் பயன்படுத்தி வருகிறேன். புதிய கம்ப்யூட்டர் வாங்குவதற்குப் பதிலாக, இதில் விண்டோஸ் 7 பயன்படுத்த முடிவு செய்துள்ளேன். மேலும் எனக்கு விஸ்டா பயன்படுத்த விருப்பம் இல்லை. இதற்கு நான் என்ன செய்திட வேண்டும்?
டி.சாமுவேல் தனராஜ், புதுச்சேரி.
பதில்:
உங்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டரில் விஸ்டா இயங்குவதாக இருந்தால், அதில் நிச்சயம் விண்டோஸ் 7 பதிந்து இயக்க முடியும். இதனை உறுதி செய்திட மைக்ரோசாப்ட் Windows 7 Upgrade Advisor என்னும் ஓர் இலவச புரோகிராம் இயக்கத்தினைத் தருகிறது. இதனைப் பயன்படுத்தினால், அது உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, அதில் விண்டோஸ் 7 பயன்படுத்த முடியுமா என்பதற்கான ஆலோசனையையும், அவ்வாறு பயன்படுத்தினால், ஏதேனும் பிரச்னை வருமா என்பதனையும் அறிவிக்கும். இந்த டூலைத் தரவிறக்கம் செய்திட http://windows.microsoft.com/enus/windows/ downloads/upgradeadvisor என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். இதனை இயக்கினால், புதிய சிஸ்டம் இயங்குவது குறித்தும், அதில் ஏற்படக் கூடிய சிக்கல்கள் குறித்தும் விரிவான அறிக்கை ஒன்று உங்களுக்குக் கிடைக்கும். அதனைப் படித்துப் பார்த்து, அதன்படி செயல்படலாம். இதில், உங்கள் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்க முடியாத அப்ளிகேஷன் புரோகிராம் குறித்தும் தகவல்கள் தரப்படும்.
மேலும், உங்கள் கம்ப்யூட்டரைத் தயாரித்து வழங்கிய நிறுவனத்தின் இணையதளம் சென்று, குறிப்பிட்ட மாடல் கம்ப்யூட்டர், விண்டோஸ் 7 சிஸ்டத்தினை சப்போர்ட் செய்திடுமா என்பதனை உறுதி செய்வதற்கான ஆலோசனை எதுவும் தந்துள்ளார்களா எனப் பார்த்து, அதன்படியும் செயல்படலாம். இந்த தளத்தில், விண்டோஸ் 7 உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கு வதற்கான, புதிய ட்ரைவர் புரோகிராம்கள் தரப்பட்டிருக்கும். அவற்றை, இத்தளம் மூலம் அப்கிரேட் செய்திட வேண்டியதிருக்கும். புதிய ட்ரைவர் புரோகிராம்களை, ஒரு டிவிடி அல்லது ப்ளாஷ் ட்ரைவில் பதித்து வைத்துக் கொண்டு, விண்டோஸ் 7 பதிந்த பின்னர், கம்ப்யூட்டரில் பதிய வேண்டும். நீங்கள் உங்கள் வீட்டில் வைத்து, உங்கள் பணிகளுக்கு, கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதாக எழுதி இருக்கிறீர்கள். எனவே, விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்து கொள்ளவும்.

கேள்வி: அவுட்லுக் டாட் காம் என்பதுவும், அவுட்லுக் எக்ஸ்பிரஸ் என்பதுவும் ஒன்றா? இரண்டுமே பி.ஓ.பி.3 மெயில் சர்வீஸ் தருகின்றனவா? என் மகன், என்னை ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்ளுமாறு கூறுகிறான். கம்ப்யூட்டர் கிராஷ் ஆனாலும், என் மின்னஞ்சல் கடிதங்கள் பத்திரமாக இருக்கும் என்றும், அதனால் அதுவே சிறந்தது என்றும் கூறுகிறான். உங்கள் ஆலோசனை என்ன?
எஸ். முத்துக் குமரன், காரைக்கால்.
பதில்:
Outlook.com என்பது இணையத்தை அடிப்படையாகக் கொண்டு (webbased email) இயங்கும் ஒரு மின்னஞ்சல் தளம். Outlook Express என்பது இமெயில் கிளையண்ட் புரோகிராம். இதனை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பதிந்து வைத்துப் பயன்படுத்தலாம். உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைப் பார்க்கையில், நீங்கள் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் புரோகிராமினை, உங்களுக்கு இணைய சேவை வழங்கும் நிறுவனம் தந்துள்ள மின்னஞ்சல் முகவரியினைக் கொண்டு இயக்குவது தெரிகிறது.
உங்கள் மகன் சொல்வது சரியே. அவுட்லுக் டாட் காம் அல்லது ஜிமெயில் மின் அஞ்சல் அக்கவுண்ட் ஒன்றை வைத்துக் கொண்டால், உங்கள் கம்ப்யூட்டர் கிராஷ் ஆனாலும், உங்கள் அஞ்சல்கள், இணைய தள சர்வரில் அப்படியே இருக்கும். நீங்கள் ஜிமெயிலில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்தினாலும், அவுட்லுக் எக்ஸ்பிரஸ் வசதியையும் பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்தி, உங்களுக்கு வந்துள்ள மின்னஞ்சல் கடிதங்களை இறக்கி வைத்து, இணைய இணைப்பில்லாத போதும் படித்து பதில்களைத் தயாரித்து வைக்கலாம்.'

கேள்வி: டெரா காப்பி புரோகிராம் எங்கு கிடைக்கும்? இதன் பயன்கள் என்ன? கட்டாயம் இதனைக் கொள்ள வேண்டுமா?
சி.கே.தமிழ்ச் செல்வி, பெரியகுளம்.
பதில்:
டெரா காப்பி (Tera Copy) புரோகிராமினை http://www.box.net/shared/o16me8egx3 என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிவு செய்து பயன் படுத்தலாம். இதனைப் பதிவு செய்த பின்னர், நாம் எதனைக் காப்பி செய்தாலும், அது டெரா காப்பி மூலமே காப்பி ஆகும். காப்பி செய்திடுகையில் அந்த செயல்பாடு நின்று போனால், மீண்டும் இணைப்பு கிடைக்கையில், விட்ட இடத்திலிருந்து காப்பி செயல்பாடு தொடரும். பைல்களை மொத்தமாகக் காப்பி செய்திடக் கட்டளை கொடுத்தால், பைல் ஒன்றில் பிரச்னை ஏற்பட்டால், அதனை விடுத்து, அடுத்த பைலைக் காப்பி செய்திடத் தொடங்கும். எந்த பைலில் பிரச்னை இருந்தது என்றும் நமக்குக் காட்டும்.
எந்த ஒரு பைலை எடுத்து, அதன் பெயர் மீது ரைட் கிளிக் செய்தால், கிடைக்கும் மெனுவில், டெரா காப்பி புரோகிராம் இயக்கத்திற்கான ஆப்ஷன் தரப்படும். இதனுடன் வழக்கமாக விண்டோஸ் காப்பி ஆப்ஷனும் கிடைக்கும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X