தன்னம்பிக்கைக்கு இன்னொரு பெயர் சபரி வெங்கட்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2013
00:00

உடலுக்கோ, மனதிற்கோ ஒரு சின்ன வலி ஏற்பட்டாலே," என்ன வாழ்க்கை இது...பேசாம நிம்மதியா போய்ச் சேர்ந்துடலாமா...' என்ற விரக்தியான மனநிலைக்கு தள்ளப்படும் மனிதர்கள் நிறைந்த இவ்வுலகில், பார்வையற்ற பத்து வயது சிறுவன், "எனக்கு பார்வை இல்லைங்றது ஒரு பெரிய விஷயமே இல்லீங்க...' என்று சொல்லியபடி, அடுத்தடுத்த சாதனைகள் தொடர்வதை பார்க்கும் போது இவன்தான் நம்பிக்கை நாயகன் என்று சொல்லத் தோன்றும். அந்த சிறுவனின் பெயர் சபரி வெங்கட்.
கோவை-பாலக்காடு எல்லையில் வடகாடு என்ற இடத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த சீனிவாஸ்- நீலவேணி தம்பதியருக்கு திருமணம் முடிந்து 12 வருடம் கழித்து, பிறந்த ஒரே மகன் சபரி வெங்கட். பிறந்த போதே பார்வைக் குறைபாட்டுடன் பிறந்தான்.
பார்வை குறைபாட்டிற்கு சிகிச்சை பெறவும், அவனுக்கான கல்வியை தேடவும் வேண்டி, விவசாயம் பார்த்த பூமியை, வந்த விலைக்கு விற்றுவிட்டு கோவை பெரிய நாயக்கன் பாளையத்திற்கு குடி வந்தனர்.
பார்வைக் குறைபாடு சிகிச்சைக் காக பலரையும் பார்த்ததில், கையிருப்பு கரைந்ததே தவிர, பலனேதும் இல்லை. முழுமையாக பார்வை இழந்தவனானான் சபரி வெங்கட். பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண வித்யாலயா பள்ளியில் சேர்த்தனர்.
பார்வையுள்ள மற்ற குழந்தைகளுடன் பார்வை இல்லாத சபரியும் சேர்ந்து படித்தான். தற்போது ஆறாம் வகுப்பு படித்து வரும் சபரி, எப்போதும் முதல் ஐந்து,"ரேங்க்'குள் வாங்கி விடுவான். கூடுதலாக புத்தகம் படிக்க வேண்டும் என்பதற்காக பள்ளி விட்டு வந்ததும், மாலையில் இரண்டு மணி நேரம் பிரெய்லி முறையில் படிக்க, எழுத கற்று வருகிறான்.
ராமகிருஷ்ணா வித்யாலயம் என்பதாலோ, என்னவோ சுவாமி விவேகானந்தர் பற்றி படித்து, கேள்விப்பட்டு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, சின்ன வயது விவேகானந்தராக தன்னை மாற்றிக்கொண்டு விட்டான்.
அவரைப் போலவே உடை, தலைப்பாகை அணிந்து, விவேகானந்தரின் புகழ் பெற்ற அமெரிக்கா சிகாகோ பேச்சை, தன் மழலைக் குரலில் அவன் பேசுவதை கேட்பவர்கள் யாராக இருந்தாலும், எழுந்து நின்று கைதட்டாமல் இருக்க மாட்டார்கள்.
விவேகானந்தர் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டியில், முதல் இடத்தை பிடித்த சபரிக்கு, தமிழக முதல்வர் கையால் பதக்கம் அணிவிக்கப் பட்டு பாராட்டும் கிடைத்துள்ளது.
கோவையில் ஒரு விழாவில் சபரியின் பேச்சை கேட்ட விழா அமைப்பினர், "உனக்கு என்ன வேண்டும் சொல் கட்டாயம் செய்கிறோம்,' என்றனர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை சந்தித்து பேச ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டான் சபரி.
சபரியின் ஆசை, அப்துல்கலாமிடம் தெரிவிக்கப்பட்டது, அவர் ஒரு முறை கோவை வரும்போது முதலாவதாக சந்தித்தது சபரியைத்தான். சில நிமிடம் சபரியிடம் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்துவிட்டு, "சபரி என்னுடைய கோவைத்தோழன்' என்று எல்லாரிடமும் சொல்லி சந்தோஷப் பட்டுக்கொண்டார்.
சுவாமி விவேகானந்தரைப் போல உடையணிந்து கம்பீரமாக அவரது கருத்துக்களை பேசும் போது கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல தோன் றும். ஒரு விஷயத்தை ஒரு முறை கேட்டாலே போதும் அழகாக கற்றுக் கொள்கிறான். வீட்டில் நிழலுக்கு ஒதுங்கிய ஒரு பாட்டி சொல்லிக் கொடுத்த பகவத் கீதையின் ஸ்லோகத்தை அச்சுப் பிசகாமல் அப்படியே சொல் கிறான். முறைப்படி சங்கீதம் கற்றுக் கொள்ளா விட்டாலும், சபரி பாடி கேட்டால், கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
திருமுருகன் பூண்டியில் உள்ள விவேகானந்தா சேவாலய செந்தில்நாதன்தான் தற்போது சபரியின் பேச்சுத்திறமையை பலரும் கேட்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் அவனை, பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று வருகிறார்
சபரியின் மழலை மாறாத கணீர் குரலை முழுதாகக் கேட்க நேரில் அழையுங்கள். கொஞ்சமாய் கேட்க போனில் அழையுங்கள்... சபரியின் அப்பா சீனிவாஸ் தான் போனில் பேசுவார். அவரிடமும், சபரியின் தாயார் நீலவேணியிடமும் முதலில் இந்த தெய்வீகக்குழந்தையை பெற்றமைக்கு வாழ்த்து சொல்லுங்கள். பின், அவர்களே சபரியின் படிப்பு, பள்ளிக்கு இடையூறு இல்லாத நேரத்தில் பேசுவதற்கு ஏற்பாடு செய்வர். தொடர்புக்கு: 9942146558.
***

எல். முருகராஜ்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
காயத்ரி - Chennai,இந்தியா
14-ஜூலை-201308:12:45 IST Report Abuse
காயத்ரி சாதனைச்சிறுவன் சபரிக்கு மனம் கனிந்த வாழ்த்துகள். மென்மேலும் பற்பல சாதனைகளைப் புரியவும் சமுதாயத்தில் தலைசிறந்தவராக மிளிரவும் உள்ளமார வேண்டுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X