பெர்சனல் பிரேக் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2013
00:00

விக்கிபீடியா போல தகவல் தரும் தளங்கள் வேறு இல்லை என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில், அதே போன்ற பல தளங்கள் குறித்த தகவல்கள், மாணவர்களுக்கு மிகவும் அரிய தகவலாகும். தங்களுக்கு நன்றி.
கா. பரமசிவம், தலைமையாசிரியர், திண்டிவனம்.

வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியவுடன், லேப்டாப் கம்ப்யூட்டரின் பேட்டரி குறித்து நாம் கவலைப்படுவதே இல்லை. நிறைய டிப்ஸ்களுடன் நீங்கள் அளித்துள்ள கட்டுரை மிகவும் பயனுள்ளது. குறிப்பாக, இன்றைய மாணவர்கள், இவற்றைப் பாடமாக எடுத்துக் கொண்டு, தங்களுக்கு அரசு வழங்கியுள்ள லேப்டாப் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தினால் நல்லது.
பேரா. சி.ஆர். ஆறுமுகம், மதுரை.

லேப்டாப் பேட்டரி நீண்ட நாள் உழைக்க நீங்கள் தந்துள்ள அனைத்து வழிகளும் மிக மிகப் பயனுள்ளவையே. இந்த பேட்டரி தன் திறனை இழக்கும்போது, என்ன மாதிரியான செயல்பாடு கிடைக்கும்? எப்படி மாற்ற வேண்டும்?
என்பதற்கான டிப்ஸ்களையும் தரவும்.
டாக்டர் எஸ்.கே. சுரேந்திரன், கோவை.

டிஜிட்டல் சாதனங்களில் பேட்டரி பாதுகாப்பு என்பதனை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் மற்றும் லேப் டாப் கம்ப்யூட்டர் பேட்டரிகளுக்குத் தந்துள்ள குறிப்பு ஒவ்வொன்றும் கவனத்தில் கொள்ள வேண்டியவை. அனைத் திற்கும் நன்றி.
செ.இளமாறன். தேனி.

விண்டோஸ் ஆன்லைன் ட்ரைவ் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான டிப்ஸ்களையும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
கா. சுப்ரமணியம், திண்டுக்கல்.

பெண்கள் இணையத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நிச்சயம் நம் நாட்டின் பொருளாதாரம் வளரும் வாய்ப்புகள் அதிகமாகும். அழகுக் குறிப்புகளோடு நின்றுவிடாமல், தங்கள் வாழ்க்கை மேம்பாடு அடைய இணையம் தரும் தகவல்களையும் பெண்கள் பார்க்க வேண்டும். இந்த செய்தியும் தகவலும் அனைவரையும் சென்றடைய வேண்டும்.
ஆர். தனலட்சுமி, புதுச்சேரி.

அமேஸான் ஆன்லைன் தளம் நிச்சயமாக இந்திய விற்பனைச் சந்தையில் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும். விரைவில் அனைத்து அவசியப் பொருட்களையும் விற்பனை செய்திடும் தளமாக இது மாற வேண்டும்.
செ. காதர்பாட்சா. காரைக்கால்.

வாட்ஸ் அப் இன்ஸ்டண்ட் மெசேஜ் அப்ளிகேஷன் நமக்கு தரும் வசதிகள் மிக மிகப் பயனுள்ளவையாக உள்ளன. மின்னல் வேகத்தில் செய்திகளையும் இணைப்புகளையும் சென்று சேர்ப்பதில், கூகுள் தளத்தையும் மிஞ்சிவிட்டது. எனவே, இதில் கோடிக்கணக்கில் செய்திகள் பரிமாறப்படுவதில் ஆச்சரியமே இல்லை. எப்போதும் வாட்ஸ் அப் பயன்படுத்தும்.
என்.கிருஷ்ண காந்த்,திருப்பூர்.

கூகுள் ஸ்ட்ரீட் வியூ கட்டுரையில் குறிப்பிட்டுள்ள தளம் சென்று அதன் படங்களையும், காட்சிகளையும் ரசித்தேன். இது போல, இயற்கையை விஞ்சும் அனைத்து இடங்களையும் கூகுள் ஸ்ட்ரீட் வியூ காட்சிகளாகத் தர வேண்டும்.
கே.சாஷ்வினா, சென்னை.

நமக்கு வந்துள்ள இமெயில் ஸ்கேம் மெயிலா என்பதனை, நம் இமெயில் கிளையண்ட் புரோகிராம்களே வடிகட்டுகின்றன. இவற்றையும் மீறி, நம் மெயில் பாக்ஸில் வரும் ஸ்கேம் மெயில்களைச் சுட்டிக் காட்டும் தள முகவரி தந்தமைக்கு நன்றி.
என். பார்த்திபன், திருப்பூர்.

எந்த விலையிலும், அனைவரும் எதிர்பார்க்கும் கூடுதல் வசதிகளுடன் பல்வேறு மாடல்களைத் தந்துள்ள சாம்சங் நிறுவனம், இந்தியச் சந்தையில் மட்டுமல்ல, உலகச் சந்தையிலும் முதல் இடம் பெறுவதில் வியப்பே இல்லை.
எஸ். சுகந்தி தேவராஜ், காஞ்சிபுரம்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X